Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரிஸின் பிரம்மாண்ட பேரணிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு

Featured Replies

பாரிஸின் பிரம்மாண்ட பேரணிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
 
150111054418_france_march_nantes_624x351பாரிஸ் நகர பேரணி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரலாறு காணாத அளவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் 17 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பேரணியை ஒட்டியே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய பேரணியில் பத்துலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பேரணியில் நாற்பதுக்கும் அதிகமான நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சாமின் நெதன்யாஹூ ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் காவல்துறையினரும் இன்றைய பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கட்டிடங்களின் மேலே சிறப்பு பாதுகாப்புப்படையினர் கண்காணிப்பு பணி செய்வார்கள்.

சார்லி எப்தோ என்கிற கேலிச்சித்திர சஞ்சிகையின் பணியாளர்கள் மீது புதன்கிழமை நடந்த தாக்குதலில் ஆரம்பித்த இந்த வன்முறைகள், வெள்ளிக்கிழமையன்று பாரிஸ் நகருக்கு வெளியே இருந்த அச்சகம் மற்றும் யூதர்களின் சிறப்பங்காடியில் நடந்த முற்றுகையை பிரஞ்சு பாதுகாப்புப்படையினர் முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிவடைந்தன.

 

http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150111_francesecurity

 

இது ஒரு பொதுப்பேரணி நாம் வாழும் நாடு பயங்கரவாதிகளின் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாமும் பாதிக்கப்படலாம் எமது குழந்தைகள் கூட....ஆகவே பேரணியில் கலந்துகொள்வதோடு மட்டும் நின்றுவிடாது எம்மினத்தையும் அச் சந்தர்ப்பத்தில் அடையாளப்படுத்துங்கள்

  • தொடங்கியவர்

கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பிலானி ஒற்றுமை பேரணி மற்றும் அணிவகுப்பில் கலந்து கொள்ள பரிஸ் சென்றுள்ளார்.

 

பொது பாதுகாப்பு அமைச்சர் Steven Blaney, Charlie Hebdo பத்திரிகை தலைமையகத்தில் மலர்வளையம் வைத்து இந்த வாரம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தினார். ஞாயிற்று கிழமை நடைபெற உள்ள பேரணி மற்றும் அணிவகுப்பிலும் கலந்து கொள்கின்றார்.

பிரான்ஸ் மக்களிற்கு கனடிய மக்களின் ஆதரவை தெரிவிப்பதற்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காகவும் தான் அங்கு வந்திருப்பதாக பிலனெ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பத்திரிகை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தனியுரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீதான தாக்குதல் எனவும் கூறியுள்ளார்.

இந்த கடினமான சமயத்தில் கனடியர்கள் பிரான்சிற்கு ஆதரவாக நிற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுகிழமை பரிசில்  இடம் பெறும் ஒற்றுமை பேரணியில் கனடாவின் பிரதிநிதியாக பங்குகொள்கின்றார். இப்பேரணியில் பிரிட்டிஷ் பிரதம மந்திர டேவிட் கமரன், ஜேர்மன் அதிபர் அஞ்செலா மேர்க்கெல் வேறு ஐரோப்பிய தலைவர்களும் பிரான்ஸ் அதிபர் விராங்கொயிஸ் ஹொலான்டேயுடன் சேர்ந்து கொள்வார்கள்.

கியுபெக் மாகாணத்தின் சார்பில் பிரான்ஸ் தலைநகரில் உள்ள கியுபெக்கின் பொது பிரதிநிதி மைக்கெல் றொபிரெயில் கலந்து கொள்கின்றார்.

பத்திரிகை நிறுவனம் கோஷர், பல்பொருள் அங்காடி மற்றும் பரிசை சுற்றியுள்ள ஏனைய பகுதிகளில் 3-நாட்களாக இடம்பெற்ற குருதிசிந்தலில் 3-தாக்குதல் நடாத்தியவர்கள்,  பயணக்கைதிகள் நால்வர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களிற்கு உடந்தையாக இருந்த  பெண் ஒருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

பிரதம மந்திரி Stephen Harper பிரான்ஸ் அதிபர் ஹொலான்டேயுடன் தொடர்பு கொண்டு கனடியர்கள் சார்பில் கொடூரமான தாக்குதல் குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

 

- See more at: http://www.canadamirror.com/canada/36599.html#sthash.f6NTG9qf.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

பிரென்சு தேசத்தின் வரலாற்றில் ஒர் உணர்வுபூர்வமான நாளாக மாறியது சனவரி 11 ! - பலத்த பாதுகாப்புடன் நடந்த ஒற்றுமைக்கான பேரணி photo.png

[Monday 2015-01-12 00:00]
pariss-110115-protest-seithy-350.jpg

பிரென்சு தேசத்தின் வரலாற்றில் ஒர் உணர்வுபூர்வமான பதிவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றிருந்த ஒன்றுகூடலின் உச்சமாக தலைநகர் பரிசில் ஒற்றுமைக்கான பேரணியில் 7லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்துள்ளனர். பிரென்சு அரசுத் தலைவர் பிரான்சுவா ஓலன்ந் தலைமையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமறுன், ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்கல் உட்டப பல ஐரோப்பிய உலகத் தலைவர்கள் பலரும் பங்கெடுத்திருந்த இந்தப் பேரணியில் பிரான்சின் பிரதான கட்சிகளும் கூட்டாக நடைபோட்டிருந்தன.

  

தமிழ்மக்கள் அனைவரும் பங்கெடுத்து பிரென்சு தேசத்துக்கான தோழமையினை வெளிப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே அறைகூவல் விடுத்திருந்தது. நான் தமிழன், நானும் சார்லி என தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தியிருக்க அனைத்தின மக்களும் தங்கள் தங்கள் அடையாளங்களுடன் வலம்வந்திருந்தனர்.

 

pariss-110115-protest-seithy%20%282%29.j

 

பரிசின் பொதுப்போக்குவரத்துகள் கட்டமற்ற பாவனைக்கு திறந்து விடப்பட்டிருந்ததோடு பேரிணி இடம்பெற்றிருந்த பிரதான பகுதியினைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட மெட்ரோ தொடருந்து நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்கான பூட்டப்பட்டிருந்தன.

8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு தொலைபேசிகளுக்கான அலைவரிசையும் துண்டிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகிய ஊடகர்களை நினைவிருத்து கருத்துச்சுதந்திரத்தின் குறியீடாக பலரும் எழுத்தாணி வடிவங்களை பேரணியெங்கும் தாங்கி வந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=124456&category=TopNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

17 பேர் இறந்ததுக்கு 1 மில்லியன் மக்கள் கூடி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். நம்ம ஊரில்.. 40,000 மக்கள் இறந்த போதும்.. மறப்போம் மன்னிப்போம் என்று வேதாந்தம் படிக்கின்றனர். இன்னும் சிலர்.. அவர்களின் சாவைக் கட்டிக்கொண்டு அழுவதில் பயனில்லை.. அழித்தவன் காலடியில் சரணாகதி அடைந்து மிச்சப் பேர் அடிமையாக வாழ்வோம் என்கிறார்கள். :(:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரிருவரை தவிர முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் பங்கெடுக்கவில்லை. கடாபி இருந்திருந்தால் நிச்சயம் பங்கேற்றிருப்பார்??? 

ஒற்றுமை என்றும் சொல்லலாம், ஐரோப்பாவில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினால் ஏற்பட்ட உரசலினால் அடிமனதில் கிழம்பிய அச்சம் என்றும் சொல்லலாம். :)

இது ஒரு ஆரம்பமே. ஐரோப்பா எப்படிச் சமாளிக்குது என்று போகப் போகப் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்  மிகைபடுத்தப்பட்ட  ஊடக  எண்ணிக்கை வெறும்  சினிமா  :D

 

கலந்து  கொண்டது  ஏழு லட்சம்  மக்கள் தான்  என்கிறது  உள்ளூர்  தகவல்கள்  :icon_idea:

10606266_920671304610141_789676685402385

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை என்றும் சொல்லலாம், ஐரோப்பாவில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினால் ஏற்பட்ட உரசலினால் அடிமனதில் கிழம்பிய அச்சம் என்றும் சொல்லலாம். :)

இது ஒரு ஆரம்பமே. ஐரோப்பா எப்படிச் சமாளிக்குது என்று போகப் போகப் பார்க்கலாம். 

 

 

மிகவும் தாழ்ந்து போயிருந்த

பிரெஞ்சு ஐனாதிபதி பற்றிய பிரெஞ்சு மக்களின் கணக்கீடு

இந்த சம்பவம் சார்ந்து அவரது நடவடிக்கையை

88 வீத பிரெஞ்சு மக்கள் சரியாக செயற்பட்டார் என வாக்களித்துள்ளதானது

அவரது வாக்கு வங்கியையும் உயர்த்துமா??

வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் பார்க்கலாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.