Jump to content

கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!


Recommended Posts

" விதியே விதியே தமிழ்ச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? "

மேற்சொன்ன பாரதி பாடல் அடிகளுடன் கவிஞர் அம்பி எழுதிய ' உலகளாவிய தமிழர் என்ற சிந்தனைக்குரிய நூல் ஆரம்பிக்கிறது. ஈழத் தமிழர் வரலாற்றையும் கடந்த இரு தசாப்த காலங்களாக அவர்கள் உலகளாவிய ஈழத் தமிழர்களாகப் புதுக்கோலம் கொண்டதற்கான காரணங்களையும் கவிஞர் முதலில் ஆராய்கிறார். தொடர்ந்து அவர்களின் புலப் பெயர்வு,மாற்றம், புதிய சூழல், புதிய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றை அவர்கள் சமாளிக்கும் எத்தனிப்புகள் , புதிய வாழ்வு ,மாறிவரும் புறக்கோலங்கள் முதலிய விடயங்களைச் சமூகவியற் கண்ணோட்டங்களுடனும் உளவியற் பாங்குடனும் அணுகுகிறார்; ஆராய்கிறார்.

உலகளாவிய ரீதியில் தமிழர் மேற்கொள்ளும் சமய, கலாச்சார முயற்சிகள் சிலவற்றை கோடிட்டுக் காட்டும் கவிஞர் அம்பி,தமிழர் பேணிக்காக்கவேண்டிய தனித்துவ அடயாளங்களை வலியுறுத்தவும்,அன்னிய சூழலில் தமிழ் கற்பித்தலுக்கு ஏதுவான அனுபவ ரீதியிலான அறிவுரைகளை வழங்கவும் தவறவில்லை. கடைசியில் இந்து சமுத்திரத்து மொறிசியஸ் தீவில் வாழும் தமிழர் வாழ்வையும், தமிழ்மொழியின் நிலையையும் சுட்டிக்காட்டி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு அபாய அறிவிப்பையும் தருகிறார்.

இது சிந்தனைக்குரியது !

மொறிசியஸ் தீவில் உள்ள பதினொரு இலட்சம் குடிமக்களில் 75.000 பேர் தமிழ் மக்கள். 52 சதவீதம் இந்து மதத்தவர்கள் உள்ள அந்த நாட்டில் முஸ்லிம்கள் சீன-மொறிசியர்கள் நாட்டின் பூர்வீக குடிகள் என எல்லோரும் இன- மத- மொழி வேறுபாட்டால் பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

1730களில் இத்தீவை ஆண்ட பிரெஞ்சுக்காரர்,இந்தியாவில் தமது ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியிலிருந்து தமிழர்களை கட்டடக் கைத்தொழில் - நுண்கலைத் தொழிலாளராக அழைத்து வந்தனர். 1810 இல் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தொகையான தமிழ்ப் போராளிகளின் உதவியுடன் பிரித்தானியர் இத்தீவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்த

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

ஆளவந்தானும் கொஞ்சம் பாடம் படிச்சிருக்கிறார்.. கலாச்சாரம் எண்டால் என்னவெண்டு கேள்விகேட்டவர்.. கொண்டுவந்துபோடுற அளவுக்கு படிச்சிட்டார்.. கலாச்சாரம் பற்றி.. பாடம்

:) :P :D

Link to comment
Share on other sites

மதி கலாச்சாரமெண்டது என்ரை காதிலை கள்ளச்சாராயம் எண்டு விழுந்திட்டுது வந்து பாத்தா சாய்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதி கலாச்சாரமெண்டது என்ரை காதிலை கள்ளச்சாராயம் எண்டு விழுந்திட்டுது வந்து பாத்தா சாய்...

விட மாட்டியலே!

:roll: :idea: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதி கலாச்சாரமெண்டது என்ரை காதிலை கள்ளச்சாராயம் எண்டு விழுந்திட்டுது வந்து பாத்தா சாய்...

ஜயோ...! ஜயோ....! :D:D:lol:

Link to comment
Share on other sites

  • 1 year later...

முன்பு யாழில் வந்த இந்தக் கட்டுரையினை வாசிக்க இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லாத்தமிழர்களும் கட்டாயம் இக்கட்டுரையினை வாசிக்கவேண்டும். தாய் மொழி தமிழைச் சாவிலிருந்து காக்கவேண்டும்.சென்னையில் ஆங்கில மொழியில் கல்விகற்கும் தமிழர்கள் சிலர் 2வது மொழியாக இந்தியையும், சமஸ்கிருததினையும்,பிரேஞ்சின

Link to comment
Share on other sites

நல்ல தகவல். இணைப்புக்கு நன்றி ஆளவந்தான்.

Link to comment
Share on other sites

சிட்னி ஒபனில் உள்ள தமிழாழயத்தில் தென் அபிரிக்கா நாட்டினைச்சேர்ந்த தமிழனும், அவரது மகனும் தமிழ் படிக்கிறார்கள்.தகப்பன் தென்னாபிரிக்காவில் அவர் 3வது தலைமுறையாக இருந்தார்.தமிழ் தெரியாது. தாய் மொழிமீது காதல் கொண்டு தமிழ் படிக்கிறார். ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்கல்வி நிலையங்கள் நிறுவி தமிழினைக் கற்பிக்கிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் மீது ஆர்வம் உண்டாவெனில் அவுஸ்திரேலியாவில் விரல் விட்டே எண்ணக்கூடியதாக இருக்கிறது. பிள்ளைகளும் பெற்றோர்களின் வற்புறுத்தலினால் தான் தமிழினைக் கற்கிறார்கள்.

மலேசியாவில் ஈழத்தமிழரினைவிட இந்தியாத்தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் தான் தமிழ்மீது ஆர்வம் கொண்டு கற்கிறார்கள். அவுஸ்திரேலியா,கனடா,பிரித்தான

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அரவிந்தா அடுத்ததலைமுறையை பற்றி கவலை படுகிரிர் இந்த தலைமுறையே கைவிட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தமிழ் மொழி வளர்ப்பதற்க்கு பலர் தயாராக இருக்கின்றனர். ஆனால் படிப்பதற்க்கு மாணவர்கள் பின் நிற்க்கின்றனர். என்பது வேதனையான விடையம். ஆனாலும் தமிழ மொழி பல்கலைக்கழகத்தில் கொண்டு வர தமிழ் அமைப்பக்களை விட மாணவர்களே அதிகம் பாடு பட்டனர். மொழிப்பற்று என்பது உணர்வு hPதியில் வரவேண்டியது. மற்றொருவர் சொல்வதன் மூலம் மொழிப்பற்று வருவதில்லை. அது நமக்குள் உருவாக வேண்டும். கட்டுக்கட்டாய் கட்டுரைகள் எழுதியோ, வரி வரியாய் கவிதை எழுதியோ இவற்றை சரி செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

UOFT ல் கற்பிக்கப்படவுள்ள தமிழ் மொழி வகுப்புக்கள் (NEW 213Y1 F - Introduction to Tamil &NEW 217H - Tamil Studies in South Asia and the Diaspora ) பற்றிய விபரம் இந்தத் தளத்திலுண்டு.

http://www.tamilstudies.org/courses.html

Link to comment
Share on other sites

நன்றிகள் நிதர்சன்,சினேகிதி. கனடாவில் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் கற்பிக்கப்படவுள்ளன என்பதினைக்கேட்கச் சந்தோசமாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவிலும் 12ம் வகுப்பில் சிலர் தமிழ் படிக்கிறார்கள். நீயூசவுத் வேல்ஸ் அரசாங்கம்(இங்கு தான் சிட்னி அமைந்துள்ளது) தமிழினைப் 12 வகுப்புப் பரிட்சையில் ஒரு பாடமாக அமைத்திருக்கிறது. ஐரோப்பாவில் தமிழ் நிலை பற்றி யாராவது பதியுங்கள்.

சிங்களவர், திட்டமிட்டு, தமிழ் மக்களின் நிலப்பரப்புகள், தமிழ் மொழியினை அழிக்கிறார்கள். சிங்களவரினையும் பார்க்க ஆரியர்களினால்தான் தமிழ் அதிகளவு அழிந்தது. தமிழ்னாட்டுத்தமிழர்களின் தொலைக்காட்சிகள் புலம் பெயர்ட்ந்த நாடுகளுக்குள் பரவியுள்ளது.அத்தொலைக்காட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் சொன்ன செய்தி ஒன்று. நண்பர் ஒஸ்ரேலியாவிலை உள்ள தமிழ் பாடசாலைக்கு(வென்.....) ஒன்றுக்குப்போனார். அங்கே ஒரு தமிழ் ஆசிரியர் பாடம் படிப்பித்தபின்பு, ஒருபிள்ளையினைப்பார்த்து வரப்போகிற கலைனிகழ்ச்சியில் அந்தப்பிள்ளை கலந்து கொள்வதுபற்றி ஆங்கிலத்தில் கேட்டார் என்று நண்பர் சொன்னார்.

அப்ப ஆசிரியரே ஆங்கிலத்தில் கேட்டால், பிள்ளை எப்படித்தமிழ் கதைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ வளக்கிறம் என்டு சொல்லி திரிறவையின்ட பிள்ளைகளும் தமிழ் சங்கங்கள் என்ட போர்ல தமிழ்ழ வளக்கிறம் என்டு சொல்லி திரிறவையின்ட பிள்ளையழுக்கும் தமிழ் தெரியாது..ஆனால் சொல்லிவினம் தாங்கள் தமிழ் வளர்க்க போயினம் என்டு கேட்க சிரிப்பா தான் இருக்கும்... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையளுக்கு தமிழ் பேச விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதுக்கு பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்? தந்தை மாடு மேச்சா பிள்ளையும் அதையே பண்ணனும். தமிழ் வளர்க்கிற சங்கங்கள் தமிழ் மேல பற்று உடையவயளுக்கு தான். தமிழ் பேசு என்டு பிள்ளையளுக்கு அடிச்சா தமிழ் பற்று வந்திடுமே? பிள்ளையளுக்கு அடிக்கிறது மனித உரிமை மீறல்! முதல்ல அதை கண்டியுங்கோ. தமிழ் மேல பிள்ளைகளுக்கு ஆசை வர வைக்க முடியும்.அதுக்கு மேல ஒன்டும் பெரிசா பண்னேலா என்டு நினைக்கிறன். பெரிசுவள் தமிழ்ழ கதைக்க அதுவள் கதச்சு பழகினா தான் உண்டு. மற்றும் படி அதுக்கு நேரம் ஒதுக்கி படிக்கிற அளவுக்கு இங்க பெடியளும் பெட்டயளும் இல்லை. தமிழை படிச்சு இங்க என்ன வேலை செய்யிற? நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன். தமிழ் பேசுற ஒரு நாட்டில தமிழ் வளக்கிறது நல்ல விசயம். அடுத்தவன்ர நாட்டில வந்து தமிழ் வளத்து என்ன பண்ணப்போறம்?முதல்ல பிள்ளையள் இருக்கிற நாட்டு மொழி படிச்சா தானே மேற்கொண்டு படிக்க முடியும்.அதிகமா பேசப்படுகிற சீன மொழிக்காரங்களும் இன்டைக்கு அவையின்ர நாட்டை விட்டு வந்தா இங்கிலிசில தான் பேசனும். அதுக்காக இங்கிலீச படிக்க சொல்லேலை. தமிழை வழக்கிறதுக்காக தமிழ் படிக்கிறது என்டது இங்க இருக்கிற இளைஞர்களுக்கு கடினமான விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்னய்யா எப்ப பாத்தாலும் பாரதியார் தமிழ் வளத்தார் காத்தார் என்டு கொண்டு இருக்கிறியள்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதும் கிடையாது எனடு யாருக்கு சொன்னவர்? அமெரிக்க காரனுக்கே?லண்டன் காரனுக்கே? தமிழை பற்றி தமிழனுக்கே சொல்லீட்டு போய்ட்டார். இது தமிழ் வளக்கிறதா? இதையே வெளிநாட்டுக்கானுக்கு சொல்லி இருந்தா அவனுக்கும் தமிழை பற்றி தெரிஞ்சிருக்கும். தமிழும் தன்னால வளந்திருக்கும். தமிழை வளக்கிறதுக்கே முதல்ல வேற மொழி தேவைப்படுது.

சத்தியராச் படத்தில வடிவேலோட இருக்கேக்க வடிவேல் சிறுநீர் கழிக்க போவதற்கு ரோய்லட் போறன் என்டு சொன்னார். அப்ப சத்தியராச் தமிழ்ழ சொல்லீட்டு போனா தான் விடுவன் என்டு சொன்னார். அதுக்கு வடிவேல் சொன்னார் அவசரமா போறதுக்கெல்லாம் தமிழ் வரணும் என்டு சொல்லி இப்ப எனக்கு வந்திரிச்சே. அதுக்கு கிந்தி தெரியுமா தமிழ் தெரியுமா. அதுவா வருது அதுவா போகுது. அதுக்குள்ள ஏன்டா மொழி வேறுபாட்ட காட்டுறீங்கள். கையோ கையோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையளுக்கு தமிழ் பேச விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதுக்கு பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்? தந்தை மாடு மேச்சா பிள்ளையும் அதையே பண்ணனும். தமிழ் வளர்க்கிற சங்கங்கள் தமிழ் மேல பற்று உடையவயளுக்கு தான். தமிழ் பேசு என்டு பிள்ளையளுக்கு அடிச்சா தமிழ் பற்று வந்திடுமே? பிள்ளையளுக்கு அடிக்கிறது மனித உரிமை மீறல்! முதல்ல அதை கண்டியுங்கோ. தமிழ் மேல பிள்ளைகளுக்கு ஆசை வர வைக்க முடியும்.அதுக்கு மேல ஒன்டும் பெரிசா பண்னேலா என்டு நினைக்கிறன். பெரிசுவள் தமிழ்ழ கதைக்க அதுவள் கதச்சு பழகினா தான் உண்டு. மற்றும் படி அதுக்கு நேரம் ஒதுக்கி படிக்கிற அளவுக்கு இங்க பெடியளும் பெட்டயளும் இல்லை. தமிழை படிச்சு இங்க என்ன வேலை செய்யிற? நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன். தமிழ் பேசுற ஒரு நாட்டில தமிழ் வளக்கிறது நல்ல விசயம். அடுத்தவன்ர நாட்டில வந்து தமிழ் வளத்து என்ன பண்ணப்போறம்?முதல்ல பிள்ளையள் இருக்கிற நாட்டு மொழி படிச்சா தானே மேற்கொண்டு படிக்க முடியும்.அதிகமா பேசப்படுகிற சீன மொழிக்காரங்களும் இன்டைக்கு அவையின்ர நாட்டை விட்டு வந்தா இங்கிலிசில தான் பேசனும். அதுக்காக இங்கிலீச படிக்க சொல்லேலை. தமிழை வழக்கிறதுக்காக தமிழ் படிக்கிறது என்டது இங்க இருக்கிற இளைஞர்களுக்கு கடினமான விடயம்.

நாரதர் அண்ணா வந்து பதில் தருவார்...

Link to comment
Share on other sites

தாய்மன் எழுதியது: "அதென்னய்யா எப்ப பாத்தாலும் பாரதியார் தமிழ் வளத்தார் காத்தார் என்டு கொண்டு இருக்கிறியள்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதும் கிடையாது எனடு யாருக்கு சொன்னவர்? அமெரிக்க காரனுக்கே?லண்டன் காரனுக்கே? தமிழை பற்றி தமிழனுக்கே சொல்லீட்டு போய்ட்டார். இது தமிழ் வளக்கிறதா? இதையே வெளிநாட்டுக்கானுக்கு சொல்லி இருந்தா அவனுக்கும் தமிழை பற்றி தெரிஞ்சிருக்கும். தமிழும் தன்னால வளந்திருக்கும். தமிழை வளக்கிறதுக்கே முதல்ல வேற மொழி தேவைப்படுது." :?

பாரதியார் சில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அதன் காரணமாகத் தான் தமிழ்மொழிபோல் இனிது என்று கூறியிருந்தார்.

"நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன்".

பாரதியார் சில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அதன் காரணமாகத் தான் தமிழ்மொழிபோல் இனிது என்று கூறியிருந்தார்.

ஐயா உங்களின் ஆதங்கம் புரிகிறது. தமிழில் முறையாகப் படித்திருந்தால் அந்த அறிவுடன் இங்கு கட்டாயம் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பீர்கள். :!:

சிலபேர் அதையே சாட்டாகச் சொல்லிக்கொண்டு தங்களது முயற்சி திறமை நம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு மூலையில் போட்டு விடுகின்றார்கள். நானும் எனது அண்ணாவும் தமிழில் தான் இலங்கையில் படித்தோம். நானாவது தரம் 9ல் கனடா வந்துவிட்டேன். அண்ணா உயர்தரம் படித்துக் குறையுடன் இங்கு வந்தார். இங்கு வந்து இரண்டு வருடம் ஆங்கிலத்தில் படித்து பல்கலைகழகத்திற்கு எடுபட்டு தற்பொழுது "PhD" பட்டத்திற்குப் படித்துக் கொண்டு இருக்கிறார். நானும் இங்து வந்து "high school"படித்துவிட்டு தற்பொழுது பல்கலைக்கழகத்தில் 2ம் வருட மாணவியாகவுள்ளேன்.

நல்ல நம்பிக்கை வேண்டும் முதலில். தமிழ்மொழியான என் தாய் மொழியில் ஆரம்பக்கல்வியைப் படித்தபடியால் இரண்டாம் மொழியான ஆங்கிலமும் சேர்ந்து ஒரு நல்ல தராதரத்தையடைய எங்களுக்கு உதவியது.

பெருந்தன்மையில் கூறவில்லை. உதாரணத்திற்குத் தான் என் குடும்பத்தையெடுத்து விளக்கினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மன் எழுதியது: "அதென்னய்யா எப்ப பாத்தாலும் பாரதியார் தமிழ் வளத்தார் காத்தார் என்டு கொண்டு இருக்கிறியள்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதும் கிடையாது எனடு யாருக்கு சொன்னவர்? அமெரிக்க காரனுக்கே?லண்டன் காரனுக்கே? தமிழை பற்றி தமிழனுக்கே சொல்லீட்டு போய்ட்டார். இது தமிழ் வளக்கிறதா? இதையே வெளிநாட்டுக்கானுக்கு சொல்லி இருந்தா அவனுக்கும் தமிழை பற்றி தெரிஞ்சிருக்கும். தமிழும் தன்னால வளந்திருக்கும். தமிழை வளக்கிறதுக்கே முதல்ல வேற மொழி தேவைப்படுது." :?

பாரதியார் சில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அதன் காரணமாகத் தான் தமிழ்மொழிபோல் இனிது என்று கூறியிருந்தார்.

"நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன்".

பாரதியார் சில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் அதன் காரணமாகத் தான் தமிழ்மொழிபோல் இனிது என்று கூறியிருந்தார்.

ஐயா உங்களின் ஆதங்கம் புரிகிறது. தமிழில் முறையாகப் படித்திருந்தால் அந்த அறிவுடன் இங்கு கட்டாயம் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பீர்கள். :!:

சிலபேர் அதையே சாட்டாகச் சொல்லிக்கொண்டு தங்களது முயற்சி திறமை நம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு மூலையில் போட்டு விடுகின்றார்கள். நானும் எனது அண்ணாவும் தமிழில் தான் இலங்கையில் படித்தோம். நானாவது தரம் 9ல் கனடா வந்துவிட்டேன். அண்ணா உயர்தரம் படித்துக் குறையுடன் இங்கு வந்தார். இங்கு வந்து இரண்டு வருடம் ஆங்கிலத்தில் படித்து பல்கலைகழகத்திற்கு எடுபட்டு தற்பொழுது "PhD" பட்டத்திற்குப் படித்துக் கொண்டு இருக்கிறார். நானும் இங்து வந்து "high school"படித்துவிட்டு தற்பொழுது பல்கலைக்கழகத்தில் 2ம் வருட மாணவியாகவுள்ளேன்.

நல்ல நம்பிக்கை வேண்டும் முதலில். தமிழ்மொழியான என் தாய் மொழியில் ஆரம்பக்கல்வியைப் படித்தபடியால் இரண்டாம் மொழியான ஆங்கிலமும் சேர்ந்து ஒரு நல்ல தராதரத்தையடைய எங்களுக்கு உதவியது.

பெருந்தன்மையில் கூறவில்லை. உதாரணத்திற்குத் தான் என் குடும்பத்தையெடுத்து விளக்கினேன்.

அப்பிடி போடுங்க அருவால.. :lol:

Link to comment
Share on other sites

பிள்ளையளுக்கு தமிழ் பேச விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதுக்கு பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்? தந்தை மாடு மேச்சா பிள்ளையும் அதையே பண்ணனும். தமிழ் வளர்க்கிற சங்கங்கள் தமிழ் மேல பற்று உடையவயளுக்கு தான். தமிழ் பேசு என்டு பிள்ளையளுக்கு அடிச்சா தமிழ் பற்று வந்திடுமே? பிள்ளையளுக்கு அடிக்கிறது மனித உரிமை மீறல்! முதல்ல அதை கண்டியுங்கோ. தமிழ் மேல பிள்ளைகளுக்கு ஆசை வர வைக்க முடியும்.அதுக்கு மேல ஒன்டும் பெரிசா பண்னேலா என்டு நினைக்கிறன். பெரிசுவள் தமிழ்ழ கதைக்க அதுவள் கதச்சு பழகினா தான் உண்டு. மற்றும் படி அதுக்கு நேரம் ஒதுக்கி படிக்கிற அளவுக்கு இங்க பெடியளும் பெட்டயளும் இல்லை. தமிழை படிச்சு இங்க என்ன வேலை செய்யிற? நானும் ஒரு காலத்தில தமிழ் மேல அக்கறை கொண்டிருந்தனான் தான். தமிழ் படிச்ச நேரம் இங்கத்தேயான் மொழி படிச்சிருந்தா இப்ப நான் பல்கலைகழகத்தில இருந்திருப்பன். தமிழ் பேசுற ஒரு நாட்டில தமிழ் வளக்கிறது நல்ல விசயம். அடுத்தவன்ர நாட்டில வந்து தமிழ் வளத்து என்ன பண்ணப்போறம்?முதல்ல பிள்ளையள் இருக்கிற நாட்டு மொழி படிச்சா தானே மேற்கொண்டு படிக்க முடியும்.அதிகமா பேசப்படுகிற சீன மொழிக்காரங்களும் இன்டைக்கு அவையின்ர நாட்டை விட்டு வந்தா இங்கிலிசில தான் பேசனும். அதுக்காக இங்கிலீச படிக்க சொல்லேலை. தமிழை வழக்கிறதுக்காக தமிழ் படிக்கிறது என்டது இங்க இருக்கிற இளைஞர்களுக்கு கடினமான விடயம்.

நீங்கள் இருக்கும் நாட்டின் மொழியினைப்படிக்கவேண்டாம் என்று யார் உங்களுக்குச் சொன்னது?. கட்டாயம் படிக்கவேண்டும். அம்மொழியினைப்படித்துக்கொண்

Link to comment
Share on other sites

புலத்தில் தமிழ் அடையாளம்!

By ரூபன்

Jan 1, 2003, 03:07

புலம் பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினர் தாய்நிலத்தின் எண்ணங்களோடும் உணர்வோடும் வாழ்கின்றார்களா? அல்லது புலச் சமூகத்தோடு ஒன்றி வாழ்கின்றார்களா? என்பது பலர் மனங்களில் எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது. அத்தோடு "இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளின் எதிர்காலம் இங்கேதான் நிச்சயிக்கப்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு தாயகம் பற்றிய சிந்தனை அவசியமற்றது" என்ற கருத்துடைய சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆகவே இப்படியான கேள்விகளுக்கு விடை காணும் நோக்குடன் தமிழ் அடையாளத்தின் தன்மைகள் அலசப்படவேண்டும். இளைய சந்ததியினர் மத்தியில் தமிழ் அடையாளம பற்றிய விரிவானதும் தெளிவானதுமான பார்வையை உருவாக்க வேண்டிய தேவையும் இன்றியமையாததாகின்றது.

ஓரு இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அந்த இனத்தின் மொழியும் அம்மொழி சார்ந்த பண்பாட்டு விழுமியங்களுமே. உலகத்தின் எந்த மூலையில் வாழ நேரும் போதும் இனத்தின் தனித்துவம் பேணப்படவேண்டும். நாம் வாழும் நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு. அதுவே அறிவுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பொருத்தமான செயலும் ஆகும். வாழுகின்ற சமூகம் பற்றிய தெளிவான அறிவை உள்வாங்குவதன் மூலமே எம்மை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனாலும் எமது இனத்துவ அடையாளங்களை நீங்கி "எப்படியும் வாழலாம்" என்ற முடிவுக்கு வருவோமாயின், நாகரிகமற்ற பண்பாடற்ற மனிதர்களாக, வாழ்வின் அர்த்தங்களை இழந்தவர்களாக வாழ நேரிடும்.

நோர்வேயில் வாழும் இளைய தமிழ்த் தலைமுறையினருக்கு இந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையின் பாதிப்புக்கள் இருப்பதற்குரிய வாய்ப்புக்கள் அதிகம். இருமொழிப் பண்பாட்டுக்குள் சிக்கித் தடுமாறித் தவிக்க வேண்டிய சூழ்நிலைகளும் நிறையவே உண்டு. இந்த மக்களிடமுள்ள நல்ல பண்புகளையும் சிந்தனைகளையும் வரவேற்று பின்பற்றுவதே அறிவுடமையாகும். ஆனால் நாம் எமது சுயத்தை இழந்து விடலாகாது. தமிழ் உணர்வை விட்டுவிடக் கூடாது. புலம்பெயர் நாடுகளில் வாழும் பலருக்கு தமது பிள்ளைகள் தமிழை கற்க வேண்டும், பேச வேண்டுமென்ற ஆர்வம் நிறையவுண்டு. பெற்றோர்களுடைய இந்த ஆர்வமும் எண்ணமும் பல சமயங்களில் பல்வேறு காரணங்களால் ஈடேறுவதில்லை. ஆனாலும் மற்றைய புலம்பெயர் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் நோர்வேயில் வாழும் தமிழ் மழலைகள் தமிழை தெளிவான உச்சரிப்போடு சரளமாகப் பேசுகின்றார்கள். இது மகிழ்ச்சிக்குரியதே. ஆனபோதும் இன்னும் பலர் தமது நண்பர்களுடனும் தம்மை ஒத்த வயதுடையவர்களுடனும் மிக அதிகமாக நோர்வேஜிய மொழியிலேயே உரையாடுகின்றார்கள் என்பது வேதனை நிறைந்த உண்மையாகும்.

இந்நிலை மாறவேண்டும். தமிழர் என்று சொல்வதையும் தமிழ்ப் பெயர் தாங்கி நிற்பதையும் பெருமையாகக் கொள்ளுகின்ற மனநிலை எல்லாத்தமிழ் இளைஞர்கள் நெஞ்சங்களிலும் உருவாக வேண்டும். எமது தாய் தேசத்தில் தமிழர்கள்

சொல்லில் அடங்காத துன்பங்ளுக்கும் அவலங்களுக்கும் முகம்கொடுத்தபடி வாழ்கின்றார்கள். போர்த்தீயில் தேசம் எரிந்த போதும் விடியல் வருமென்ற நம்பிக்கையோடு முன்னேறும் எமது உறவுகளின் உறுதி நிறைந்த வாழ்வு பற்றி அறிய வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்வின் வலிகளை இங்கு வாழும் இளைய சந்ததி உணர்ந்து கொள்ளவேண்டும்.

இன்று புலம்பெயர் மண்ணில் வாழும் முதல் தலைமுறையினர் தமிழீழத்தில் பிறந்தவர்கள். அவர்களுடைய வேர் தமிழீழ மண்ணிலிருந்து படர்ந்தது என்பதால் உள்ளத்தில் கலந்த இன உணர்வும் மொழி உணர்வும் அவர்களின் காலம் வரை நிலைத்திருக்கும் என்ற உத்தரவாதமுண்டு. ஆனால் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பொறுப்பை இங்கு பிறந்து வளர்பவர்களே கையேற்கப் போகின்றார்கள். அந்த கடமையை செழுமையாகச் செய்ய வல்ல ஆற்றலை அவர்கள் பெற்றிருக்க வேண்டுமல்லவா! அந்த வழிநடத்தலுக்குரிய நேர்த்தியான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு இளைய தலைமுறையினரின் பெற்றோருக்கும் உண்டென்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இங்கு பிறந்து வளர்ந்து வரும் தமிழ்ச்சந்ததிக்கும் தமிழீழத்திற்கும் இடையேயுள்ள தொப்புள்க்கொடி உறவு பலப்படுத்தப்படவேண்டும். தாயகம் நோக்கிய சிந்நனைகளும் செயற்பாடுகளும் வளரவேண்டும். தமிழர் வரலாறு, தமிழீழ விடுதலைப்போராட்ட நியாயங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை இங்குள்ள இளையவர்கள் பெற வேண்டும். நாளை மலரப்போகும் எங்கள் தாயகத்திற்கு அவர்கள் தமிழ்ப்பிள்ளைகளாகச் சென்று வரவேண்டுமென்ற எண்ணம் எல்லாப் பெற்றோர்களின் நெஞ்சங்களிலும் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.

ரூபன் சிவராஜா

http://www.yarl.com/m_pulam/article_91.shtml

Link to comment
Share on other sites

புலம்பெயர்வாழ்வில் எம் இளைய சமூகத்தின் கல்வி

By

Jan 6, 2003, 22:50

சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுக்கப்பட்டு, ஒரு அந்நியச்சூழலில், புலம்பெயர் நாடுகளில் தம் இருப்பை நிலை நாட்டும் எம் சமூகத்தின் ஏக்கமும் அக்கறையும் எம் வருங்காலத் தலைமுறை சார்ந்து இருப்பது உண்மை. குறிப்பாக கல்வித் தகைமையே பெருமளவில் எம் தலைமுறையின் எதிர்காலத்தை இப்புலம்பெயர் நாடுகளில் நிர்ணயிக்கப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் போர்ச் சூழலின் மத்தியில் கல்வி கற்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு, எம் மண்ணில் நாம் பாரம்பரியமாகக் காத்து வந்த கல்விச் சொத்தை எம் மாணவ சமூகம் இழந்து நிற்கும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் கல்விக்கான அனைத்து வசதிகளையும் கொண்டு வாழும் இளைய சமுகத்திற்கு, "தமிழன்" என்ற ரீதியில் சிறந்த கல்வியைப் பெற்று எம் தாய்நிலத்தின் நாளைய வரலாற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகக் கடமையுமுண்டு. இவற்றைக் கருத்திற் கொண்டு புலம்பெயர் வாழ்வில் எம் இளம் சமுதாயத்தின் கல்வி சம்பந்தமான சில கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

தாய்மொழிக்கல்வி

தமிழ்மொழிக் கல்வியின் அவசியம் சம்பந்தமாக புலம்பெயர்நாடுகளில் வெளிவரும் எம்மவரின் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன 1-2. இருப்பினும் எம் வருங்காலச் சந்ததியின் கல்வி பற்றிய இக்கட்டுரையில் தாய்மொழிக்கல்வி பற்றிய கருத்துக்கள் சேர்க்கப்படாவிடின் இக்கட்டுரை முழுமை பெறாது. எனவே, முதலில் தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றியும் தமிழ்க்கல்விப் போதிப்பில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களையும் பற்றிச் சிறிது கவனிப்போம். மொழி என்பது வெறுமனே உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு கருவி மட்டுமல்ல. மொழியே மனிதனை, அவன் சார்ந்த சமுகத்தை அடையாளப்படுத்தும் அதிமுக்கியமான தனித்துவம் மிக்க அம்சம். தாய்மொழி என்றால் என்ன? தாயின் அல்லது தந்தையின் மொழியா? அல்லது புலம் பெயர்நாடுகளில் பெற்றோர் இருவரும் தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்தின் காரணமாகக் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நாளின் பெரும் பகுதி பெரும்பான்மையினரின் மொழியையே "சுவாசிக்கும்" குழந்தைகளுக்கு பெரும்பான்மையினரின் மொழி தான் தாய்மொழியா? ஓருவன் உரையாடல் மூலம் தன் கருத்துக்களை வெளியிடவும், பிறர் கருத்துக்களை உரையாடல் மூலம் உள்வாங்கிக் கொள்ளவும் எந்த மொழி பயன்படுகிறதோ அம்மொழியே தாய் மொழி என UNESCO விளக்குகிறது. தாய்மொழி என்பதற்கு வரைவிலக்கணம் எப்படியிருந்த போதிலும் தாய்மொழிக் கல்வியால் என்ன பயன் என்று வினாவெழுப்பும் மாணவர்களும் ஒரு சில பெற்றோர்களும் எம்மத்தியில் காணப்படுகிறார்கள் என்பது மறைக்கமுடியாத உண்மை. குறிப்பாக, ஆங்கிலம் பெரும்பான்மையினரின் மொழியாக உள்ள நாடுகளிலே பல பெற்றோர் தமிழ் மொழிக்கல்வி குழந்தைகளின் ஆங்கில மொழி வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்றும், பிள்ளைகளுக்கு தமிழ் மொழிக்கல்வி ஒரு சுமையாகவே இருக்கின்றது என்றும் கருதுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதற்குக் காரணம் காலம் காலமாக எம்மக்கள் மத்தியில் ஆங்கில மொழி மீது இருக்கும் மயக்கம் தான் என்று ஒரு குற்றச்சாட்டு இருப்பினும், தாய்மொழிக் கல்வி பற்றிய சரியான சிந்தனைத் தெளிவு இல்லாமையே, பெற்றோரின் இந்நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணமெனலாம்.

மொழியாராய்ச்சியாளரின் கருத்துக்களின்படி, ஒரு நான்கு வயதுக் குழந்தை ஒரே சமயத்தில் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளக்கூடிய வல்லமையைக் கொண்டுள்ளது. இதற்கு உதாரணமாக யப்பானிலே பாலர் பாடசாலைகளிலே நான்கு மொழிகள் கற்பிக்கப்படுவதைக் குறிப்பிடலாம். எனவே, தமிழ் மொழிக் கல்வி அந்தந்த நாடுகளின் பெரும்பான்மை மொழிக் கல்வியைப் பாதிக்கும் என்ற வாதம் அபத்தமானது. இது தவிர, குழந்தையானது, தாயின் வயிற்றிலிருக்கும் போதே தாயிடமிருந்து மொழியைக் கற்றுக் கொள்ளும் திறனைப் பெறுகிறது என்பதும், நான்கு வயது சராசரிக் குழந்தை கிட்டத்தட்ட 4000 சொற்களை அறிந்து வைத்திருக்கும் என்பதும் மனோதத்துவ ஆராய்ச்சியாளரின் கணிப்பு. இவ்வளத்தை அடித்தளமாகக் கொண்டு தாய்மொழியை மேலும் விருத்தி செய்வது மிக முக்கியமென்பதை மொழியாராய்ச்சியாளர் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர் 3. இந்நிலையில் தமிழ் மொழியை தமக்கிடையே அன்றாட சம்பாசனை மொழியாக உபயோகிக்கும் பெற்றோரின் குழந்தைகள் இயல்பாகவே தமிழ் மொழியை தமது சிந்தனா மொழியாகக் கொள்ளும் பக்குவத்தைப் பெறுகின்றனர். பெற்றோர் தம் குழந்தையின் சிந்தனாமொழியை வளப்படுத்துவதில் பங்களிப்பதானால், அம்மொழி அவர்களின் தாய் மொழியாகவும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். புதிய ஒரு மொழியை கற்றுக் கொள்ள தாய்மொழியின் பதங்களும் அர்த்தங்களுமே அடிப்படையாக அமைகின்றன. இதற்கு உதாரணமாக, நோர்வேயில் 2000-2001ஆம் ஆண்டுகளில் வேற்று மொழிப் பெற்றோரைக் கொண்ட பாடசாலை மாணவரிடையே நடாத்தப்பட்ட ஆய்வைக் குறிப்பிடலாம். இவ்வாய்வின்படி 4 தம் தாய்மொழிகளில் திறமை பெற்ற மாணவர்கள் நோர்வேஜிய மொழி, மற்றும் அனைத்து பாடசாலைப் பாடங்களிலும் நோர்வேஜிய மாணவருக்கு நிகராகக் காணப்படுவதும், அதேவேளை தாய்மொழிக்கல்வி பெறாத மாணவர் அனைத்துப் பாடங்களிலும் பின் தங்கிய நிலையில் காணப்படுவதும் தெரிய வந்துள்ளது. வளமான தாய்மொழியே வேற்று மொழியைக் கற்பதற்கும், துறைசார் கல்விக்கும் அடிப்படை என்ற பல்நாட்டு மொழியறிஞர்களின் கூற்றையே மேற்படி ஆய்வு மீண்டும் உறுதிசெய்துள்ளது.

மேலும், தாய்மொழியானது ஒரு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை பேணிக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும், சுய அடையாளத்தை உணர்ந்து கொள்ளவும், புலம்பெயர் நாட்டுக்கு அப்பால் சொந்த உறவுப்பாலங்களை பேணிப் பாதுகாக்கவும் உறுதுணையாக அமைகிறது என்பதும் பலரும் அறிந்த உண்மையே. அதிலும் விடுதலைக்காகப் போராடும் ஒரு சமூகம் என்ற வகையில் நாளை விடுதலை பெறும் நிலத்தின் மைந்தராக எம் இளைய சமூகம் இருக்க வேண்டுமானால் அவர்கள் தமிழ் மொழிக் கல்வியைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. இது தவிர "உலகமயமாக்கல்" என்ற கோட்பாட்டிற்கமைய உலகம் வர்த்தக ரீதியில் சுருங்கிவரும் இக் காலகட்டத்தில் பன்மொழிகளில், அதிலும் குறிப்பாக பெரும்பான்மையினர்க்குப் பரிச்சயமான ஐரோப்பிய மொழிகள் தவிர்ந்த மொழிகளில் தேர்ச்சி பெற்றவரின் தகைமை தொழில் ரீதியில் மிகவும் கவர்ச்சிகரமானதாயமையும். இதற்கு உதாரணமாக, அண்மைக் காலங்களில் சீனா, வியட்நாம், இந்தோனேசிய நாடுகளில் தமது வியாபாரத் தொடர்புகளை விஸ்தரிக்க நோர்வேஜிய நிறுவனங்களான Norsk Hydro, Statoil உதவி நிறுவனமான NORAD போன்றவை நோர்வேயில் வாழும் அந்தந்த நாட்டு வழித்தோன்றல்களை பயன்படுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது. மேற்படி காரணங்களே தமிழ் மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தப் போதுமானவை. ஆனால், தமிழ்மொழிக்கல்வி சரியான முறையில் புலம்பெயர் நாடுகளில் போதிக்கப்படுகிறதா? என்பது விவாதத்துக்குரிய விடயம்தான்.

தமிழ் மொழிப் போதனை

மொழியின் பிறப்பிடமல்லாத அந்நியச் சூழலில் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழிப் போதனை என்பது இலகுவான காரியமல்ல. நவீன கற்பித்தல் முறைகளுக்குப் பழகிய மாணவ சமுதாயத்தின் மத்தியில் புரையேறிப்போன, பழைய தலைமுறைகளுக்குப் பழகிப்போன கற்பித்தல் முறைகள் இன்னமும் பயன்படுத்தப்பட்டு, மாணவரின் ஈடுபாட்டைக் குலைப்பதும், வாழ்வியல் சூழலுக்குப் பொருத்தமில்லாத பாடத் திட்டங்களைப் பயன்படுத்தி, மாணவரை அந்நியப்படுத்துவதும் இன்றும் பல இடங்களில் தமிழ்மொழிப் போதனைகளில் உள்ள குறைபாடுகள். இலங்கை, இந்திய சூழல்களைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட புத்தகங்களை, செயல் நூல்களை எந்தவித மீளாய்வோ, பரிசீலிப்போ இல்லாது பாவித்தல் நடந்த வண்ணமேயுள்ளது. புகலிடம் வந்த வளர்ந்தவர்க்கே தெரியாத கடின இலக்கணத்தை மாணவர்க்குப் போதிப்பதும், அதை மாணவர் விளக்கமில்லாமல் மனப்பாடம் செய்து ஒப்புவித்தலையே திறமையாகக் கருதுவதும், இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது. புலம்பெயர்நாடுகளில் காலத்திற்கு, சூழலுக்கு ஏற்ற பாடத்திட்டங்களும் அவற்றுக்குகந்த புத்தகங்களை உருவாக்கலும் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் அதே வேளையில் தமிழ் மொழிப் போதனையின் உள்ளடக்கம் பற்றிய விவாதமும் அவசியமானது. அண்மையில் தமிழ்நாட்டுப் பேராசிரியர் ஒருவர்; "ல","ள","ழ" உச்சரிப்பு தமிழ்நாட்டில் மாணவர்க்கு சிரமமாயிருப்பதாகவும் "ல","ள","ழ" வித்தியாசத்தை தமிழ்மொழியிலிருந்து அகற்றி ஏதாவது ஒரு "ல" உச்சரிப்பை மட்டும் உபயோகப்படுத்தல் சிறந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மொழியின் இனிமைக்கும் சிறப்புக்கும் ஒரு காரணியாய் உள்ள "ல","ள","ழ" உச்சரிப்பை தவிர்ப்பது என்பது தமிழின் வளத்திற்கே ஊறு நினைப்பது போலாகும். இருப்பினும் அப் பேராசிரியரின் கருத்தின் ஒரு பகுதி கவனத்திற்குரியது. தமிழ் நாட்டிலேயே, "ல","ள","ழ" உச்சரிப்பில் வித்தியாசம் தெரியாது மாணவர் திணறுகையில், புலம்பெயர் சூழலில் எம் மாணவர் சிலர் சிரமப்படுவது எதிர்பார்க்கக்கூடியதே. மொழியை சரியாக கற்றுக்கொள்வது முக்கியமென்பது ஒரு புறமிருக்க, மாணவரின் "ல","ள","ழ" உச்சரிப்பில், எழுதுவதில் உள்ள சிரமங்களை அளவுக்குமீறி மிகைப்படுத்தி, மாணவரின் தாய்மொழிக்கல்வி மீதான ஈடுபாட்டைக் குலைத்து, சலிப்புத்தன்மையை ஏற்படுத்தாமல் சரியான பயிற்சியை அளித்து ஒரு சமநிலையைப் பேணுவது முக்கியமானது. மேற்குறிப்பிடப்பட்டது ஒரு உதாரணமே. அத்துடன் தம் உணர்வுகளை, சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து ஆணித்தரமான தம் கருத்துக்களை தமிழில் மாணவர் எடுத்துச் சொல்லக்கூடிய விதத்தில் பாடங்கள் அமைவது மிகவும் முக்கியம். வெறுமனே ஆசிரியரால் மட்டும் முடிவெடுக்கப்பட்டு, வற்புறுத்தலுடன் திணிக்கப்படும் பாடங்களாக அமையாமல், மாணவர் விருப்புடன் தாமே தமது கற்கும் திறனை வளர்க்கும் வகையில் பாடங்கள் தெரிவு செய்யப்படவேண்டும். மனனம் செய்வதினால் மட்டும் மொழியை வளப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டதுபோல் தமிழன் என்ற சுய அடையாளத்தைத் தரும் தமிழ் மொழிப்போதனை புலம்பெயர் வாழ்வுக்கான காரணங்கள், தமிழ் மொழி, எம் மண், மக்களின் வரலாறு, இன்றைய நிலை போன்றவற்றை இருட்டடிப்புச் செய்து அல்லது புறக்கணித்து நடாத்தப்படுமானால், அத்தகைய போதனை எம் மாணவர்க்கும் எம் சமூகத்துக்கும் மாபெரும் துரோகத்தையே செய்கிறது என்பதைத் துணிந்து சொல்லலாம்.

வித்தியாசமான கல்வித்திட்டங்களும் பெற்றோரும்

இங்கிலாந்து கல்வித் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இலங்கைக் கல்வித் திட்டங்களின் வாரிசுகளான நாம் புலம்பெயர் நாடுகளில் வித்தியாசமான புதிய கல்வித் திட்டங்களுக்கு முகம் கொடுக்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்வது எதிர்பார்க்கக்கூடியதே. இவ்வகையில், ஆங்கில மொழி மேல் எம்மவர் கொண்ட மயக்கத்தைப் போலவே ஆங்கிலம் பேசப்படும் நாடுகளின் கல்வித் திட்டங்களிலும் வேற்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் எம்மவர் பலருக்கும் ஒரு மயக்கம் உண்டு. நோர்வே, டென்மார்க், சுவீடன், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் வாழும் எம்மவரில் பலர் தம் குழந்தைகளின் எதிர்கால கல்வி நலனிற்காக இங்கிலாந்து, கனடா செல்லலாமா? என்ற சலனத்தில் வாழ்வதும், பலர் ஏற்கனவே இடம் மாறியுள்ளதும் நாம் அறிந்த ஒன்றே. இத்தகைய சஞ்சலத்தைத் தீர்க்க சரியான வழி அந்தந்த நாட்டுக் கல்வித் திட்டங்களை சரிவர அறிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்குவதே. மொழிப்பிரச்சினை காரணமாகவும், சிக்கலான கல்வித்திட்டங்கள் காரணமாகவும் சுவிற்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எம்மவர்கள் தம் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி பற்றிய முடிவுகளை எடுக்கும் முழுப்பொறுப்பையுமே பிள்ளைகளிடமே விட்டுவிடும் துர்ப்பாக்கிய நிலையே காணக்கூடியதாகவுள்ளது. இந்நாடுகளின் கல்வித்திட்டங்கள் சம்பந்தப்பட்ட அறிவை எம்மாணவர்க்கும் பெற்றோர்க்கும் கொடுக்க வேண்டிய பாரிய கடமை தமிழர் அமைப்புக்களுக்கும் துறைசார் வல்லுனர்க்குமுரியது.

நோர்வேயில் துறைசார் கல்வியும் எம் இளைய சமூகமும்

இனிவரும் பகுதிகளில் நோர்வேயில் எம்மாணவரின் கல்வி சம்பந்தமான சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சில வாரங்களுக்கு முன் OECD (Organization for Economic Co-operation and Development) அமைப்பினால் 15 வயது மாணவர்களிடையே 32 நாடுகளில் கணிதம், விஞ்ஞானம், வாசிப்புத்திறன் ஆகியவற்றில் நடாத்தப்பட்ட கணிப்பின்படி5, நோர்வே அனைத்துத் துறைகளிலும் சராசரி இடத்தையே பிடித்துள்ளமை நோர்வேஜியக் கல்வித்திட்டம் சம்பந்தமான காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இக் கணிப்பில் கலந்து கொண்ட யப்பான், தென் கொரியா ஆகிய இரு ஆசிய நாடுகளுமே முதல் இரண்டு இடங்களையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நோர்வேக்குள் NIFU (Norsk Institutt for studier av forskning og utdanning) அமைப்பினால் 2000ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இன்னுமொரு கணிப்பின்படி6, நோர்வேஜிய மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட மாணவரை விட வேற்று மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர் அனைத்துத் துறைசார் கல்விகளிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 1997ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கணிப்பும்7 இதே முடிவையே தெரிவித்திருந்தது. அதே வேளை, தொழிற்கல்விக்கான பயிற்சிகளில் வேற்று நாட்டுப் பெயர்களைக் கொண்ட மாணவர் புறக்கணிக்கப்படுவதும், பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை எடுத்தாலன்றி பயிற்சிக்கான இடங்களை இம்மாணவர்க்கு வழங்க தனியார் நிறுவனங்கள் பின்னிற்கின்றன என்பதையும் புள்ளிவிவரங்களுடன் 2001ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட NIFU அறிக்கை8 தெரிவிக்கிறது.

இக்கணிப்புகள் நோர்வேஜிய கல்வித்திட்டம் பற்றியும் எமது இளம் சமுதாயத்தின் எதிர்காலக் கல்வி சம்பந்தமாயும் எம்மவர் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்துவது இயல்பானதே. நோர்வேஜிய ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் எம் தமிழ் மாணவர் பலர் நோர்வேஜிய மாணவர்க்கு நிகராக கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் ஆரம்பத்தில் திகழ்ந்தாலும் 6,7 ஆம் வகுப்புகளில் எம் மாணவர் இப்பாடங்களில்கூட பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்குவதை அனுபவங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கணிதத்துறையில் வசனக் கணக்குகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தீர்ப்பதில் எம் மாணவர் வெகுவாகச் சிரமப்படுவதையும், விஞ்ஞானத்துறையில் நோர்வேஜிய தாவரங்கள், உயிரினங்கள் பற்றிப் போதிய அறிவைக் கொண்டிராமலிருக்கும் தன்மையையும் காணக்கூடியதாகவுள்ளது. இதுதவிர, நோர்வேஜிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த சமூகம், இலக்கியம், கலைகள் சம்பந்தப்பட்ட பாடங்களிலும் எம்மாணவர் பலர் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். நோர்வேஜிய சமூகத்துடன் போதியளவு தொடர்பில்லாத தமிழ் மாணவரின் வாழ்வியல் சூழலும் பெற்றோர் பாடசாலைப் பாடங்களில் உதவி செய்யமுடியாத நிலையுமே இப்பாடங்களில் எம் மாணவர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமெனலாம்.

இதே வேளை நோர்வேஜிய கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆரம்பப்பாடசாலைக்கும், உயர்தரப் பாடசாலைக்குமிடையில் தரத்தினடிப்படையில் பாரிய இடைவெளியிருப்பதையும் காண்கிறோம். நோர்வேஜிய மாணவர் கூட 6,7ஆம் வகுப்புக்களைக் கடந்து 8ஆம் வகுப்பை அடைகையில் முதல் அதிர்ச்சியையும், 10ஆம் வகுப்பைக் கடந்து உயர்தரக்கல்வியை (Gymnas, V.g.skole) ஆரம்பிக்கையில் இரண்டாவது அதிர்ச்சியையும், பின்னர் பல்கலைக்கழகம், உயர்கல்விப் பாடசாலை (Høyskole) ஆரம்பிக்கையில் பெரிய அதிர்ச்சியையும் எதிர் கொள்கின்றனர். உயர்தர வகுப்பில் (Gymnas, V.g.skole) முதலாவது வருடமே பல மாணவர் கணிதப் பரீட்சைகளில் தோல்வியடைவதும், விஞ்ஞானத்துறையைக் குறிப்பாக, பௌதீகவியலை தேர்ந்தெடுக்காது புறக்கணிப்பதும் இன்று சாதாரண விடயமாகிவிட்டது. கணித விரிவுரையாளர் ஒருவர், சில மாதங்களுக்கு முன் உயர்தர இரண்டாம் ஆண்டில் (2. Gymnas) கற்கும் மாணவர் மத்தியில் 1960 களில் 9ஆம் வகுப்பில் கொடுக்கப்பட்ட கணிதச் சோதனைத்தாளைப் பரீட்சித்தபோது 95 வீதமானோர் தோல்வியடைந்துள்ளனர். இன்றைய நோர்வேஜிய மாணவர் கடந்த தலைமுறையை விட குறைந்தது 2 வருடங்கள் கணித, விஞ்ஞான அறிவில் பின்னிற்பதாக அண்மையில் கணிக்கப்பட்டுள்ளது9. இதே போலவே, பல்கலைக்கழகங்களிலும் Høyskole எனப்படும் உயர்கல்விப் பாடசாலைகளிலும் கணிதத்துறையில் பெருமளவில் நோர்வேஜிய மாணவர் தோல்வி காண்பதும் இன்று சகஜமாகிவிட்டது.

பொறியியல், தகவல், கணணித்துறையில் ஆளுமை செலுத்தும் அறிவாளருக்காக பல மேற்குலக நாடுகளும் போட்டிபோடும் நிலையில், நோர்வேயில் மேற்படி துறைகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவரின் தொகை மிகக்குறைவாகவே காணப்படுகிறது. அண்மையில் வெளிவந்த ஒரு கணிப்பின்படி, இதே நிலையே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிலும் காணப்படுவது தெரிய வந்துள்ளது. நோர்வேயைப் பொறுத்தவரை இன்னும் 10 வருடங்களில், உயர்தரக் கல்விக் கூடங்களில் பௌதிகவியலைக் கற்பிப்பதற்கு போதியளவு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் இல்லாத பிரச்சினை தோன்றும் என அஞ்சப்படுகிறது. நோர்வேஜிய் கல்வித்திட்டமும் கல்வியில் அசமந்தமான போக்குமே இந்நிலைக்கு முழுக்காரணமெனலாம். தனியே ஆரம்பப்பாடசாலைக்கான கல்வித்திட்டம் மட்டுமன்றி ஆசிரியரை உருவாக்கும் ஆசிரியர் கல்விக்கான திட்டமுமே இத் துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாகும். இன்று பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் விஞ்ஞானப்பாடங்களில் கற்பிப்பதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என அண்மையில் வெளிவந்த கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது10 . இதற்கு உதாரணமாக, கடந்த வருடம் (2001) பேர்கனிலுள்ள ஆசிரியர் பயிற்சி உயர்கல்வி நிலையத்தில் (Høgskolen i Bergen, Læreutdanning) முதலாண்டில் நடாத்தப்பட்ட கணிதப்பரீட்சையில் 60% மாணவர் சித்தி பெறாததைச் சுட்டிக்காட்டலாம். பொதுவாக ஆசிரியர் கல்விக்கு தெரிவாகும் மாணவருக்கு கணித, விஞ்ஞானப் பாடங்களில் தேவையான அளவு தேர்ச்சியிருப்பதுமில்லை. இது ஒரு வகையில் மீளாமல் தொடரும் ஒரு சங்கிலிப் பிரச்சினையாகவே உள்ளது. அதாவது பாடசாலைகளில் கற்பிக்கப்படும் விஞ்ஞானம், கணிதக் கல்வியின் தரம் போதாதிருப்பதும், இப்பற்றாக்குறைக் கல்வியைப் பெற்ற மாணவர், ஆசிரியர் பயிற்சியின்போதும் போதியளவு விஞ்ஞான, கணித அறிவைப்பெறாத நிலையில் ஆசிரியர்களாக பாடசாலைகளில் நியமிக்கப்படுவதும், தாம் கற்ற அதே பற்றாக்குறைக் கல்வியை தம் மாணவர்க்குப் பயில்விப்பதுமாக இச்சங்கிலித் தொடர் நீள்கிறது. நோர்வேக் கல்வித்திட்டங்களில் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதை அரசு உணர்ந்ததினாலேயே Læreplan 97 என்ற புதிய கல்வித்திட்டம்11 1997ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியரின் திறமைகளுக்குச் சவாலாயமையும் மிகவும் தரமான இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான தேர்ச்சி ஆசிரியர்க்கு இன்னமும் இல்லாமல் இருப்பதே இன்றைய பிரச்சினை. பழைய கல்வித்திட்டங்களின் வாரிசுகளான ஆசிரியர்க்கு மேலும் மேலும் பயிற்சிகளையும் கல்வியையும் வழங்குவதன் மூலமும், ஆசிரியர் பயிற்சிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதன் மூலமுமே தரமான கணித, விஞ்ஞானக் கல்வியை இனிவரும் காலங்களில் பாடசாலைகளில் வழங்கக்கூடியதாயிருக்கும்.

பற்றாக்குறைக் கல்வியைப் பெறும் நோர்வேஜிய மாணவரின் நிலையே இதுவென்றால் தமிழ் மாணவரின் நிலை எப்படியாகும் என்ற கேள்வி நியாயமானதே. அதற்காக எம்மாணவரின் எதிர்காலம் இருண்டதாயிருக்கப்போகிறது என மனமுடையவோ, இலண்டன், கனடா எனக் கனவு காணவோ அவசியமில்லை. மாறாக, எம் தமிழ் மாணவர்க்கு கணித, விஞ்ஞானத் துறையைப் பயில்விப்பதில் பெற்றோரும் எம் சமூகத்திலுள்ள அறிவாளரும் நம்பிக்கையுடன் கவனம் செலுத்தவேண்டும். விஞ்ஞானத்தை வெறும் மனனம் செய்வதற்கே உண்டான விதிகளும், சமன்பாடுகளும் கொண்ட புத்தகக்கல்வியாக ஆக்காமல், எம் அன்றாட வாழ்வுடன் விஞ்ஞானம் எவ்வாறு தொடர்பு பெறுகின்றது என்பதை 4,5 வயது தொடக்கமே எம் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது மிகவும் முக்கியமானது. உதாரணமாக 5 வயதுக்குழந்தை மழை நீரில் விளையாடுவதைக் கண்டதும் எம்மவர் என்ன செய்கிறோம்? குழந்தை நனையாமல் இருக்கவேண்டும் என்று காட்டுக்கூச்சல் போடுவதுதான் வழக்கமேயன்றி அக்குழந்தை நீருடன் விளையாடி நீரின் குணாதிசயம்பற்றி (உதாரணமாக சில பொருட்கள் மிதக்கின்றன, சில தாழ்கின்றன. இரும்பு தாழ்கிறது. ஆனால் இரும்பினால் செய்யப்பட்ட கப்பல் மிதக்கிறது) பரிசோதனையே செய்கிறது என்பதை உணரமறுக்கிறோம். நீர், வளி, ஒளி, ஒலி, வானியல் என இயற்கையுடன் கூடிய அனைத்துமே விஞ்ஞானத்துடன் தொடர்புடையவை என்பதைச் சிறுவயதிலிருந்தே எம் சிறார்க்கு உணர்த்தி, விஞ்ஞானத்தை வாழ்வுடன் இயல்பாகவே இணைத்துக் கொள்ள பழக்கிக்கொள்ளவேண்டும். அதே போல், அன்றாட வாழ்வுடன் சம்பந்தப்பட்ட விதத்தில் கணிதத்தைத் தொடர்புபடுத்துவதிலும் சிறு வயதிலிருந்தே கவனம் செலுத்தவேண்டும்.

நோர்வேப் பாடசாலைகளில், எல்லா மாணவரும் கல்வித்திட்டத்திற்கமைய சம தகுதி பெறவேண்டுமென்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதால், அதி திறமையான மாணவர்க்கு உகந்த வேலைத் திட்டங்களை வகுப்பதற்கான நேரமோ, வசதியோ பெரும்பாலான வகுப்பாசிரியர்க்குக் கிடைப்பதில்லை. இதனால் திறமையான மாணவரே நோர்வே பாடசாலைகளில் அபாக்கியசாலிகள் என்று சொல்லப்படுவதில் உண்மையில்லாமலில்லை. எனவே, பெற்றோர் உதவி செய்யக்கூடிய கணிதத்துறையில் தமது அறிவை வளர்த்துக்கொள்வது எம்மாணவர்க்கு மற்றப்பாடங்களிலும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமென்பதால், பாடசாலையில் கொடுக்கப்படும் கல்வியில் மட்டும் திருப்திகண்டு நின்றுவிடாது அவர்களுக்கு மேலும் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டியது அவசியம். இது தவிர, எமது சமூகத்தின் துறைசார் வல்லுனரையும், இந்நாட்டுக் கல்வித்திட்டத்தில் கல்வியைப் பெற்ற அறிவாளரையும் கொண்டு எம் மாணவர்க்கான உதவிக்கல்வியை வழங்கும் முயற்சிகளை எமது சமூக அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.

நோர்வேஜிய கல்வி முறையில் குறைகளிருப்பினும் பல நிறைகளும் உள்ளன என்பதை யாரும் மறுக்கமுடியாது. பாடசாலைக் கல்வியானது, வெறும் ஏட்டுச் சுரைக்காய்க் கல்வியாக இல்லாது, சுய அடையாளத்தை, மனித நேயத்தை நாடும் மனிதாபிமானிகளை, சூழலை, இயற்கையை நேசிப்போரை, விஞ்ஞான ரீதியில் சிந்தித்து, புதியதைப் பிரசவிக்கும் படைப்பாளிகளை, கலைகள், விளையாட்டுகள், அரசியல், சமூகம் பற்றி அறிந்து, கூட்டுணர்வுடன் இயங்கக்கூடிய சமூகப்பிராணிகளை, அனைத்து இயக்கங்களையும் உள்வாங்கி, தானே சிந்தித்துச் செயலாற்றக்கூடிய முழுமனிதரை உருவாக்கும் கல்வியாக அமையவேண்டும். அதற்கேற்ப போதனை முறைகளும் மாற்றம் பெற வேண்டும். எம் இளம் சமூகத்தின் கல்விமேல் அக்கறை கொண்ட அனைத்துச் சக்திகளும் இதை உணரவேண்டும். இவ்வகையில், 1997இல் அறிமுகப்படுத்துப்பட்ட நோர்வே கல்வித்திட்டம் சரியான ஒரு ஆரம்பமே. இருப்பினும், அசட்டு நம்பிக்கையோடு, முழுப்பொறுப்பையும் பாடசாலையிடமே விட்டுவிடாது, நோர்வேஜியக் கல்வி முறையிலுள்ள நல்ல விடயங்களையும், எமக்குப் பழகிப் போன கல்வி முறையிலுள்ள சிறப்பான அம்சங்களையும் தேர்ந்தெடுத்து, எம் இளையவரை வளம்படுத்துதலே சிறந்தது. அதே வேளை, நாளை கட்டியெழுப்பப்படும் எம் தேசத்தின் நிர்மாணத்தில் பங்கெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையைக் கொண்டுள்ள எம் இளையவர்க்கு, பொருத்தமான துறைகளை வழிகாட்டும் பொறுப்பும் எம்மவரையே சாரும்.

--------------------------------------------------------------------------------

1. ச.சச்சிதானந்தம், தாய்மொழியும், ஐரோப்பிய முதன்மொழிகளும், "இன்னுமொரு காலடி", 54-58, 1998.

2. காமில் ஓசார்க், மொழி, அனுபவ, பாடசாலைக் கல்வி விருத்தி ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவையே, அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம், ஐந்தாம் ஆண்டு விழாச் சிறப்பிதழ், 36-41, 1997.

3. Katarina Magnussen, Undervisning i modersmål – en tidsfråga?, 2001, http://modersmal.skolverket.se/pdf/defmodersmal.pdf

4. Sunil Loona, En flerkulturell skole?, Administrasjon for språklige minoriteter i Bergens hjemmeside, 2001.

5. OECD PISA Study, International Comparative data on schooling outcomes, 2001.

6. Berit Lodding, Gjennom videregående opplæring? Evaluering av Reform 94: Sluttrapport fra prosjektet Etniske minoriteter, NIFU (Norsk Institutt for studier av forskning og utdanning), 1998.

7. Svein Lie, Marit Kjærnsli, Gard Brekke, TIMSS, Third International Mathematics and Science Study, 1997.

8. Berit Lodding, ’Norske får liksom første rett’, NIFU (Norsk Institutt for studier av forskning og utdanning), 2001, ISBN 82-7218-442-7.

9. Aftenposten, ’Gamle matteprøver for vanskelige’, 12.12.01

10. Aftenposten, ’Nye lærere kan lite for skole’, 30.01.02

11. Læreplanverket for den 10-årige grunnskolen, KUF, 1997.

ஆக்கம்: கலாநிதி வேலாயுதபிள்ளை தயாளன் (Associate Professor, Høgkolen i Bergen, Bergen, Norway)

நன்றி: மகுடம் - அன்னைபூபதி கலைக்கூட சிறப்பிதழ்

(இவ்வாக்கம் நோர்வேஜிய சூழலை மையமாகக் கொண்ட எழுதப்பட்டாலும் புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. இடையிடையே வரும் நோர்வேஜிய சொற்களுக்கு மன்னிக்கவும்)

http://www.yarl.com/m_pulam/article_196.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.