Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி எதுவுமே மைத்திரியின் விஞ்ஞாபனத்தில் இல்லை

Featured Replies

my%20manifesto%20878790.jpg

 

தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முதன்மைப்படுத்தி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.
 
மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் '100 நாட்களுக்குள் புதிய தேசம்' என்ற மகுட வாக்கியத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-
 
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்.
 
1994இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக மக்களுக்கு உறுதியளித்து வந்துள்ள போதிலும், அதனை அரசமைப்பு ரீதியாக மேற்கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் காணப்பட்ட போதிலும், அதனால் கடந்த 23 வருடங்களாக அதனை நிறைவேற்ற முடியவில்லை.
 
பிரதான கட்சியின் தலைவரான ஜனாதிபதியே அதற்கான தலைமைத்துவத்தை வழங்கவேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். இதற்காக ஜனாதிபதி முக்கிய அரசியல் கட்சிகளுடன் உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
 
இந்த பணியை நிறைவேற்றுவதற்காகவே நான் பொதுவேட்பாளராக போட்டியிட முன்வந்துள்ளேன். என்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினது ஆதரவைப் பெற முடியும். ஐக்கிய தேசிய கட்சி இதற்கான ஒப்பந்தமொன்றில் என்னுடன் கைச்சாத்திட்டுள்ளது. ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டு முதல் எங்களுடைய கட்சியுடன் இது தொடர்பாக இணக்கப்பாட்டை கொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவும் இது தொடர்பான உடன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆகவே நான் இது குறித்து ஏனைய கட்சிகளுடன் ஆலோசித்து 100 நாள்களுக்குள் நிறைவேற்றுவேன். நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கான ஆவணங்களாக மாதுளுவாவே சோபித தேரரின் நீதியான சமூகத்திற்கான இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணங்களையும், அத்துரலிய ரத்தினதேரரின் தலைமையிலான குழுவால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 19 திருத்தத்திற்கான யோசனைகளையும், ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளையும் நான் பின்பற்றுவேன். புதிய முறையின் கீழ் நாடாளுமன்றமே முக்கியம்பெறும். ஜனாதிபதி நாட்டின் ஏனைய பிரஜைகளை போன்று சட்டத்தின் முன் சமமானவராகக் காணப்படுவார்.
 
சர்வஜன வாக்கெடுப்புடன் மாத்திரமே மாற்றப்படவேண்டிய அரசமைப்பு மாற்றங்களில் நான் கைவைக்கமாட்டேன். நாட்டின் இறமை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய அரசமைப்பு மாற்றங்கள் எதனையும் செய்யமாட்டேன். நாட்டின் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் அதேவேளை, நாட்டின் நல்லாட்சியை கண்காணிப்பதற்கான பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்படும்
 
வெளிவிவகார கொள்கை 2009 இராணுவ வெற்றிக்குப் பின்னர் எமது வெளிவிவகாரக் கொள்கை முழுமையான குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை முழு உலகும் அறிந்த விடயம். முறையான வெளிவிவகார கொள்கை எம்மிடத்தில் இல்லாத அதேவேளை இராஜதந்திர செயற்பாடுகள் குறித்த அறிவும் திறமையும் உள்ளவர்கள் எமது இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்படவில்லை. அவர்கள் தமது கிராமங்களில் செயற்படுவது போன்று வெளிவிவகார செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கின்றனர்.
 
இலஞ்சத்தையும், காடைத்தனத்தையும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இலங்கை குறித்த சர்வதே அபிப்பிராயத்தில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது, நாட்டை உடனடியாக இதிலிருந்து விடுவிக்கவேண்டும். இதற்காக தேசத்தின் கருத்திற்கேற்ப நாட்டின் வெளிவிவகார கொள்கை உருவாக்கப்படும். நூறு நாள்களுக்குள் வெளிவிவகார சேவைக்கு அரசியல் ரீதியாக நியமனம்பெற்ற அனைவரினது சேவையும் இரத்துச்செய்யப்படும். ஆசியாவின் முக்கிய நாடுகளுடன் சமமான உறவு ஏற்படுத்தப்படும். இந்தியாவின் பன்முகத் தன்மையை கருத்தில்கொண்டதாக எமது இந்திய கொள்கை அமைந்திருக்கும். இந்தியாவிடம் சார்ந்திருக்காத அதேவளை அதற்கு விரோதமற்ற கொள்கை பின்பற்றப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்.- என்று அமைந்துள்ளது.
 
 
 
 

தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி சொன்னவங்கள் என்னத்தை கிளிச்சாங்கள்?

 

இப்ப இவர் ஏதாவது சொன்னா மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சனை முடிஞ்சிருமா? சும்மா மைத்டிரியோட சிண்டு முடியாமல் சோலியை பாருங்கப்பா. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே எதிபார்த்ததுதானே 

 
பொது மேடையில் கூறிவிட்டார்." நானும் ஒரு பேரினவாதி தமிழ் மக்களுக்காக கூட்டணி கேட்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கத்தயாரில்லை" இரண்டாவது பிக்குகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சிறிலங்கா ஒரு பெளத்த தேசம் முக்கியமாக தமிழர்களுக்கு என்ன தீர்வும் வழங்கமாட்டேன்.ஆனாலும் ஒரு விடயம்.ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்தது.மைத்திரி.இவர் ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஒப்பந்தம் செல்லுபடியற்றதாகிபோகும் வாய்புகளே அதிகம் பொறுத்திருந்து பார்ப்போம்
 

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தோற்றால் போர்க்குற்ற விசாரணைக்குள் மாட்டி விடலாம் என்ற தமிழ் மக்களின் முயற்சிக்கு தனது நாட்டின் பிரஜைகளை சர்வதேசத்திடம் கையளிக்க மாட்டேன் என்று ஆப்பு வைத்து விட்டார்.சர்வதேசமும் ஆட்சி மாறினால் போர் குற்ற விசாரiணையை மறந்து விடும். சர்வதேசத்துடன் முரண்படும் மகிந்த வந்தால் சர்வதேசம் மீண்டும் முரண்படும்.நெருக்கடிகளைக் கொடுக்கும் தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகமலாவது இருக்கும்.இனி மைத்திரி வந்தால் அவர் ஜனாதிபதி முறைமையை நீக்கி விடுவாரா?இந்த ஒரு தேர்தலுக்குத்தான் தமிழ் மக்களின் ஆதரவை சிங்களத்தலைவர்கள் கேட்டுவருகிறார்கள். இதுவும் போய் விட்டால் தமிழர்களின் தேவை அவர்களுக்கு எதற்கு?

மைத்திரியார்? அவரும் இந்த போர்க்குற்றவாளிகளின் அரசில் இருந்தவர்தானே.தமிழ்மக்கள் தனியான வேட்பாளரை நிறுத்தி இதனை சுயநிர்னயக் கோரிக்கைக்காள சர்வசன வாக்கெடுப்பாக மாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு ஒன்றுமில்லை

Dec 19, 2014 

எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

விகாரமாதேவி பூங்காவில் புத்தர் சிலையருகே இன்று காலை 9 மணியளவில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், இறுதி நேரத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு வேறொரு இடத்தில் வைத்து தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒலிபெருங்கி கருவிகளும் இயங்கவில்லை.

எனினும் திட்டமிட்டபடி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

100 நாள் செயற்திட்டத்தை உள்ளடக்கிய அவரது தேர்தல் அறிக்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்த எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.

அதேவேளை, தாம் வெற்றி பெற்றால், ஏப்ரல் 23ம் நாள் அல்லது அதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு ஆசனங்களை வெல்லும் கட்சியில் இருந்து பிரதமர் நியமிக்கப்படுவார்.

இரண்டாவது கூடிய ஆசனங்களை வெல்லும் கட்சியின் தலைவர் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார்.

maithri-manifesto-1.jpg

maithri-manifesto-2.jpg

ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்.

தேசிய அரசாங்கத்தின் கீழ், மோசமான தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கொள்கைத் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

மகிந்த ராஜபக்ச அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால், இன்னொரு போர் உருவாகும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், மீண்டும் விடுதலைப் புலிகளைத் தலையெடுக்க விடமாட்டோம்.

தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனவரி 10ம் நாள் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்பேன்.

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வரும் ஏப்ரல் வரை பிரதமராக நியமிப்பேன்.

சட்டவிரோத ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்படும். அவற்றின் தலைவர்களும், அவர்கள் பயன்படுத்திய அரசு சொத்துக்கள் குறித்தும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சரத் பொன்சேகாவும், முன்னாள் பிரதம நிதீயரசர் சிராணி பண்டாரநாயக்கவும் இழந்த நிலைகள், உரிமைகள் மீள வழங்கப்படும்.” என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2014/12/19/news/1954

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் முடிஞ்சு போனதோடு.. தமிழர்கள் முடிஞ்சு போனார்கள் என்றது தான் சிறீலங்காவில் சிங்களவர்களின்.. முஸ்லீம்களின் நிலைப்பாடு. கசப்பு என்றாலும்.. இதுதாங்கோ யதார்த்தம். நீங்க எனி தலைகீழா நின்னு வேடிக்கை பார்த்தாலும்.. எந்த அறிக்கையிலும்.. தமிழர்கள் என்ற பதத்தை எனி சிங்களம் பாவிக்காது. ஏன் ஹக்கீமே பாவிக்கமாட்டார். :D:icon_idea:

தமிழரை பற்றி சொல்லப்போய் வாக்கு கிடைக்காமல் போகவா , மகித்தவின் திட்டமே இந்த பொது அணி ஏற்கனவே கூட்டமைப்புடன் ஒப்பந்தம் என்றெல்லாம் சொல்ல தொடங்கிவிட்டார்கள் இந்த நிலையில் அவர்கள் ஒன்றுமே சொல்லமாட்டர்கள் . மைத்திரி வெல்லவேண்டும் அதனால் தமிழர் பற்றி இப்ப கூற மாட்டர்கள் . இந்தியாவை கொண்டு முதலில் 13 ஆம் திருத்தத்தை முதலில் அமுல் படுத்தவேண்டும் அப்படியே படி படியாகத்தான்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.