Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியேறியவர்களின் கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை': மகிந்த

Featured Replies

141123131905_mahinda_rajapaksha__512x288

'வௌியேறியவர்களின் தகவல்கள் அடங்கிய கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை'
 
இலங்கையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நபர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அவற்றைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகைகளில் ஈடுபட தான் தயாரில்லை கூறியுள்ளார்.
 
மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தரப்பினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் கூட்டமொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, தனது அரசாங்கத்தை விட்டு வெளியேறவோ இணையவோ எந்தவொரு நபருக்கும் சுதந்திரம் உள்ளதாகவும் தான் அதனை தடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ள போதிலும், அதனால் கட்சிக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அவர் இங்கு கூறியுள்ளார்.
 
'வெளியேறி 48 மணிநேரத்தில் அரசாங்கம் நெருக்கடியில்'
 
இதனிடையே, தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 48 மணி நேரத்தில் அரசாங்கம் பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.
கோட்டை நாக விகாரையில் மாதுளுவாவே சோபித்த தேரரை சந்தித்த பின்னரே அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.
 
141123123303_maithree_sobhitha_rajitha_3
'மக்களின் பலத்த ஆதரவு கிடைத்துவருகின்றது'
 
பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்காக ஆரம்பம் முதலே உழைத்த சோபித்த தேரருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பை நடத்தியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
பொது வேட்பாளராக தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு மக்களின் பலத்த ஆதரவு கிடைத்துவருவதாகவும் அவர் கூறினார்.
 
கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல உறுமய கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை நிறைவேற்றுவதன் முலம் தற்போது தள்ளப்பட்டுள்ள இக்கட்டான நிலையிலிருந்து மீளுவதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
 
 

 

  • தொடங்கியவர்

கோப்புக்களை வைத்து பயமுறுத்திக்கொண்டிருக்க முடியாது: மஹிந்தவுக்கு மைத்திரி பதிலடி

 

MY3-MR.jpg

கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்க முடியாது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை  விட்டு  வெளியேறியுள்ள    பாராளுமன்ற உறுப்பினர்கள்  தொடர்பான  கோப்புக்கள்   என்னிடம் உள்ளன எனவும் அவர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தமாட்டேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

 

http://virakesari.lk/articles/2014/11/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF

  • தொடங்கியவர்

கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் கொள்ளையர்களை பாதுகாப்பதை போன்று மகிந்த கருத்து வெளியிடுகிறார்

 

FILE இருந்தால் நடவடிக்கை எடுக்கலாமே – JVP

 

குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆளும் கட்சியினருக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 
 
ஆளும் கட்சியினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்பிலான கோவைகள் (பைல்கள்) இருந்தால் ஏன் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
 
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
 
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், லஞ்ச ஊழல் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்குறுதியளித்திருந்தார் என அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
என்ன காரணத்திற்காக ஜனாதிபதி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றார் என்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் கொள்ளையர்களை பாதுகாப்பதனைப் போன்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளதாக அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
கொள்ளையர்களின் இன்றி கொள்ளைக் கூட்டத் தலைவனினால் பிழைப்பு நடத்த முடியாத காரணத்தினால் ஜனாதிபதி இவ்வாறு கொள்ளையர்களை பாதுகாத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

//வெளியேறியவர்களின் கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை': மகிந்த//

 

இப்படிச் சொல்வதும், ஒரு மிரட்டல் தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

bfd96b78042920c248a21a8d3a72ad75

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த காட்டிக் கொடுக்க வெளிக்கிட்டால் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகி விடும்.

எத்தனை ராஜபக்சாக்கள் வெளியே வருவார்கள் :o:D

  • தொடங்கியவர்

"ராஜபக்ஸ குடும்பத்தின் file என்னிடம் உள்ளது அப்பலப்படுத்துவேன்" சந்திரிக்கா சவால்:-

chandrika-mahida_CI.JPG

 


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கம்ஹா ஹொரகொல்லவில் அமைந்துள்ள அமரர்கள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், சந்திரிக்காவும் சென்றிருந்தார்.


இதன் போது ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது சகோதரர்கள் மற்றும் மகன்மார் தொடர்பில் அம்பலப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதன் பின்னர் ராஜபக்ஸக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆளும் கட்சியிலிருந்து பிளவடைந்து சென்ற அரசியல்வாதிகள் பற்றிய கோவைகள் இருப்பதாகவும் பழிவாங்கப் போவதில்லை எனவும் அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும், ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்ஸக்களின் கோவைகள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொது மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாக ராஜபக்ஸவினர் கொள்ளையிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் பணத்தை ஊழல் மோசடி செய்த ராஜபக்ஸக்கள் தற்போது மேற்குலக நாடுகளின் சூழ்ச்சித் திட்டம் பற்றி கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதாகவும் அவ்வாறு சதித்திட்டம் தீட்டியிருந்தால் அதனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துமாறு சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.


வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்தாது ஆதாரங்களுடன் சமர்ப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113884/language/ta-IN/article.aspx

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வெளியேறியவர்களின் கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை': மகிந்த

 

 

 

வெளியேறியவர்களை உடனே பழிவாங்காவிட்டால் கோவணமும் கிடைக்காது...சந்ததியும் மிஞ்சாது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.