Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரகாசுரனுக்கு அஞ்சலிகள்

Featured Replies

ஆரியரால் அநியாயமாக அழிக்கப்பட்ட நரகாசுரனுக்கு அஞ்சலிகள் :)

  • Replies 245
  • Views 27.4k
  • Created
  • Last Reply

கூடவே தன் இனத்தவன் அழிவையே பெருமையாக புனிதமாக விழாவாக கொண்டாடும் அறிவிலிகளிற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நரகாசுரனுக்கு எம் போன்ற மானமுள்ள தமிழர்கள் சார்பில் வீரவணக்கங்கள்

கூடவே தன் இனத்தவன் அழிவையே பெருமையாக புனிதமாக விழாவாக கொண்டாடும் அறிவிலிகளிற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

:oops:

எப்படி இவ்வளவு காலமாக ஒருத்தனுக்கும் உறைக்கவில்லை?

:idea:

தேசிய ஊடகங்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் கூட "தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்" செய்வதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வெளிவந்திருக்கும் "ஒரு பேப்பர்" பத்திரிகையிலும் இதுபோன்ற கருத்துக்கள் பிரசுரமாகியுள்ளமை கண்டேன். ஆனால் நரகாசுரனுக்கு அஞ்சலி செலுத்துவது சுத்த அபத்தமானது. நரகாசுரன் என்பவர் இருந்தார், அவர் திராவிடர் (நம்மவர்) அவரை ஆரியக்கடவுள் கிருணனின் மனைவியர்களில் ஒருவரான சத்தியபாமா கொன்றார் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இவ்விதம் அஞ்சலி செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.

இந்த கதையே ஒரு சுத்து மாத்துக் கட்டுக்கதையாக இருக்கும் போது நாங்களே நரகாசுரன் என்று எப்போதுமே உயிர்வாழாத கற்பனை பாத்திரத்துக்கு அஞ்சலி, வீரவணக்கம் எல்லாம் செலுத்துவது அறிவிலித்தனம் மட்டுமல்ல ஆரிய மேலாதிக்கவாதிகளுக்கு ஒத்துப்போகும் விடயம்.

தமிழ்த்தேசியத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாக திராவிட இயக்கங்களின் முட்டாள்தனத்தை பின்பற்றாதீர்கள்.

அதற்காக தமிழ் தேசிய ஊடகங்கள் என்போர் செய்கிற தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடாத்தி நேயர்களிடம் இண்டைக்கு "புதுச்சட்டை போட்டிங்களா" என்று கேட்டுக்கொண்டிருப்பதை விட இது பரவாயில்லை.

கிருஸ்ணன் கதை நிருபிக்கப்பட்ட உண்மை என்பதால் நரகசுரன் கதையும் உண்மையாக்த்தான் இருக்கும்! :idea:

http://en.wikipedia.org/wiki/Dwarka

http://en.wikipedia.org/wiki/Narakasura

http://en.wikipedia.org/wiki/Krishna

ஆகா....தீபாவழிக்கு பின்னால் இப்படி ஒரு திராவிட-ஆரிய சன்டை இருக்கும் என்டு நான் நினைத்து கூட பார்க்கவில்லை. :shock: என்னை போல நிறைய பேர் அறியாமையுடன் இருப்பர்கள் என்டு நினைகிறேன். முதலில் மக்கள் மத்தியில் விஷயம் தெரிந்தவர்கள் விழிப்புனர்வு ஏற்ப்படுத்த முயற்சிக்க வேன்டும்.

சில முன்னைய பதிவுகள்

தமிழர்களுக்கு மானக்கேடான தீபாவளிப் பண்டிகை

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=7256

தீபாவளி! தமிழனுக்கு மானக்கேடு

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7265

தீபாவளி தமிழர் பண்டிகையா?

http://www.yarl.com/forum/viewtopic.php?t=516

இன்னும் பல பதிவுகளை தீபாவளி என்று தேடினால் பார்வையிடலாம்.

நராகசுரனுக்கு அஞ்சலி செலுத்துவது அபத்தமாக எனக்குப்படவில்லை.

தமிழர்களே அசுரர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். திராவிட ஆரியப் போர் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கிருஸ்ணன் போன்று நரகாசுரனும் இல்லாமல் கூட இருந்திருக்கலாம்.

ஆனால் கிருஸ்ணன் ஆரிய ஆக்கிரமிப்பின் குறியீடாக இருப்பது போன்று நரகாசுரன் தமிழர்களின் போராட்டத்தின் குறியீடாக இருக்கிறான். ஆகவே நரகாசுரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அன்று ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய எமது மூதாதையருக்கு அஞ்சலி செலுத்துவது போன்றது

;.

தீபா"வலி"யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் "தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள

உந்தளவுக்கு தெளிவும் பகுத்தறிவும் இருந்தா நாங்கள் இப்ப சுதந்திர தமிழீழத்தில் குறைந்த பட்சம் சிங்கப்பூருக்கு நிகரான பொருளாதார தொழில்நுட்ப பலத்தோடும் சிறந்த வாழ்க்கைத் தரத்தோடும் வாழ்ந்து கொண்டிருப்பம். இது எமக்கு அடுத்த சந்ததித்கு கிடைக்கிறதும் கடினம் தான். அதுக்கு அடுத்ததற்கு கிடைக்க ஆகுதல் முயற்சிக்க வேண்டும்.

கொடிய போரில் தவித்து ஆக்கிரமிப்பை உடைத்து விடுதலை அடையும் நாடுகளிற்கு 2 சந்ததியாகுதல் தேவை முழுமையாக மீள் கட்டியெழுப்ப யுத்தத்தின் வடுக்களை காணாத அனுபவிக்காத இளய சமுதாயத்தை பெற்றுக் கொள்ள.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற வாரம் பிரான்சில் லில் என்ற நகரில் பிரமாண்ட எடுப்பில் இந்திய விழா கொண்டாடப்பட்டது. வீதியெங்கும் ஒளிக்கோலம் தீப்பந்த ஆட்ங்கள். இந்திப்பாடல்களும் ஆட்ங்களுமாக ஆடல்பாடல் கொண்டாட்டம். யானை உருவங்களால் நகர் அலங்கரிக்கப்படடிருந்தது. நகர வீதி எங்கும் பிரஞ்சுச் சமுதாயத்தால் நிரம்பி வழிந்திருந்தது. நேர்முக அஞ்சல் பிரஞ்சு -3 அலைவரிசiயில் நடு இரவில் நடந்தது. ஹிந்து நாளேடின் ஆசிரியப் பெண் ஒருவரும் இதில் கலந்து கொண்டிருந்தார். இந்தியர்களை புகழ்ந்து வந்த கருத்துகள் புலம் பெயர்நாட்டு மொழியிலான தொலைக்காட்சியில் வந்ததைக் கண்டும் கேட்டும் நம்ப முடியாதவராக எனது துணைவி புளங்காகிதமடைந்தார். எங்களது இளைய மகன் சொன்ன தகவலினால்தான் இந்த இரவு நிகழ்வை தான் பார்ப்பதாக என்மனைவி சொன்னார்.

- அப்போது பல தலையுள்ள ஒரு உருவத்தை தள்ளியவாறு வந்தனர். ஆம் அது யாருமில்லை இராவணன் உருவம். அப்போதுதான் எனது துணைவியாருக்குப் பரிந்தது 'வட இந்தியர்களின் தீபாவளி" கொண்டாடப்படுகிறதென்பது. சென்ற ஆண்டு இலண்டனில் கொண்டாடப்பட்ட நிகழ்வு ஐரோப்பா எங்கும் விரிவாகப் போகிறது. அரக்கனாக பிரபலமாகப் போகிறார் இராவணன்.

- இந்நிகழ்வில் ஒரு வார்த்தை 'வணக்கம்" என்ற சொல் தவழ்ந்தது. இதன் வட இந்தியச் சொல் 'நமஸ்கார்" எனவும் கூறப்பட்டது.

- இந்திய அடையாள தினமாக இந்த 'தீபாவளி" உலகெங்கிலும் முன்னெடுக்கப்படப் போவதை உணர முடிகிறது.

- இந்தக் கலவைக்குள் ஈழத் தமிழன் கரையலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். புராணங்களில் 16,000 பெண்களை வைத்திருந்தாக கூறப்படும் கிருஷ்ணனின் படங்கள் தமிழர்கள் வீடுகளில் புூசை அறையில் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கை வேந்தன் எனக்கருதப்படும் இராவண மன்னனின் படத்தை எங்குமே காண முடியாது. நான் சென்னையில் பல கடைகளில் இராவணனின் படத்தை தேடி அலைந்தும் அது கிடைக்கவில்லை. ஆனால் குரங்கு கடவுள் அநுமனின் படங்கள்; தாராளமாய் கிடைக்கின்றன. தமிழர்கள் இந்த போக்குக்கு என்ன காரணம் என்பதுதான் தெரியவில்லை.

எம் தமிழ் மன்னன் நரகாசூரனுக்கு அஞ்சலிகள்

அனைவருக்கும் வணக்கம்.

உங்கள் கருத்துக்கள் எனக்குப் புதியவை.

அவற்றை குறித்து மேலும் அறிய ஆவலாயிருக்கிறேன், தொடர்ந்து வாசித்துக் கொண்டுமுள்ளேன்.

ஆனால் ஒரு சிறு குளப்பம்!

இந்த நாராயணன் vs நரகாசுரன் மற்றும் ஆரியர் vs திராவிடர் பிரச்சனைகளால் யாராவது இன்று நேரடியாக பாதிக்கப்படுகின்றார்களா?

ஆனால் இந்த சிங்களவர் vs தமிழர் பிரச்சனையால் நாளும் மனித அவலம் ஏற்படுகின்றதே!

(நேற்று மட்டும் யாழில் 8 போர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இளம் தம்பதிகள் உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்)

இந்த அதி அவசரமான பிரச்சனை பற்றி உங்கள் கருத்துகள் என்ன? இதை எப்படி தடுக்கலாம்?

தமிழீழம் கிடைத்த பிறகு தீபாவளியை தேசிய விடுமுறையாக அறிவிப்பதா அல்லது தேசிய துக்கதினமாக அறிவிப்பதா எனும் நிலை வரும் போது விவாதித்தால் மிகவும் பொருத்தமாகவிருக்கும் என்று எண்ணுகின்றேன்.

இதை நான் உங்களிடம் மிகவும் மண்டாட்டமாக கேட்கிறேன்.

ஆம், பதிக்கப்படுகிறோம். சாணக்கியன், சபேசன் என்று வடமொழிப் பெயர்களை தமிழர்களாக எங்களுக்கு சுூட்டிக் கொண்டிருக்கிறோம்.

பெயர், மொழி, பண்பாடு என்று எதுவுமே தமிழ் இல்லாது எங்கள் அடையாளத்தை இழந்து விட்டோம். இதன் பாதிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன.

அத்துடன் சிங்களவர்களும் தங்களை ஆரியர்கள் என்று சொல்வது உங்களுக்கு தெரியாதா?

சாணக்கியன்! எமக்கு சொன்னதை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கும் சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபவளி.... என்பது தங்களை 'வேதமாந்தர்' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் 'நிலத்தேவர்களினால்' உருவாக்கப் பட்டு தினிக்கப்பட அவர்களுக்கென்றே கொண்டாடப்படும் பன்டிகையே.

எனது பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு வட நாட்டுக்காரனிடம் ஏன் நீங்கள் தீபாவளி கொண்டாடுகிறீர்கள் என்று கேட்ட போது. அவர் சொன்னார்: 'இது இராமர் இராவணன் என்னும் தென்னாட்டு அர்க்கனை கொண்ட நாள்" என்வே தான் கொண்டாடுகிறோம் என்றுச் சொன்னான்.

எனக்கு ரத்தமே கொதிக்கத் துடங்கி விட்டது... ஒரே குத்துல அவனுடைய மூக்கை உடைக்கனும் போல இருந்தது...

அவர், திரும்பி என்னிடம் "உங்கள் தீபவளி எப்படி" என்று கேட்டார். நான் எந்த பன்டிகையையும் கொன்டாடுவதில்லை... நீங்கள் இப்பொழுது கொண்டாட்டத்திலே இருக்கிறீர்கள். நாலைக்கு வந்து உங்களிடம் பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.

எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று wikipedia க்கு போன போது அங்கு இப்படியாக குறிக்கப்பட்டிருந்தது:

"The festival of Diwali or Deepawali (literal meaning: lines of lamps) is rooted in the mythological epic Ramayana, and is a celebration of the return of Lord Ram after killing Ravan the Demon.... "

தமிழனே இதை நீ கொண்டாடத்தான் வேண்டுமா?

ஏன்?

எதற்கு?

எப்படி?

என்று பகுத்தறிவுமிக்க மனிதன் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டாயா?

இந்த கிரிஷ்ணர் பற்றி எனது அம்மாவிடம் நான் சொல்ல. " நாத்திகம் பேசினர்வர்கள் எல்லாம் நாறி போய் கிடக்கிறார்கள், வாயை மூடு" என்று திட்டி விட்டார். வீட்டையே திருத்த முடியாத போது நாட்டை எங்கே போய் திருத்த? :D

அது பயம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். கடவுள் வந்து கண்ணைக் குத்திவிடும் என்ற அச்சம் இருக்கு மட்டும் அவர்களை திருத்துவது கடினம்.

ஆனால் இது இன உணர்வு சம்பந்தப்பட்ட விடயம். அதை முன்வைத்து பேசுங்கள். மதத்தின் பெயரால் எமது இனம் எவ்வளவு து}ரம் இழிவுபடுத்தப்படுகிறது என்பதை சொல்லுங்கள். சில வேளைகளில் கேட்பார்கள்.

மற்றையபடி இது நாத்திகம் இல்லை. இங்கு யாரும் கடவுள் பற்றி பேச வரவில்லையே.

ஈழவன்85 இங்கு வந்து அஞ்சலியும் தெரிவித்துவிட்டு "தீபாவளி வாழ்த்துக்கள்" பகுதியில் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

ஈழவனுக்கு என்ன குழப்பம்?

இந்தியாவில் தீபாவளி வந்து மேற்கத்தேயவர்களிற்கு நத்தார் போன்று பாரிய அளவில் ஒரு வியாபார மயப்படுத்தப்பட்டுவிட்டது.

வேற்றுக் கலாச்சார சமூகத்தின் மத்தியில் இருக்கும் புலம்பொயர்ந்த தமிழருக்கு ஒரு இன குழும அடையாளத்தை கொடுக்கிற நிகழ்வாகிவிட்டது தீபாவளி. இந்தியர்களோடு இணைந்து கொண்டாடும் நிகழ்வாக பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் வேறு சமூக அமைப்புகளில் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் தவிக்கிறார்கள்.

எனவே சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால் தீபாவளி எதிர்காலங்களில் மேலும் முக்கியத்துவம் பெற்ற விழாவாக புலம் பெயர்ந்தவர்களால் கொண்டாடப்படும்.

தீபாவளியின் வரலாற்று பின்னணியை விளங்கப்படுத்தும் பொழுது ஆரியரின் அடக்கு முறை பற்றி ஒரு எல்லைக்கு மீறி சென்று தற்காலத்தில் குற்றம் சாட்டுவது அர்த்தம் அற்றது. அவர்கள் ஒரு காலத்தில் ஏமாற்றிவிட்டார்கள் அடக்கினார்கள் ஆனால் எங்களுக்கு தற்பொழுது எந்த நிர்ப்பந்தமும் அடக்குமுறையும் இல்லை தீபாவளியை கொண்டாட சொல்லி. எனவே தவறும் எம்மிடம் தான் இருக்கு மாற்றமும் எம்மிடம் தான் வரவேண்டும்.

இதற்கு முதலில் பல அடிப்படை விடையங்களில் தெளிவு தேவை.

தமிழரின் கலாச்சாரம் பண்பாடு என்றால் என்ன? அதில் இந்து சமயத்தின் விபரங்கள் விளக்கங்களிற்கு என் இடம் வழங்கப்படுகிறது.

இந்து சமயத்தை தமிழரின் கலாச்சாரம் பண்பாட்டின் அடிநாதமாக பார்க்கிறார்களா இல்லை கால ஓட்டத்தில் ஆரியரின் அறிமுகமாக பார்க்கிறார்களா?

சின்ன வயதில் இருந்து ஒரு வாழ்வு முறையை நம்பி ஏற்று வழர்ந்துவிட்டோம் அதை மாற்றுவது கடினம். ஆனால் எமது அன்றாட வாழ்கையில் நாம் தமிழர் என்று பெருமையாக நினைத்து நடந்து கொள்ளும் வாழ்வு முறையில் எவை எவை தமிழருக்குரியது எவை இந்து மதத்தின் அறிமுகம் என்பதை சுயவிசாரணை செய்ய முயல வேண்டும்.

தீபாவளியை ஒரு கொண்டாட்டமாக உற்றார் உறவினர் ஒன்று கூடும் நிகழ்வாக வாழ்த்து சொல்லும் நிகழ்வாக, உபசரிக்கும் நிகழ்வாக பலர் பாக்கிறார்கள்.

இங்கு பிரச்சனை தமிழர்கள் வாழ்த்துக்கள் சொல்லி உபசரித்து கொண்டாடக் கூடாது என்பது அல்ல. அந்த கொண்டாட்டத்தை என்ன வரலாற்று பின்னணி காரணங்களால் செய்கிறோம் என்ற ஒரு தேடல் தேவை. தீமைகள் நீங்க நன்மைகள் நடக்க வேண்டும் என்று வாழ்த்துவதில் எந்த தவறும் அல்ல. சந்தோசமாக குடும்பத்தினர் நண்பர்கள் ஒன்று கூடுவதில் தவறில்லை. ஆனால் தவறாக குற்றம்சாட்டப்பட்ட உங்களில் ஒருவரின் மரணத்தை நீங்கள் தீமை ஒழிந்த நாளாக கொண்டாடுவது அறியாமையின் உச்சம்.

மேற்கத்தேயவர்கள் மரணவீடுகளில் உடலை நல்லடக்கம் செய்த பின்னர் பாரிற்கு சென்று மது அருந்தி சிறு கொண்டாட்டத்தை நடத்துகிறார்கள். ஆனால் அவர்களை அதை முழுத் தெளிவோடு தான் செய்கிறார்கள். மரணித்தவரின் திருப்திகரமான வெற்றிகரமான வாழ்கையையும் அவர் தந்துவிட்டுச் சென்ற இனிமையான அனுபவங்களையும் கொண்டாடுகிறார்கள். மரணித்தவரோடு தீமை அழிந்தது என்று கொண்டாடவில்லை.

எனவே உங்கள் கொண்டாட்டங்களை வாழ்த்துக்களை வெறும் பழகிவிட்ட ஒரு நவீன நாகரீக வாழ்க்கையின் அங்கமாக தொடருங்கள் ஆனால் அதன் வரலாற்றில் உள்ள திரிபுகளை விளங்கியவாரா செய்யுங்கள். உங்கள் மூதாதையரை கொடியவனாக அரக்கனாக சித்தரித்து அழித்த சதியை விளங்கிக் கொள்ள தவறாதீர்கள் இல்லாவிட்டால் அதைவிட மோசமான அவமதிப்பை உங்கள் மூதாதையருக்கு செய்வது கடினம்.

நீங்கள் புராணங்களை, இதிகாசங்களை, பத்து தலையை, புட்பக விமானத்தை, கடலில் பல மைல்கள் பாலம் கட்டிய வானரங்களை, படையாக சண்டையிட்ட வானரங்களையும், குரங்கின் வால் தீபந்தமாக ஒரு நாட்டை எரிக்க பயன்பட்டது என்பவற்றை நம்பலாம் ஆனால் நீங்கள் உறவாடும் மேற்கத்தேய உலகம் நம்பாது. அவர்களின் வரலாற்றிலும் இப்படி பல உண்டு ஆனா அவற்றை சரியாக இனங்கண்டு அதற்குரிய இடத்தில் வைத்திருக்கும் விழிப்புணர்வு கொண்ட சமூகமாக தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் வரலாற்றை கிண்டி கிளறி பகை வழர்க்கவில்லை வரலாற்றை நிராகரிக்கவில்லை ஆனால் அதிலுள்ள திரிபுகளை இனங்கண்டு அதற்குரிய நிலையில் அவற்றை வைத்திருக்கிறார்கள்.

நாம் இன்னமும் அந்த பக்குவத்தை பெறவில்லை. வரலாற்று திரிபுகளை இன்னமும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறம். அதனால் எங்கள் அன்றாட வாழ்க்கையில் பலமுரண்பாடுகள் (hypocrisy) உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.