Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹக்கீம், ரிசாத்தை விடமாட்டேன் – கோத்தா ஆவேசம்

Featured Replies

ஹக்கீம், ரிசாத்தை விடமாட்டேன் – கோத்தா ஆவேசம் DEC 31, 2014 | 0:50by கார்வண்ணன்in செய்திகள்

gotabhaya-rajapakse-300x200.jpgஅரசாங்கத்தை விட்டு விலகிச் சென்ற ரவூப் ஹக்கீமையோ, ரிசாத் பதியுதீனையோ, மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குத் தான் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரவூப் ஹக்கீம், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பணியாற்றினார்.

தேர்தலில், மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், அவருடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.

மீண்டும் 2010ம் ஆண்டு, சரத் பொன்சேகாவை ஆதரித்தார்.

அந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் பிரதிநிதிகள் பெறாத சலுகைகளையெல்லாம் இவர்கள் பெற்றனர்.

இவர்களின் செயற்பாடுகள் இஸ்மாமிய மதத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதனைத் தான் இஸ்லாம் போதிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இனிமேல், வெளியேற போனவர்களை மீண்டும் எடுக்கமாட்டோம். இதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.

வெளியே போனவர்கள் மீண்டும் வருவதற்கு நான் விட மாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2014/12/31/news/2258

 

  • கருத்துக்கள உறவுகள்

அதைச் செய்யுங்காே முதலிலை. நீங்கள் கேட்ட   விலை அறாவிலை. லாபம் பாத்துப்பாேட்டாா். பிறகு ஒருவேளை கூப்பிடமாட்டிங்களாே எண்டு நல்லா யாேசனை பண்ணிப்பாத்துச் சாெல்லுங்காே.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியை.... யார், காப்பத்துறது?

 

"முற்பகல் செய்யின்... பிற்பகல் விளையும்."
நாச மறுந்தவுங்கள், நட்டாற்றில் விட்டு விட்டுப் போயிட்டாங்கள்.
-கோத்தா.....-

  • கருத்துக்கள உறவுகள்

நாசமறுப்பு,

அந்தாள் வெற்றி நமதே என்று, உறுதியா அடிச்சு சொல்லுறதை முதல்ல கவனியுங்க.......

வெண்டால்.....

பொதிபல சேன கரகாட்டம், காவடி, மானாட்டம், மயிலாட்டம், எல்லாம் போடும் எண்டுறார்.

Edited by Nathamuni

நாசமறுப்பு,

அந்தாள் வெற்றி நமதே என்று, உறுதியா அடிச்சு சொல்லுறதை முதல்ல கவனியுங்க.......

வெண்டால்.....

பொதிபல சேன கரகாட்டம், காவடி, மானாட்டம், மயிலாட்டம், எல்லாம் போடும் எண்டுறார்.

 

இனி போடுபல சேனாவுக்கு கோத்தா வெளிப்படையாகவே தலைமை தாங்குவாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
இதனைத் தான் இஸ்லாம் போதிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

 

 

தமிழர்களின் உயிர்களை காவு கொள்ளும்படி உங்களின் புத்தம் சொல்லும் போது ஹக்கீமின் இஸ்லாம் பற்றி என்ன கவலை?? குடும்ப அரசியல் 9ஆவது 13 ஆவது பணக்காரர்கள் உங்களின் குடும்பத்தில் எப்படி வந்தார்கள் என இனவாதம் ஊட்டப்பட்ட சிங்கள மக்களுக்கு உணர எவ்வளவு காலம் எடுக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.