Jump to content

தாலி! (குறுங்கதை)

Recommended Posts

Posted

நெடுக்காலபோவான் நீங்கள் எழுதும் விதம்

பாவிக்கும் சொற்களும் குருவியை போலவே உள்ளது.

அவரும் இதே போலதான் யாரவது எழுதினால் வாதம் செய்வார். :P :P :wink:

  • Replies 50
  • Created
  • Last Reply
Posted

குருவியாரே

எதிரியின் பலவீனத்தை பாவித்து தம்மை பாதுகாக்க முனைவது இயற்கை. ஆங்கிலேயனின் கொளரவமான பெருந்தன்மையான நடத்தை சரியாக இனங்கண்டு பாவித்தால் தான் அகிம்சை முறை உலகிற்கு அறிமுகமானது.

தாடிக்காரர்கள் திருமணமான பெண்ணை தூக்காததை பெருந்தன்மை என்று சொல்ல மாட்டேன் அதற்கு வேறு காரணங்கள் இருக்கு. பெண்களை குதிரையில் ஆயுதங்களோடு வந்து கலைத்து பிடிப்பவர்களிடம் ஒரு பெருந்தன்மை இருக்கும் என்று எண்ணுவது மடமை.

அதைப் போலவே நேர மேதி வெல்ல முடியாது என்று எண்ணியதால் தாடிக்காரர்களின் பலவீனம் கவசமாக பயன்படுத்தப்பட்டிருக்கு அந்த காலத்து ஆண்களால் என்ற சிந்தனையை தருகிறது கதை. எமது சமூகம் கோழைத்தனமாக வாழாவிட்டால் எவ்வாறு நாம் நடற்றவர்களாக இருக்கிறோம்? ஏன் புராணங்கள் இதிகாசங்கள் என்ற கட்டுக்கதைகளில் வரும் கதாபாத்திரங்களை கடவுளாக ஆண்டாண்டு காலமாக சந்ததி சந்ததியாக வழிபடுகிறோம். ஏன் கட்டுக்கதை கதாபத்திரங்களை நம்பி நேர்த்திகடன் வைக்கிறோம்? ஏன் இவற்றைப்பற்றி விளக்கம் கொடுத்து சமூக சீர்திருத்தங்களை கொண்டுவரக்கூடிய அதிகாரங்கள் அற்ற பரதேசிகளாக இருக்கிறோம்?

எமது மூததையரை இழிவிபடுத்தும் வரலாற்று பின்னணிகளை கொண்ட நிகழ்வுகளை விளக்கமற்றவர்களாக விமர்சையாக பெருமையாக கொண்டாடுகிறோம்?

உலகில் உள்ள பழைய மொழிகள் 4..5 இற்குள் தமிழும் உள்ளதாக சொல்கிறார்கள். இத்தகய ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட எமது இனத்திற்கு சொந்த நாடில்லை அதன் வழியில் வரும் அதிகாரங்கள் வளங்கள் வசதிகள் இல்லை எமது வரலாற்றை ஆய்வு செய்ய அறிந்து கொள்ள. பிறத்தியார் திணித்ததை தான் செக்கு மாடுகள் மாதிரி எற்று கொண்டு நடை பிணமாக அலைகிறோம்.

இவை எல்லாம் அறியாமையினதும் கோழைத்தனத்தினதும் உச்சக்கட்ட வெளிபாடுதானே?

பிறத்தியார் சொன்னவற்றை ஏற்றுக் கொண்டு அவர்களின் அங்கீகாரத்திற்கு அஞ்சி வாழ்வது கோழைகளின் வாழ்வு. ஒரு ஆங்கிலேயரோடே ஒரு பிரொன்சு காறனோடு கதைத்துப்பாருங்கள் மற்றவர் தம்மை பற்றி சொன்னதை செருகினதை வரலாறாக ஏற்றுள்ளார்களா என்று? ஒரு சாதாரணமானவனிற்கும் அந்த ஓர்மம் இருக்கு. ஆனால் எங்களுக்கு?

என்ன.. தாலி வேலியில்ல அதையும் தாண்டி நாளுக்கு ஒன்று கட்டிக்கலாம் என்றா? ஏன் தனிமனித ஒழுக்கங்களை குலைப்பதற்கு சிந்தனை முற்போக்குவாதம் என்று பெயரிட்டு உங்களை கீழ்த்தரமான சிந்தனையின் போக்கிற்கு இட்டுச் செல்கிறீர்களோ?

இதோ உமது கழப்புணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த கதை சொல்ல வந்ததற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் புலம்பியிருக்குறீர். தாலி கட்டப்படுவது பெண்ணிற்கு. நீர் தாலி வேலியல் அதையும் தாண்டி நாளுக்கு ஒரு தாலியை ஒரு பொண் கட்டிக் கொண்டால் என்ன என்று ஏன் வக்கிரத்தை கொட்டுறீர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்காலபோவான் நீங்கள் எழுதும் விதம்

பாவிக்கும் சொற்களும் குருவியை போலவே உள்ளது.

அவரும் இதே போலதான் யாரவது நன்றாக எழுதினால் வாதம் செய்வார். :P :P :wink:

தமிழில் உள்ள வார்த்தைகளைத்தான் நாம் எழுதுகின்றோம். அதை வேறு பலரும் எழுதலாம். எழுதும் முறைகளும் ஒன்றுபடலாம். இங்கு எப்படி யார் எழுதுவது என்பதல்ல பிரச்சனை. என்ன கருத்து எழுதப்படுகிறது அதற்கு உங்கள் கருத்து என்ன என்பதே அவசியம்.

நீங்கள் நல்லா இருக்கு எங்கிறீர்கள். எமக்கோ வெட்கமாக இருக்கிறது. ஒரே கதையில் இரண்டு விதமான பார்வைகள். இதுதான் வெளிப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு பார்வைகள் இருக்கும். அதை கருத்தாகப் பதிய வேண்டுமே தவிர அவை பதியப்படவே கூடாது நாங்கள் சொல்லுவதைத்தான் சரியென்று ஏற்க வேண்டும் என்பதான உங்கள் நிலைப்பாடு எம்மைப் பொறுத்தவரை பிற்போக்கான கருத்தியல் சுதந்திரத்துக்கு அப்பாலானது.

வீரமிழந்த பெண்களையும் ஆண்களையும் தாலி என்ற ஒன்றிற்கூடாக 17ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் காட்டுவது அவமானமாக இருக்கிறது. புறநானுறு காலத்திலேயே தமிழ் பெண்களின் வீரம் குறித்துப் பெருமைப்படும் பதிவுகள் உள்ள நிலையில் வெறும் தாலியை கீழ்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக இபப்டியான கதைகளைப் வரலாற்றுக் கதைகள் என்ற தோறணையில் புனைவதில் எமக்கு உடன்பாடில்லை.

எழுதியவருக்கே கால அளவுகள் மற்றும் தாலியின் ஆரம்ப வரலாறுகள் பற்றிய ஒரு குழப்பம் இருக்கும் நிலையில் ஏதோ இந்தியன் ஆமி காலத்தில் கொள்ளையர்களிடமிருந்து தப்பக் கோயில் மணியை அடித்துக் கொண்டிருந்த சமூகம் அன்றும் எதிரிக்குப் பயந்து ஆண்களும் பெண்களும் வாழ்ந்திருக்கின்றனர் என்பது நல்லதாகவா தெரிகிறது. ஒரு வீர சமூகம் என்று கூறிக் கொள்ளும் சமூகத்துக்குள் இவ்வளவு கோழைத்தனம் இருந்திருக்கிறதா?

ஆனால் இவற்றிற்கும் மேலாக ஆண்களும் பெண்களும் தாலி கட்டி வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. திருமண அடையாளமாக அன்புப் பரிசாக தாலி அணியப்பட்டதும் உண்டு. வீரமுள்ள ஆணின் பரிசாக அவனின் வீரத்தை மெச்ச என்று தாலி அணிந்த பெண்களும் உண்டு. அப்படியெல்லாம் தாலிக்கு பல காரணங்கள் கூறப்பட்டுக் கொண்டிருக்க கிபி கிமு வந்த இடத்திலேயே எமக்கு ஏதோ திரிவு வரப்போகிறது என்று அறிந்துதான் இங்கு கருத்துரைக்கின்றோம். தயவு செய்து வரலாற்றுத் திரிபுகளை உங்கள் உங்கள் அளவிற்கு கதை கட்டுரை என்று வடிவங்கள் மாற்றி மாற்றி சுயபுகழ்ச்சிக்கு இடமளிக்காமல் அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் சிறிது சிந்தியுங்கள்.

கோழைத்தனமாக கருத்துக்களை விதைத்து தமிழர்களைக் கோழைகள் ஆக்காதீர்கள். தனி மனித ஒழுக்கத்தைச் சீர்குலைக்க வல்ல கருத்துக்களை முற்போக்கு என்று பிதட்டாதீர்கள் என்பதே எங்கள் கருத்து.

கண்ணை மூடிக்கொண்டு நல்லா இருக்கு சிந்திக்கத் தூண்டு என்று எழுத நாம் தயார் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குருவியாரே

எதிரியின் பலவீனத்தை பாவித்து தம்மை பாதுகாக்க முனைவது இயற்கை. ஆங்கிலேயனின் கொளரவமான பெருந்தன்மையான நடத்தை சரியாக இனங்கண்டு பாவித்தால் தான் அகிம்சை முறை உலகிற்கு அறிமுகமானது.

தாடிக்காரர்கள் திருமணமான பெண்ணை தூக்காததை பெருந்தன்மை என்று சொல்ல மாட்டேன் அதற்கு வேறு காரணங்கள் இருக்கு. பெண்களை குதிரையில் ஆயுதங்களோடு வந்து கலைத்து பிடிப்பவர்களிடம் ஒரு பெருந்தன்மை இருக்கும் என்று எண்ணுவது மடமை.

அதைப் போலவே நேர மேதி வெல்ல முடியாது என்று எண்ணியதால் தாடிக்காரர்களின் பலவீனம் கவசமாக பயன்படுத்தப்பட்டிருக்கு அந்த காலத்து ஆண்களால் என்ற சிந்தனையை தருகிறது கதை. எமது சமூகம் கோழைத்தனமாக வாழாவிட்டால் எவ்வாறு நாம் நடற்றவர்களாக இருக்கிறோம்? ஏன் புராணங்கள் இதிகாசங்கள் என்ற கட்டுக்கதைகளில் வரும் கதாபாத்திரங்களை கடவுளாக ஆண்டாண்டு காலமாக சந்ததி சந்ததியாக வழிபடுகிறோம். ஏன் கட்டுக்கதை கதாபத்திரங்களை நம்பி நேர்த்திகடன் வைக்கிறோம்? ஏன் இவற்றைப்பற்றி விளக்கம் கொடுத்து சமூக சீர்திருத்தங்களை கொண்டுவரக்கூடிய அதிகாரங்கள் அற்ற பரதேசிகளாக இருக்கிறோம்?

எமது மூததையரை இழிவிபடுத்தும் வரலாற்று பின்னணிகளை கொண்ட நிகழ்வுகளை விளக்கமற்றவர்களாக விமர்சையாக பெருமையாக கொண்டாடுகிறோம்?

உலகில் உள்ள பழைய மொழிகள் 4..5 இற்குள் தமிழும் உள்ளதாக சொல்கிறார்கள். இத்தகய ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட எமது இனத்திற்கு சொந்த நாடில்லை அதன் வழியில் வரும் அதிகாரங்கள் வளங்கள் வசதிகள் இல்லை எமது வரலாற்றை ஆய்வு செய்ய அறிந்து கொள்ள. பிறத்தியார் திணித்ததை தான் செக்கு மாடுகள் மாதிரி எற்று கொண்டு நடை பிணமாக அலைகிறோம்.

இவை எல்லாம் அறியாமையினதும் கோழைத்தனத்தினதும் உச்சக்கட்ட வெளிபாடுதானே?

பிறத்தியார் சொன்னவற்றை ஏற்றுக் கொண்டு அவர்களின் அங்கீகாரத்திற்கு அஞ்சி வாழ்வது கோழைகளின் வாழ்வு. ஒரு ஆங்கிலேயரோடே ஒரு பிரொன்சு காறனோடு கதைத்துப்பாருங்கள் மற்றவர் தம்மை பற்றி சொன்னதை செருகினதை வரலாறாக ஏற்றுள்ளார்களா என்று? ஒரு சாதாரணமானவனிற்கும் அந்த ஓர்மம் இருக்கு. ஆனால் எங்களுக்கு?

இதோ உமது கழப்புணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த கதை சொல்ல வந்ததற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் புலம்பியிருக்குறீர். தாலி கட்டப்படுவது பெண்ணிற்கு. நீர் தாலி வேலியல் அதையும் தாண்டி நாளுக்கு ஒரு தாலியை ஒரு பொண் கட்டிக் கொண்டால் என்ன என்று ஏன் வக்கிரத்தை கொட்டுறீர்.

மீண்டும் கூறுகின்றோம் நீங்கள் குருவி என்பதும் நாங்கள் அவரில்லை என்பதும் உண்மையான குருவி என்ற கருத்தாளனை திட்டமிட்டு நாங்கள் பரிகசிப்பது போலாகிவிடும். இவ்வளவு சிந்திக்க அழைப்பு விடும் நீங்கள் சாதாரணமாக இதைச் சிந்திக்கத் தவறுகிறீர்களே இப்படியான தவறுகளைத்தான் சமூகம் செய்து கொண்டிருக்கிறது. நாம் குருவியல்ல என்பதை தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். அப்படி விளிப்பது குறிப்பிட்ட கருத்தாளனை பாதிக்கக் கூடிய செயல். நீங்கள் முதலில் எங்களை எங்களாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் நெடுக்காலபோவன். குருவியல்ல.

உங்கள் வாதப்படியே வருவோம்.. இன்று சிங்கள தேசத்திடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் எங்கள் பெண்களை எப்படிக் காப்பாற்றுகிறீர்கள். புலம்பெயர்ந்த நாடுகளுக்கு தாலி கட்டிக் கூட்டி வந்து அப்படியா? ஏன் இந்த ஆண்கள் புலம்பெயராமல் அந்தப் பெண்களை சொந்த மண்ணில் உள்ள எதிரியை முறியடித்துக் காக்க முடியவில்லை. சரி ஆண்களுக்குத்தான் முடியவில்லை பெண்களாவது சொந்த தேசத்தில் உள்ள ஆண்களோடினைந்து எதிரியை விரட்டலாமே. அதை சில ஆயிரம் பெண்களும் ஆண்களுமே செய்ய வேண்டும் என்றில்லை.

உங்களால் அதைச் செய்யமுடியவில்லை அல்லவா அது ஏன் என்று சிந்தித்து விடை சொல்லுங்கள் ஏன் தமிழருக்கு நாடில்லை என்பதற்கான விடையை நாம் பெற்றுத் தருகின்றோம்.

அன்று கோழைத்தனமாக வாழ்ந்த பெண்களும் எதிரியின் சில நல்ல குணாம்சங்களைப் பயன்படுத்தி கோழைத்தனமாக வாழ முனைந்ததால் தான் மூவேந்தர்கள் திராவிட நாடு அந்நியரின் அடிமையானது. வீரத்தோடு போராடி எதிரியை வீழ்த்துபவனின் தாலியை பெண்கள் கோரி இருந்தால் இன்று எமக்கென்று ஒரு வீர தேசம் இருந்திருக்கும். :idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதோ உமது கழப்புணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த கதை சொல்ல வந்ததற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் புலம்பியிருக்குறீர். தாலி கட்டப்படுவது பெண்ணிற்கு. நீர் தாலி வேலியல் அதையும் தாண்டி நாளுக்கு ஒரு தாலியை ஒரு பொண் கட்டிக் கொண்டால் என்ன என்று ஏன் வக்கிரத்தை கொட்டுறீர்.

தாலி அன்று கோழைத்தனமானது இன்று கேலித்தனமான விளக்கங்களுக்கு காரணமாகியுள்ளது என்பதைச் சொல்லத்தான்.

ஓர் இடத்தில் தாலி அடிமைச் சின்னம் என்று முழக்க மிடுவோர் இன்னொரு புறம் தாலியை கட்டிவிக்கின்றனர். ஏன் விவாகரத்துப் பெற்றும் பெறாமலும் என்று பெண்கள் அதுவும் திராவிடப் பெண்கள் தாலி தாலியா கட்டிக்கிறார்களே அப்படி என்றால் என்ன அர்த்தம். இன்னும் மொகாலயர்கள் திராவிட ஆண்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் கூற வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றா?

தாலி என்பது திருமண அடையாளமாக பெண்ணின் கழுத்தில் இன்று தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை கோழைத்தனத்தின் சின்னமாக யாரும் பார்ப்பதில்லை. தாலி கட்டிய பெண்கள் படைவீரர்களாக போர்க்களங்களில் கூட நிற்கின்றனர். தாலி என்பது இன்று ஒரு கலாசாரச் சின்னமாகிவிட்ட நிலையில் அன்புப் பரிசு என்றாகிவிட்ட நிலையில் அதற்கு கோழைத்தன விளக்கங்கள் அவசியமில்லை. தாலியை விசி எறிந்துவிட்டு வா என்னோடு என்று கூறும் தாலி அறுப்பு பிரச்ஸாரங்கள் இன்றும் திரை கட்டுரை என்று வளர்ந்து வருகிறது.

ஒரு பெண் தாலி என்பதை அணிந்துவிடுவதால் அவளின் வீரம் அன்பு அறிவு என்பது எந்த வகையில் பாதிப்படைகிறது என்று உங்களால் விளக்க முடியுமா? கைவிரல் ஒன்றில் மோதிரம் போட்டுவிட்டால் அந்த விரலுக்குப் பாரம் என்றால் ஏற்கலாம். அதற்காக அந்த விரலே அவமானபப்டுகிறது செயற்பட முடியாமல் தவிக்கிறது என்பது போன்றவை உங்களுக்கு முற்போக்கோக இருக்கலாம். நமக்கு அதுவல்ல அவசியம். அழுத்தில் தொங்கும் தாலி போர்ப் பயிற்சி பெறத் தடையில்லை. விண்வெளிக்குப் பறந்து போகத் தடியில்லை. ஆராய்ச்சிகள் செய்யத் தடையில்லை. ஆனால் சிலர் முன்வைக்கும் வாதங்களே பிற்போக்குத்தனமான சிந்தனைகளை இயலாமைகளை பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் விதைக்கின்றன. தாலி என்ற அன்புப் பரிசு தனிமனித ஒழுக்கத்துக்கான ஓர் அணியாக இருக்கட்டும். அது ஒரு போதும் ஆளுமையைப் பாதிக்காது. கோழைத்தனமான பெண்கள் தாலி என்பதால் எதிரியின் பெருந்தன்மைக்கு வாழ்வளித்தது போல இன்று தாலி எதிர்ப்பு என்று பெண்கள் தாலி பற்றி அநாவசியமாக சிரத்தைப் படச் செய்வது சுத்தப் பிற்போக்குத்தனம்.

Posted

மூன்று முடிச்சு என்பது..

இப்போது நட்டும் சுரையும் ஆகிவிட்டது..

அன்று ஒருதிருமணவிழாவில்..தாலி கட்டும் முகூர்த்த நேரம்..

மாப்பினைக்கு தாலி எடுத்துக்கொடக்க ஐயர் முயன்ற போது சுரையைக்கழற்றி தாலியைப் பிரிக்க முடியவில்லை..

கிட்டத்தட்ட 30 நிமிடம் போராடினார்கள்..

முகூர்த்தம் வேறு தப்பிவிட்டதாம்..

50 சவரணில் தொங்கத் தொங்க தாலி வேண்டுமென..மணப்பெண் கேட்டாலும்..கடைசியாக அது தொங்குவதேனோ..குளியலறைக்கண்ணா

Posted

குருவியாரே, அது தானே முதலே சொல்லியிருக்கிறேன் அன்றுள்ள களநிலையில் தாலியின் மூலம் ஒரு கவசம் உருவாக்கப்பட்டது என்ற சிந்தனை அந்த கதை மூலம் சொல்லப்படுகிறது. இது வரலாறு பற்றிய ஆய்வு அல்லவே ஒரு கற்பனையில் உருவான கதையே.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக புலம் பெயர்ந்திருக்கிறார்கள். நான் சுயநலவாதியாக எனது சொந்த ஆசைகள் எதிர்பார்ப்புகளை வாழ்வை எதிர்காலத்தை நினைத்து புலம்பெயர்ந்தேன். அதுமாத்திரமல்ல கோழையும் தான் என்பதை மறுக்கவில்லை. அதற்காக நான் வியாக்கியானங்கள் புனைய விரும்பவில்லை. நான் இங்கு ஒருவரையும் ஏன் இங்கு வந்தாய் நாட்டிற்கு சென்று போராடு என்று கூறவில்லை. தமது வாழ்வை அர்பணித்து வீரமாக போராடுபவர்களிற்கு துணையாக இரு அது நீதியான நியாமான போராட்டம் என்ற நிலைப்பாட்டைத்தான் எப்பொழுதும் வைத்துள்ளேன். அன்று என்னைப் போல் சுயநலவாதியாக கோழையாக எல்லாரும் போராடாமல் இருந்ததால் தான் இன்று நாம் இப்படி இருக்கிறோம் என்றதற்கான எச்சங்களை காட்டும் எமது இன்றைய நடத்தைகள் பலவற்றை கலாச்சாரம் மதம் என்பவற்றின் பெயரால் பூசிமெழுகுவதை எதிர்க்கிறேன்.

தாலியை அடிமைச்சின்னமாகவோ கோழையின் சின்னமாகவோ கூறவில்லை. அப்படியாயின் அகிம்சையும்? எந்த ஒரு இனத்திற்கும் இருக்கும் பழக்க வழக்கங்களிற்கு ஏதாவது ஒரு வரலாற்றுரீதியான நடைமுறைக் காரணங்கள் இருக்கு. அது உடையாக இருக்கலாம், உணவாக இருக்கலாம் வேறு கலச்சார பண்பாடு சார்ந்த விழாக்களாக இருக்கலாம். ஒருவரும் ஒன்றையும் காரணங்கள் இன்றி செய்வதில்லை. செய்ய வேண்டியது காலச் சூழ்நிலைகளிற்கு நிர்ப்பந்தமாக சந்ததி சந்ததியாக இருக்கும் பொழுது அது அவர்களுடை பண்பாடாக கலாச்சாரமாக ஒன்றித்துவிடுகிறது. அதுவே அவர்களை பிற்காலத்தில் அடையாளப்படுத்துவனவாகவும் மாறிவிடுகிறது. நாம் கலாச்சாரமாக பண்பாடாக செய்பவை எல்லாவற்றையும் வீரத்தின் சின்னமாகவும் அன்பின் சின்னமாகவும் கடவுளின் பெயராலும் glorify பண்ணி வியாக்கியானப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கையில்லை. இவற்றிற்கு மேலாக அதற்குள் ஒரு உண்மை ஒழிந்திருக்கும். அதை பற்றிய சிந்தனைகள் தேடல்கள் எமக்கு தேவை எம்மை பற்றி அறிந்து கொள்ள. இங்கு ஒருவரும் வரலாற்றை நிராகரிக்கவில்லை, திரிக்கவில்லை. பல்வேறு கோணங்களில் எமது கலாச்சாரம் பண்பாட்டில் இருக்கும் நடத்தைகளிற்கான யதார்த்தபூர்வமான காரணங்களை பற்றி சுதந்திரமாக சிந்திக்க முனைகிறார்கள். மற்றவர்களையும் தூண்டுகிறார்களே அன்றி ஒன்றையும் திணிக்கவில்லை.

Posted

நெடுக்காலபோவான்! நீங்கள் தாலி அணியும் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதற்கு வேறு விளக்கம் கேள்விப்பட்டதாக கூறினீர்கள்.

அந்த விளக்கத்தை தர முடியுமா?

அந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதையும், அப்படி ஏற்பதற்கான காரணத்தையும் சொல்லுங்கள்.

அறிவதில் ஆர்வமாக இருக்கிறேன்.

Posted

இப்படி ஒருவரியில் பதில் எழுதாமல் இக்கதை உங்களை எந்தெந்த வழிகளில் எப்படியெல்லாம் சிந்திக்க வைத்தது என்றும் பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் அதுவே கருத்துக் களத்துக்கான ஒரு உபயோகமான கருத்தாக இருக்கும்.

வெறுமனவே சிந்திக்க வைத்தது என்றால் அதில் கனதி இருக்காது. உங்களை சிந்தனையை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஏன் தயக்கம்.

வணக்கம் நெடுக்காலபோவான் பல்கலைக்கழகத்தில் இருந்து பதில் எழுதியதால் ஒரு வரியில் எழுதிவிட்டு சென்றேன்.

அந்தக்கதை ஏன் சிந்தனையைத் தூண்டுகின்றது என்று சொன்னேன் என்றால். அதாவது அவளது கணவனை வீரன் என்று நம்பி இருந்தாள் அந்தப்பெண் ஆனால் அவனது வீரமோ தனது மக்களையோ ஏன் மனைவியையோ காப்பற்றப்பயன்படவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சுமையாக கயிறை மாட்டுக்கு மூக்கணாம் கயிறு போடுவது போல் பெண்களுக்கும் அப்படி போட எத்தனிக்கிறான். ஆகவே அந்தப் பெண் சிந்திக்கிறாள் இப்படி ஒரு கோழையோடு வாழ்வதை விட அவ்வீரனோடு செல்வதே மேல் என. பழைய காலத்தில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று சொல்லுவார்கள். அந்தக் காலத்திலேயே அப் பெண் அதனை எதிர்த்து அப்பெண் அவ் வீரனோடு செல்கிறாள் என்றால் அவளது வீரத்தை பாராட்ட வேண்டுமே. இந்தக்கதைகற்பனைக்கதை தான் இருந்தாலும் அதில் கூறிய கருத்தைப்பாருங்கள்.

Posted

நான் ஒரு கட்டுரை வாசித்தேன் இதில் இணைப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்,

தாலி அடிமைச் சின்னமா?

-சந்திரலேகா,அவுஸ்ரேலியா-

தாலி பெண்ணுக்கு வேலி என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உள்ளது. தாலியின் பெருமை பேசும் படங்களும் வந்தன. தகுதியில்லாதவன் கட்டினால் அதனைக் கழற்றி வீசுவதில் தவறில்லை என்று கூறும் படங்களும் வந்தன. எவ்வாறாயினும் திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடை அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவÇ¢ல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.

யாழ்ப்பாணத்திலேயே பொற்கொடியில் தாலியைக் கோர்த்துக் கட்டும் வழக்கம் உள்ளது. இந்தியாவில் எத்தனை பணம் இருந்தாலும் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கட்டுவதே வழக்கம். கஷ்டம் வரும் போது உதவும் என்ற வகையில் தான் இந்த பொன்னில் கொடி செய்யும் முறை யாழ்ப்பாணத்தில் வந்திருக்க வேண்டும். பின் அது அந்தஸ்த்தைப் பறை சாற்றும் சின்னமாக காலப்போக்கில் மாறிவிட்டது. "மாப்பிள்ளை எத்தனை பவுணில் தாலிக் கொடி போட்டவர்?" என்று விசாரிக்கும் வழக்கம் இன்றும் ஊர்கÇ¢ல் காணப்படுகிறது. வசதி உள்ளவர்கள் இருபத்தைந்து பவுணில் கொடி போடும் வழக்கம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்பட்டது. பின்னர் பலரும் எட்டுத் தொடக்கம் 10 பவுணுக்குள் கொடி போடும் முறை சாதாரண நடைமுறையாகியது. ஆயினும் தமிழர் புலம் பெயர ஆரம்பித்த பின்ன÷ þó¾ ¿¨¼Ó¨È¢ø Á¡üÈõ ²üÀ¼ ¬ÃõÀ¢ò¾Ð. சிறப்பாக பிரான்ஸ்சில் உள்ள சிலர் தம்மிடமுள்ள பணப்புழக்கத்தைப் பறைசாற்ற ஏற்கெனவே 10 பவுணில் தாலிக் கொடி அணிந்திருந்த மனைவிமாருக்கு 60 பவுணில் கொடி செய்து போÎÅதாக பரீசிலிருந்து வெÇ¢வரும் ஈழநாடு பத்திரிகையில் ஒரு முறை படித்தேன். இவை அனைத்தும் தனிப்பட்டவர்களது விருப்பத்தைப் பொறுத்தது. திருமணத்தில் அணியப்படும் தாலி என்ற மங்கலச் சின்னம் முக்கியமானதே தவிர அது எத்தனை பவுணில் கோர்க்கப்படுகின்றதென்பது முக்கியமானதல்ல.

தாலி பற்றிப் பேசும் போது பலருக்கு பல விதமான வினாக்கள் நெஞ்சில் எழுகின்றன. எப்போது எவ்வாறு தாலி திருமணத்தைக் குறிக்க ஆரம்பித்தது? ஏன் இது பெண்களுக்கு மட்டும் அணிவிக்கப்படுகிறது? இது ஆணின் உயர்வையும் பெண் அவனுக்கு கீழ்ப்பட்டவள் என்பதையும் காட்டுகிறதா? அல்லது அது இருவரிடையே உருவாகும் புதிய அல்லது அழியாத பந்தத்தை உருவகமாகக் குறிக்கின்றதா? கல்வியும் தர்க்க ரீதியான சிந்தனைப் போக்கும் இன்று மரபு ரீதியாகக் கைக்கொள்ளப்படும் பல விஷயங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவதுடன் பலரை இவற்றிற்குப் பாதகமான போக்கில் சிந்திக்கவும் வைக்கிறது. தாலி நிரந்தரமாக மணமான பெண்ணின் கழுத்தில் இருந்தாலும் சரி அல்லது அது வங்கியில் நகைப் பெட்டிக்குள் தூங்கினாலும் சரி அதனது முக்கியத்துவம் திருமணத்தில் குறைந்து போவதில்லை. இந்தியாவின் தென் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உருவாகிய தாலி கட்டும் வழக்கம் திருமணத்தில் பிரிக்க முடியாத முக்கிய அம்சமாகத் திகழ்வதுடன் அது மணமகளுக்கு ஒரு அந்தஸ்த்தையும் கௌரவத்தையும் வழங்குகிறது.

திருமணத்தின் போது மகளைத் தந்தை கன்னிகாதானம் செய்த பின் தாலியின் மேல் நீர் ¦¾Ç¢த்து திருமணத்தை நடத்தும் புரோகிதர் பின் வரும் மந்திரத்தைக் கூறுகிறார். "இந்தப் பொன் உங்கள் செல்வத்தைப் பெருக்கட்டும். இந்த நீர் உங்கள் திருமண வாழ்வைத் தூய்மைப்படுத்தி உங்கள் வளத்தை அதிகரிக்கட்டும். மணமகளான நீ உன்னை உன் கணவனுக்கு வழங்குவாயாக."

தாலி கட்டும் போது மணமகன் சார்பில் கூறப்படும் மந்திரம் இது. "நான் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓ ¦ºªபாக்கியவதி, நான் இம்மங்கல நாணை உன் கழுத்தில் கட்டுகிறேன். நூறு வருடங்கள் நீ சுமங்கலியாக நிறைவான வாழ்வு வாழ கடவுள் உனக்கு அருளட்டும்."

இன்றுள்ள முறையில் தாலி கட்டும் முறை என்று அறிமுகப்படுத்தப்பட்டது என்பது பற்றி நோக்குவது பயனுள்ளது. நிச்சயமாக பண்டைய இந்தியாவில் இவ்வழக்கம் இருக்கவில்லை. இந்தியாவின் ஏனைய பகுதிகÇ¢ல் மணமக்களைப் பாதுகாக்கும் வண்ணம் கங்கணங்களை கட்டும் முறை காணப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் தாலி என்ற சொல் வழக்கு தால விருட்சத்தின் அதாவது பனையின் ஓலையால் தயாரிக்கப்பட்ட கழுத்தணியை அணியும் வழக்கத்துடன் ஆரம்பித்திருக்கலாம். பனையோலை உலர உலர நீண்ட காலம் அழியாது நிலைக்கும் என்பதால் அதை அணிந்து வந்துள்ளனர். சங்க இலக்கியங்கÇ¢ல் ஒரு ஆண் தான் கொன்ற புலியின் பல்லைத் தன் வீரத்தின் அடையாளமாகத் தன் காதலியின் கழுத்தில் அணியும் வழக்கம் காணப்பட்டதை அகநானுறு குறிப்பிடுகின்றது. அதனைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது. பாதுகாப்புக்காக அணியப்படும் ஐம்படைத் தாலியை தாலி என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கமும் இருந்ததை அகநானுறு, புறநானூறு, திணைமாலை நூற்றைம்பது ஆகியவற்றிலிருந்து அறியமுடிகிறது. சிலப்பதிகாரம் மங்கல அணி என்று ஒரு சொல்லைக் கூறுகிறது. ஆனால் அது தாலியைக் குறிப்பிடுகிறதா என்பதற்கு ஆதாரமில்லை. கோவலன் கண்ணகி திருமணத்தில் அக்கினியை வலம் வந்தமை கூறப்பட்டபோதும் அப்போது தாலி அணிவித்தமை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. எட்டாம் நுற்றாண்டளவில் வாழ்ந்த ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில் வரும் கண்ணனுடனான திருமணம் பற்றிய கனவுப் பாடலில் கைத்தலம் பற்றுதல் அதாவது இன்றும் பிராமண திருமணங்கÇ¢ல் முக்கிய அம்சமாக இருக்கும் பாணிக்கிரகணம் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார்.

இன்று கைக்கொள்ளும் முறையில் தாலி அணியும் முறை கிபி 958ம் ஆண்டு கல்வெட்டொன்றில் முதல் முதலாகக் குறிப்பிடப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் (1336-1732) இம்முறை பரவலாகியது. இதனால் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படும் தாலி கட்டும் முறை 10ஆம் நூற்றாண்டு வரையிலேயே ஆரம்பித்திருக்க வேண்டும்.

இன்று தென்னிந்திய தமிழ் சைவ வைஷ்ணவ திருமணங்கÇ¢ல் பொற் தாலி அணிவிக்கப்படுகிறது. இந்த தாலியில் அவரவர் சமய பண்பாட்டுச் சின்னங்கள் பொறிக்கப்படுகிறது. 108 பருத்தி நூல் இழைகளால் பின்னப்பட்டு மஞ்சள் பசையில் தோய்க்கப்பட்ட கயிற்றில் இத்தாலி கோர்க்கப்பட்டு மணமகனால் மணமகÇ¢ன் கழுத்தில் கட்டப்படும். இதனைக் கட்டும் போது மணமகன் முதல் முடிச்சைப் போட அவரது சகோதரிகள் மிகுதி இரண்டு முடிச்சுகளையும் போடுவார்கள். முதலாவது முடிச்சு இத் திருமணத்தை சம்பிரதாய பூர்வமாக நிறைவு செய்து தம்பதிகளை திருமணமானவர்கள் என்று ஏற்றுக் கொள்ள வைக்கிறது. இரண்டாவது முடிச்சு மணமகளை மணமகனது குடும்பத்திற்கும் அவர்களது மரபிற்கும் வரவேற்கிறது. மூன்றாவது இப் பெண் இப்போது எல்லோரது முன்னிலையிலும் திருமணமாகிவிட்டவள் என்பதை சமூகத்திற்கு அறிவிக்கிறது.

தெலுங்குத் திருமணங்கÇ¢ல் மணமகனுக்கும் மணமகளுக்கும் கைகÇ¢ல் மஞ்சள் கங்கணங்கள் கட்டப்பட்டபின் அது வரை அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காது தடுப்பாகப் போடப்பட்டிருந்த வெள்ளைத்துணி நீக்கப்படும். பின்னர் மணமகன் sotrum எனப்படும் தாலியை மணமகளுக்கு கட்டுவான். கேரளாவில் தாலி சிறிய இலை வடிவில் அமைந்துள்ளது. "தாலி கெட்டு" என்று கூறப்படும் சடங்கில் இது மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு மணமகனால் மணமகளுக்கு கட்டப்படும். கர்நாடகத்தில் தாலி பதக் அதாவது பதக்கம் எனப்படுகிறது. மகாராஷ்ரத்தில் கறுப்பு மணி மாலையில் இணைக்கப்பட்ட தங்கத் தாலியை மணமகன் மணமகÇ¢ன் கழுத்தில் கட்டுகிறான். இந்தியாவின் வடக்கு கிழக்குப் பகுதிகÇ¢ல் தாலியின் இடத்தை வேறு ஆபரணங்கள் அல்லது குங்குமம் எடுக்கிறது. பெங்கோல், ஒறிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய இடங்களiல் திருமணமான பெண்கள் இரும்பு காப்புகளை அணிகின்றனர். அத்துடன் பவளமும் சிப்பியும் கலந்த ஆபரணம் தாலிக்கு பதிலாக அணியப்படுகிறது. ராஜஸ்தானில் திருமணமான பெண்கள் பச்சை நிறக் காப்பு அணிகின்றனர்.

தாலி என்பதை சமூக, பண்பாட்டு சமய வெÇ¢ப்பாடாகவே காணுதல் வேண்டும். தென் பகுதியில் மஞ்சள் மங்கலச் சின்னமாகக் கருதப்பட வடக்கில் கறுப்பு மங்கலம் நிறைந்த நிறமாகக் கருதப்படுகிறது. அத்துடன் கறுப்பு மணிகள் தீமைகளை அகற்றும் என்று அங்கு எண்ணப்படுகிறது. ஆரம்பத்தில் நல்லெண்ண இணைப்பைக் காட்டுவதற்காக மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றைக் கட்டிக் கொண்டனர். பின்னரே மணமகன் பெண்ணின் தகப்பனிடமிருந்து பெண்ணைப் பொறுப்பெடுப்பதன் அடையாளமாக மணமகÇ¢ன் கழுத்தில் தாலி கட்டும் முறை வந்தது என்று கூறப்படுகிறது. இந்த தாலி கணவன் மனைவிடையே உருவாகும் ஆழமான அன்பையும் விருப்பையும் உருவகமாகக் குறிப்பதுடன் கணவனின் நீண்ட வாழ்வையும் குறித்து நிற்கிறது.

புலம் பெயர்ந்த பின்னர் தமிழர் எத்தனையோ வகைகல் மாறிவிட்ட போதும் திருமணத்தின் போது மணப்பெண் சேலை அணிவதும் மாப்பிள்ளை அவளுக்குத் தாலி அணிவிப்பதும் இன்னும் மாறவில்லை. மணமகள் தொடர்ந்து தாலியை அணிந்திருக்கிறாளோ þø¨Ä§Â¡ திருமணத்தின் போது தாலி கட்டும் மரபு மாறவில்லை. இனியும் மாறும் என்று நான் நினைக்கவில்லை. தாலி என்பது சில பெண்கள் நினைப்பது போல அடிமைச் சின்னமல்ல. அது கணவன் மனைவியரிடையே அன்பையும் பிணைப்பையும் ஏற்படுத்த உதவும் ஒரு மங்கலச் சின்னமாகும்.

நன்றி

வெப்தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நெடுக்காலபோவான் பல்கலைக்கழகத்தில் இருந்து பதில் எழுதியதால் ஒரு வரியில் எழுதிவிட்டு சென்றேன்.

அந்தக்கதை ஏன் சிந்தனையைத் தூண்டுகின்றது என்று சொன்னேன் என்றால். அதாவது அவளது கணவனை வீரன் என்று நம்பி இருந்தாள் அந்தப்பெண் ஆனால் அவனது வீரமோ தனது மக்களையோ ஏன் மனைவியையோ காப்பற்றப்பயன்படவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சுமையாக கயிறை மாட்டுக்கு மூக்கணாம் கயிறு போடுவது போல் பெண்களுக்கும் அப்படி போட எத்தனிக்கிறான். ஆகவே அந்தப் பெண் சிந்திக்கிறாள் இப்படி ஒரு கோழையோடு வாழ்வதை விட அவ்வீரனோடு செல்வதே மேல் என. பழைய காலத்தில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று சொல்லுவார்கள். அந்தக் காலத்திலேயே அப் பெண் அதனை எதிர்த்து அப்பெண் அவ் வீரனோடு செல்கிறாள் என்றால் அவளது வீரத்தை பாராட்ட வேண்டுமே. இந்தக்கதைகற்பனைக்கதை தான் இருந்தாலும் அதில் கூறிய கருத்தைப்பாருங்கள்.

கேவலம் இப்படி பெண் தன்னை தன்னினத்தைப் தானே துணிந்து நின்று பாதுகாக்க முடியாது எதிரியின் வீரத்தை நம்பி அவனோடு வாழப் போனான் என்று எழுதுகிறீகளே கற்பனை என்றாலும் வெட்லமாக இல்லை.

இல்லை ஈழத்துப் பெண்களை ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தின் பின் சென்றால் வீரனின் பாதுகாப்பும் சுக வாழ்வும் கிடைக்கும் என்று அறிவுறுத்தினாலும் உறுத்துவீர்கள் போல் இருக்கிறதே.

காலம் மாறினாலும் பெண்களின் மனநிலையில் தன்னைப் பாதுகாக்கக் கூட ஆணின் தயவைத் தேடும் பிற்போக்கான நிலையே உண்டு.

தாலியை அணிந்தால் என்ன நஞ்சுமாலையை அணிந்தால் என்ன பெண் தன்னைத் தற்காக்கப் போராட முடியும். தன்னினம் ஆயினும் எதிரி ஆகினும் ஆடவனின் தயவில் ஏன் வாழ வேண்டும். பெண் குரங்குகள் கூட ஆண் குரங்கின் பாதுகாப்பை முழுமையாக நம்பி இல்லாத போது சிந்திக்கத் தெரிந்த தந்திர மிக்க மனிதனாகப் பெண் கேலவம் தன்னைப் தானே பாதுகாக்க முடியாது எதிரிக்கு அடிமையானதை கோழைக் கணவனைப் புறக்கணித்தாள் என்று வீரமாகப் பேசுகிறீர்களே வெட்கமாக இல்லை.

ஆண்கள் தான் இன்னும் பெண்களைக் காக்க வேணும் என்ற மனனிலையின் வெளிப்பாடாக இதைக் கருத வேண்டியுள்ளது. எம் பெண்களா இன்னும் இபப்டிச் சிந்திக்கிறார்கள்.

தாலியென்ன எதைப் போடினும் பாரம்பரியத்துடன் வீரம் அறிவு அன்பு பெருக்குவோம் என்று சிந்திக்கும் இன்றைய பெண்களில் நீங்களும் ஒருவரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குருவியாரே, அது தானே முதலே சொல்லியிருக்கிறேன் அன்றுள்ள களநிலையில் தாலியின் மூலம் ஒரு கவசம் உருவாக்கப்பட்டது என்ற சிந்தனை அந்த கதை மூலம் சொல்லப்படுகிறது. இது வரலாறு பற்றிய ஆய்வு அல்லவே ஒரு கற்பனையில் உருவான கதையே.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக புலம் பெயர்ந்திருக்கிறார்கள். நான் சுயநலவாதியாக எனது சொந்த ஆசைகள் எதிர்பார்ப்புகளை வாழ்வை எதிர்காலத்தை நினைத்து புலம்பெயர்ந்தேன். அதுமாத்திரமல்ல கோழையும் தான் என்பதை மறுக்கவில்லை. அதற்காக நான் வியாக்கியானங்கள் புனைய விரும்பவில்லை. நான் இங்கு ஒருவரையும் ஏன் இங்கு வந்தாய் நாட்டிற்கு சென்று போராடு என்று கூறவில்லை. தமது வாழ்வை அர்பணித்து வீரமாக போராடுபவர்களிற்கு துணையாக இரு அது நீதியான நியாமான போராட்டம் என்ற நிலைப்பாட்டைத்தான் எப்பொழுதும் வைத்துள்ளேன். அன்று என்னைப் போல் சுயநலவாதியாக கோழையாக எல்லாரும் போராடாமல் இருந்ததால் தான் இன்று நாம் இப்படி இருக்கிறோம் என்றதற்கான எச்சங்களை காட்டும் எமது இன்றைய நடத்தைகள் பலவற்றை கலாச்சாரம் மதம் என்பவற்றின் பெயரால் பூசிமெழுகுவதை எதிர்க்கிறேன்.

தாலியை அடிமைச்சின்னமாகவோ கோழையின் சின்னமாகவோ கூறவில்லை. அப்படியாயின் அகிம்சையும்? எந்த ஒரு இனத்திற்கும் இருக்கும் பழக்க வழக்கங்களிற்கு ஏதாவது ஒரு வரலாற்றுரீதியான நடைமுறைக் காரணங்கள் இருக்கு. அது உடையாக இருக்கலாம், உணவாக இருக்கலாம் வேறு கலச்சார பண்பாடு சார்ந்த விழாக்களாக இருக்கலாம். ஒருவரும் ஒன்றையும் காரணங்கள் இன்றி செய்வதில்லை. செய்ய வேண்டியது காலச் சூழ்நிலைகளிற்கு நிர்ப்பந்தமாக சந்ததி சந்ததியாக இருக்கும் பொழுது அது அவர்களுடை பண்பாடாக கலாச்சாரமாக ஒன்றித்துவிடுகிறது. அதுவே அவர்களை பிற்காலத்தில் அடையாளப்படுத்துவனவாகவும் மாறிவிடுகிறது. நாம் கலாச்சாரமாக பண்பாடாக செய்பவை எல்லாவற்றையும் வீரத்தின் சின்னமாகவும் அன்பின் சின்னமாகவும் கடவுளின் பெயராலும் glorify பண்ணி வியாக்கியானப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கையில்லை. இவற்றிற்கு மேலாக அதற்குள் ஒரு உண்மை ஒழிந்திருக்கும். அதை பற்றிய சிந்தனைகள் தேடல்கள் எமக்கு தேவை எம்மை பற்றி அறிந்து கொள்ள. இங்கு ஒருவரும் வரலாற்றை நிராகரிக்கவில்லை, திரிக்கவில்லை. பல்வேறு கோணங்களில் எமது கலாச்சாரம் பண்பாட்டில் இருக்கும் நடத்தைகளிற்கான யதார்த்தபூர்வமான காரணங்களை பற்றி சுதந்திரமாக சிந்திக்க முனைகிறார்கள். மற்றவர்களையும் தூண்டுகிறார்களே அன்றி ஒன்றையும் திணிக்கவில்லை.

உங்களைப் போலத்தான் பெரும்பாலான தமிழர்களும். அப்புறம் எதற்கு இவ்வளவு நீட்டி முழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்காலபோவான்! நீங்கள் தாலி அணியும் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதற்கு வேறு விளக்கம் கேள்விப்பட்டதாக கூறினீர்கள்.

அந்த விளக்கத்தை தர முடியுமா?

அந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதையும், அப்படி ஏற்பதற்கான காரணத்தையும் சொல்லுங்கள்.

அறிவதில் ஆர்வமாக இருக்கிறேன்.

நிறையக் கதைகள் இருக்கிறது. ஆதாரங்களோடு தர வேண்டியது எமது பொறுப்பு. அதற்கு எமக்கு நேரம் அவசியம். சாத்தியப்படும் போது தருவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் வரும் நாயகியின் கணவன் வீரன் என்ற படியால் தான் திருமணம் செய்ததாகவும், அவனின் வீரத்தினை நினைத்துப் பெருமைப்படுகிறாள். ஆனால் கணவனோ தாடிக்காரணை அழிக்காமல் தாலியை அவளுக்கு கட்டுகிறான். இதனால் அவளுக்கு அவளது கணவனது வீரத்தினை விட தாடிக்காரனின் வீரம் உயர்வாகத் தெரிகிறது.

'இந்தக் கிராமத்தில் உள்ள மற்ற ஆண்களும் என் கணவனைப் போல் வீரர்களாக இருந்தால், இந்த வெறியர்களை விரட்டி அடித்து விடலாம் என்று மற்றைய பெண்களுடன் பேசுவாள். அதில் அவள் கணவன் குறித்த பெருமையோடு அந்த வெறியர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கும். '.

ஆனால் அவளது வெறியர்களைத்துரத்தி அடிக்கும் ஏக்கமும் இருந்தும் தாடிக்காரனைக்கல்யாணம் செய்கிறார் என்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்குது. எனினும் நல்ல கதை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனால் அவளது வெறியர்களைத்துரத்தி அடிக்கும் ஏக்கமும் இருந்தும் தாடிக்காரனைக்கல்யாணம் செய்கிறார் என்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்குது. எனினும் நல்ல கதை

அதுமட்டுமல்ல..

பெண்களுக்கு தங்களை தாங்களே எதிரியிமிருந்து தற்காத்துக் கொள்ள முடியாததாகக் காட்டுவது பெண்கள் இயலாமை மிக்கவர்கள் என்று சொல்கிறது.

ஆண்களின் விளையாட்டை (ஏறுதழுவுதல் அப்படி இப்படி மிருகங்களோடு வீரங்காட்டிறது) வீரமாக்கிப் பார்க்கும் நிலை பெண்களை யதார்த்ததைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் என்று சித்தரிக்கிறது. மாடு பிடிக்கிறதும் போர்க்களத்தில் வாளேந்தி எதிரியின் போர்த் தந்திரங்களுக்கு எதிராகவும் படைப்பலத்துக்கு எதிராகவும் சண்டை இடுவதும் ஒன்றாகவா பெண்கள் கணிக்கின்றனர். மொத்தத்தில் பெண்களுக்கு யதார்த்ததைப் புரிந்து கொள்ள முடியாத தன்மை எங்கிறார்கள்.

தாலி கொண்டு வரும் கணவனின் தாலி மட்டும் வேண்டாம் வாளோடு பயிற்சியும் தா உன்னோடு கூடி வந்து வீரங்காட்டி எதிரியை விரட்டி போர்க்களத்தில் மடிகிறேன் இன்றேல் வெற்றி வாகை சூடி நாடு காத்து இன மானம் காத்து உன்னோடு அன்பு காட்டி அறிவை வளர்ப்பவர் என்று பாவம் கதை எழுதியவருக்கு கற்பனையில் கூட பெண்ணை பெருமிக்க முடியவில்லை. தாடிக்காரன் தூக்கிக் கொண்டு போனான் என்றுமில்ல காணாமல் போனவள் சிரிந்துக் கதைத்துக் கொண்டு போனாளாம். அதுவும் கணவனின் வீரம் போலி என்று கண்டதால்.

இப்படியான பெண் இருக்கும் போது கணவனிடத்தில் வீரமா விளையும். இவள் குழந்தையிடம் கூட வீரமா கடத்தப்படும்.

வீரம் என்பது மனதளவில் பிறப்பது. தாலியும் கூறையும் பொட்டும் அதற்கு தடையல்ல. தாலி சொல்லவில்லை பெண்ணே வீரத்தை வளர்க்காதே காட்டாதே என்று. அது ஒரு சின்னமாக கணவனின் பரிசாகத் தொங்கிக் கொண்டு என்னோடு என் கணவனும் இருக்கிறான் என்று வீரத்தை வளர்க்க வேண்டுமே தவிர

சிவப்பு பொட்டு கணவனின் குருதி என் நெற்றியில் இருக்கிறதே நான் வீரப் பெண்ணாக எழ வேண்டும் என்று கூற வேண்டுமே தவிர

கூறை என்பது கூட என்னை மட்டுமல்ல என் கணவனையும் காப்பவளாக வாளுக்கு உறை போல அவன் வீரத்துக்கு உறையாக இருப்பேன் என்று சிந்திக்க வைக்க வேண்டுமே தவிர..கேவலம் எதிரி வீரனுடன் ஓடவிட்டு வேடிக்கை காட்டும்...நிலையில் பெண்களின் வீரச் சிந்தனையைக் கேலி செய்கிறது கதை.

பரணிபாடிய மண்ணில் வீர காவியம் பாடிய மண்ணில் மைந்தன் புறமுதுகில் அடிபட்டான் என்று வீரப்பாலூட்டிய மார்பையே அறுத்தெறிந்த மாதர்கள் விளைந்த மண்ணில் வேலெடுத்துப் போர் புரிந்த வீரர்களை மன்னர்களை தங்கள் கவிதைகளால் வீரமூட்டிய பெண் கவிகள் என்று வீரம் விளைவித்த பெண்களையும் விட்டு அவர்களின் சிந்தனைகளையும் விட்டு மறந்து... சா இக்குறுங்கதை வண்ணார்பண்ணையிலே சிங்களத்தானுக்கு தன்னையும் இனத்தையும் காட்டிக் கொடுத்து சேவகம் செய்து துப்பாக்கிக் குண்டே அருவருக்க வீழ்ந்தாளே ஒரு தமிழ் பெண் அவளுக்கு ஈடாக்கி வீரத் தமிழ் பெண்களை கொச்சைப் படுத்தி இருப்பது கேவலம்.

Posted

மேற்கோள்: "தாலி கொண்டு வரும் கணவனின் தாலி மட்டும் வேண்டாம் வாளோடு பயிற்சியும் தா உன்னோடு கூடி வந்து வீரங்காட்டி எதிரியை விரட்டி போர்க்களத்தில் மடிகிறேன்"

இப்படி முடித்திருக்கலாம் என்பது நெடுக்காலபோவானின் கருத்து. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இதிலே "தாலி மட்டும் வேண்டாம்" என்பதை "தாலி வேண்டாம்" என்று மாற்றி இருப்பேன். அத்தடன் "வீரம்" என்று தலைப்பு கொடுத்திருப்பேன்.

இக் கதைக்கு "தாலி" என்று தலைப்பு கொடுத்திருப்பதால், இந்த முடிவு சரி என்று நினைக்கிறேன்.

இக் கதையில் நான் பெண் ஆணைச் சார்ந்துதான் வாழவேண்டும் என்று சொல்ல வரவில்லை. பெண்ணுக்கு தன்னுடைய துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்று சொல்ல விரும்புகிறேன். அவள் ஒரு வீரனோடு வாழ ஆசைப்பட்டாள். வந்தவன் உண்மையில் வீரன் இல்லை. ஆகவே அவள் ஒரு வீரனோடு போய் விட்டாள். அவ்வளவுதான்.

சில ஆண்கள் தங்களுடைய கதைகளில் பெண் எந்த ஒரு ஆணையும் சாராது தனித்து வாழ்கிறாள் என்று முடிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை இது கூட ஒரு ஆணாதிக்க சிந்தனையே. ஒரு ஆணுடன் வாழ்ந்த ஒரு பெண் இன்னொரு ஆணுடன் வாழக்கூடாது என்ற சிந்தனை அதற்குள் மறைந்து கிடக்கும். எதற்கு ஒரு பெண் தன்னுடைய இச்சைகளை கொன்று காலம் முழுவதும் தனித்து வாழ வேண்டும்? எனக்கு இப்படியான முடிவுகள் பிடிக்காது.

"தாலி" என்பதன் மூலம் இன்று பலவகையில் பெண்கள் அடக்கப்படுவதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் தாலி என்பது உருவான முறைகள் குறித்தும் இக் கதையின் மூலம் கேள்விகளை எழுப்ப விரும்பினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் தப்பான கருத்தியலோடு இருக்கிறீர்கள்.

வீரம் என்பதை ஆணுக்கு மட்டும் என்று ஆக்குகிறீர்கள். ஒரு பெண் வீரனான ஆணைத் தெரிவு செய்ய நினைத்தால் ஒரு ஆண் வீரமான பெண்ணை தெரிவு செய்யக் கூடாது என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. ஒரு பெண்ணின் வீரமான ஆணின் தெரிவுக்குப் பின்னால் அவள் வெறும் இச்சையை எதிர்பார்கிறாளா?

வீரத்தை இச்சைக்குள் கலக்க நினைக்கிறீர்களா. அல்லது கருத்தியலில் முரண்ப்பாடு காட்ட கொஞ்சம் வித்தியாசமா எழுதினா சமூகத்தில் முற்போக்கு என்பார்கள் என்பதற்காக எழுதுகிறீர்களா? பெண் தனக்கான பாதுகாப்பைத் தான் பெறமுடியாது என்கிறீர்களா? அல்லது பெற முனையவில்லை என்கிறீர்களா?

வீரமான ஆணின் தெரிவுக்குப் பின்னால் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன? பெண் வீரனான ஆணைத் தெரிந்தால் பாதுகாப்புப் பெறுவாள் என்றா அல்லது அவள் இச்சைக்கு வீரமான ஆண் தெவை என்றா...?

சரி பெண் வீரமில்லை என்பதற்காக ஒரு ஆண் எதிர்நாட்டு பெண்ணிடமா வீரத்தை எதிர்பார்க்க சொல்கிறீர்கள்?

வீரத்தை ஊட்ட முனையவதற்குப் பதில் எதிரியின் வீரத்தில் மதி இழந்து போனாள் என்கிறீர்கள். அதற்கு வீரமற்றவனுடன் வாழ்வதால் அவள் இச்சைக்கு இழுக்கு வரும் என்பதாகவா சொல்ல வருகிறீர்கள்.

ஆக மனிதனை விலங்காக்க முனைகிறீர்கள்.

பெண்ணுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கு உயிரினங்களுக்கு இச்சைகள் என்பது பொது. மனித இச்சை வழி நடப்பதற்குப் பதில் இச்சையை தன் வழிக்குக் கொண்டு வருவதுதான் மனித பகுத்தறிவியலுக்கு அவசியம். மனித உயிரினமாகினும் இச்சை வழி போய் வாழ்வென்றிருந்தால் இன்று நாகரிகம் படைக்கும் அளவுக்கு சிந்தித்திருக்க மாட்டான். குரங்குகள் போல இச்சைக்கு கண்டதோடும் இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பான். மனித வாழ்வுக்கு என்று நெறிமுறைகளை வகுத்தான். அது அவனுக்கு பாதுகாப்பான வாழ்வியலை மன ஒழுக்கத்தை ஒடுக்கத்தைக் கற்றுக்கொடுத்தது. அது அவனை விலங்குகளில் இருந்தும் மாறுபட்டு சிந்திக்கும் நிலைக்கு உயர்த்தியது.

பெண்கள் மட்டுமல்ல பல ஆண்டுகளாக ஆண்கள் கூட இச்சைகளைக் கட்டுப்படுத்தி வாழ்ந்துதான் உள்ளனர். அதற்கும் வரலாற்றுச் சான்றுகள் இருக்கிறது. உங்கள் கதைப்படி பார்த்தால் ஈழத்தில் உள்ள பல ஆண்கள் ஈழப்பெண்களால் தெரிவுக்கு உகந்தவர்கள் அல்லர் என்பதாகத்தான் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி என்றால் அந்தப் பெண்கள் சிங்களப் படைவீரனை த்ர்வதுதான் பாதுகாப்பு அவள் விருப்பம் போல இச்சையைத் தீர்க்க வழி என்கிறீர்களா அல்லது மனம் விரும்பும் போதெல்லாம் இச்சையைத் தீர்க்க பெண் என்ன ஆணும் இப்படிப் பலரோடும் கூடலாம். தோ இச்சையைத் தீர்த்துக் கொண்டு வாழ்ந்தால் சரி என்கிறீர்களா?

ஐயா ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் உங்களிடம் பகுத்தறிவு வாதம் இருக்கிறதோ இல்லையோ மனிதன் என்ன அனைவருக்கும் இச்சையைக் கட்டுப்படுத்தி வாழவும் வகை இருக்கிறது. இசசை கூட அளவிடப்பட காரணம் இருக்கிறது. இச்சையைக் கட்டுப்படுத்தியதற்காக மரணித்த ஒரு மனிதனை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா? ஆனால் அதீத இச்சையால் வீழ்ந்த மனிதர்கள் அதிகம்.

ஆணோ பெண்ணோ இச்சை வழி வாழ வழி சொல்லாதீர்கள். தனது இச்சைக்காக எதிரியின் வீரத்தை போற்றுகிற பெண் எமது சமூகத்துக்கு அவசியமில்லை. பெண்ணுக்கு தனக்குள் உள்ள வீரத்தை வளர்க்க வழி காட்டுவீர்கள் என்றால் பெண் இச்சைவழி வாழ எதியின் வீரத்தைக் காட்டுகிறீர்கள். மாட்டுடன் மோதுவது தமிழ் ஆண் மகனின் வீரமாக்கி அதில் எதிரியை வீழ்த்தும் பலமில்லை என்றாக்கி பெண்ணின் இச்சைக்கு எதிரியை வீரனாக்கும் உங்கள் கதை சமூகத்துக்குச் சொல்லும் செய்தி என்ன.

கணவன் இச்சைக்கு உகந்தவன் இல்லை என்றால் இன்னொருவனை த்ர்வு செய் அப்படி என்றால். ஆக ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது இச்சையைப் பூர்த்தி செய்தலாகவா 17ம் நூற்றாண்டில் இருந்தது. தயவு செய்து சமூக ஒழுக்கங்கள் தனி மனித ஒழுங்கள் மனித இனத்தைப் பாதுகாக்கும் காரணிகள். அவற்றைச் சிதைக்கவல்ல வெறும் இச்சை வழி வாழ்வு என்ற தவறான எண்ணப்பாட்டை மனிதருக்குள் விதைக்காமல் வீரத்தை அறிவை அன்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றாக்கி ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய மனித தனிமனித விழுமியத்தை காப்பாற்றி இச்சைக்கு கட்டுப்பாடு போட்டு மனிதனை மிருகமாக வன்றி மனிதனாக சிந்தனை உள்ளவனாக பகுத்து ஆய்ந்து அறியும் ஆற்றல் உள்ளவனாக வழி காட்ட தாச்சும் எழுத முடிந்தால் தாலி என்ன எந்தத் தலைப்பிலும் எழுதுங்கள். நமக்கு நாட்டுக்கு புள்ளிராஜாக்கள் போய் புள்ளி ராணிக்கள் தான் தெவை என்ற பாணியில் சமூகக் குப்பைகள் அவசியமா சிந்தியுங்கள்.

ஆணோ பெண்ணோ இச்சைகளைக் கட்டுப்படுத்தி அளவோடு மனதோடு திருப்திப் பட்டு வாழுதல் வாழ்க்கை. வீரம் த்சத்தைப் பாதுகாக்க என்பதுதான் முக்கியம். பெண் ஆணைத் தெரிவு செய்ய அன்பும் புரிந்துணர்வும் அவ்சியம். இச்ச்சை இரண்டாம் அல்லது மூன்றாம் பட்சம். மானமிழந்து இனமானம் இழந்து இச்சைக்காக வாழ மனிதன் இன்றில்லை. அவன் விலங்குமில்லை. சிறப்பு விலங்கு.சி- ந்இக்கத் தெரிந்த விலங்கு. நன்மை தீமைக்ளை எடை போடத் தெரிந்த விலங்கு. பெண்ணுக்கு ஆணுக்கு என்று இச்சைகள் வ்றுபடாது. கட்டுப்படித்தி கட்டுப்பாட்டோடு வாழ்தல் வாழ்க்கைக்கு அழகு பாதுகாப்பு. மனித நாகரிகத்தின் இருப்பு.

Posted

பெண் தனித்து வாழ்தால் என்பது பற்றிய என்னுடைய கருத்தின் சிறு பகுதியே இச்சை சம்பந்தப்பட்டது.

மற்றையபடி இக் கதை இச்சை பற்றியது அல்ல.

கதையின்படி அப் பெண் ஒருவனை வீரன் என்பதற்காக திருணம் செய்கிறாள். வீரனையே திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக காத்திருந்து திருமணம் செய்கிறாள்.

ஆனால் அவன் வீரன் இல்லை என்பது அவளுக்கு தெரிய வருகிறது. அவன் மட்டும் அல்ல. அவனுடன் சேர்ந்த மற்றவர்களும் வீரர்கள் இல்லை என்று தெரிய வருகிறது.

இந்த இடத்தில் அவள் தன்னுடைய கொள்கையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவள் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து வேறொரு வீரனை திருமணம் செய்கிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவள் வீரனைத் தெரிவு செய்ய நீங்கள் முன்வைத்த காரணங்கள் என்ன? சும்மா வீரத்தை விரும்ப என்ன தேவை வந்தது அவளுக்கு. தன் வீரத்தை அவள் உணராததாலா? அந்நிய ஆணிடம் தான் வீரத்தை எதிர்பார்க்க காரணம் என்ன? அவள் தாய் நாட்டுக்கு ஒற்றர் வேலை செய்யச் சென்றாள் என்றிருந்தாளாவது பெருமைப்பட்டிருக்கலாம். ஆனா நீங்களோ வீரமில்லாத கணவனை வெறுத்து அந்நிய ஆடவனின் அதுவும் எதிரின் வீரத்தில் மயங்கிப் போனாள் பெண் என்று பெண்களை தன்மானமற்ற இனமானமற்ற வீரமே அற்ற உணர்ச்சிக்கு அடிபணியும் விலங்குகளாக எல்லோ காட்டி இருக்கிறீர்கள்?

அவள் கணவனா வந்த ஆண் மற்றும் அவள் நாட்டு ஆண்கள் வெறும் மாடு பிடிப்பவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அவர்களிடம் உள்ள வீரமென்பது பலமிக்க எதிரியை அவளுக்காக எதிர்க்க வேண்டும் என்பதுவா?

இது வீரத்துக்கும் போர் முறைக்கும் விளையாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணராத நிலையல்லவா?

வீரம் விவேகத்துடன் வெளிப்பட வேண்டியதே முயற்சிக்கு வெற்றி அளிக்கும். அவளுக்காக ஒரு ஆடவன் வீரத்தைக் காட்டுவது வீரனுக்குத்தான் இழுக்கு.

வந்தவன் தூக்கிச் சென்றவன் வீரன் என்று அவள் கண்டால் அவளைப் போல கோழை யாரும் இல்லை. அப்போ அந்தக் காலத்துப் பெண்கள் ஆண்களின் வீரத்தின் மீதும் தங்களின் வீரத்தின் மீதும் முயற்சிகளின் மீதும் தன்னம்பிக்கை அற்று விளங்கினரா?

அப்போ ஆண்கள் கோழை என்பதால் அந்தப் பெண் தன் கோழைத்தனத்தை மறைக்க அந்நிய ஆடவனுடன் அதுகும் திருமணமானவள் ஓடிப்போனாள் என்கிறீர்களா?

இதன் மூலம் நீங்கள் சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறீர்கள். கணவனாக இருந்தாலும் பெண்ணின் விரும்பங்கள் பலவற்றில் ஒன்றை ஏதோ ஒரு கட்டத்தில் நிறைவு செய்யத் தவறின் அவள் அவனை விட்டு இன்னொருவனைப் பார்த்துக் கொள்ளலாம். பின்னர் அவனிலும் அவளுக்கு சலிப்பு ஏற்படும் போது இன்னொன்றைப் பார்த்துக் கொள்ளலாம் கட்டிக்கொள்ளலாம்.

என்ன சமூக ஒழுங்கை நீங்கள் போதிக்கிறீர்கள். ஆக பெண்ணிற்கு மட்டும் தான் உணர்வுகள் பொங்கி வழிகிறது. ஆண் அவளின் விருப்பத்துக்கு உகந்தவனாக இல்லை என்றால் அவன் தட்டிக்கழிக்கப்பட வேண்டியவன். ஆனால் பெண் ஆரம்பதில் இருந்து கோழையாக இருப்பினும் ஆணுக்காக தன்னை தன் வீரத்தை அன்பை அறிவைப் பயன்படுத்தாத போதும் வெறும் ஆணின் வீரத்துக்காக அவனை விட்டு விட்டு இன்னொருவனுடன் ஓடலாம். அதுவும் எதிரியுடன் ஓடலாம் என்றா சொல்ல வருகிறீர்கள்? அந்த ஆணின் கணவனின் சிந்தனைகளுக்கு மதிப்பளிச்சு தன்னை மாற்றிக் கொள்ளவே கூடாது. அவளுக்கு ஆடவனின் வீரம் தான் முக்கியம். அதுவும் எதிரியின் வீரம் தான் முக்கியம்.

ஏன் அந்தப் பெண் தன் கணவனையே வீரனாக்க முயலக் கூடாது? மாடு பிடிப்பதில் திறமைசாலியான அவன் நிச்சயம் கோழையாக இருக்க முடியாது. எதிரியின் பலத்தின் முன் அவன் வீரம் விவேகத்துக்கு கட்டுப்பட்டிருக்கலாம். அதைப் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்காமல் ஏன் அந்தப் பெண் அந்நியனின் அதாவது எதிரியின் வீரத்துக்கு மயங்கினாள். அந்த வகையில் அவள் ஒரு தேசத் துரோகி மட்டுமல்ல இனத் துரோகி கூட. தனது சுய நலத்துக்காக சொந்த தேசத்து மக்களை காட்டிக் கொடுத்த துரோகி.

அவளின் செயலால் ஆண்கள் வீரமற்றவர்கள் என்று எதிரி உறுதிப்படுத்திக் கொள்வானாயின் அவள் போலற்ற இனமானமுள்ள தன்மானமுள்ள சமூக ஒழுக்கமுள்ள பெண்கள் எதிரிகளால் சின்னாபின்னப்பட்டுப் போவதைக் கூட அவளால் தன் சுய நல உணர்ச்சிக்கு முன்னால் சிந்திக்கத் தகுதியற்ற ஒரு விலங்கு. அவளை நீங்கள் ஏன் கதையின் நாயகியாக்கி தாலியைப் போலி என்று காட்ட முனைந்தீர்கள்.

ஒன்று மட்டும் புரிகிறது உங்களால் அந்தச் சூழலில் கற்பனையாக வேணும் வாழ்ந்து கதையை எழுத முடியவில்லை. உங்களின் எண்ண ஓட்டத்தில் ஒரு பெண் தான் விரும்பியபடிக்கு எப்போதும் ஆடவர்களை மாற்றிக் கொண்டு தனது சுய லாபத்துக்காக தனது நிரந்தரமற்ற ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக வாழ்ந்து முடிக்கலாம் என்பது. அந்த வகையில் தாலி என்பது வேலியாக முடியாது என்பதுதான்.

தாலி வேலியல்ல. தாலியைப் போட்டுக் கொண்டு எல்லாக் குற்றங்களையும் செய்யலாம். அதேபோல் தாலியைப் போட்டுக் கொண்டு பெண் தன்னை தனது ஆளுமைகளை தன்னையும் தான் சார்ந்தவனையும் மதித்து வளர்த்துக் கொண்டு வாழலாம்.

அந்தப் பெண் வீரத்துக்கு ஆசைப்பட்டதால் எதிரி வீரனுடன் ஓடினாள் என்று கூறும் நீங்கள் அவளுக்கு தன் ஆசை தன் தேசத்தை மக்களை ஆடவரை இம்சிக்கும் என்று சிந்திக்க முடியவில்லை எனும் போது அவளை சேதத்தின் பிரஜையாகக் காட்ட முடியாது. கருணா போன்றவள் அவள். கருணா பதிவிக்கு ஆசைப்பட்டான். கொண்ட தலைவனையே விட்டு ஓடினான். அப்போ கருணாவின் ஆசையிலும் நியாயம் இருக்கிறது என்றால் உங்களால் தலையாட்ட முடியுமா? அப்படிப்பட்ட பெண்ணுக்கு தனதுச் சுயநல ஆசையை நிலைநாட்டியதுக்கு ஒரு வீர வரலாறு. அதிலும் சிந்தனையைத் தூண்டும் கதை என்று அடைமொழிகள் வேறு. சமூகத்துக்கு அவளை உதாரணமாக்குகிறீர்களே எதிரிக்கு கூலி செய்ய ஆசைப்படும் பெண்களை தமிழீழ அன்னை கூட பிணமாத்தான் உள்வாங்க நினைக்கிறாள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

வீரத்துக்கு அறிவுக்கு அன்புக்கு ஒழுக்கம் உயிர் போன்றது. ஒழுக்கம் எவ்வளவு உயர்வானது என்பதை வள்ளுவனே உணர்ந்து சொல்லிவிட்டான். காலத்தைச் சூழலை கோலத்தைக் கண்டு தனது மன ஆசையை அடக்க முடியாத பெண் அது ஆணாக்கூட இருக்கலாம் நிச்சயம் தவறான முடிவுகளை எடுப்பதை நியாயப்படுத்தி தாலிக்கு மலினத்தை ஏற்படுத்த நீங்கள் நினைக்கலாம். ஆனால் தாலி மலினப்படுகிறதோ இல்லையோ சமூகம் இப்படியான கருத்தியல் நச்சு விதைகளால் வலுவிழந்து போகும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

ஒருவன் டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் திறமை இருந்தும் சந்தர்ப்பம் சூழல் அதற்குத் தடையாகி விடுகிறது. அதற்காக அவன் வாழ்வைத் தொலைத்தவன் என்றாகிவிடாது. அவனுக்கு முன்னாள் சாதிக்கப் பலது காத்திருக்கிறது. வீரன் இல்லை என்றாலும் அவனிடம் துணிவு இருக்கிறது. அதை வீரமாக்க வேண்டியவள் அதற்குத் தகுதியற்று அந்நியனிடம் அடைக்கலம் புகுபவளை சமூகத்துக்குள் கொண்டு வராதீர்கள். அது துரோகிகளின் செயற்பாட்டுக்கு நியாயம் கற்பிப்பதாகவே முடியும். :idea:

நெடுக்கால போவான்! உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

தாலி என்பது இன்று எப்படி முக்கியத்தவம் மிக்கதாய், தவிர்க்க முடியாததாய், புனிதமானதாய், பெருமை மிக்கதாய் பார்க்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் இந்த முக்கியத்தவம் வந்ததற்கான காரணமாக "நான் அறிந்த வரலாறு" பெருமைப்படும் வகையில் இல்லை.

ஆகவே இதை முகத்தில் அறைவது போன்று சொல்ல விரும்பினேன். அதை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

ஒரு குறுங்கதைக்கு நீங்கள் எழுதிய நீளமான கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றன.

உங்களுடைய கருத்துக்கள் எனக்கு முற்று முழுதாக ஏற்புடையன இல்லை என்றாலும், சில கருத்துக்கள் (தாலி வேண்டாம், வாளோடு பயிற்சியும் தா) பிடித்திருந்தன.

ஆனால் எனக்கு சில கேள்விகள் உண்டு.

Posted

என்னுடைய கேள்வி!

நான் தீபாவளி பற்றி பேசிய பொழுது, விடுதலைப்புலிகளை உதாரணம் காட்டினேன். அதை நீங்கள் வன்மையாக கண்டித்தீர்கள். அவர்களை இதற்குள் இழுக்க வேண்டாம் என்றீர்கள்.

ஆனால் ஒரு குறுங்கதை பற்றிய உங்கள் கருத்தில் பெண் போராளிகளை உதாரணத்திற்கு இழுத்தீர்கள்.

சங்க கால முருகன் பற்றி பேசிய பொழுது என்ன ஆதாரம் என்றீர்கள். அறிவியல் ஆதாரம் வேண்டும் என்றீர்கள்.

இந்தக் குறங்கதையில் நீங்கள் புறநானு}று வீரம் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள். முலை அறுத்த பெண் பற்றி கூறுகிறீhகள். இவைகளை அன்றைய தமிழர்களின் வீரத்திற்கு "ஆதாரமாக" தருகிறீர்கள்.

நெடுக்காலபோவான்! ஏன் உங்களுக்குள் இத்தனை முரண்பாடுகள்????!!!!!!!!!!!

பெண் போராளிகள் கருணா போன்றவர்கள் நடைமுறை உதாரணங்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜங்கள். அதற்கும் தீபாவளிக்கு வழங்கப்படும் தர்க்க ரீதியான ஒப்பீடல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

போராளிகளை உதாரணமாகத்தான் அதுவும் மறைமுகமாகத்தான் முன்னிறுத்தி இருக்கிறோம். அவர்கள் வாழும் நிஜங்கள். நீங்கள் கற்பனை என்று பெண்களின் வீரத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவளின் ஆசைக்கு முன்னுரிமை அளித்து அவளை அதிரியுடன் ஓடவிட்ட போது நிகழ்கால வாழும் நிஜங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.

உங்கள் கற்பனையால் நீங்கள் எப்படி சில வற்றைச் சொல்ல வந்தீர்களோ அப்படித்தான் புறநானூறும் இதர இலக்கியங்களும் நிஜங்களோடு கற்பனையையும் கலந்து சமூகத்துக்கு மனிதனுக்குப் பயன்படக்கூடிய ஒழுக்கத்தை விதைக்கக் கூடிய வீரத்தை துணிவை அன்பை அறிவைப் பெருக்கக் கூடிய விடயத்தைச் சொல்லி இருக்கின்றன. நாங்கள் அவற்றில் மாற்றமின்றி அப்படியே தந்திருக்கின்றோம். ஆனால் நீங்கள் தீபாவளிக்குள் புத்திய திரிவுகளுக்கு சான்றுகள் இல்லாமல் அவற்றை எப்படி வரலாற்று மாற்றமாக ஏற்றுக் கொள்ள முடியும். நாம் புறநானூற்றை உதாரணமாக்கி உள்ளமே தவிர அதைச் சான்றாக்கவில்லை. வேறுபாட்டை உணர்வீர்கள் என்று நினைக்கின்றோம்.

தாலி வேண்டாம் வீரத்தை ஊட்டுகிறேன் வா என்று கணவனை அழைக்கும் பெண்ணாகக் காட்டி இருந்தால் கூட கதைக்கு கதையாக கவனிப்புக் கொடுத்திருக்கலாம்.

பகுத்தறிவு என்பது விலங்கு நடத்தைக்கான வழியல்ல. விலங்கிலின்றும் மனிதன் மாறுப்பட்டு தனது ஆளுமை திறன் சிந்தனைகளின் போக்கை விருத்தியை நோக்கி அலசி ஆராயும் நிலை. ஆசைக்கு அடிமையாவதற்கு பகுத்தறிவு அவசியமில்லை. வெறும் உடல் மனக் கிளர்ச்சி போதும்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தாலிபற்றி ஒரு புரட்சியே பண்ணியது போன்ற இந்த விவாதம் பொங்கிப் பாய்ந்து ஓய்ந்துள்ளது.

கதையை எழுதிய சபேசன் உங்களிடம் ஒரு கேள்வி.

நீங்கள் திருமணமானவரா ? அப்படியாயின் உங்கள் மனைவிக்கு தாலி கட்டினீர்களா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.