Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கியமான கொலைகளுக்கு கோத்தபாயவே காரணம்; மேர்வின் சில்வா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mervyn-Silva-4.jpg-233x300.jpeg

 

முக்கியமான கொலைகளுக்கு, கோத்தபாயவே காரணம்; மேர்வின் சில்வா.

 

நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும் பாதுகாப்பு  அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச காரணம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 
இரு சந்தர்ப்பங்களில் நான் ஊடகங்களுக்கு எதிராக கூடாத வசனங்களை பயன்படுத்திவிட்டேன். நான் யோசித்து, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவற்றை கூறவில்லை.
 
என் அடிமனத்திலிருந்த கோபத்தினாலும் எனது ஆவேசமான செயற்பாட்டினாலும் நான் அவ்வாறு நடந்துகொண்டேன். அதற்காக சகல ஊடகங்களிடமும் முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன்.
 
நான், ருகுணு பெலியத்தையைச் சேர்ந்த நல்லதொரு சிங்கள பௌத்தன். என்னிடம் வைராக்கியம் இல்லை. ருகுணுவை சேர்ந்தவன் என்பதனால் வைராக்கியம் இருக்காது. 
 
ஆனால், வைராக்கியம் வைத்துவிட்டால் கடுமையாக காயப்படுத்தாமல் விடவும் மாட்டேன். இந்த கோட்டாபயவும் பசிலும் என்னை கீறி, கீறி காயப்படுத்தியவிட்டனர். 
 
என்னுடைய சட்டத்தரணியான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் மருமகனுடன் சென்றே இந்த முறைப்பாட்டை செய்தேன். நான், பெலியத்தையைச்சேர்ந்தவன் என்பதனால் இதற்கு பின்னர் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும். 
 
என்னுடைய குடும்பத்தினருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும். நான் செத்தால் நரியாக சாகமாட்டேன். சிங்கமாகவே சாகுவேன். எனக்கு யாருடனும் தனிப்பட்ட வைராக்கியம் இல்லை.
 
நானும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் எனது மாமாவின் காரில் ஒன்றாகதான் கொழும்புக்கு வந்தோம். நான் வேலை செய்வதற்கு, உருப்படியான அமைச்சு ஒன்றுகூட வழங்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
களனி பிரதேச சபைக்குள் சூழ்ச்சிகளை செய்து என்னை அங்கிருந்து விரட்டுவதற்கு பசில் ராஜபக்ஷ முயற்சித்தார். நான் அப்போது இருந்தே தயாராகிவிட்டேன்.
 
லசந்த விக்ரமதுங்க, (சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்), பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர (முன்னாள் அமைச்சர்), ராகமை லொக்கு சியா, வெள்ளை வான் சம்பவங்கள் ஆகியவற்றின் ஆசிரியர் கோட்டாபய ராஜபக்ஷ, ஆம் இதனை நான் பொறுப்புடன் தான் கூறுகின்றேன்.
 
சிரச மற்றும் சியத்த ஆகிய ஊடகநிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிந்துவைத்திருந்தார்.
 
உண்மையை கூறினால் நான் செத்தாலும் பரவாயில்லை. உண்மையை கூறுவேன். எனக்கு எதிராக ஒரு சிறு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கமுடியாது. நான் பெண்களை திருடவில்லை.
 
ஊழல் பேர்வழியான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ஷவுக்கு டுபாயில் மெரியட் என்றொரு பெயரில் ஹோட்டல் இருக்கின்றது. உடவல வீதி தனமன்விலவில் பெரிய ஹோட்டல் ஒன்று இருக்கிறது. அது அவருடைய மருமகனுடையது. கிட்டத்தட்ட 20 அல்லது 13 ஏக்கர் விசாலமானதாகும்.
 
மல்வானையில் 23 ஏக்கரில் வீடொன்று இருக்கின்றது. கம்பஹா ஒருத்தொட்டவில் விசாலமான காரியாலயமொன்றும் இருக்கின்றது. இவை இரண்டையும் தனியார் நிறுவனங்கள் இரண்டே நிர்மாணித்துக் கொடுத்தன.
 
கோல்பேசில், அவருடைய மனைவிக்கு பங்குகள் இருக்கின்றன. திவிநெங்கும திட்டத்தின் ஊடாக 400 கோடி ரூபாய் சூரையாடப்பட்டது. வங்கியை உடைத்தால் சிறைக்கு செல்லவேண்டும். எனினும், திணைக்களங்களிலிருந்து வங்கிக்கு பணத்தை பாதுகாப்பாக எடுத்துவருவதாக கொண்டுசெல்லப்படுகின்ற பாதுகாப்பு பெட்டகங்களை பயன்படுத்தி திறைச்சேரி உடைக்கப்பட்டது.
 
அந்த பணம் யாவும், பசில் ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டன. இவையாவும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பயந்துகொண்டிருக்கின்றார்கள். நான் பயப்பிடமாட்டேன். அதனால் தான் உண்மையை கூறுகின்றேன். இந்த ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் நாட்டுமக்களுக்கு நன்கு தெரியும்.
 
நல்லாட்சியுடன் நான் முன்னரே இணைந்துகொண்டேன். நானும் ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரே முதன்முதலில் கலந்தாலோசித்தோம். என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது நம்பிக்கையிருக்கின்றது. அரசியல் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல் மோசடிகள் இன்றி நல்லாட்சியை ஏற்படுத்துவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.
 
பழிவாங்க மாட்டார்கள், வரலாற்றில் பதியும் படி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவார்கள். ஊடக சுதந்திரம் கிடைக்கும். தவறிழைத்தோருக்கு தண்டனை கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நன்றி உதயன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் கொஞ்சம் தட்டின கேஸ் எண்டாலும் கோத்தா, பசில் பற்றி கொஞ்சம் தகவல் எடுக்கலாம் போல கிடக்கு! எனக்கு மகிந்தவை விட கோத்தாவை கெஞ்சக்கெஞ்ச முட்டிக்கு முட்டி தட்டவேணும்!

D54054d.jpg
 
பல்வேறுபடுகொலைகள் ஆட்கடத்தல்கள், வெள்ளை வேன் கலாசாரம் மற்றும் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றச் செயல்களுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பல ஊழல்மோசடிகளில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் தொடர்பு உள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
 
இவர்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தான் கொலை செய்யப்பட்டால் எதற்கும் அஞ்சப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
 
கடந்த காலத்தில் நடைபெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்விடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர், கடந்த காலத்தில் இடம்பெற்ற முக்கிய கொலைகளுக்கு இவர்கள் பொறுப்பு கூற வேண்­டு­மென்றும் கூறி­யுள்ளார். 
 
புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் மேற்­கொண்ட முறைப்­பாட்­டை­ய­டுத்து மேர்வின் சில்வா ஊட­க­வி­ய­லாளர் மத்­தியில் கருத்து தெரி­விக்­கையில்,
 
கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் நடந்­த­தாகக் கூறப்­படும் குற்றச் செயல்கள் பற்­றிய தக­வல்­களை குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­திடம் வழங்­கி­யுள்ளேன்.
 
இது பழி­வாங்கல் அல்ல. ஆனால், குறித்த இரு­வரும் என்னைப் பழி­வாங்­கினர். கடந்த காலங்­களில் நடந்த முக்­கிய கொலை­க­ளுக்கு பாது­காப்புத் துறையில் சக்­தி­வாய்ந்­த­வ­ராக விளங்­கிய இவரே பொறுப்­புக்­கூற வேண்டும்.
 
இவற்றைச் சொல்­வதால் சில நேரம் எனது உயி­ருக்கும் ஆபத்து ஏற்­ப­டலாம். நான் இறந்­தாலும் இறப்­பது நரியைப் போன்­றல்ல. சிங்­கத்தைப் போன்றே இறப்பேன்.
 
எனக்கு சேவை­யாற்ற சரி­யான அமைச்­சொன்றை வழங்­க­வில்லை. உண்­மையைக் கூறு­வதால் உயிர் போனாலும் பர­வா­யில்லை. எனக்கு எதி­ராக எப்­ப­டி­யான குற்­றச்­சாட்­டையும் முன்­வைக்­கலாம்.
யுத்­தத்தை வென்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நல்­லாட்­சியைச் சரி­வர செய்­தி­ருந்தால் மைத்­தி­ரி­பால சிறி­சேனா கட்­சி­யி­லி­ருந்து சென்­றி­ருக்­க­மாட்டார்.
 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் அர­சி­யலில் முதிர்ச்­சி­ய­டைந்­த­வர்கள் என்­பதால் நாட்­டுக்கு நல்­லாட்­சியைக் கொண்டு வரு­வார்கள் என நம்­பு­கிறேன். இதே­வேளை, குறித்த அமைச்சர் திவி­நெ­கும மூலம் 600 கோடி ரூபாவைக் கொள்­ளை­யிட்­டுள்ளார்.
சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் கொலைக்கும், பாது­காப்புத் துறையில் சக்­தி­வாய்ந்­த­வ­ராக விளங்­கி­ய­வ­ருக்கும் தொடர்­புள்­ள­தாக நான் அறிவேன். மேலும் பார­த லக் ஷ்மன் பிரே­மச்­சந்­திர மற்றும் ராகம லொக்கு சீயா ஆகி­யோரின் கொலை­க­ளு­டனும் அவர் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக நான் அறி­கிறேன்.
 
இலங்­கையில் கடந்த காலங்­களில் நடந்த அனைத்துக் கொலை­க­ளு­டனும் அவ­ருக்கு தொடர்­புள்­ளது. அவர் வெள்ளை வேன் கலா­சா­ரத்தின் ஆசி­ரியர் என்றே நான் கரு­து­கிறேன். அவர் அறிந்தே இந்த அனைத்துக் கொலை­களும் நடந்­தன. இதனை நான் பொறுப்­புடன் கூறு­கிறேன். நான் யாருக்கும் பயப்­ப­ட­வில்லை. தேவை­யென்றால் என் னைக் கொலை செய்­வார்கள்.
 
இவை அனைத்­தையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நன்கு அறிவார். கடந்த காலங்­களில் ஊட­கங்­க­ளுக்கு முன் னால் என்னால் தவ­றான வச­னங்கள் கூறப்­பட்­டி­ருந்­தன. உண்­மையில் அதெல்லாம் நானாக நினைத்துக் கூறி­ய­தல்ல. எனது கோப சுபா­வத்தால் கூறி­யது. அது தொடர்­பாக நான் முழு ஊட­கங்­க­ளிடம் மன்­னிப்பைக் கேட்­டுக்­கொள்­கின்றேன்.
 
நான் பெலியத்தையைச சேர்ந்தவன். சிறந்த சிங்கள பௌத்தன். என்னிடம் வைராக்கியம் கிடையாது. ஆனால் எனது சுபாவத்தை சீண்டிப் பார்த்தால் காயத்தைச் சந்திக்க நேரி டும். கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் பிரதானிகள் இருவர் என்னைச் சீண்டினர். இதனால் அவர்களுக்கு எதிராக முறையிட்டுள்ளேன்.
 
கோத்தா, பசில் தொடர்பான அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் மேர்வின் 
 
 
 

ராஜபக்சக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ததன் காரணமாக மேர்வினுக்கு எதிராக விசாரணைகளை நிறுத்தக் கூடாது 

 

Sunilhandunnetti_CI.jpg

 



மஹிந்தர ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக முறைப்பாடு செய்ததன் காரணமாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான விசாரணைகளை நிறுத்தக்கூடாது என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.


மேர்வின் சில்வா நேற்றைய தினம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.


கொலைச் சம்பவங்கள் வெள்ளைவான் கடத்தல்களுடன் கோதபாய ராஜபக்ஸவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார். பசில் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.


இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கிரமமான அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். உரிய விசாரணைகளின்றி மேர்வின் சில்வாவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேர்வின் சில்வாவின் குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115654/language/ta-IN/article.aspx

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழழும் கூட மிதிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் மரத்தில் கட்டி வைத்து ஒருவரை அடித்த நல்ல பௌத்தன். கோத்தாவையும் மேர்வினையும் விசாரிக்க முதலும் பின்னும் உள்ளுக்குள் போட்டு நாலு தட்டு தட்ட வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான கொலைகளுக்கு கோத்தபாயவே காரணம்.   சொல்வது மேர்வின் சில்வா. :(

  • கருத்துக்கள உறவுகள்

மோ்வின் நீயுமா? இலங்கை சுப்பிரமணிய சுவாமி என்று சாெல்லலாமா இவரை? நவநீதம்பிள்ளையாருக்கு வரன்பாத்தவராயிற்றே. பயத்தில காெஞ்சம் அதிகமாய் பேசுறாா்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.