Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துக்கு உணவு அனுப்ப இந்தியா விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு உணவு அனுப்ப இந்தியா விருப்பம்

* தமிழ்நாட்டிலிருந்து குடாநாட்டு வர்த்தகர் மூலம் விநியோகத்தை மேற்கொள்ள ஆயத்தம்

குடாநாட்டிலுள்ள 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினி அவலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அந்த மக்களுக்கு மிக அதிகளவில் தேவைப்படும் அரிசி, சீனி, குழந்தைகளுக்கான பால் மா உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்திருக்கிறது.

அதுவும் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் அருகிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இந்த உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு வசதி செய்து கொடுக்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் கொழும்புக்குத் தெரியப்படுத்தி அதன் அனுமதியுடன் தமிழ் வர்த்தகர்களூடாக அரிசி, சீனி, குழந்தைகளுக்கான உணவு வகைகளை அனுப்ப உள்ளதாகவும் அறியவருகிறது.

உள்நாட்டில் ஏற்பட்ட விலை அதிகரிப்பால் அண்டைய நாடுகளுக்கான அரிசி, சீனி, பருப்பு வகைகளின் ஏற்றுமதியை இந்தியா மட்டுப்படுத்தியிருந்த போதிலும், இலங்கை உட்பட சில நாடுகளுக்கான கட்டுப்பாட்டு நீக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திற்கு இந்தியப் பொருட்கள் எப்போது அனுப்பப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

யாழ். குடாநாட்டின் முன்னணி காவலரண்களை மீறுவதற்கு விடுதலைப்புலிகள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுத் தெரிவித்து இலங்கை அரசாங்கம் ஏ௯ வீதியை மூடியதையடுத்து குடாநாட்டில் மோசமான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

ஏ௯ வீதியை திறக்குமாறு விடுதலைப்புலிகள் உட்பட பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தல்கள் விடுக்கப்படுகின்ற போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமூடாக பொருள் விநியோகத்தை கொழும்பு மேற்கொண்டுள்ள போதிலும் அது குடாநாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. இந்த விடயம் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கவலை தெரிவித்திருக்கிறது. அதிகரித்துச் செல்லும் வன்முறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏ௯ வீதி மூடியதால் ஏற்பட்ட உணவு விநியோகத்தடை அவர்களின் நெருக்கடியை மேலும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

குடாநாட்டுக்கு 8 ஆயிரம் தொன் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 11 ஆயிரம் தொன் உணவுப் பொருட்கள் மாதமொன்றுக்கு தேவையாகும். ஆனால், கடந்த 3 மாதங்களில் கொழும்பிலிருந்து கப்பலின் மூலம் 14 ஆயிரம் தொன் உணவுப் பொருட்களே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்தது. இந்த மூன்று மாதங்களில் 19 ஆயிரம் தொன் உணவுப் பொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஏ௯ வீதியை மூடியதால் யாழ். குடாநாட்டிலுள்ள தமிழ் மக்களே மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை சகலருமே ஏற்றுக் கொள்கின்றனர்.

அரிசி, சீனி, குழந்தைகளுக்கான உணவு ஆகியவற்றை விநியோகிக்கும் இந்தியாவின் தீர்மானத்திற்கு குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் இலங்கை அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

இதேவேளை, தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்கள் சென்றாலும் அது 1987 காலப்பகுதியில் புதுடில்லி மேற்கொண்ட அச்சுறுத்தும் பாணியிலான இராஜதந்திர நடவடிக்கையை ஒத்த செயற்பாடாக இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப்பகுதியில் கொழும்பின் அங்கீகாரமின்றியே இந்திய விமானப்படை விமானங்கள் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொட்டலங்களை போட்டன. அதன்பின் கொழும்பின் அனுமதியுடன் உணவுப் பொருட்கள் படகுகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

தற்போதைய சூழ்நிலையில் புதுடில்லி மட்டத்தில் ஏற்பட்டிருப்பது மனிதாபிமான ரீதியான கரிசனை மட்டுமேயென்றும் தெரிவிக்கப்படுகிறது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

எமது தமிழ் ஊடகங்கள் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவன செய்தியை எடுத்துப் போட்டு மீண்டும் இந்தியா தமிழருக்கு உதவி செய்யப் போவதான மாயையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த செய்தியானது எமக்கு மிகவும் ஆபத்தான செய்தியாக அமையப்போகின்றது.

எப்படியெனில், மேற்படி ஊடகமானது பல செய்திகளை தனது எண்ணப்படி எழுதி அதாவது, இந்திய அரச மட்டங்களில் ஆராயப்படுகிறது, ஊகிக்கப்படுகிறது என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளிக்கொணர்ந்து தமிழர்களினதும் தமிழ் ஊடகங்களினதும் மனநிலையை அறிய நடத்தும் உளவியல் ஊடகப்போரை நடத்துகிறது.

மேற்படி செய்தி நிறுவனமானது முன்னரும் பல தடவைகள் ஊகச் செய்திகளை வெளிக்கொணர்ந்திருந்தது இங்கே நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

மேலும் அண்மைக்காலமாக முன்னாள் "றோ" அதிகாரியான இராமன் எழுதும் கட்டுரைகளும் வித்தியாசமான சிந்தனையோட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதாவது, பாகிஸ்தானை அவர் குறிவைத்து தாக்கி எழுதிவரும் கட்டுரையானது மேன்போக்காக எமக்கு ஆதரவாக தென்பட்டாலும், அவர் கட்டுரைகளின் உட்பகுதிகளில் விடுதலைப் புலிகளை கடுமையாக சாடியே வருகின்றார்.

இதனையும் எமது ஊடகங்கள் பல எடுத்துப் போட்டு அவரை பெரிதுபடுத்தி வருகின்றன. அவர் இன்னும் புலிகளை எதிர்க்கும் தனது சிந்தனையை மாற்றாதவராகவே இருக்கின்றார்.

யாழ்ப்பாணத்துக்கு இந்தியா கப்பல் மூலம் உணவு அனுப்பவுள்ள செய்தியை உதயன், தினக்குரல், வீரகேசரி போட கொப்பியடிப்பதனையே கொள்கையாக வைத்திருக்கும் எமது தமிழ் இணையத்தளங்கள் அச்செய்தியின் பாதகத்தன்மையை உணராது எடுத்துப் போட்டிருக்கின்றன.

எமது தமிழ்த் தேசிய ஊடகங்களான நாளேடுகள் செய்யும் இக்கூத்துக்கு தமிழ் இணையத்தளங்களும் துணைபோவதானது வேதனைக்குரிய விடயம். அதேவேளை புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் இதனை பெரிதுபடுத்தி தமது செய்திகளில் வெளியிட்டிருக்கின்றன.

மீண்டும் ஒரு இந்தியத்தலையீட்டை நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது ஒவ்வொரு செய்கையின் மூலம் வெளிக்கொண்டு வருகின்றோம். இதனை நாம் முற்றாக தவிர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இந்தியத் தலையீடானது மீண்டும் எமது போர் அரங்கிற்குள் வருமானால், மேலும் நாம் 10 வருடங்கள் போராட்டத்தில் பின்னிற்க வேண்டிய துரதிர்ஸ்டவசமான நிலைக்கு செல்ல வேண்டி வரும்.

இந்தியா என்றுமே எமக்கு ஆதரவு தரப்போவதில்லை. ஆதரவு என்று ஒன்றை இந்தியா எக்காலமும் மனதளவில் கூட தராது. அப்படி தருவதாயின் அதற்கு ஏதாவது அதிசயங்கள் நிகழ வேண்டும். அப்படியான அதிசயங்கள் எதுவும் இதுவரை நடக்கவில்லை. ஆகவே எப்போதும் இந்தியா தொடர்பில் நாம் ஒரு தெளிவான சிந்தனையோடு இருக்க வேண்டும்.

உளுத்துப்போன மகாபாரதத்தையும், இராமயாணத்தையும் பின்பற்றும் இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.

மேற்குலக சிந்தனைகள் மாறுகின்ற அதேவேளை இந்தியாவின் கொள்கைகளைப் பாருங்கள். அது இன்னும் மாறாதா சிந்தனையில் பழையனவற்றிலேயே இருக்கின்றது. இந்தியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை கோட்டை விட்டாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான தனது கொள்கையை ஒருபோதும் மாற்றாது என்பதனை மீண்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனமானது "றோ" வின் பின்புலத்துடன் இயங்கும் ஒரு செய்தி நிறுவனம் என்பதனை தமிழ் ஊடகங்கள் வெகுவிரைவில் அறிந்து கொள்ளும் காலம் மிக விரைவில் உருவாகும்.

உதயன் இதை சரியான கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறது போல் உள்ளது.

குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை இந்தியாவிலிருந்து தருவிக்க முயற்சி

யாழ்.வர்த்தகர்கள் தமிழ் நாட்டில் கொள்வனவு செய்யும் வழிமுறை ஆராய்வு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருள்களின் பற்றாக்குறையை நீக்கும் பொருட்டு தமிழகத்தில் இருந்து வர்த்தக ரீதியில் இங்கு அவற்றைக் கொண்டு வரும் திட்டம் ஒன்று பரிசீலனையில் உள்ளதாக அறியவருகிறது. இது குறித்து இந்திய அரசு கொழும்பு அரசுடன் தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குடாநாட்டு மக்களுக்கு உணவுப் பொருள்களை அனுப்பி, மக்களின் பட்டினியைப் போக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதன் பெறுபேறாக யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள் தமிழகத்தில் உணவுப் பொருள் களை வர்த்தக முறையில் கொள்வனவு செய்து குடாநாட்டுக்கு எடுத்துவந்து, வழங்கும் திட்டம் குறித்து இப்போது இந்தியத் தரப்பில் ஆராயப்பட்டு வருவதாக சென்னை யில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடாநாட்டுக்கு உணவுப் பொருள்களை தமிழகத்திலிருந்து அனுப்புவதற்கு இந்திய அரச மட்டத்தில் விருப்பம் இருந் தாலும் கொழும்பு அரசாங்கம் பாதக உணர்ச்சி நிலையில் இருப்பதால் அரசாங்கத்திற்கு அரசாங்கம் என்ற வகையில் உணவுப் பொருள்களைத் தருவிப்பது சாத்தியமற்றது என்று விடய மறிந்த வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன. மேலும் தமிழ் நாட்டில்இருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தருவிக் கப்படும் பட்சத்தில் அவை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோ கிக்கப்படுவது வரவேற்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. இத்தகைய ஒருசூழ்நிலையிலேயே யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள் தமிழ் நாட் டில் பொருள்கள் கொள்வனவு செய்து இங்குகொண்டுவரும் வழிமுறை குறித்து இந்தியத் தரப்பில் இப்போது சாதகமாகப் பரிசீலனை செய்யப்படுவதாக அறியப் படுகின்றது. பொருள்களை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு செஞ்சிலுவைச் சர்வதேச குழு மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடும் யோசனை ஒன்றும் உள்ளதாக அறி யப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, சீனி, பருப்பு, பால்மா, குழந்தைகளுக்கான உணவு வகைகளை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல இங்குள்ள சில தடைகளைத் தளர்த்தி உதவ புதுடில்லி அரசு விருப்பம் கொண்டுள்ளதாக சென்னைத் தகவல்கள் தெரிவித்தன. தமிழ்நாட்டிலிருந்து மேற்படி உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு இருக்கிறது. உள்ளூர்ச் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வதை தடுக்கும் முகமாகவே ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கை உட்பட ஒருசில நாடுகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை அரசு தமிழகத்தில் இருந்து உணவுப் பொருள்களை கொண்டுவரும் விடயத்தில் பாதக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உள்ளதால் அதன் விருப்பம் இன்றி இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவது சாத்தியமா என்பது கூர்ந்து ஆராயப்படவேண்டிய விடயம் ஒன்றென விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (அ)

http://www.uthayan.com/Pages/news/today/01.htm

--

இந்துஸ்தான் ரைம்ஸ் அதே செய்தியை:

India set to supply food to Jaffna but...

PK Balachandran

Colombo, November 1, 2006|18:58 IST

India is all set to supply food to the beleaguered and starving Jaffna, but the unresolved issues of transport and security are holding up movement, an official source in New Delhi told Hindustan Times.

India has made it clear to the Sri Lankans that they will have to arrange vessels to carry the cargo and also guarantee their security.

In September itself, New Delhi had lifted the ban on the export of sugar and dhal and offered Sri Lanka a one-time supply of 6,000 tonnes of sugar and 2,000 tonnes of dhal to help Colombo tide over the crisis in Jaffna which was precipitated by the war and the closure of the A9 main supply route from the south.

Given the huge controversy over the "food drop" which preceded the Indian military intervention in Sri Lanka in July 1987, India did not want to take the food to Jaffna itself.

It wanted the Sri Lankan government or Sri Lankan private traders or an international agency, to undertake transport and distribution.

Shortage of ships and lack of guarantee from LTTE

But the Sri Lankan government (and the private traders) have been unable to find ships to carry the cargo.

They have also been unable to give a guarantee of security because the LTTE has said that it is against sea transport and has been insisting that the Sri Lankan government open the land route, the A9 highway, on the grounds that it is the shortest, easiest and the cheapest route.

But Colombo has said a firm "no" to the LTTE in this matter, on the plea that opening the A9 will be a great security risk, and that an open A9 will only help the LTTE extort millions of rupees from the users through its illegal taxes.

The government insists that the LTTE should allow unhindered sea transport and cooperate with the International Committee of the Red Cross (ICRC), which would be escorting the vessels.

But the LTTE would not give any such guarantee. And, in the absence of a guarantee from the rebels, the ICRC has refused to provide escort.

Despite the difficulties, the government has sent some food and other essentials by sea with under naval escort. But there aren't enough vessels to keep up the supply.

As on date, only a fourth of the needs of Jaffna's six lakh residents are being met. There is a looming humanitarian crisis there.

Two ships bought, but security issue remains

On Wednesday, the government signed a deal to purchase two vessels. And there were plans to buy one more with a capacity of 8,000 tonnes, the Defence Spokesman Keheliya Rambukwella told Hindustan Times.

But the issue of security remains. Security has to be assured by the LTTE. Will it give such an assurance?

The LTTE has made the opening of the A9 a prestige issue. The Geneva II parleys late last month, had failed over this issue.

Given the fact that Colombo continues to reject the demand to open the road, it is highly unlikely that the LTTE will give up or modify its stand.

But, at the same time, the LTTE has to think of the plight of the Tamils of Jaffna. How long can it look on while these people starve?

Traders say deal can be worked out

However, private traders who had been importing food for Jaffna from India in the past, are confident that the issues can be sorted out to every party's satisfaction.

They say that if the government gives the nod, an arrangement with the LTTE can be worked out.

http://www.hindustantimes.com/news/7598_18...67,00050002.htm

தினக்குரலிற்கு இதுவல்ல முதல் முறை. ஆனால் அவர்கள் உண்மையில் விளக்கம் இல்லாது ஏமாற்றுப்படுகிறார்களா இல்லை வேண்டும் என்றே திட்டமிட்டு செய்கிறார்களா என்பது இப்படியான விடையங்களில் வரலாம்.

ஆனால் ஜெனிவா பேச்சில் வடக்கு - கிழக்கு பிரிப்பு முக்கிய இடத்தை பிடிக்கும் என்று ஆசிரியர் தலையங்கத்தை பார்க்கும் பொழுது.... :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராஜதந்திரமும் யாழ்ப்பாண நிலையும்!

யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஆறு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினி அவலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு மிக அதிகளவில் தேவைப்படும் பொருட்களை நேரடியாகவே வழங்குவதற்கு இந்தியா முன்வந்திருப்பது, இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பிரசாரங்கள் பிசுபிசுத்துப் போய்விட்டன என்பதையே உணர்த்துகின்றது. யாழ்ப்பாணத்துக்குப் போதுமான உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன எனவும் இரண்டு வாரத்துக்குப் போதுமான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன எனவும் அரசாங்கம் தெரிவித்துவரும் நிலையிலேயே இந்திய அரசாங்கம் உணவுப் பொருட்களை நேரடியாக அனுப்பிவைப்பது தொடர்பாக இப்போது கொழும்புடன் தொடர்பு கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் அருகிலுள்ள தமிழ் நாட்டிலிருந்து இந்த உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்து கொடுக்க இந்தியா ஆயத்தமாகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி,சீனி, குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றையே இவ்விதம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்க இந்தியா விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

யாழ்ப்பாணத்துக்கு இந்திய உணவுப் பொருட்கள் எப்போது அனுப்பப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையாயின

எமது தமிழ் ஊடகங்கள் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவன செய்தியை எடுத்துப் போட்டு மீண்டும் இந்தியா தமிழருக்கு உதவி செய்யப் போவதான மாயையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த செய்தியானது எமக்கு மிகவும் ஆபத்தான செய்தியாக அமையப்போகின்றது.

எப்படியெனில், மேற்படி ஊடகமானது பல செய்திகளை தனது எண்ணப்படி எழுதி அதாவது, இந்திய அரச மட்டங்களில் ஆராயப்படுகிறது, ஊகிக்கப்படுகிறது என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளிக்கொணர்ந்து தமிழர்களினதும் தமிழ் ஊடகங்களினதும் மனநிலையை அறிய நடத்தும் உளவியல் ஊடகப்போரை நடத்துகிறது.

மேற்படி செய்தி நிறுவனமானது முன்னரும் பல தடவைகள் ஊகச் செய்திகளை வெளிக்கொணர்ந்திருந்தது இங்கே நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

மேலும் அண்மைக்காலமாக முன்னாள் "றோ" அதிகாரியான இராமன் எழுதும் கட்டுரைகளும் வித்தியாசமான சிந்தனையோட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதாவது, பாகிஸ்தானை அவர் குறிவைத்து தாக்கி எழுதிவரும் கட்டுரையானது மேன்போக்காக எமக்கு ஆதரவாக தென்பட்டாலும், அவர் கட்டுரைகளின் உட்பகுதிகளில் விடுதலைப் புலிகளை கடுமையாக சாடியே வருகின்றார்.

இதனையும் எமது ஊடகங்கள் பல எடுத்துப் போட்டு அவரை பெரிதுபடுத்தி வருகின்றன. அவர் இன்னும் புலிகளை எதிர்க்கும் தனது சிந்தனையை மாற்றாதவராகவே இருக்கின்றார்.

யாழ்ப்பாணத்துக்கு இந்தியா கப்பல் மூலம் உணவு அனுப்பவுள்ள செய்தியை உதயன், தினக்குரல், வீரகேசரி போட கொப்பியடிப்பதனையே கொள்கையாக வைத்திருக்கும் எமது தமிழ் இணையத்தளங்கள் அச்செய்தியின் பாதகத்தன்மையை உணராது எடுத்துப் போட்டிருக்கின்றன.

எமது தமிழ்த் தேசிய ஊடகங்களான நாளேடுகள் செய்யும் இக்கூத்துக்கு தமிழ் இணையத்தளங்களும் துணைபோவதானது வேதனைக்குரிய விடயம். அதேவேளை புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் இதனை பெரிதுபடுத்தி தமது செய்திகளில் வெளியிட்டிருக்கின்றன.

மீண்டும் ஒரு இந்தியத்தலையீட்டை நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது ஒவ்வொரு செய்கையின் மூலம் வெளிக்கொண்டு வருகின்றோம். இதனை நாம் முற்றாக தவிர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இந்தியத் தலையீடானது மீண்டும் எமது போர் அரங்கிற்குள் வருமானால், மேலும் நாம் 10 வருடங்கள் போராட்டத்தில் பின்னிற்க வேண்டிய துரதிர்ஸ்டவசமான நிலைக்கு செல்ல வேண்டி வரும்.

இந்தியா என்றுமே எமக்கு ஆதரவு தரப்போவதில்லை. ஆதரவு என்று ஒன்றை இந்தியா எக்காலமும் மனதளவில் கூட தராது. அப்படி தருவதாயின் அதற்கு ஏதாவது அதிசயங்கள் நிகழ வேண்டும். அப்படியான அதிசயங்கள் எதுவும் இதுவரை நடக்கவில்லை. ஆகவே எப்போதும் இந்தியா தொடர்பில் நாம் ஒரு தெளிவான சிந்தனையோடு இருக்க வேண்டும்.

உளுத்துப்போன மகாபாரதத்தையும், இராமயாணத்தையும் பின்பற்றும் இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.

மேற்குலக சிந்தனைகள் மாறுகின்ற அதேவேளை இந்தியாவின் கொள்கைகளைப் பாருங்கள். அது இன்னும் மாறாதா சிந்தனையில் பழையனவற்றிலேயே இருக்கின்றது. இந்தியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை கோட்டை விட்டாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான தனது கொள்கையை ஒருபோதும் மாற்றாது என்பதனை மீண்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனமானது "றோ" வின் பின்புலத்துடன் இயங்கும் ஒரு செய்தி நிறுவனம் என்பதனை தமிழ் ஊடகங்கள் வெகுவிரைவில் அறிந்து கொள்ளும் காலம் மிக விரைவில் உருவாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்குக்கு 5,500 தொன் பொருள்களை

இலவசமாக வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானம்

கொழும்புக்கான பிரதித் தூதர் மாணிக்கம் "உதயனு'க்கு தகவல்

வடக்கு கிழக்கில் பட்டினியால் வாடும் மக்களுக்கு 5 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் உணவுப் பொருள் களை இலவசமாக வழங்க இந்திய அரசு தீர் மானித்துள்ளது என்றும், இலங்கை அரசு கப்பல்களை ஏற்பாடு செய்துகொடுத்ததும் இப்பொருள்கள் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு வடக்கு கிழக்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுமெனவும், கொழும்பி லுள்ள இந்திய பிரதித்தூதர் ஏ. மாணிக்கம் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.

-உதயன்

கொழும்புக்கு தமிழனை அழிக்க ஆயுதம், வடக்கிற்கு சாப்பாடு

கொழும்புக்கு தமிழனை அழிக்க ஆயுதம், வடக்கிற்கு சாப்பாடு

À¢û¨Ç¨ÂÔõ ¸¢ûÇ¢ ¦¾¡ðʨÄÔõ ¬ðÎÈÐ

±ýÚ ¦º¡øÖÈÐ þ¨¾ò¾¡§É¡...?

சாப்பிட்டு உயிரோட இருந்தாத்தானே அழிக்க ஆயுதம் வி;க்கலாம். அது சரி சாப்பாட்டோட ரோவும் வருமோ?

ஈழத்திலிருந்து

ஜானா

ஐயோ...... மீண்டும் தமிழனுக்கு வாய்க்கரிசியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.