Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸி. பணயக்கைதிகள் விவகாரம் ; உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

62688781cd7d49e5c65e91962e4c42a9.jpg

அவுஸ்திரேலிய பணயக்கைதிகள் விவகாரத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமைகோரியுள்ளது. இன்று காலை சிட்னி நகரிலுள்ள கபே கட்டடத்தொகுதியில் 20 பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இந் நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் ஐவர் தப்பியோடி வந்துவிட்டதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 
அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9 நியூஸ் நிறுவனத்திற்கு  பெண் பணயக்கைதிகள் இருவரை  தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளச்செய்து தீவிரவாதி தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து செய்தி நிறுவனம் எதனையும் வெளியிடவில்லை.
 
இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமைகோரியுள்ளதுடன் மேற்குலக நாடுகளுக்கு இது ஆரம்பம் என தெரிவித்துள்ளது. நாளை இந்தியாவின் பெங்களுரில் தாக்குதல் நடாத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 

(முதலாம் இணைப்பு)

 

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் தீவிரவாதிகளின் செயற்பாட்டினால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

 
சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 50 பொது மக்களை ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் சிறைபிடித்து வைத்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
அவுஸ்திரேலிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 
மேல் மாடியில் ஒரு கறுப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திசை மாற்றப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. 
 
இந்த செயலில் ஈடுபடும் நபர்களது நோக்கம் இன்னும் தெளிவில்லை என்றும் ஆனால் இது அரசியல் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். 
 
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தனி அரசு போராட்டத்திற்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவளித்து வருகிறது. 
 
பொது மக்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தில் அமெரிக்க தொடர்பு அலுவலகமும் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டின் அலுவலகமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 
 
_79727562_936763fb-44ff-4f1b-8a30-9b3c0c
 
 
_79727229_4160c311-a6c2-404e-a997-ad0c78
 
773018272261460130240E103600000578-28738
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=369333727615610583

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆஸி. பணயக்கைதிகள் விவகாரம் ; உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்

 

 

நீங்கள் உரிமை கோருவியளோ இல்லையோ!!!!! அது வேறை விசயம்......ஆனால் உங்களுக்கு இனித்தான் திருவிழாவே ஆரம்பம். :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பி குடிக்கப் போன.... அப்பாவி சனத்தை, துப்பாக்கி முனையில்... பிடித்து வைத்திருந்தது பெரிய, கெட்டித்தனம்.
கட்டாயம், இதுக்கு உரிமை கோர வேண்டும்.
அப்ப தான்... ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கர வாதிகளின், புகழ் உலகமெங்கும் பரவும். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படைவாதம் களையப்படவேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் ****** குறித்துக் கவனமாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆங்கில இணைப்பில்.. இறந்தவர்களின் படங்களும் விபரங்களும் உள்ளன!

 

http://www.9news.com.au/National/2014/12/15/10/00/Major-police-operation-in-Sydneys-Martin-Place

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி தாக்குதல்: தீவிரவாதியின் மனநிலை குறித்து ஆஸ்திரேலியாவை பலமுறை எச்சரித்த ஈரான்.

 

சிட்னி: மான் ஹாரூன் மோனிஸின் மனநிலை பற்றி ஈரான் ஆஸ்திரேலிய அதிகாரிகளை பலமுறை எச்சரித்துள்ளது என ஈரான் நாட்டு பத்திரிக்கையாளர் சாதிக் குர்பானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லின்ட் கபே ஹோட்டலுக்குள் நேற்று காலை புகுந்த தீவிரவாதி அங்கிருந்தவர்களை பிணையக் கைதியாக பிடித்துக் கொண்டார். பிணையக் கைதிகளில் 5 பேர் தப்பியோடி வந்தனர். ஹோட்டலுக்குள்ளும், நகரிலும் நான்கு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக தீவிரவாதி தெரிவித்தார். அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 

16-1418704621-monis-sydney-terrorist-600

 

இதையடுத்து 16 மணிநேரம் கழித்து ஆஸ்திரேலிய கமாண்டோக்கள் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 2 இந்தியர்கள் உள்பட 11 பேரை மீட்டனர். இந்த தாக்குதலில் 2 பிணையக் கைதிகள் மற்றும் மோனிஸ் பலியானார்.

 

இந்நிலையில் இது குறித்து ஈரானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சாதிக் குர்பானி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

 

சிட்னி முற்றுகை சம்பவத்திற்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தெஹ்ரான் மோனிஸின் மனநிலை பற்றி ஆஸ்திரேலிய அதிகாரிகளை பலமுறை எச்சரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈரானில் பிறந்த மோனிஸ் 1996ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்துள்ளார். அவர் போரில் பலியான ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்பத்தாருக்கு துவேஷ கடிதங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

கவனமப்பு.... அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று..... "கேசை" முடிக்க இன்னொரு நாடு கிளம்பியிருக்கு.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.