Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்:-
04 ஜனவரி 2015

மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்லைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்? என்பது குறித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்த அறிக்கை முழுமையாக:

    இலங்கையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பாரம்பரியமாக நீண்ட காலமாகவாழ்ந்துவரும் தமிழர்களுக்கு,சிங்கள மக்களுக்கு சமமாகஅனைத்து அரசியல் பொருளாதார உரிமைகளை பெற்று வாழும் உரிமை உண்டு. இது மறுக்கப்பட்டது மட்டும் அல்ல தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல இன ஒடுக்கு முறைகள் கடந்த காலத்தில் நடைபெற்றது. ஆனால் ஒடுக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக போராட்டங்கள் ஆயுதமுனையில் அடக்கப்பட்டதன் காரணமாக தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அப்போராட்ட முறைகளை பயங்கரவாதம் எனக் கூறி தமிழர் உரிமைகளை ஜனநாயக வழியில் கொடுப்பதற்கு புலிகள் தடையாக இருப்பதாக அரசு கூறியது. புலிகளை அழித்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பதவியில் இருந்துவரும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் தமிழருக்கான அரசியல் உரிமை வழங்குவதில் தடையாக எந்தப் பயங்கரவாதமும் இல்லாத போதும்,யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும்,அரசியல் தீர்வுக்கான எந்த ஓர் முயற்சியும் எடுக்கவில்லை. 

தமிழர் தரப்பு ஒன்று தற்போதைய ஜனாதிபதியுடன் மிக இறுக்கமான உறவை கொண்டிருந்தது. எனவே அரசின் தமிழ் தோழமைக் கட்சிகளுடன் இணைந்தாவது இந்த நாட்டில் தமிழர்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு இலங்கை தீவில் நிரந்தரமான அமைதி ஏற்பட எந்;தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு தமிழ் கூட்டமைப்பு பங்குபற்றவில்லைஎன்பது எல்லாம் நொண்டிச் சாட்டாகும்.கூட்டமைப்பு ஏற்க்கனவே பங்கு பற்றி கால இழுத்தடிப்பால் விலகிக் கொண்டது. 

    இப்படிப்பட்ட அணைத்து அதிகாரங்களையும் பாராளுமன்ற நிறைவேற்று அதிகாரத்தையும் கொண்டிருந்த ஜனாதிபதியாலேயே தமிழர் பிரச்சினைக்கு கடந்த இரண்டு பதவிக்காலத்திலும் தீர்வு காணப்படவில்லையாயின் எதிர்காலத்தில் மீண்டும் பதவி ஏறினாலும்அவர் எதுவுமே செய்யமாட்டார் என்பது வெளிப்படையாகின்றது. 

தமிழருக்கு கிடைத்த உரிமைகளையும் பறித்த ஜனாதிபதி
    2009 மே இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளுக்கு இதுவரையில் நியாயமான முறையில் நீதி விசாரணை  எதுவும் நடத்தப்படாமை.

    புலிகளின் முக்கியமான தலைவர்கள் எந்தவித தண்டனைகளும் பெறாமல் சுதந்திரமாக வலம்வரும்போது நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்திருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எதுவித நடடிவடிக்கையும்  மேற்கொள்ளப்படாமை. 

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு பல்கலைக்கழக சமூகம் மற்றும் தமிழ் கூட்டமைப்பு சிபார்சு செய்த உறுபபினர்கள் எவரையும் கவனத்தில் கொள்ளாது 14 உறுப்பினர்களையும் ஒரு அரச சார்பாக கட்சி சார்பில் நிமித்து தமிழர்களின் உயர்கல்வியையும் கலாசார விழுமியங்களை அழித்தமை. இதுபற்றி அரசுடன் கலந்துரையாடுவதற்கு கூட வாய்ப்பு கொடுக்காமை. 14 இல்  குறைந்தது ஒன்றையாவது தமிழ் மக்களின் பாரிய ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பு சார்பாக நியமிக்காத அரசிடம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாது.


    13வது திருத்தத்தில் வடக்கு கிழக்கு இணைந்து இருந்தது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருந்தது. இது தற்போதைய ஜனாதிபதியின் காலத்தில் பிரிக்கப்பட்டது. 

    வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்று ஒருவருடகாலம் முடிவடைந்த நிலையில்,மாகாணசபையை தடைகளை இட்டு தடுத்தமை. உதாரணமாக இராணுவ பின்புல அளுநரை மாற்றுவதாக உத்தரவாதம் கொடுத்து மாற்றாமை. பிரதாம செயலாளரை முதலமைச்சரின் விருப்பிற்கு ஏற்ப மாற்றாமை. முதலைமைச்சர் நிதியத்தை தடுத்தமை. 


    யுத்தம் முடிவடைந்து 5 வருடம் நீங்கியும் ஏறத்தாழ 28000 அதிகமானவர்கள் சொந்த காணிகளில் குடியேற்றப்படாமை.

    யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கும் மற்றும் கிழக்கு என விசேட அபிவிருத்தித் திட்டம் சலுகைகள் எதுவும் இடம்பெறாமை.


    உள்ளக குடியேற்றங்கள் மற்றும் இராணுவத்துக்கு காணிகளை எடுத்தல் அரச ஆதரவுடன் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இடம்பெறுகின்றமை.

    தமிழ்மொழிக்கு தமிழ் பிரதேசத்தில் கூட சமஅந்தஸ்து இல்லாமையும் சிங்கள மொழி மற்றும் பௌத்த மதத்தின் விஸ்தரிப்பும்.


    தமிழ் மக்கள் தொழில் செய்ய முடியாத வகையில் கடல்வளம் பிற பிரதேச மக்களாலும் பிறநாடுகளினாலும் எடுத்துச் செல்லப்படுதல்.

    அபிவிருத்தி திட்டங்களில் பிரதேச வளங்களை பயன்படுத்தாது பிரதேச மக்களின் வருமானத்தை குன்றச் செய்தல். 

    வடக்கு - கிழக்கு மக்களின் தொழில்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமை.

தற்போதைய ஜனாதிபதியால் தேசியஅபிவிருத்தி அடைகின்றதா?

    கல்விக்கு 1970 களில் புனுP இல் 5-6வீதம் ஒதுக்கப்பட்டது. தற்போது இது 1.7 - 2.5 இடைப்பட்ட வீதத்தில் இருக்கின்றது. இது கல்வி அபிவிருத்தியா?

    பொருளாதார புள்ளிவிபரங்கள் யதார்த்துடன் ஒத்து இருக்கவில்லை. பணவீக்கம் குறைவடந்துள்ளது என அரசின் புள்ளிவிபரம் கூறுகின்றது. ஆனால் பொருட்கள் சேவைகளின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. 2005 இல் 12 வீதமாக இருந்த பணவீக்கம் தற்ப்போது 6 வீதமாம். ஆனால் 2005 இல் ரூ72 விற்ற பெற்றேல் தற்ப்போது ரூ 150 ஆகும்.வறிய மற்றும் இடைத்தர மக்களின் குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்தும் மண்ணெண்ணையின் விலை 2005 இல் ரூ 28.5 ஆகும். இது 2013 இல் ரூ 106 ஆகும். இலங்கையில் எரிபொருள்களின் விலை உயர்வு ஏனைய பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

    அரசியல் வாதிகளுக்கும் ஒப்பந்தகாரர்களுக்கும் அதிக நன்மையை கொடுக்கும் கார்பெற் வீதியும் நவீன துறைமுகமும் மட்டும் அபிவிருத்தி அல்ல. இவைகளால் சாதாரண மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது?

    பல்கலைக்கழக நிர்வாகத்தில் முன்னரை விட அரசியல்தலையீடுகள் அதிகரித்துள்ளன.

    வேலைவாய்ப்பில் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நேர்முகப்பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நியமனங்களை அரசியல்மயமாக்குதல்.

    இலங்கைக்கு சொந்தமான மக்களின் உரிமைகளை அடக்கி இலங்கை மக்கள் அனைவரையும் வெளிநாட்டு சக்திகளின்ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல்.

    சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி இல்லாமை.

    குடும்ப ஆட்சியை தவறாக பயன்படுத்தல்.

புதிய தலைவர்சிறந்தவரா?

    கடந்த காலத்தில் வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் எதுவும்செய்யாத தலைவர்களைவிட வெளிப்படையாக எதுவும் கூறாத புதிய தலைவர்,என்ன செய்யப் போகின்றார் என்ற கேள்வி எம்மக்கள் பலரிடம் இருக்கின்றது.

கடந்த 15 ஆண்டுகளாக எதுவும் செய்யாது அடக்கு முறையை அதிகரித்து தமிழ் மக்கள் மூச்சுக் கூட விட முடியாது அவர்களை அடக்கிய தலைவரை விட புதிய தலைவர் ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களுடன் சேர்ந்து ஆட்சியில் பங்குகொண்டு, புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி, எமது உரிமைகளை புதிய வழியில் பெற ஏன் முயற்சிக்க கூடாது. உரிமைகளை பெற்றோமோ, இல்லையோ, அழிவடைந்து கொண்டு இருக்கும் எங்கள் இனத்தை அழிவின் விழிம்பில் இருந்து நிலைமையை மோசமாக செல்லவிடாது தடுப்பதற்கு புதிய ஒருவருடன் நாம் ஏன் கூட்டு சேரக் கூடாது.

புதிய தலைவர் மைத்திரியானால் இலங்கைத்தீவில் சிறுபான்மை மக்களுக்கு பெரியளவில் நன்மை சேராவிட்டாலும்,சிறுபாண்மையினரை அழிக்க முற்படும் பேரினவாதத்தில் இருந்து அழிப்பின் வேகத்தை ஓரளவுக்காவதுகட்டுப்படுத்தி அடுத்த நகர்வுக்கான தளத்தை அமைப்பதற்க்கு ஆட்சிமாற்றம் அவசியமாகும்.

பலமுறை வாக்களித்து, வாக்களிக்காது விட்டு ஏமாந்து அடிமைப்பட்டுப்போன தமிழினம் ஏற்க்கனவே ஏமாற்றியவர்ருக்கு வாக்ளிக்காமல் புதியவர் ஒருவரை தெரிவு செய்ய ஒன்றிணையுமாறும் தவறாது வாக்களிக்குமாறும் யாழ்ப்பான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எமது மக்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றது.

தமிழ்ப் புத்திஜீவிகள், மாணவர்கள் மற்றும் பொதுநலன் விரும்பிகள் இம்மாற்றத்திற்கு கடுமையாக உழைக்குமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

........................................................................................
அ.இராசகுமாரன்
சமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சார்பாக,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்.
03.01.2015

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115127/language/ta-IN/article.aspx

கூட்டமைப்பு மைதிரியிடம் காசு வாங்கித்தான் ஆதரரித்ததாக இங்கே யாரோ சிலர் சொன்னார்கள் அப்படியாயின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கும் பணம் குடுத்திருப்பர்களா? 

 

சரிவர ஆராயாமல் குற்றம் சுமத்துவது தேவையில்லாத குழப்பத்தையே உண்டுபண்ணும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மைதிரியிடம் காசு வாங்கித்தான் ஆதரரித்ததாக இங்கே யாரோ சிலர் சொன்னார்கள் அப்படியாயின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கும் பணம் குடுத்திருப்பர்களா? 

 

சரிவர ஆராயாமல் குற்றம் சுமத்துவது தேவையில்லாத குழப்பத்தையே உண்டுபண்ணும்.

 

//இதனிடையே மாவட்டமொன்றிற்கு தலா மூன்று மில்லியன் ரூபாவென கூட்டமைப்பிற்கென பிரச்சாரத்திற்கென ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட கொடுப்பனவுகள் பிரச்சார வேகத்தை முன்னிறுத்தி வழங்க்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

 

வந்த காசை.... வேண்டாம் என்று, கூட்டமைப்பு சொல்லி விட்டதா? :D

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/151478-கூட்டமைப்பு-பிரச்சாரத்திற்கு/

//இதனிடையே மாவட்டமொன்றிற்கு தலா மூன்று மில்லியன் ரூபாவென கூட்டமைப்பிற்கென பிரச்சாரத்திற்கென ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட கொடுப்பனவுகள் பிரச்சார வேகத்தை முன்னிறுத்தி வழங்க்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

 

வந்த காசை.... வேண்டாம் என்று, கூட்டமைப்பு சொல்லி விட்டதா? :D

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/151478-கூட்டமைப்பு-பிரச்சாரத்திற்கு/

 

செய்திக்கும் வதந்திக்கும் வித்தியாசம் தெரியாட்டில் நாங்கள் என்ன செய்ய?

 

மேலே மூன்று மில்லியன் ரூபா ஒன்றும் இலஞ்சமாக கொடுக்கப்படவில்லை, அண்ணல் இதுக்கு முதல் சம்பந்தர் மைத்திரி கூட்டத்திடம் பணம் வாங்கியதாக வந்த செய்தியை சொனேன். 

 

இந்த மூன்று மில்லியன் பகிரங்கமாக கொடுக்கபட்டால் தேர்தல் திணைக்களத்தினால் கண்காணிக்க முடியும் அனால் இலஞ்சம் அப்படி இல்லை.

 

அந்த மூன்று மில்லியன் வாங்கினதும் நல்லதுதான், மைத்திரிக்கு தமிழர் எதுக்கு சொந்தக்காசை செலவழிக்கவேண்டும்?

 

 

முதல்ல இறுதிக்கட போராட்டத்துக்கு எண்டு புலத்தில வேண்டின காசுக்கு கணக்கை கேளுங்கோ அதுக்கு பிறகு உந்த மூன்று மில்லியனை பற்றி கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திக்கும் வதந்திக்கும் வித்தியாசம் தெரியாட்டில் நாங்கள் என்ன செய்ய?

 

மேலே மூன்று மில்லியன் ரூபா ஒன்றும் இலஞ்சமாக கொடுக்கப்படவில்லை, அண்ணல் இதுக்கு முதல் சம்பந்தர் மைத்திரி கூட்டத்திடம் பணம் வாங்கியதாக வந்த செய்தியை சொனேன். 

 

இந்த மூன்று மில்லியன் பகிரங்கமாக கொடுக்கபட்டால் தேர்தல் திணைக்களத்தினால் கண்காணிக்க முடியும் அனால் இலஞ்சம் அப்படி இல்லை.

 

அந்த மூன்று மில்லியன் வாங்கினதும் நல்லதுதான், மைத்திரிக்கு தமிழர் எதுக்கு சொந்தக்காசை செலவழிக்கவேண்டும்?

 

 

முதல்ல இறுதிக்கட போராட்டத்துக்கு எண்டு புலத்தில வேண்டின காசுக்கு கணக்கை கேளுங்கோ அதுக்கு பிறகு உந்த மூன்று மில்லியனை பற்றி கேட்கலாம்.

 

இலஞ்சம் என்பதைத்தான் நாகரிகமாக...... அன்பளிப்பு, பிரச்சாரச் செலவு என்று நாகரீகமாக அழைப்பார்கள்.

அது, உங்களுக்கு தெரியாதது, ஆச்சரியம். :D

Eஎனக்கு தெரியாததை தெளிபு படுத்தியமைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு லோக்கல் பொலிரிக்ஸ் பெரிய பிரச்சனை. எல்லா இடமும் டக்கிளஸ் மயம் ஆக விட்டிட்டு.. இப்ப ஆட்சிய மாத்துன்னு அறிக்கை விடுகினம்.

 

இவை 1997/98 களில் விட்ட மனித உரிமை அறிக்கைகளையும் மக்கள் அவ்வளவு இலகுவாக மறந்திருக்கமாட்டார்கள்.

 

இராணுவம் டாக்கிகளால் சகட்டு மேனிக்கு வீடுகளை உடைக்க புலிகள் குண்டு வைத்து உடைக்கிறார்கள் என்று பச்சப் பொய் அளந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் முன்னொரு காலத்தில்.. இந்த ஆசிரியர் சங்கம் உள்வாங்கி வைச்சிருந்தது.

 

இவைட உள்ளக அரசியலுக்காக மக்களை தாறுமாறாக வழிநடத்தனும் என்ற அவசியம் கிடையாது.

 

தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்கனுன்னு அவசியம் இல்ல. ஏன்னா.. யாருமே தமிழ் மக்கள் விரும்பியதை வழங்க முன்வரேல்ல. தமிழ் மக்கள் விரும்பியதை கொடுக்க முன்வாறவைக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதும்.. அவர்களை தெரிவு செய்வதும்.. வேட்பாளர்.. வாக்காளர் பிரச்சனையே தவிர.. இவை எல்லாம் யார் 3ம் தரப்பு மக்களுக்கு யாருக்கு வாக்குப் போடன்னு சொல்ல..???!

 

இதெல்லாம்.. ஜனநாயகம்.. மனித உரிமை..????! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது அரசியல் மாற்றம் அல்ல.. அரசு மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி போன்ற தற்கொலை அரசியல் வாதிகளையும், சிவாஜி கஜன் கம்பேனி போன்ற காமெடிப் பீசுகளையும், நெடியவன் போன்ற புலிகளின் பணத்தை பதுக்கிய யாவாரிகளையும், புலத்தில் இருந்து சொகுசாக மற்றவரின் பிள்ளைகளை சாககொடுத்து நாடுகாணலாம் எனும் பச்சை சுயநலமிகளையும் விட்டு விட்டுப் பார்த்தால் - தமிழ் சமூகமும் அதன் கல்விசார் அமைப்பும் சரியான வழியிலே நடக்கிறது என்பது ஆறுதலான விடயம்.

மனித உரிமை பற்றி அறிக்கை விடுவது வேறு அமைப்பு, இது வேறு அமைப்பு. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடக்குது நம்ம அரசியல் வியாக்கியானம்.

சப்பியதை துப்ப அரசியல் ஒன்றும் ஏஎல் பயோ சப்ஜெக்ட் அல்ல

அனந்தி போன்ற தற்கொலை அரசியல் வாதிகளையும், சிவாஜி கஜன் கம்பேனி போன்ற காமெடிப் பீசுகளையும், நெடியவன் போன்ற புலிகளின் பணத்தை பதுக்கிய யாவாரிகளையும், புலத்தில் இருந்து சொகுசாக மற்றவரின் பிள்ளைகளை சாககொடுத்து நாடுகாணலாம் எனும் பச்சை சுயநலமிகளையும் விட்டு விட்டுப் பார்த்தால் - தமிழ் சமூகமும் அதன் கல்விசார் அமைப்பும் சரியான வழியிலே நடக்கிறது என்பது ஆறுதலான விடயம்.

மனித உரிமை பற்றி அறிக்கை விடுவது வேறு அமைப்பு, இது வேறு அமைப்பு. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடக்குது நம்ம அரசியல் வியாக்கியானம்.

சப்பியதை துப்ப அரசியல் ஒன்றும் ஏஎல் பயோ சப்ஜெக்ட் அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தெனாலி. நமது மக்கள் வெகு சுழியர். ஒரே தேர்தலில் அனந்தியையும் சித்தரையும் வெல்ல வைத்த அதே சமயம் - சங்கரியின் கட்டுக்காசையும் பறித்தார்கள்.

நாட்டில மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு, புலிகளை வரலாறாக்கி, புதியதொரு யதார்த்த, தற்காப்பு அரசியலுக்கு எப்போதோ போய்விட்டார்கள். சம்பந்தர்ரும் சகாக்களும் அதற்கான சரியான தலைமையை கொடுக்கிறார்கள்.

புலத்தில் சில யாவாரிகள்தான் மாரித்தவக்கை போல கத்தீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்சம் என்பதைத்தான் நாகரிகமாக...... அன்பளிப்பு, பிரச்சாரச் செலவு என்று நாகரீகமாக அழைப்பார்கள்.

அது, உங்களுக்கு தெரியாதது, ஆச்சரியம். :D

உங்களுக்கு வரும் சம்பளமும் லஞ்சம் தானோ?

 

பிரச்சாரத்துக்கு செலவுகள் இல்லை என்று நீங்கள் நினைப்பது உண்மையானால், நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கற்றறிந்தவர்களுக்கு ஒரு உதாரணமானால், எமது மக்களிடம், உள்ள அறியாமை அபரிதமானது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை,

மகிந்த ஒரு எம்பிக்கு 700 மில்லியன் கொடுக்கிறராராம் - அதுவும் வெளிநாட்டில் வச்சு டொலராக.

இந்த கூட்டமைப்பு விசுகோத்துகளுக்கு கணக்குத்தெரியாது போல. வடக்கில் இருப்பது 2 தேர்தல் மாவட்டம், கிழக்கில் 3. மொத்தம் 5x3=15 மில்லியனுக்கு போய் மைத்திரிக்கு சப்போர்ட் பண்ணீனம் :)

15 மில்லியன் என்பது ஒரு BMW 5 சீரிஸ் புதுக்காரின் கொழும்பு விலை. இவ்வளவு சீப்பா போயிட்டே தமிழ் அரசியல் :)

  • கருத்துக்கள உறவுகள்

கோச்சான் அண்ணே.. நீங்க அரிவரியில இருந்து தமிழ் படிச்சிட்டு யாழுக்கு வாங்க. உங்களுக்கு எழுதிறதை வாசிச்சு விளங்கிற அளவுக்கு தமிழ் அறிவு பத்தாதாது. இதில அரசியல் அரைவேக்காட்டு அவியல் வேற. :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.