Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி வெற்றிபெற்றால் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கும்: விக்கிரமபாகு கருணாரட்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

W_K.jpg

பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தும், சம உரிமையும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

எனவே, தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்துக்காக பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டும் இவர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதை வழங்க தற்போதைய அரசும் முன்வரவில்லை.

மறுபுறத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டு வரும் முஸ்லிம்களை சீண்டிப்பார்க்கும் பொது பல சேனா அமைப்பையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதனால், சிறுபான்மையினத்தவர்கள் பெரும் துன்பத்தின் மத்திலேயே தமது காலத்தை கடத்திக்கொண்டு வருகின்றார்கள்.

இந்நிலைமை முழுவதுமாக மாற்றமடைய வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அதற்கு, புதிய அரசு ஒன்று உதயமாக வேண்டும். ஆகவே, தமிழர்கள் அனைவரும் மாற்றம் ஒன்றுக்காக ஒன்றுபடவேண்டும். எம்மைப் பொறுத்தவரை பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பீடம் ஏறினால் நிச்சயமாக தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்றே நம்புகிறோம்.

அத்தோடு, வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவம் அகற்றப்படும் என்பதோடு, பொது பல சேனாவின் செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். ஏனெனில், பொது எதிரணியில் இணைந்துள்ளவர்கள் அனைவரும் ஜனநாயக விரும்பிகளே. தாம் வகித்த முக்கியப் பொறுப்புக்களை துறந்து மக்களுக்காக ஒன்றிணைந்துள்ள இவர்களிடம் நிச்சமாக மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்.” என்றுள்ளார்.

http://4tamilmedia.com/newses/srilanka/28271-2015-01-04-04-47-01

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் தமிழர்களின் பக்க நியாயத்தை எந்த எதிர்பார்ப்பும் இன்றி, உயிராபத்துக்கு மத்தியில் தெற்க்கில் எடுத்தியம்ப்பும் ஒருவர் விக்ரமபாகு. நிச்சயமாக இது நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய குரல்.

கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் மைத்திரி பற்றிச் சொல்வதை விட கலாநிதி விக்ரமபாகுவின் வார்த்தை நம்பிக்கையைத் தருகிறது. இவர் கருத்து வட கிழக்கை அடைய வேண்டும்.

• ஜனநாயகவிரோத, இனவாத, மகிந்தவின் குடும்ப அரசாங்கத்தினை நிராகரிப்போம்!

நேற்று (03.01.2015) லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் சிறீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 7.30 மணிவரை நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் , மற்றும் பிரமுகர்கள் பலர் உரையாற்றினார்கள். அனைவரும் ஜனநாயக விரோத, இனவாத, மகிந்தவின் குடும்ப அரசாங்கத்தினை நிராகரிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என மூவின மக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் முன்னனி சோசலிச கட்சி சார்பில் சேனக்க என்ற சிங்கள இனத்தை சேர்ந்த சகோதரர் உரையாற்றினார். அவர் தமது உரையில் மகிந்தவோ அல்லது மகிந்தவிற்கு பதிலாக மைத்திரியோ வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன் தமிழர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகளும் தீர்வுகாண்பதற்கு அமைப்பு மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒன்றினைந்து உழைப்போம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

இந்த தேர்தல் மூலம் மகிந்தவை விரட்டவேண்டும் என்று அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்ததோடு தேர்தலுக்கு பின்னரும் மூவின மக்களும் ஜக்கியப்பட்டு உரிமைகளை வென்றெடுக்க புலம்பெயர்ந்தோர் தமது பங்களிப்புகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டமை எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

(from face book) https://www.facebook.com/balan.tholar?fref=nf

 

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்புச் சட்டைக்காரர்கள் சந்திரிக்கா 1995 இல் வந்த போதும் இப்படித்தான் எதிர்பார்ப்பை வெளியிட்டார்கள். கடைசியில் நடந்தது என்னவோ..??!

 

சிவப்புச் சட்டைக்காரர்கள் மட்டுமல்ல.. சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்ப்பதும் அந்த சம உரிமையை தான். ஆனால் அது கிடைக்குமா.. என்பது இன்னும் தொக்கு நிற்கிறது..??!

 

ஆட்சி மாற்றம் என்பதை எல்லா மக்களும் உணர்கிறார்கள். வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை... அத்தோடு தமது அபிலாசைகள் ஆக்கபூர்வமாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அதனை சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்தி வெற்றி பெற முனையும்.. சிங்கள பிரதான வேட்பாளர்கள் எப்படி.. தீர்பார்கள் என்ற ஐயம் நிறையவே உள்ளது.

 

விக்கிரமபாகு கருணா நாயக்கவும் மக்களைப் போலவே எதிர்பார்க்கிறார். நடத்திக் காட்டுவேன்னு.. ஒன்றும் சொல்லேல்ல. சொல்லவும் முடியாது. :):icon_idea:


எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில்.. சக்கடத்தாரும் ஏறி விழுந்தாராம் என்ற கதைக்கு மைத்திரி போகாட்டி சரி. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் தமிழர்களின் பக்க நியாயத்தை எந்த எதிர்பார்ப்பும் இன்றி, உயிராபத்துக்கு மத்தியில் தெற்க்கில் எடுத்தியம்ப்பும் ஒருவர் விக்ரமபாகு. நிச்சயமாக இது நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய குரல்.

இவர் உண்மையானவர்தான்.
இவர் மீது எல்லா தமிழருக்கும் மதிப்பு உண்டு.
 
ஆனால் மைத்திரி மீது இவர் வைக்கும் நம்பிக்கைக்கு எப்படி உத்தரவாதம் கொடுப்பது?
மைத்திரி ஒன்றும் கைப்பாவை அல்லவே கொளுத்த இனவாதிகள்தான் சந்திரிகா ரணில் மைத்திரி எல்லோரும்.
 
அவர் தனது கனவை .... அருகில் காண்கிறார் என்று நினைக்கிறேன் அவளவுதான்.
  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரமபாகு கருணாரட்னாவுக்கும் சிங்கள தலைவர்கள் பற்றி அதிகம் தெரியாது போலுள்ளது.சிறிலங்கா வரலாற்றில் தமிழரின் நம்பிக்கையை வென்ற தலைவர் என்று ஒருவர் இல்லை. மைத்திரி விரும்பினால் கூட அவரை சூழ உள்ளவர்கள் இனவாதிகள் என்பதால் தமிழருக்கு உரிமைகள் கிடைப்பதை தடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.