Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50 வருடங்களின் பின் அமெரிக்கா கியூபா உறவில் முன்னேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Alan Gross was freed as part of a deal with Cuba that paves the way for changes in U.S. policy, officials say. The U.S. and Cuban presidents speak separately at noon.

 

http://www.cnn.com/

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளை அங்கு போக அனுமதிப்பார்களா ?? 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரெஞ்சு செய்தி முழுவதும் இது தான் முன்னிலையில்.....

 

அமெரிக்க பொருளாதார தடையால்  துவண்டு போகாமல் போராடி மூச்சுவிட்ட அந்த மக்களுக்கு

ஒரு நல்ல செய்தி...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மளை அங்கு போக அனுமதிப்பார்களா ?? 

 

torcedoras1-low.jpg

  
239815,xcitefun-welcome-1.jpg
  • கருத்துக்கள உறவுகள்

கியூபாவை நோக்கிய அமெரிக்க புன்னகை! – அமெரிக்க கியூபா பனிப்போர் நிறைவுக்கு வருகிறதா?

 

 

போப்பாண்டவர் - பராக் ஒபாமா - ராவுல் காஸ்ட்ரோ மூவரின் முயற்சி வரலாற்றுத் திருப்பமாகுமா?

obama%20raul%20castro%20pope_CI.jpg

 

கடந்த 50 வருடங்களாக நீடித்து வந்த அமெரிக்க - கியூபா துவேஷம் பொலபொலவென இன்று உதிர்ந்து வருகிறது. கியூபாவை நோக்கி அமெரிக்கா புன்னகை பூக்கத் தொடங்கியுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் எடுத்து வைத்த முக்கிய அடிகள் மட்டும் காரணமல்ல, இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்கள் உணர முன்வராத ஒன்றை அதிபர் பராக் ஒபாமா உணர்ந்து தெளிந்ததும் இன்னொரு முக்கியக் காரணமாகும்.

கியூபாவை தனித்து வைத்து விட்டு இனியும் புல்லைப் பிடுங்கிக் கொண்டிருப்பது பயனற்ற செயல், நடைமுறைக்கும் ஒத்து வராதது- இதைத்தான் ஒபாமா உணர்ந்து தெளிந்தார். இதை செய்யத் தவறியவர்கள் அவருக்கு முன்பு இருந்த அதிபர்கள். ஒபாமா சற்று மாற்றி யோசித்ததுதான்... Yes we can.. என்ற புதிய வரலாற்றை எழுத முடிந்திருக்கிறது.

இப்படி மாற்றி யோசித்ததன் காரணமாகவே கடந்த 18 மாதங்களாக நடந்து வந்த ரகசியப் பேச்சுவார்த்தை பலன் தந்து இப்போது, கியூபாவைத் தனிமைப்படுத்தும் கொள்கையை கைவிடுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட வழி வகுத்துள்ளது.

ஒபாமா முடிவை அறிவித்து விட்டாலும் கூட அமெரிக்க நாடாளுமன்றம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் பொருளாதாரத் தடை மற்றும் சுற்றுலா தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் அமெரிக்கா நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இருப்பினும் ஒபாமா இதையும் சாதிப்பார் என்று நம்பப்படுகிறது.

கியூபாவை ஒதுக்கி வைத்தது தவறான கொள்கை, தோல்வி அடைந்த கொள்கை என்பதை ஒபாமா ஒத்துக் கொண்டுள்ளார். அது உண்மைதான். காரணம், அமெரிக்காவின் அனைத்து சதிகள், தடைகளையும் தாண்டி கியூபா நன்றாகவே வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் தடையால் கியூபா துளி அளவு கூட பாதிக்கப்படவில்லை, சிதையவில்லை. மாறாக கம்பீரமாகவே நிமிர்ந்து நிற்கிறது. இதையே வெள்ளை மாளிகையில் நேற்று பேசிய ஒபாமாவின் பேச்சும் வெளிப்படுத்தியது. "கியூபாவை தனிமைப்படுத்தியது பலன் தரவில்லை என்று வெளிப்படையாகவே ஒபாமா  ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து ஒபாமா கூறுகையில், “கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் செய்து வந்ததைத் தொடர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது பலன் தரவில்லை. எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லை” என ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்கா நினைத்த எதையுமே இந்த தடையால், கியூபாவில் நிகழ்த்த முடியவில்லை. பிடல் காஸ்ட்ரோவை அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை அமெரிக்காவால். மேலும் கியூபாவை அமெரிக்கா மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தது. மற்ற நாடுகள் நட்புடன்தான் இருந்து வந்தன. இதனால்தான் அமெரிக்காவால், கியூபாவில் எதிர்பார்த்ததை செய்ய முடியாமல் போனது. கியூபாவை ஒதுக்கி வைக்கும் கொள்கையை கைவிடுவதாக ஒபாமா அறிவிப்பதற்கு முன்பு கியூப அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் ஒபாமா பேசினார்.

இந்தப் பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க சிறையில் கடந்த 15 வருடமாக அடைக்கப்பட்டுள்ள 3 கியூப உளவாளிகளை விடுவிக்க அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதேபோல கியூபாவில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கர் ஆலன் கிராஸை விடுவிக்க கியூபா ஒத்துக் கொண்டது. இதுதவிர 1961ம் ஆண்டுடன் மூடப்பட்ட இரு நாட்டு தூதரகங்களையும் திறப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் பட்டியலி்ல இடம் பெற்றுள்ள கியூபாவை அந்தப் பட்டியலிலிருந்து அமெரிக்க அரசு நீக்கவுள்ளது. மேலும் இனிமேல் கியூபாவுக்கு அமெரிக்கர்கள் சட்டரீதியாக சுற்றுலா செல்லவும் அனுமதிக்கப்படுவர். இதுவரை அது தடை செய்யபட்டிருந்தது.

அதேபோல மற்ற நாடுகளுடன் உள்ளதைப் போல கியூபாவுடனும் இனிமேல் அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கா நட்புறவுடன் பழக ஆரம்பிக்கும், உறவுகளை மேற்கொள்ளும். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்படும். கியூபாவுக்குத் தேவையான உதவிகளையும் அமெரிக்கா செய்யும். அமெரிக்க நிதி நிறுவனங்கள் இனி கியூபாவில் செயலபட முடியும். கியூபாவுக்குக் கடன் வழங்க முடியும். அமெரிக்க கிரெடிட் கார்டுகள் கியூபாவில் இனி செல்லுபடியாகும். எல்லாவற்றையும் விட முக்கியமாக உலகப் புகழ் பெற்ற கியூபா சிகார்களை இனிமேல் அமெரிக்காவுக்கு தாராளமாக கொண்டு வர முடியும்!. அன்பால் மட்டுமே பிடல் காஸ்ட்ரோவை வெல்ல முடியும் என்பார்கள். அதை தற்போது அமெரிக்கா உணர்ந்து விட்டது என்பதே ஒபாமாவின் பேச்சு வெளிப்படுத்துகிறது

அமெரிக்கா, கியூபா 'ஜேம்ஸ்பாண்டுகள்' விடுதலை!: ரகசிய பின்னணியில் போப்பாண்டவர்!!

முதலாம் போப்பாண்டவர் தொடர்ந்து அதிசயிக்க வைத்து வருகிறார். இதுவரை இருந்த போப்பாண்டவர்களை விட இவர் மிகவும் வித்தியாசமானவர் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிந்த நிலையில் தற்போது இவரது ராஜதந்திரம் உலகின் மிக நீண்ட பனிப்போர் ஒன்றை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

போப்பாண்டவர் எடுத்த அயராத முயற்சியின் காரணமாக அமெரிக்காவும் கியூபாவும் கைதான உளவாளிகளை விடுதலை செய்துள்ளன. லத்தீன் அமெரிக்க நாடு கியூபா. போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து போப்பாண்டவராக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படை அம்சமும் கூட கியூபா மீதான அமெரிக்காவின் கோபப் பார்வையை நீக்க முயற்சி எடுக்க வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அர்ஜென்டினா போப் கியூபாவின் சகோதர நாடான அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ். அவர் கடந்த 2013ம் ஆண்டு போப்பாண்டவராக பதவியேற்றதுமே, கியூபா - அமெரிக்கா இடையிலான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பணிகளைத் தொடங்கி விட்டார்.

போப்பாண்டவராக ஆனதுமே அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பேசினார். கியூப தலைவர் ராவுல் காஸ்ட்ரோவுடன் பேசினார். கியூபாவின் பிடியில் இருந்த அமெரிக்கர் ஆலன் கிராஸ் என்பவரை விடுதலை செய்ய வழி வகுத்தார். இதுவே அமெரிக்காவையும் ஒரு படி கீழே இறங்கி வர செய்தது.

18 மாத ரகசியப் பேச்சு இரு நாடுகளுக்கும் கடந்த 18 மாதங்களாக ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வந்திருக்கிறது. இதை நேரடியாக தொடர்ந்து கண்காணித்து இரு தரப்பையும் ஊக்குவித்து வந்திருக்கிறார் போப்பாண்டவர்.

ரோம் நகர் சென்ற ஒபாமா கடந்த மார்ச் மாதம் ரோம் நகரில் போப்பாண்டவரைச் சந்தித்தார். அப்போது கியூபா குறித்துத்தான் இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர் என்று வத்திக்கான் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த ரகசியப் பேச்சுக்களின் இறுதிச் சுற்று ரோம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ரோம் சென்றிருந்தார்.

கியூபாவின் குவான்டனாமோவில் உள்ள அமெரிக்காவின் விசாரணைச் சிறையை மூடுவது தொடர்பாக பேச கெர்ரி  சென்றிருந்தார். அது மட்டுமல்லாமல்,  அவரும், போப்பாண்டவரும் கியூப விவகாரம், மத்திய கிழக்கு அமைதி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் அப்போது விரிவாகப் பேசியுள்ளனர்.

கியூபா தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஒபாமா, காஸ்ட்ரோ தவிர மூன்றாவது வெளிநாட்டுத்தலைவராக இடம் பெற்றவர் போப்பாண்டவர் மட்டுமே. இப்படி போப்பாண்டவர் எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக, விளைவாக, கியூபாவைத் தனிமைப்படுத்தி வந்த தனது கொள்கையை கைவிடும் வேலையை ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வத்திக்கான் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தருணத்திற்காக அமெரிக்கா மற்றும் கியூப தலைவர்களையும், இரு நாட்டு மக்களையும் போப்பாண்டவர் வாழ்த்துகிறார், பாராட்டுகிறார். இரு நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. இரு நாட்டு மக்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

சமீப காலமாக போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ், கியூபா அதிபருக்கும், அமெரிக்க அதிபருக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தார். இரு நாட்டு மக்களின் பொது நலன் கருதி கருத்து வேறுபாடுகளைக் களைய முன்வர வேண்டும் என்று அவர் தொடர்ந்து கோரி வந்தார். சில கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் அவர் பேசி வந்தார். இதன் மூலம் இரு நாட்டு வரலாற்றிலும் புதிய அத்தியாயம் தொடங்க வழி பிறந்தது.

இரு நாட்டு பிரதிநிதிகளும் வத்திக்கானுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றனர். வத்திக்கான் அலுவலகம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவி புரிந்தது. இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையே சுமூக நிலை ஏற்பட வழி பிறந்தது.

இரு நாடுகளுக்கும் தனது ஆதரவை தொடர்ந்து போப்பாண்டவர் வழங்குவார். இரு தரப்பு உறவும் வலுப்படுவதை, மேம்படுவதையே போப்பாண்டவர் விரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

போப்பாண்டவராக ஆன பின்னர் இதுவரை முதலாம் பிரான்சிஸ், கியூபா சென்றதில்லை. அதேசமயம் அவருக்கு முந்தைய போப்பாண்டவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் கடந்த 2012ம் ஆண்டு கியூபா சென்றிருந்தார். 3 நாட்கள் அவர் அங்கிருந்தார்.

கியூபா, அமெரிக்கா இடையிலான மோதல் குறித்து போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் பலமுறை வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலை மாற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தற்போது அதை சாதித்துள்ளார் போப்பாண்டவர்.

இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, சுமூகம் ஏற்பட உதவிய போப்பாண்டவருக்கு அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவும் நன்றி கூறியுள்ளனர். ஒபாமா கூறுகையில், மிக முக்கியப் பங்காற்றியுள்ளார் போப்பாண்டவர். அவருக்கு நன்றிகள். தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் என்று கூறினார். ராவுல் காஸ்ட்ரோ கூறுகையில், வத்திக்கானுக்கு குறிப்பாக போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். (நன்றி - ஒன் இந்தியா)

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114567/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.