Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னொமொரு அரிய புகைப்படம் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காரைநகர் விடயத்தை ஓகே உண்மையென்றே வைத்துவிட்டு ...
 
அர்ஜுன் அண்ணாவின் பிறந்தாளுக்கு வாருங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

நான் என்பது ஒரு பத்துப்பேரை குறிக்கும் என வையுங்கள். நீங்கள் என்பது இன்னொரு பத்துப்பேர்.

என்னில் 10இல் 4 பேர் காவாலிகள். உங்களில் 10 இல் 2 பேர் காவாலிகள். நீங்கள் என்னில் இருக்கும் காவாலிகளை அடிப்பதாக சொல்லி 8 பேரை அடித்து விடுகிறீர்கள். அதில் 6 பேர் காவாலிகள் இல்லாதோர். இப்போ என்னில் மிஞ்சியிருக்கும் 2 பேருமே காவாலிகள்.

இந்த காவாலிகள்தாம் 87 இல் வெறியாட்டம் போட்டார்கள். இந்த காவாலிகள் அர்ஜுனை தர்ம அடி அடித்தன. அதுக்கு நானும் நீங்களும் பொறுப்பாகிறோம்.

உங்களில் இருக்கும் 2 காவாலிகளும் தொடர்ந்தும் வந்த பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துவது போல பல காவாலி விடயங்களை செய்தார்கள், ஆனால் 2003 வரை அந்த காவாலிகளை, சிறப்புதளபதி என்று ஏத்தி வைத்தீர்கள். வெளிநாட்டுக்கும் கூட்டிப்போனீர்கள். 2003 இல் அதே காவாலிகள் உங்கள் தலையிலும் கைவைத்தன.

காவாலிகள் எங்கும் இருப்பார். ஒரு இயக்கம் என்பது அதுசார் சமூகத்தின் பிரதிபலிப்பே. காவாலிகளை களை எடுக்கும்போது, பயிர்ரையும் சேர்த்து எரித்த முட்டாள்தனம் யாருடையது?

காவாலிகள் என்பது இங்கே ஒரு பொய்க்காரணம்.

நீங்கள் என்னை அடித்ததற்க்கு உண்மையான காரணம், அர்ஜூனின் பிறந்தநாளை, தனியாக ஹால் எடுத்து கொண்டாடவேண்டும் எண்டு நீங்கள் சொல்ல, லாக்கல் பண்ணையாருக்கு அது பிடிக்கேல்ல. பண்ணையை பகைத்தபடி நாம் ஒரு போதும் விழா நடத்த முடியாது, எனவே பண்ணை சொல்லுவது போல பார்ட்டியை, வீட்டுக்குள்ளே வைப்போம் என்று நான் எடுத்த அரசியல் முடிவுதான் நிஜக்காரணம்.

என்னை நீங்கள் பண்ணையின் கைக்கூலி என்பீர்கள். உண்மை என்னவென்றால் பண்ணையை பகைத்து ஒண்டும் செய்யேலாது என்று தெரிந்தபிந்தான் நான் ஹாலில் பார்ட்டிவைக்கும் முடிவை கைவிட்டேன்.

இந்த அரசியல் பன்முகதன்மையை சகிக்க முடியாத நீங்கள், காவாலிகளை சாட்டி என்னை அடித்தீர்கள். பின்னர்2002 வாக்கில் என்னில் எஞ்சிய காவாலிகளை உங்கள் பிரதிநி என பஞ்சாயத்துக்கும் அனுப்பினீர்கள்.

இறுதியில் பண்ணை உங்களை அடித்து முடித்துவிட்டார். பாவம் அர்ஜூன் அண்ணா வீட்டிலும் பார்ட்டியில்லை, ஹாலிலும் இல்லை. அடிவாங்கி நொந்து போய்விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

:D இந்தப் "படம் பார் பாடம் படி" கயிறிழுப்பு இப்ப யாழின் ஹொலிடே சீசன் ஸ்பெஷல் மாதிரி நடக்குது! இந்தத் திரியை தகவல் அறியும் திரியாக நடத்த படம் போடும் பதிவர்களின் புலி எதிர்ப்பு விடுகுதில்லை! அதே நேரம் தவறு செய்த தலைவர்களை புனிதப் படுத்திக் காட்டும் நடவடிக்கை புலி ஆதரவுக் கருத்துகளுக்கு எதிர்விளைவாக இருக்குது. படத்தைப் பார்த்துட்டு , "அப்படியா?" எண்டிட்டுப் போய்கொண்டே இருந்தா திரி பேசாமல் அணைஞ்சிரும் என நினைக்கிறன். விக்கிபீடியா வாசிச்சு எப்படி விஞ்ஞானம் படிக்க முடியாதோ, அது போல யாழ்வரலாற்றுப் பதிவுகளால் யாரும் தமிழ் போராட்ட வரலாறு அறிந்து கொள்ளவும் முடியாது! எதையும் take with a grain of salt!

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்பது ஒரு பத்துப்பேரை குறிக்கும் என வையுங்கள். நீங்கள் என்பது இன்னொரு பத்துப்பேர்.

என்னில் 10இல் 4 பேர் காவாலிகள். உங்களில் 10 இல் 2 பேர் காவாலிகள். நீங்கள் என்னில் இருக்கும் காவாலிகளை அடிப்பதாக சொல்லி 8 பேரை அடித்து விடுகிறீர்கள். அதில் 6 பேர் காவாலிகள் இல்லாதோர். இப்போ என்னில் மிஞ்சியிருக்கும் 2 பேருமே காவாலிகள்.

இந்த காவாலிகள்தாம் 87 இல் வெறியாட்டம் போட்டார்கள். இந்த காவாலிகள் அர்ஜுனை தர்ம அடி அடித்தன. அதுக்கு நானும் நீங்களும் பொறுப்பாகிறோம்.

அதுதான் உண்மை !
 
நான் ஏற்கனவே சொன்னதுபோல் .... ஹிட் அண்ட் ரன் ஆகா தொடங்கிய போராட்டம்.
1985-1986இல்  புளொட் டெலோ புலிகள் ஈபி ஈரோஸ் என்று இருந்த தமிழர் விடுதலை இயக்கங்களால் சிங்கள் இனவாத படைகளை அவர்களது முகாம்களிலேயே முடக்கி வைக்கும் நிலையை அடைந்தது.
 
1986 அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. கிடத்தட்ட சிங்கள இனவாத படைகளுக்கு தமிழர் நிலபரப்பு என்பது ஒரு அந்நிய எதிர் நாட்டு பிரதேசம்போலவும். அதன் மீது பாரிய இராணுவ நடவடிக்கையை மக்கள் சாதாரண இயல்புநிலை என்பதை (விடுதலை போரை அடக்க எல்லா இடமும் கையாளப்படும் ஒரு விடயம். ஈரான் வட கொரியா மீது சிறுவர்கள் பால்மாவிட்கும் தடை) குறிவைத்து அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கியபோது.
 
காவலிகளை வைத்துகொண்டு 
தமிழர் பலத்தை 25-30 ஆக பிரித்து கொண்டும் இருக்க முடியாத நிலைமை வந்ததால்தான். பிரபா பாலா பத்மா சிறி ஆகியோர் ஒன்றாக இணைய முயற்சி செய்தார்கள். 
முடியவில்லை என்று விட்டு மற்றவர்கள்போல் பிரபா காட்ஸ் கூட்டம் பிரித்து 304 விளையாடிக்கொண்டு இருக்க விரும்பவில்லை. அதற்காக அவர் அந்த இயக்கத்தை பசி பட்டினி கிடந்தது வளர்க்கவும் இல்லை.
 
சில துயரங்களோடு அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயம் என்பது காலத்தால் உருவாக்க பட்டது. 
 
20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.
 
பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார். ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.
 
வ்வேளையில் தான் எம்மைப்பற்றி அறிந்து கொண்ட பிரபாகரன் எம்மைத் தேடி எமது ஊருக்கு வருகிறார். முதலில் எமது ஊரைச் சேர்ந்த ராகவனைச் சந்திக்கிறார். அவரின் ஊடாக என்னையும் குலம் என்பவரையும் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். செட்டி தான் எமது தொடர்புகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் கூறுகிறார். இவ்வேளையில் செட்டி தொடர்பாக நாம் முழுமையாக அறிந்திருந்தோம். இதனால் செட்டியின் தொடர்பாளராகப் பிரபாகரன் அறிமுகமானதால் நாம் அவரைது தொடர்புகளை நிராகரித்திருந்தோம்.

அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்.

மேலே நீலத்தில் இருப்பது ...

பின்னாளில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் எதிராக இயங்கிய ஐயர் என்பவரால் எழுதபட்டது. 
  • கருத்துக்கள உறவுகள்

தனி மனித ஒழுக்கத்தில் பிரபாகரன் ஒரு துருவ நட்சத்திரம். கொள்கை பற்றில், உழல் இன்மையில், கறைபடியா பொதுவாழ்வில் முன்பும், பின்பும் நிகரில்லாத ஒரு மனிதன். இதை சொல்ல எனக்கு ஒருபோதும் தயக்கம் இருந்ததில்லை. ஐயர் சொல்லித்தானா இது தெரியணும்?

ஆனால் அதுக்காக அவர் செய்த தவறுகளை சரி என வாதாட முடியாது. எல்லோராலும் அவரளவுக்கு கட்டுக்கோப்பாக இயக்கம் நடத்த முடியவில்லை என்பது உண்மை. உமாவின் புளொட்டு மிக மோசாமாய்ப் போனதும் உண்மை. ஆனால் சகோதர இயக்கங்களை நரவேட்டை ஆடாமல் வேறு வழிகளில் இந்த பிரச்சினையை தீத்திருக்கலாம்.

நான் முன்பே சொன்னது போல் மற்றயவர்களின் இந்திய சார்பு நிலையே, புலி அவர்களை தடை செய்ய உண்மைக்காரணம்.

ஜஸ்டீன்,

For the stuff you guys write here, we will need not a pinch of salt, or a grain of salt, not even a sack of salt but a saltern itself ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றது .....

1986இற்கு முன் சொந்த இனத்தை போட்டுத்தள்ள ஒருவன் இருப்பன் என்பது எதிரிக்கும் தெரியாது.

சிலுக்கு ஸ்மிதா கமுனுட்டியை காட்டினால்

தாயை கூட கூட்டிவிட ஒரு கூடம் இருந்ததை அதன் பின்தான் இந்தியா கண்டு பிடித்தது.

புலிகள் அவர்களை அடித்தால்.

ஒரு உதாரனத்திட்கு நானும் நீங்களும் அர்ஜுன் அவர்களின் அடுத்த பிறந்தநாளை 1984இல் தம்பா மகேஸ்வரன் சென்னையில் பிடிபட்டு சிறை சென்றார் என்ற பரம உண்மையை தெரிந்து வைத்திருப்பதால் மிக விமர்சையாக கொண்ட்டாட வேண்டும்.

அண்ணை, உங்களுக்கு இதெல்லாம் யுயுப்பி. ஆனால் இதை வைத்து கதை கட்டுரை வரைபவர்களுக்கு இதெல்லாம் key points கண்டியலோ. நாளைக்கு இதையே மாத்தி எழுதிபோட்டு அதுக்கும் ஒரு கிரெடிட் எடுக்க ஒரு குறுப் வெளிப்படும் :)

இப்ப நீங்கள் திம்பு பேச்சுவார்த்தைக்கு போன நேரம் 4 தலைவர்களும் ஒன்றாக எடுத்த படத்தை மட்டும் வைத்து கொண்டு, ஏதோ அது ராணுவ ஒப்பந்தம் செய்து போட்டு எடுத்தது போல கதைவசனம் எழுதி கொண்டு இருப்பது போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D இந்தப் "படம் பார் பாடம் படி" கயிறிழுப்பு இப்ப யாழின் ஹொலிடே சீசன் ஸ்பெஷல் மாதிரி நடக்குது! இந்தத் திரியை தகவல் அறியும் திரியாக நடத்த படம் போடும் பதிவர்களின் புலி எதிர்ப்பு விடுகுதில்லை! அதே நேரம் தவறு செய்த தலைவர்களை புனிதப் படுத்திக் காட்டும் நடவடிக்கை புலி ஆதரவுக் கருத்துகளுக்கு எதிர்விளைவாக இருக்குது. படத்தைப் பார்த்துட்டு , "அப்படியா?" எண்டிட்டுப் போய்கொண்டே இருந்தா திரி பேசாமல் அணைஞ்சிரும் என நினைக்கிறன். விக்கிபீடியா வாசிச்சு எப்படி விஞ்ஞானம் படிக்க முடியாதோ, அது போல யாழ்வரலாற்றுப் பதிவுகளால் யாரும் தமிழ் போராட்ட வரலாறு அறிந்து கொள்ளவும் முடியாது! எதையும் take with a grain of salt!

Boss: நீங்கள் இது தொடர வேண்டும் என்று சொல்லுகிறீர்களா அல்லது வேண்டாம் என்று சொல்லுகிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கை இருக்க வேணுமோ அங்கை தான் இருக்கிறம். நெல்லியடி மில்லரை தான் குறிப்பிடுகிறேன். அவரின் உறவினர் என்னோடு வேலை செய்கிறார். அவர் குறிப்பிட்டதை தான் குறிப்பிடுகிறேன். உங்களின் பார்வை எனக்கு இருக்க வேண்டும் என்று விதியோ?? நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் என நானும் கேட்கலாமோ??

95 இடப்பெயர்வு தவிர 2004 மட்டும் குப்பை கொட்ட வேண்டிய எல்லா நேரமும் யாழ் தான். 95 ல் தலமையால special pass தந்தவர்கள். !!!

வல்குனோ அண்ணே.. நீங்க மனிசன் தோன்றேக்கையே பிறந்து சிரஞ்சீவியா வாழ்ந்திருக்கனும். அப்ப தான் மொத்த மனிதனின் வரலாற்றையும் அப்படியே கண்கண்ட சாட்சியாக..சொல்லி இருப்பீங்க. அதை நம்பியும் இருப்பீங்க. தப்பி சரி பின்னாடி பிறந்துட்டீங்கண்ணே. :D:lol:

:)

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் விடயம், இவ்வாறு சரணடைந்தவர்கள் இருவர், மற்றும் சரணடைய கூட்ட்டிச்சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆகியோரிடம் நேரில் பேணி அறிந்தது. இதை எல்லாம் என்ன கல்வெட்டிலா எழுதி வைப்பார்கள். இங்கேயும் காரைநகரை சேர்ந்தோர் பொஅத் இருக்கலாம். சிலவேளைகளை அவர்கள் நான் சொல்வதை உறுதிசெய்யக்கூடும்.

காரை நகரில் இருந்த ரெலோ உறுப்பினர்களைக் காப்பற்றியது கடற்படை அல்ல. அந்த ஊர் மக்கள் ஒன்றாக அணிதிரண்டு ரெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றினர். ஓரிருவர் கடற்படையினரிடம் சரணடைவதற்கும் சாத்தியக்கூறுகள் இருந்திருக்கலாம்.

கிழக்கு மாகாணப் போராளிகளும் உள்ளூர்ப் போராளிகளும் பலர் காப்பாற்றப்பட்டனர்.

மிசோராம் அல்லது கணக்கன் என அறியப்பட்ட ரெலோ வின் முன்னணி உறுப்பினருக்கு அப்போது காரைநகர் முழுவதும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவருக்காகவே அந்த ஊர் மக்கள் ரெலோவிற்குப் பாதுகாப்பாக நின்றனர் என அறிந்தேன் 

காரைநகர் ஆக்கள் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர்கள் போலத்தான் இருக்குது. அந்த காலத்தில் தந்தை செல்வாக்கு ஆப்படித்து தியாகராஜவை வெல்ல பண்ணினார்கள். பிறகு மகேஸ்வரன்....இப்ப புதிச கிட்டு..இனி யாரோ..

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனித ஒழுக்கத்தில் பிரபாகரன் ஒரு துருவ நட்சத்திரம். கொள்கை பற்றில், உழல் இன்மையில், கறைபடியா பொதுவாழ்வில் முன்பும், பின்பும் நிகரில்லாத ஒரு மனிதன். இதை சொல்ல எனக்கு ஒருபோதும் தயக்கம் இருந்ததில்லை. ஐயர் சொல்லித்தானா இது தெரியணும்?

ஆனால் அதுக்காக அவர் செய்த தவறுகளை சரி என வாதாட முடியாது. எல்லோராலும் அவரளவுக்கு கட்டுக்கோப்பாக இயக்கம் நடத்த முடியவில்லை என்பது உண்மை. உமாவின் புளொட்டு மிக மோசாமாய்ப் போனதும் உண்மை. ஆனால் சகோதர இயக்கங்களை நரவேட்டை ஆடாமல் வேறு வழிகளில் இந்த பிரச்சினையை தீத்திருக்கலாம்.

நான் முன்பே சொன்னது போல் மற்றயவர்களின் இந்திய சார்பு நிலையே, புலி அவர்களை தடை செய்ய உண்மைக்காரணம்.

ஜஸ்டீன்,

For the stuff you guys write here, we will need not a pinch of salt, or a grain of salt, not even a sack of salt but a saltern itself ;)

நீங்கள் அது புலிகளின் தவறு என்று வாதாடலாம்.
காலத்தின் எதிரியின் நகர்வு என்பன எம்மை போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்டது என்பதுதான் உண்மை.
அன்டன் பாலசிங்கம் (புலிகள்) அவர்கள்தான் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் எனும் முடிவில் பல பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தார்.
 
அன்டன் பாலசிங்கம்  குறிப்பாக அடேல் பாலசிங்கம் அவர்கள் மேல் தலைவர் பிரபாகரன் அதிகளவு நம்பிக்கை ஆரம்ப காலத்தில் வைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். (sympathisers  அப்படி என்றுதான் அவர் கருதினார் என்று சொல்கிறார்கள்)
 
அவர் தனது பாதையில் நேராக நடந்தார் என்பதுதான் எனது வாதம்.
பாதை சரியா தவறா என்பதில் விமர்சனம் இருக்கலாம்.
சரியான விமர்சனங்கள் வந்தால் அதை பற்றி வாதிடலாம். 
 
பகவத்கீதையை பலரும் மதிக்கிறார்கள் நான் படித்தபோது அதன் போக்கு எனக்கு பிடிக்கவே இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

எல்லோரும் நேவியிடம் சரணடைந்ததாக நான் சொல்லவில்லை. எனக்குத்தெரிய 2 பேர்.

காரைநகரில் டெலோவை அடிக்க கிட்டு வந்தபோது, வலந்தலையில் நிண்ட லோக்கல் புலி வோக்கியில் கிட்டரிடம் (பொன்னாலையில் கிட்டு) மக்கள் எதிர்குறார்கள் அண்ண என்று சொல்ல, "மக்கள் என்னடா மக்கள்" என்று தொடங்கி கிட்டு ஏக வசனத்தில் திட்ட, இது லவுட் ஸ்பீக்கரில் எல்லோருக்கும் கேட்டு, மக்கள் டென்சன் ஆனாதாய் சொல்வார்கள்.

மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் புலிகள் ஒரு சமரசுத்துக்கு வந்து டெலோவின் ஆயுதங்களை களைந்தாலும், தனிப்பட்ட உறுப்பினர்கள் மண்டையில்போடப்படும் ஆபத்து தொடர்ந்து இருந்தது. இதனால் வேறு வழியின்றி நேவியிடம் சரணடைந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.