Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் "ஹொஹோய்" ராஜா!

Featured Replies

ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் "ஹொஹோய்" ராஜா!

2m5j79e.jpg

ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் கானா: ஸ்பை மூலம் பிற நாடுகளை உளவு பார்த்து நாட்டை ஆண்ட ராஜாக்கள் இன்று இல்லை. மாறிவரும் மாடர்ன் உலகில் அரசர் ஒருவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, "ஸ்கைப்" மூலமாக நாட்டை ஆண்டு வருகின்றார் என்றால் நம்ப முடிகின்றதா?

அந்தக் கால அரசர்கள், சிம்மாசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஹாயாக ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டே தீர்ப்பு சொல்கிறார் அரசர் கிங் பான்சா. இவருடைய கெட்டப்பைப் பார்த்ததும் பழங்காலத்து அரசர் என்று நினைத்துவிடாதீர்கள். பக்கா மாடர்ன் ராஜா தான் இவர்.

மாடர்ன் ராஜ்ஜியம்:

இவர் ஒரு மார்டன் அரசர். நவீன யுகத்தில் வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொடர்பைக் கொண்டு ஜெர்மனியில் உட்கார்ந்தபடியே ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் உள்ள தன் ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.

ஸ்கைப் மூலம் தீர்ப்பு:

62 வயது கிங் பான்சா, ஜெர்மனியில் இருந்தபடியே கானாவில் உள்ள ஹொஹோய் பகுதியில் வசிக்கும் 2 லட்சம் மக்களின் பிரச்னைகளை "ஸ்கைப்" மூலம் தீர்த்துவைக்கிறார்.

ஜெர்மனியின் செந்தேன் மலரே:

சிறு வயதில் படிப்புக்காக ஜெர்மனி சென்ற பான்சா, ஒரு பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

தாத்தா இறந்ததால் ராஜா:

1987 இல் ஹொஹோய்க்கு ராஜாவாக இருந்த பான்சாவின் தாத்தா இறந்ததால், இவர் அரசர் ஆனார். ஸ்கைப்பில் தீர்ப்பு: அதன்பின்னர் தன் ராஜ்ஜியத்தை ஸ்கைப்பில் இணைத்துக் கொண்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தீர்ப்புகள் சொல்லுவதும், உத்தரவுகளைப் பிறப்பிப்பதுமாக பிஸியாக உள்ளார்.

ஹாயாக விசிட்:

ஆனால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஹொ ஹோய்க்கு ஹாயாக சென்று வருகிறார் இந்த மாடர்ன் காலத்து மகாராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/king-ghana-island-german-216742.html

ஏன் எங்கள் நாடு கடந்த அரசும் கூடத் தான் ஸ்கைப்பிலேயே தன் அரசை நடத்தி வருகுது. இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்கைப் மூலமே அவர்கள் தமிழ் ஈழத்தினையும் பெற்றுத் தரப்போவதாக சொல்லியினம்...

  • தொடங்கியவர்

ஏன் எங்கள் நாடு கடந்த அரசும் கூடத் தான் ஸ்கைப்பிலேயே தன் அரசை நடத்தி வருகுது. இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்கைப் மூலமே அவர்கள் தமிழ் ஈழத்தினையும் பெற்றுத் தரப்போவதாக சொல்லியினம்...

வலு கெதியாக கிடைத்துவிடும் :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு விடுதலைப் போரையே ஸ்கைப்பில நடத்துறம், இவர் நாட்டை ஆழுவது பெரிய இதோ?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு விடுதலைப் போரையே ஸ்கைப்பில நடத்துறம், இவர் நாட்டை ஆழுவது பெரிய இதோ?

இப்படி நாங்கள் எழுதினால் நிஜனி அவர்கள் தூக்கிவிடுவார்கள்.
 
உண்மை உலகிற்கு வாருங்கள். எதிரியும் ஸ்கைப்பில் இருந்தால் தொடரலாம்.
மாறாக எதிரி எமது நிலத்தில் நின்றுதான் 1970இல் இருந்து வேட்டை ஆடுகிறான். 
  • கருத்துக்கள உறவுகள்

எதிரி எமது நிலத்தில் நிண்டு மட்டுமில்லை, 48 இலிருந்து எமது நிலத்தை விழுங்கிய படியே போராடுகிறான்.

கிழக்கில் மட்டகளப்பின் கரையோரம், எழுவான்கரை தவிர மிகுதி எல்லாம் போய்விட்டது.

வடக்கில் வவுனியா தெற்குப்போய், இப்போ நெடுங்கேணி, நாயாறு வழியாக அலம்பில் செம்மலை வரை நாக்கு நீள்கிறது.

இதை தடுப்பதற்கு இப்போ இருக்கும் ஒரே வழி 13 மூலம் காணி அதிகாரத்தை பெற்று தொடர்ந்து போராடுவதே.

அல்லாமல், முகப்புத்தகத்தில், ஸ்கைப்பில் விடுதலை போரை தொடர்வதே தக்க வழி என்றிருப்போமாயின், இன்னும் பத்து வருடத்த்தில் வடக்கிலும் சிறுபான்மையாய் ஆக்கப்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்கள் நாடு கடந்த அரசும் கூடத் தான் ஸ்கைப்பிலேயே தன் அரசை நடத்தி வருகுது. இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்கைப் மூலமே அவர்கள் தமிழ் ஈழத்தினையும் பெற்றுத் தரப்போவதாக சொல்லியினம்...

நாடு கடந்த அரசைச்சேர்ந்தவர்கள்

நாட்டிலிருந்து அதைச்செய்யமுடியாது

எல்லோரும்  ஒரு இடத்தில் ஒன்று கூடுவதும்  செலவும் சிரமமுமாகும்.

ஆனால் இந்த  ராஜா!

அதைச்செய்யலாம்

என்னைப்பொறுத்தவரை 

நாடு கடந்த அரசும் கூடத் தான் ஸ்கைப்பை பயன்படுத்துவது சரி.

ஆனால் செயல் காணாது என்பது விமர்சனத்துக்குரியது

அதேநேரம்  நம்மில் எத்தைன பேர்

அவர்களுக்கு உதவியாக உறுதுணையாக  இருக்கின்றோம் என்பதும் விமர்சனத்துக்குரியது..

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் உருப்படியா சமஸ்டி மாரி ஏதாவது நடக்க கூடியதை கேட்டு, கூட்டமைப்புடன் இணைந்து செயல்ப்பட்டா சேர்ந்து ஏதாவது செய்யலாம்.

இப்படி நடக்காத விடயத்துக்கு போராடினா எவன் வருவான்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் உருப்படியா சமஸ்டி மாரி ஏதாவது நடக்க கூடியதை கேட்டு, கூட்டமைப்புடன் இணைந்து செயல்ப்பட்டா சேர்ந்து ஏதாவது செய்யலாம்.

இப்படி நடக்காத விடயத்துக்கு போராடினா எவன் வருவான்?

அதை உள்ளே  போய்ச்சொல்லலாமே.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜோக்கா அடிக்கிறியள் - ஒரு நாட்டின் பிரதமந்திரி எண்டு அந்தாள் நினைச்சுக் கொண்டு நிக்க - நான் போய் 13 இல துடங்கி சம்ஸ்டிக்கு போவோம் எண்டா, அவருக்கு கெட்ட கோவம் வராது?

இந்த அமைப்பே தனிநாடு எனும் கருத்தியலை அடிப்படையாக கொண்டு அமைந்தது. நீங்கள் சொல்வது தமிழர்கள் எல்லாம் பொதுபல சேனாவில் சேர்ந்து,உள்ளே போய், அவர்களை இனவாதிகளாக இல்லாமல் ஆக்கணும் என்பது போலிருக்கு.

பிரச்சினை

பிரதமரா?

மாற்றமா??

நீங்க தான் முடிவெடுக்கணும்...

தட்டினால் திறக்கும் என்று இன்றும் நம்புபவன் யான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை அவர்களின் கொள்கை. தனிநாடு வேண்டாம், சமஸ்டிதான் வேண்டும் என்று கூட்டமைப்புச் செய்தது போல அறிவிக்கட்டும். நான் மட்டுமில்லை பலர் இவர்களுடன் சேர்ந்துழைக்க தயாராய் இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை அவர்களின் கொள்கை. தனிநாடு வேண்டாம், சமஸ்டிதான் வேண்டும் என்று கூட்டமைப்புச் செய்தது போல அறிவிக்கட்டும். நான் மட்டுமில்லை பலர் இவர்களுடன் சேர்ந்துழைக்க தயாராய் இருப்பர்.

ஏன்  அவர்கள் மாறவேண்டும்??

வேறு பல அமைப்புக்கள் அவ்வாறு மாறியுள்ளனவே...

அவற்றை  ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இயங்கலாமே....

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை அவர்களின் கொள்கை. தனிநாடு வேண்டாம், சமஸ்டிதான் வேண்டும் என்று கூட்டமைப்புச் செய்தது போல அறிவிக்கட்டும். நான் மட்டுமில்லை பலர் இவர்களுடன் சேர்ந்துழைக்க தயாராய் இருப்பர்.

முழம் ஏற கனவு காண்பவன்தான் சான் என்றாலும் ஏறுகிறான்.
என்று பல   motivate talkers  கூறுகிறார்களே ?
அது பிழையா ?
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இயங்குறோமே.

மருதர்,

என்னைப்பொறுத்தவரை, யதார்த்த, தர்க்க ரீதியில் ஏற்றுக்கொள்ள கூடிய விடயங்களை மட்டுமே நம்புகிறேன்.

Rationality மட்டுமே உண்மை, positive thinking, motivational thinking, எல்லாம் ஒருவகை coping mechanism.

கடவுளைப் போல. காக்கா இருக்க பனம் பழம் விழும் கதை.

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவர்கள்ளுக்கு  தெரியும் தமிழர்களுக்கு இடம் கொடுத்தால் மடம் கட்டுவார்கள்  என்று.
சமஸ்டியை கொடுத்தால் அதைவைத்து ..... உள்ள நாடுகள் ஐ நா என்று ஏறி சிக்கலை கொடுப்பார்கள்.
 
தவிர தமிழ் .... சிங்களம் இரண்டு தரப்பிலும்.
இங்கே விடிவை எடுத்துதருவேன் என்பவனும் 
அங்கு துளியும் கொடுக்க மாட்டேன் என்பவனும்தான் 
 
தேர்தலில் வெல்ல முடியும் என்பது யதார்த்தம். அதிகாரத்தில் உட்கார முடியும். 
 
எப்படி சமஸ்டியை நம்புகிறீர்கள்?
this is absolutely not a rational.   
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எங்கள் நாடு கடந்த அரசும் கூடத் தான் ஸ்கைப்பிலேயே தன் அரசை நடத்தி வருகுது. இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்கைப் மூலமே அவர்கள் தமிழ் ஈழத்தினையும் பெற்றுத் தரப்போவதாக சொல்லியினம்...

அசுர கணத்தில் பொருளாதார உதவிகள் கிடைத்தால் அவர்களும் அசுர வேகத்தில் முன்னேறுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.