Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுடனான நட்புறவு தொடரும் – ரணில், மைத்திரி திடீர் குத்துக்கரணம்

Featured Replies

சீனாவுடனான நட்புறவு தொடரும் – ரணில், மைத்திரி திடீர் குத்துக்கரணம் DEC 21, 2014 | 13:19by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள்

maithri-manifesto-1-300x200.jpgதாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், குத்துக்கரணம் அடித்துள்ளார்.

சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் உண்மையான நண்பன் சீனா என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் சீனாவுடனான உறவுகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“சிறிலங்காவின் பிரதான அபிவிருத்திப் பங்காளராக சீனாவே உள்ளது.

சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட போது, அப்போது ஆட்சியில் இருந்த எ.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐதேக அரசாங்கமே அதற்கு அங்கீகாரம் அளித்திருந்தது.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் சீன மக்கள் குடியரசு மீது தடைகளை விதித்திருந்த போதிலும், 1952ம் ஆண்டு  இறப்பர் – அரிசி உடன்பாட்டில், ஐதேக அரசாங்கம் தான் கையெழுத்திட்டது.

இது தான், சிறிலங்கா – சீன உறவுகளுக்கு அடித்தளமாக உள்ளதுடன் அதற்குப் பின்னர் சிறிலங்காவில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சீனாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் காரணமாகியது.

இந்த உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகளில் தரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் பரிசீலிக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், தாம் தேர்தலில் வெற்றி பெற்றால், சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும்,  நட்புறவு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2014/12/21/news/2028

 

இது தான் யதார்த்தம், உண்மை இனி சீனாவை யார் நினைத்தாலும் வெளியேற்ற முடியாது, இராணுவ கேந்திர முக்கியதுவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தில் சீனா நன்றாகா கால் ஊன்றி விட்டது, மலையாளி ரோவின் தனிப்பட்ட ஆசைகளுக்க்கு ஏற்ப தனது கொள்கைகளை வகுத்த மேர்குலகுக்கும், இந்தியாவுக்கும் இது நல்ல பாடம். எந்த ஒரு நாடும் தனது வெளியுறவு கொள்கையை வகுக்கும் போது தனது இராணுவ அரசியல் லாபங்களுக்கு அமையவே அமைக்கும், ஆனால் இந்தியா மட்டும் தான் ஒரு சிலரின் ஆசைக்காக தனது தந்து நாட்டின் பாதுகாப்பையும் அடமானம் வைத்த நாடாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவுடனான நட்புறவு தொடரும் – ரணில், மைத்திரி திடீர் குத்துக்கரணம்

 

சீனாவுடன் தொடர்பு வைக்கமாட்டோம் என்று எப்போதாவது அறிக்கை விட்டிருக்கின்றார்களா ?  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் யதார்த்தம், உண்மை இனி சீனாவை யார் நினைத்தாலும் வெளியேற்ற முடியாது, இராணுவ கேந்திர முக்கியதுவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தில் சீனா நன்றாகா கால் ஊன்றி விட்டது, மலையாளி ரோவின் தனிப்பட்ட ஆசைகளுக்க்கு ஏற்ப தனது கொள்கைகளை வகுத்த மேர்குலகுக்கும், இந்தியாவுக்கும் இது நல்ல பாடம். எந்த ஒரு நாடும் தனது வெளியுறவு கொள்கையை வகுக்கும் போது தனது இராணுவ அரசியல் லாபங்களுக்கு அமையவே அமைக்கும், ஆனால் இந்தியா மட்டும் தான் ஒரு சிலரின் ஆசைக்காக தனது தந்து நாட்டின் பாதுகாப்பையும் அடமானம் வைத்த நாடாக இருக்கும்

 

 

இது இந்தியர்களுக்கு இன்னும் புரியவில்லை. புரியும்போது ஈழத்தமிழரும் அவர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை, இந்தியாவுக்குப் பாதுகாப்பும் இருக்கப்போவதில்லை. 

 

இந்தியா என்கிற நாடு விருப்பமில்லாத பல்வேறு தேசிய இனங்களைப் பலாத்காரமாக ஹிந்தி எனும் வட ஆரிய அடையாளத்திற்குள் திணித்துக் கட்டியெழுப்பப்பட்டது. அது மீண்டும் துகள்களாக உடைது தனித்தேசிய இனங்கள் உருவாகும் நாளே தென்னாசியாவின் சிறுபான்மை மக்களுக்கான சுதந்திரநாள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சர்வவல்லமையும் படைச்சவன் நான் எண்டு குத்திமுறியிற அமெரிக்காவே சீனாவிட்டை அடக்கி வாசிக்குது......இதுக்கை இந்தியாவிட்டைப்போய் ஆரும் தலையை குடுப்பானே?????  :D  :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்
கம்யூனிசத்தினால் தமிழர்கள் பெரிதும் பாதிப்படைந்ததாகத் தெரியவில்லை. மேலைநாடுகள் அதனை எதிர்ப்பதால் தமிழர்களும் அதன்மீது ஒரு வெறுப்புக் கொண்டுள்ளனர்..
 
புத்தசமயத்தினால் தமிழர்கள் பெரிதும் பாதிப்படைந்ததாகத் தெரியவில்லை.  சிங்களவர் அதனை ஆதரிப்பதால் தமிழர்களும் அதன்மீது ஒரு வெறுப்புக் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
 
சீனர்களால் தமிழர்கள் பெரிதும் பாதிப்படைந்ததாகத் தெரியவில்லை. சிங்களவர் அதனை ஆதரிப்பதால் தமிழர்களும் அதன்மீது ஒரு வெறுப்புக் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
 
ஆனால் கம்யூனிசம், புத்தசமயம், சீனர்களால்  ஏற்படாத அழிவை இந்தியா முதற்கொண்டு மேலை நாடுகளும், தமிழ் இனத்தையே அழித்துவிடுமளவிற்கு ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும் அழிவை ஏற்படுத்திய நாடுகளையே ஆதரிப்பதில் தமிழர்கள் உள்ளதாக யதார்த்தநிலை தெரிவிக்கின்றது. :(  
 

மைத்திரி வந்தவுடன சீனாவோடு உறவில்லை இனி எல்லாம் அமெரிக்காவும் இந்தியாவும் தான் என்றிருந்தால் நீங்கள் அரசியலை வாசிப்பதை விடுத்து சினிமாவை மாத்திரம் வாசியுங்கோ. 

 

 

இலங்கையோட எந்த நாடும் அப்படி மல்லுக்கட்டி விலத்தி நிக்காது, அப்படி ஒரு தேவையோ அவசியமோ இன்னும் வரவில்லை. தமிழர்களின் போர்க்குற்ற விசாரனைகூட எதிர்காலத்தில் இதை ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் இப்பிராந்தியத்தில் இளமையை நாடி பிடித்து பார்க்கவுமே உதவும். 

 

 

இதுக்குள்ள ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்களுக்கு தேவையானதை பெறமுடிந்தால் நமையே. இல்லாவிட்டால் கால காலத்துக்கும் இப்படியே கொட்டாவி விட்டு செத்து முடிய வேண்டியதுதான். 

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.