Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாம் நிறவாதிகள் என ஒப்புக்கொள்ளும் 35 வீதமான பிரஞ்ச்சுக்காரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாம் நிறவாதிகள் என ஒப்புக்கொள்ளும் 35 வீதமான பிரஞ்ச்சுக்காரர்கள் : குமணன்

police_france_state1.jpg

சார்லி எப்டோ கொலையாளிகளின் அதே உத்வேகத்துடன் பிரஞ்சு அரசும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் நிராயுதபாணிகளான மக்கள் மீது பயங்கரவாதக் கருத்துக்களைப் பரப்ப ஆரம்பித்துவிட்டன. குறிப்பக வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகவே கூச்சமின்றி ஊடகங்களும் அதிகாரவர்க்கமும் முன்வைக்கின்றன. பிரான்சில் வாழும் அனைத்து வெளிநாட்டவர்களையும் குறிவைக்கும் பிரஞ்சு ஏகாதிபத்தியம் அப்பாவி மக்கள் மத்தியில் நச்சுக் கருத்தைப் பரப்பி வருகின்றன.

பிரஞ்சு நாட்டு அரசு இயந்திரத்தின் ஒவ்வொர் அங்கத்திலும் ஏற்கனவே இழையோடிய நிறவாதம் இன்று வியாபித்துப் படர்ந்து ஒவ்வொரு மனிதனதும் கொல்லைப்புறங்களிலும் குடிபுகுந்து அச்சுறுத்துகிறது.

பிரான்சில் பிறந்து வளர்ந்த வெளி நாட்டவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் இருளடைந்துள்ளது என பாரிஸ் நகரில் வசிக்கும் அறிஞர் டொமினில் லெவி கூறுகின்றார். பிரான்சிஸ் நிறவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிட முஸ்லிம் லீக் இன் உப தலைவரான இவான் ரைட்லி கூறுகிறார்.

பிரான்சில் கல்விகற்று முதுமாணி பட்டப்படிப்பை முடித்திருக்கும் ஈழத் தமிழ்த் தாய் தந்தையருக்குப் பிறந்த பெண் ஒருவர் பல்கலைக் கழகக் காலத்திலிருந்தே தான் நிறவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். சிறந்த பெறுபேறுகளைக் கடந்த வருடம் பெற்றுக்கொண்ட அவர் இன்னும் எந்த வேலையிலும் சேர்ந்துகொள்ள முடியாமலிருப்பதற்கு நிறவாதமே காரணம் என்கிறார்.

நிதித் துறையில் பயிற்சி தனது பட்ட்ப்படிப்பை நிறைவு செய்த அவர் வங்கியி ஒன்றின் தலைமையகத்தில் பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். அங்கு இயக்குனராக வேலைபார்த்த வெள்ளையர் இவ்வாறன வேலை வெளி நாட்டவர்கள் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் வேறு வேலைகளைத் தேடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

அருவருக்கத்தக்க பிரஞ்சு ஏகாதிபத்தியதியத்தின் சுரண்டல் அமைப்பு உலகில் வறுமையையும் போரையும் ஏற்படுத்தக் காரணமகியது. இதுவே அகதிகளையும் வறுமையையும் உற்பத்தி செய்தது. இன்று தமது நாட்டில் தஞ்சமடைந்தவர்கள் மீதும் வெறித்தனமாக தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

2013 இல் மட்டும் 1274 நிறவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

பிரன்சில் வாழும் 35 வீதமான வெள்ளையர்கள் தாம் ஏதாவது ஒரு வகையில் நிறவாதிகள் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதாக கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது.

சார்லி எப்டோ படுகொலை யாரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது பலத்த சர்ச்சைக்குரிய விடையங்களாகவிருக்க அக்கொலைகளின் பின்னர் நிறவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சமடைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாசிசக் கட்சியான தேசிய முன்னணி (FN) இதன் பின்னர் மீழெழுச்சி அடைந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளான சோசலிசக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றிற்கு இணையாக போட்டியிடும் நிலைக்கு பாசிசக் கட்சி எழுச்சி பெற்றுள்ளது.

சார்லி எப்டோ படுகொலைகளின் பின்னர் நிறவாத நஞ்சுட்டப்பட்ட மக்களின் ஆதரவுடனேயே பிரான்ஸ் இராணுவ மயமாக்கப்படுகிறது. போலிஸ் அரசாக பிரான்ஸ் மாறிவருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலை முன்வைத்தே அப்பாவி மக்கள் உளவு பார்க்கப்படுகின்றனர்.

Oui-la-France.-Marine-Le-Pen-387x560.jpg

பிரான்சில் தீவிர வலதுசாரி ஆட்சியாகக் கருதப்பட்ட நிக்கொலா சார்கோசியின் குடியரசுக் கட்சியின் கோர ஆட்சியிலிருந்து விடுதலை பெற மக்கள் போலி சோசலிசக் கட்சிக்கு வாக்களிக்க பிரான்சுவா ஒல்லோந் ஜனாதிபதியானார். இலங்கையில் இன்று நடப்பதைப் போன்றே எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஜனநாயகவாதிகள் அனைவரும் பிரான்சுவா ஒல்லோந்திற்கு ஆதரவளித்தனர்.

சுய திருப்திக்காக இடதுசாரியம் பேசும் குழுக்களும், வெற்று முதலளித்துவ எதிர்ப்புக் குழுக்களும், அனாகிஸ்ட் அமைப்புக்களும், உரிமை அமைப்புக்களும் பிரான்சுவா ஒல்லோந்தை ஜனாதிபதியாக்கின. இன்று தேசிய முன்னணி என்ற பாசிசக் கட்சியின் தலைவியான மரின் லூ பெனை பிரான்சுவா ஒல்லோந் தனது மாளிகைக்கு அழைத்து விருந்து வைக்கிறார்.

பிரான்ஸ் முழுவதிலும் பயங்கரவாத அச்சத்தை பிரான்சுவா ஒல்லோந் விதைக்கும் அதே வேளை பிரான்சில் ஏதோ பயங்கரம் நடக்கப்போவது போன்ற உணர்வு அவதானிப்பவர்களுக்கு மேலிடுகிறது.

இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி மக்களின் ஆதரவுடனேயே நகர்த்தப்படும் பிரஞ்சு நாட்டிற்கு மக்கள் பற்றுள்ள தொழிலாள வர்க்கக் கட்சி மட்டுமே தீர்வாக அமைய முடியும். ஜனநயகப் புரட்சி கூட தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் ஊடாக மட்டுமே சாத்தியமாகும் என்பதை உலகின் ஒவ்வொரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் நிறுவிக்கொள்கின்றன.

தமது மூதலீட்டையும் மூலதனத்தையும் உலகம் முழுவதிலும் விதைத்து அறுவடை செய்வதிலேயே குறியாகவிருக்கும் சிறுபான்மை முதலாளிகளால் நிறவாதத்தை மட்டுமே விதைக்க முடியும்.

http://inioru.com/?p=43734

நான் ஊடகவியாலாளனாக பணிபுரிய தொடங்கிய 70களில் இன்று உள்ளது போல் பெரிய அளவுக்கு தகவல் தொடர்பு வசதிகள்- இணைய வதிகள் கிடையாது.மோஸ்கோட்- தந்தி -ரங்கோல் மற்றும் டெலிபிறிண்டர் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளை மட்டும் வைத்துக்கொண்டு தான் செய்திகளை தொகுப்போம்.அப்போது நாங்கள் வெளியிடும் செய்திகளின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதென்பது எங்களுக்கு பெரும்பாடாக இருக்கும்.

அறிதல் தெளிதல் வினையாற்றல் என்று எனது மார்ச்சிச ஆசான்கள் எனக்கு சொல்லித்தந்த செயன்முறை இந்த விடயத்தில் எனக்கு பேருதவியாக இருந்தது.

இன்றைக்கு தகவல் தொடர்பு வசதிகள் பெருகி இணையம் உலக நடப்பை நமது வீட்டுக்குள் நொடிப்பொழுதில் கொண்டுவந்து சேர்த்துவரும் நிலையில் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துதென்பது அன்றைய காலத்தைவிட இன்றுதான் பெரும்பாடாக இருக்கிறது.ஏனென்றால் அப்போதைவிட இப்போது தான் போலிகளும் பொய்யும் புரட்டும் நிறைந்துவிட்டன.

அன்று 10 போலிகளுக்குள் இருந்து ஒரு நல்லதை தேடி எடுக்க வேண்டி இருந்தது.ஆனால் இன்றோ பல பத்தாயிரம் போலிகளுக்குள் இருந்து ஒரு நல்லதை தேடி எடுக்க வேண்டி இருக்கிறது.

அன்று ஒரு கருத்தை சமூக பொது வெளியில் வெளியிடும் சமூக அக்கறை மற்றும் சமூகப்பொறுப்பு என்பது அடிப்படை நிபந்தனையாக பார்க்கப்பட்டது.ஆனால் இன்று வாசகர்களை பரபரப்புக்குள்ளாக்குவது கிளுகிளுப்பூட்டுவது சுயவிளம்பரம் தேடிக்கொள்வது இவற்றின் மூலம் தங்கள் பணப்பையை நிரப்பிக்கொள்வது அல்லது தங்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை சூட்டிக்கொள்வது ஆகியவை தான் அடிப்படை நிபந்தனைகளாக கொள்ளப்படுகின்றன.

அன்று நாங்கள் ஒரு கட்டுரையை எழுதுவதற்கு பல மைல் தூரம் பயணித்து ஆட்களை சந்தித்து தகல்களை திரட்டி, நூலகங்களை தேடிச் சென்று நூல்களைப் பெற்று மணிக்கணக்கில் அவற்றை வாசித்து குறிப்புகளை திரட்டி அந்தக் குறிப்புகள் சரியானவையை என்பதை பார்க்க அவற்றுடன் சம்பந்தப்பட்ட அல்லது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த அவை பற்றி தெரிந்த மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை உறுதிப்படுத்தி 'ஆய்வு -மீளாய்வு -தொகுப்பு' என்ற முறையில் அதை ஒழுங்குபடுத்துவது என்ற நடைமுறையை கைக்கொண்டோம்.

ஆனால் இன்று அவ்வாறான நிலைமை இல்லை. 

இன்று கட்டுரைகளை- தகவல்களை எழுதும்- வெளியிடும் பலரும் இணையத்தில் நுணிப்புல் மேய்ந்தது போல அங்கொன்று இங்கொன்றுமாக தகவல்களை திரட்டி ஒரு உண்மையை வைத்துக்கொண்டு 10 பொய்களை உண்மையானவை போன்று அவற்றுடன் சேர்த்து ஏற்கனவே தங்களுக்கு தாங்கள் சூட்டிக்கொண்ட 'அறிவாளிகள் கல்விமான்கள் எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஆய்வாளர்கள்' என்ற ஒளிவட்டங்களை பாவித்து தாங்கள் சொல்வது தான் உண்மை என்று மக்களை நம்பச் சொல்கிறார்கள்.அவர்களை நம்புவதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் .. 'எதைiயும் முதலில் ஆய்வு செய்.அந்த ஆய்வின் முடிவில் நீ தொகுத்தவற்றை மீண்டும் பகுப்பாய்வு செய்.எதையும் பரந்து பட்ட மக்கள் திரள் என்ற தளத்தில் இருந்து பார்;. மக்களே மக்கள் மட்டுமே வரலாற்றைப் படைப்பவர்கள் என்பதை மறந்து விடாதே இவற்றினூடாக அவற்றின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்.அதன் பின் நீ ஒரு தெளிவுக்கு வா. அதன் பின்னனர் வினையாற்று அதாவது செயற்படு' என்று எனது தத்துவ ஆசான்கள் சொல்லித்தந்த வழிமுறை போலிகளை இனங்காணவும் ஒவ்வொருவரதும் போலி முகமூடிகளுக்குள் ஒழிந்திருக்கும் உண்மை முகத்தையும் இனங்காணவும் எனக்கு உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் பல தரப்பட்டவர்களும் என்னுடைய இணைப்பில் இருக்கிறார்கள்.சிலருடைய எழுத்துக்களை படிக்கின்ற போது அவர்கள் தங்களது கருத்துக்கு வலுச்சேர்க்க கூசாமல் சொல்லும் பொய்களை பார்த்து எனக்கு கடுமையான கோபம் வரும்.அவர்களுக்கு காட்டமாக பதில் சொல்ல வேண்டும் அவர்களது பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைப்பேன்.

ஆனால் யோசித்துப் பார்க்கிற போது ஒருவருடைய மனவெளியில் இருக்கிற கருத்தியல் வறுமைதான் அவரை பொய் சொல்லவும் வெறும் வரட்டு சூத்திரங்களாகிப் போன அர்த்தமற்ற வார்த்தைப் பிரயோகங்களை செய்யவும் தூண்டுகிறது.தமது மனவெளியில் உள்ள வெறுமையை போக்குவதற்கு இவர்கள் தங்களுக்கு தாங்களே சூட்டிக்கொண்டிருக்கிற ஒளிவட்டம் தடையாக இருக்கிறது என்ற உண்மை புரியவருகிறது.இவர்கள் தங்களது எழுத்துக்களை ஆய்வு மற்றும் மீளாய்வுக்கு உள்ளாக்காதவரை இவர்களுக்கு பதில் எழுதுவதும் இவர்களுடன் விவாதிப்பதும் கதவே இல்லாத சுவருக்கூடாக கதவு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு செல்ல நினைப்பதற்கு ஒப்பானது என்று முடிவு செய்து அவற்றை தவிர்த்து வருகிறேன்.

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

Map shows world's 'most racist' countries (and the answers may surprise you)

  • Jordan and India named the world's least tolerant countries
  • U.S., Britain, Canada and South America are among the least racist
  • Survey asks people if they would want neighbours of a different race

 

 

 

Britain is one of the most racially tolerant countries on the planet, a survey claims.

The global social attitudes study claims that the most racially intolerant populations are all in the developing world, with Jordan and India in the top five.

By contrast, the study of 80 countries over three decades found Western countries were most accepting of other cultures with Britain, the U.S., Canada and Australia more tolerant than anywhere else.

 
Enlarge  
article-2325502-19D0189E000005DC-313_634

Racism: This map shows the nations of the world where people have the most and least tolerant attitudes

The data came from the World Value Survey, which measured the social attitudes of people in different countries, as reported by the Washington Post.

The survey asked individuals what types of people they would refuse to live next to, and counted how many chose the option 'people of a different race' as a percentage for each country.

Researchers have suggested that societies where more people do not want neighbours from other races can be considered less racially tolerant.

The country with the highest proportion of 'intolerant' people who wanted neighbours similar to them was Jordan, where 51.4 per cent of the population would refuse to live next to someone of a different race.

Next was India with 43.5 per cent.

 

Racist views are strikingly rare in the U.S., according to the survey, which claims that only 3.8 per cent of residents are reluctant to have a neighbour of another race.

article-2325502-163CAFF6000005DC-173_634

Diverse: The multicultural U.S. is among the least racially intolerant countries, according to the data

Other English-speaking countries once part of the British Empire shared the same tolerant attitude - fewer than five per cent of Britons, Canadians, Australians and New Zealanders showed signs of racism.

People in the UK are also tolerant of other differences such as speaking a foreign language or practising an alternative religion - for example, fewer than two per cent of Britons would object to having neighbours of a different faith to them.

Similarly, fewer than one in 20 people in most South American countries admitted harbouring prejudice against other races.

 
 

The Middle East, which is currently dealing with large numbers of low-skilled immigrants from south Asia, seems to be a hotbed of racial tension, however.

Europe is remarkably split - the west of the continent is generally more tolerant than the east, but France is a striking outlier with 22.7 per cent of the French rejecting neighbourhood diversity.

Some have pointed out problems in the survey data, claiming that because the polls span a long period of time they are an unreliable guide to current attitudes.

However, a more serious flaw could be the fact that in most Western countries racism is so taboo than many people will hide their intolerant views and lie to the questioners.

Max Fisher of the Washington Post suggested that maybe 'Americans are conditioned by their education and media to keep these sorts of racial preferences private, i.e. to lie about them on surveys, in a way that Indians might not be'.

THE LEAST RACIALLY TOLERANT COUNTRIES

40% + (of individuals surveyed would not want a person of another race as a neighbour)

India, Jordan

30 - 39.9%

Egypt, Saudi Arabia, Iran, Vietnam, Indonesia, South Korea

20 - 39.9%  

France, Turkey, Bulgaria, Algeria, Morocco, Mali, Zambia, Thailand, Malaysia, The Philippines, Bangladesh, Hong Kong

THE MOST TOLERANT COUNTRIES

0 to 4.9%

United States, Canada, Brazil, Argentina, Colombia, Guatemala, Britain, Sweden, Norway, Latvia, Australia, New Zealand

5 - 9.9%

Chile, Peru, Mexico, Spain, Germany, Belgium, Belarus, Croatia, Japan, Pakistan, South Africa

10 - 14.9%

Finland, Poland, Ukraine, Italy, Greece, Czech Republic, Slovakia

15 - 19.9%

Venezuela, Hungary, Serbia, Romania, Macedonia, Ethiopia, Uganda, Tanzania, Zimbabwe, Russia, China

Source: World Values Survey

Read more: http://www.dailymail.co.uk/news/article-2325502/Map-shows-worlds-racist-countries-answers-surprise-you.html#ixzz3PmLfSyFx 

Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

பிரான்சில் வாழும் தமிழ் பிள்ளைகள் நிறவெறியால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது வலிந்து திரித்து எழுதப்பட்ட பொய்யான தகவல்.இப்படி சொல்லிக் கொண்டு திரியும் ஒரு பிள்ளையை நான் அறிவேன்.அந்தப் பிள்ளை தனது பெற்றோரின் தவறான வழிகாட்டாலால் தன்னுனுடன் படித்த தமிழ் பிள்ளைகளை சாதிரீதியாக அவமதித்த போது அது தெரிந்த ஏனைய பிள்ளைகள் அந்தப் பிள்ளையை ஒதுக்கி தனிமைப்படுத்தியதான் உண்மை சம்பவம்.இதைத் தான் அந்தப்பிள்ளையிள் பெற்றோர்; தன்னுடைய பிள்ளையை நிற அடிப்படையில் ஒதுக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தனர்.
இந்த கட்டுரையில் குறிப்பிடப்படும் வங்கித்துறை உட்பட பிரான்சின் பல்வேறு துறைகளில் அதிஉயர் பதவியில் இருக்கும் 5 தமிழ் பிள்ளைகளை எனக்குத் தெரியும்.
அதேபோல 243 தமிழ் பிள்ளைகள் 2000 மாம் ஆண்டின் பின் பல்வேறு நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.மருத்துவம் பொறியியல் துறைகளிலும் நமது பிள்ளைகள் பணிபுரிய ஆரம்பித்துவிட்டனர். பிரான்சின் தீவிர வலது சாரிகளிடம் இனவாதம் இருக்கிறது.இந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பவர்களின் எல்லோரும் உண்மையான பிரெஞ்சு மக்கள் கிடையாது. பெரும்பாலனவர்கள் இத்தாலி ஸ்பெயின் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து பிரான்சில் குடியேறி குடியுரிமை பெற்ற பிரெஞ்சுக் கலப்பினத்தவர்களாகும்.
ஆபிரிக்க கறுப்பினத்தவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்களிடம் இருக்கும் அருவருப்பான நிறவெறிப் பார்வையைவிட பிரெஞ்சு இனவாதிகளிடம் இருக்கும் நிறவெறிப்பார்வை குறைவு.
பிரான்சில் நிறவெறிக்கும் இனப்பாகுபாட்டுக்கும் எதிரான சட்டங்கள் கடுமையானவை.நிற ஒதுக்கல் அல்லது ஒதுக்கலால் பாதிக்கப்படும் எவரும் அது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இனவாதம் இருக்குதோ,இல்லையோ தெரியாது. ஆனால் அங்கு போனால் ஒரு சொல் கூட ஆங்கிலத்தில் கதைக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பல்லின மக்கள் கூட்டம் வாழும் பிரான்சில் இது குறைவு என்பதே எனது அனுபவம்

இங்கு இனத்தை பார்த்து

எவரும் காறித்துப்பவதில்லை

இனத்தை பார்த்து கொலை செய்வதில்லை

அந்தவகையில் பிரெஞ்சு மக்கள் மேலானவர்கள்

 

 

பிரான்சில்  இனவாதம் இருக்கா என்ற கேள்விக்கே இடமில்லை

இருக்கு

பிள்ளைகளின் படிப்பு

வேலை வாய்ப்பு

போன்றவற்றில் அவை நிச்சயம் பிரதிபலிக்கும்

நான் 

தமிழர்களோடு அதிகம் ஈடுபாட்டோடு இருப்பதால் அதிகம் சந்தித்ததில்லை

ஆனால் வீட்டில் எனது பிள்ளைகள் இதை உணர்கிறார்கள்

பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்

அதை இங்கு கதைகளாக படிப்பினைகளாக எழுதியும் உள்ளேன்..

எனது ஆபிரிக்க நண்பர் ஒருவர் சொல்வார்

இந்த நாட்டில் எமது பிள்ளைகள் தலையெடுக்கவேண்டுமாயின்

அவர்களுக்கு இருமடங்கு அறிவு இருக்கணும் என்று.

அதவே உண்மை

அதையே எனது பிள்ளைகளுக்கு சொல்வேன்

தமிழர்கள் அதிகம்  இதனால் பாதிக்கப்படாது இருப்பதற்கு காரணம்

படிப்பை தமது மூச்சாக நினைத்து முன்னேறுவது தான்...

 

மற்றும் யாழ்ப்பாணத்தில்

ஒரு தமிழரின் அலுவலகத்திற்கு 10 பேர் வந்தால்

தமிழருக்கு முதலுரிமை தருவது இனவாதமா???

அப்படியென்றால் அது எம்மிடம் எப்பொழுதுமே அதிகமாக உண்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் சேரிகளில் வாழும் தமிழர்களும், பிரான்ஸின் இனப் பிரச்சினையும்

கலையரசன்

clichy-sous-bois.jpg

பிரான்ஸ் நாட்டில், சேரிகள் இல்லையென்று அங்கு வாழும் தமிழ் பேசும் அரச அடிவருடிகள் கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலையோ வேறு. பாரிஸ் நகரில் வாழும், பெரும்பான்மையான தமிழர்கள் அடித்தட்டு பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.

பிரெஞ்சு மொழியில் "banlieue" என்று அழைக்கப் படும், நகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கிருந்து, தினசரி 30- 50 கி.மி. தூரம் பிரயாணம் செய்து, வேலை செய்து விட்டு வருவோரும் உண்டு.

தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினர், பிரெஞ்சு வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலைகளைத் தான் செய்கின்றனர். பெரும்பாலானோர் துப்பரவுப் பணியாளர்களாக, அல்லது உணவகங்களில் வேலை செய்கின்றனர். அவர்களின் சக பணியாளர்களும், பிற நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் தான்.

குறிப்பாக, அல்ஜீரியா, மொரோக்கோ, மாலி, செனகல் போன்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் இருந்து வந்தவர்கள். பிரான்சில் இவர்களைத் தான், பொதுவாக "முஸ்லிம்கள்" என்று அழைக்கிறார்கள். தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். காலனிய தொடர்பு காரணமாக, பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருப்பதால், வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதாக, சில தமிழர்கள் சொல்லிக் குறைப் படுவதுண்டு.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், தமிழர்களும், பிரெஞ்சு பேசத் தெரிந்த "முஸ்லிம்களும்", ஒரே இடத்தில் வேலை செய்வது மட்டுமல்ல, ஒரே இடத்தில் தான் வசிக்கிறார்கள். மிக உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தாலும், பலரால் வாடகையை செலுத்த முடிவதில்லை. வேலை செய்யும் இடங்களில், பிரெஞ்சு முதலாளிகள் அனைவரையும் ஒன்றாகத் தான் சுரண்டுகின்றனர்.

தொழிலாளர்களை சுரண்டுவதில், வெளிநாட்டு முதலாளிகளும் சளைத்தவர்கள் அல்ல. தமிழ் முதலாளிகள் தங்களது சொந்த இனத்தை சேர்ந்த தொழிலாளர்களையே சுரண்டிக் கொழுக்கின்றனர். மிகக் குறைந்த கூலி கொடுப்பது மாத்திரமல்ல, தினசரி 12 மணிநேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளிகளும் உண்டு.

பாரிஸ் தமிழர்கள் அல்ஜீரியர்களுக்கு வைத்துள்ள பட்டப் பெயர்: "அடையார்"! அதன் அர்த்தம், அல்ஜீரியர்களின் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்பதாலாம். எந்த நேரமும் திறந்திருக்கும் அல்ஜீரிய முதலாளிகளின் கடைகளில், தினசரி 16 மணித்தியாலம் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப் படும் தொழிலாளர்களும் அல்ஜீரியர்கள் அல்லது முஸ்லிம்கள் தான்.

பாரிஸ் நகரில் வாழும் தமிழர்களுக்கு காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி தான். தனியொரு உழைப்பாளி தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்திற்கு ஏற்றவாறு வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கிறார். பாரிஸ் நகரில் வீட்டுப் பற்றாக்குறை, வாடகைப் பிரச்சினை பற்றி, அங்கு வாழும் தமிழர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் பிரமச்சாரி இளைஞர்களுக்கு அறைகளை வாடைக்கு விடுவதும், பின்னர் அதனாலேயே குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவதும் வழமையானவை.

பாரிஸ் நகரை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் தான், இன்று சேரிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கிளிஷி சூ புவா (Clichy sous Bois) பிரான்சின் பிரபலமான banlieue சேரிப் பகுதி. அங்கே தான், அண்மைய பாரிஸ் தாக்குதலில் யூத கோஷர் மார்க்கெட்டில் நான்கு பேரை கொன்ற "பயங்கரவாதி" Amedy Coulibaly வாழ்ந்து வந்தான். அவன் முன்பு ஒரு சாதாரண கிரிமினல். அவனைப் போன்ற பல கிரிமினல்கள், ஜிகாதி தீவிரவாத அரசியலுக்குள் நுளைந்து பெருமை தேடிக் கொள்கின்றனர்.

Clichy sous Bois, பாதுகாப்பற்ற, வெளியார் நுளைய முடியாத பிரதேசம் என்று, அமெரிக்க Fox சேனல் அறிவித்திருந்தது. உண்மையில், அந்தளவு மோசமான நிலைமை இல்லையென்றாலும், வசதி இருப்பவர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை. பிரெஞ்சு வெள்ளையர்கள் மட்டும் அந்தப் பிரதேசத்தில் வாழ்வதை தவிர்க்கவில்லை. அதிகம் சம்பாதிக்கும், வசதியான வெளிநாட்டு குடியேறிகள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை.

கைவிடப் பட்ட கட்டிடங்கள், பராமரிக்கப் படாத சுற்றுச் சூழல், பெருகி வரும் குற்றச் செயல்கள், போதைவஸ்து பாவனை என்பன, அந்த இடத்தை வசிக்க முடியாத ஆபத்தான பிரதேசம் ஆக்கியுள்ளன. நகர மத்தியில், பட்டப் பகலில் போதை வஸ்து விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இரவில் அவர்களே திருட்டுக்களிலும் ஈடுபடுவார்கள்.

Clichy sous Bois, பாரிசுக்கு வெளியே உள்ள தனியான நகரசபைக்கு சொந்தமான பகுதி. அங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் "முஸ்லிம்கள்" தான். அதாவது, அல்ஜீரியர் மற்றும் ஆப்பிரிக்கர்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் "முஸ்லிம்கள்" தான். ஆனால், அந்தக் கிரிமினல்களினால் அதிகமாகப் பாதிக்கப் படுவோரும் "முஸ்லிம்கள்" தான் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை.

பத்து வருடங்களுக்கு முன்னர், இதே Clichy sous Bois புறநகர்ப் பகுதி, உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. அங்கே நடந்த கலவரம் தான் அதற்கு காரணம். "பணக்காரர்களின் சொத்துக்களான" கார்களை, இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் எரித்து நாசமாக்கினார்கள். அப்போது நடந்த கலவரத்தில், சில வசதியான "முஸ்லிம்களின்" கார்களும் எரிக்கப் பட்டன.

பாரிஸ் கலவரம் தொடர்பாக, நான் முன்பு பிரான்சில் இருந்து வெளியான உயிர்நிழல் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:

//"இனி இது பாரிஸ் அல்ல. பாக்தாத்!" என்ற கோஷம் 2005ம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான கிளிஷி சூ புவாவின் தெருக்களில் கேட்டது. தெருக்களின் அந்தப் பக்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், குண்டாந்தடிகள் சகிதம் பாரிஸ் நகரப் பொலிஸ். இந்தப் பக்கம் பெட்ரோல் குண்டுகளுடன் 18 வயதையும் தாண்டாத இளைஞர்கள் கூட்டம். அமைதியான தெருக்கள் போர்க்களமாகின. தன்னிச்சையாக திரிந்த இளைஞர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர். பாடசாலைகள், தபால் அலுவலகங்கள், கடைகள் எதுவும் தப்பவில்லை. அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புப் படையினருக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்தக் கலவரம் ஒரு நாளோடு அடங்கி விடவில்லை. அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் தொடர்ந்தது. கலவரத்தீ பாரிஸின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடர்ந்து பிரான்சின் பல நகரங்கள் ஒரே மாதிரியான தீவைப்புக் காட்சிகளை கண்டன .// (Uyirnizhal, January - March 2006)

வீடுடைத்து திருடுபவன், பாரிஸ் நகரில் பணக்காரர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அதைச் செய்வதில்லை. ஏழைகள் வசிக்கும் புறநகர்ப் பகுதியில், வசதியானவர்களின் வீடுகளைத் தான் உடைப்பார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களும் அப்படித் தான். இதனால் பாட்டாளிவர்க்க தமிழர்களும் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால், அவர்கள் இதனை உலகம் முழுவதும் உள்ள சேரிகளின் சமூகப் பிரச்சினையாக பார்க்காமல், குறிப்பிட்ட இனத்தை குற்றவாளிப் பரம்பரை ஆக்கும் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர்.

பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் பதற்றம் நிலவியது. பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசாங்கமே நிர்வகிப்பதால், சார்லி எப்டோ தாக்குதலில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. குறைந்தது, 200 பாடசாலைகளில் மௌன அஞ்சலி மாணவர்களினால் இடையூறு செய்யப் பட்டது. ஏன் சிரியாவில் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சார்லி எப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை யாரும் நியாயப் படுத்தவில்லை. "அந்தப் பத்திரிகை முஸ்லிம்களை அவமதித்து இருந்த போதிலும், மதத்தின் பெயரில் கொல்வது தவறு. கொலை செய்யப் படுமளவிற்கு கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் அந்தளவு பெரிய குற்றத்தை செய்யவில்லை." என்று கூறுகின்றனர். மேலும், இதனை "யூதர்களின் சதி" என்று கூறுகின்றனர். பிரான்சில் முஸ்லிம்களை ஒடுக்குவது யூத ஆளும் வர்க்கம் என்றும், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலந்த் ஒரு யூதர் என்றும் இளைய தலைமுறையினர் பலர் நம்புகிறார்கள்.

இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டுமானால், இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கொழும்பில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப் பட்ட சிங்களவர்களுக்காக, யாழ்ப்பாண பாடசாலைகளில் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று, சிறிலங்கா அரசு உத்தரவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது தமிழ் மாணவர்கள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பார்கள்? பிரான்சில் இருப்பதும் இனப் பிரச்சினை தான். பலர் தவறாக நினைப்பதைப் போல, மதப் பிரச்சினை அல்ல.

கிளிஷி சூ புவா, முன்னொரு காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்த அமைதிப் பூங்காவாக இருந்தது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து குடியேறியோர் வசதியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிட்ரோன் கார் தொழிற்சாலை பலருக்கு வேலை கொடுத்தது. அதனால், உழைக்கும் வர்க்க மக்களின் விருப்பத்திற்குரிய குடியிருப்பாக அது மாறியிருந்தது. பல புதிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்தன. லிப்ட், வெப்பமூட்டும் வசதிகளுடன் கட்டப் பட்டன.

எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் நிலைமைகள் மாறத் தொடங்கின. சிட்ரோன் கார் தொழிற்சாலை மூடப் பட்டது. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்த படியால், வறுமையும் அதிகரித்தது. இன்று வரையில், அங்குள்ள நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை. கிளிஷி சூ புவாவில் வாழும் மொத்த சனத்தொகையில் 20% வேலையில்லாதவர்கள். இளைய தலைமுறையினர் மத்தியில், இன்னும் அதிகம்.

வட ஆபிரிக்க குடியேறிகளில் பெரும்பான்மையானோர், பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது மத நம்பிக்கையை விட, பொருள் சேர்ப்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆயினும், கடந்த இருபது வருட கால பொருளாதார நெருக்கடி காரணமாக, பலர் மதத்திற்குள் தஞ்சம் புகுகின்றனர். அது இந்தியா, இலங்கையில் வாழும் மத நம்பிக்கை கொண்ட மக்களின் நிலைமையை விட வித்தியாசமானது அல்ல. தமது பொருளாதார பிரச்சினைகளுக்கு மதம் தீர்வைத் தரும் என்று, உலகம் முழுவதும் உள்ள ஏழைகள் நம்புகிறார்கள்.

நான் "பிரான்சைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை புனைகிறேன்" என்று சிலர் என் மேல் குற்றஞ்சாட்டலாம். "நான் எழுதுவதெல்லாம் பொய்" என்று, பிரெஞ்சு அரசை ஆதரிக்கும் தமிழ் அடிவருடிகள் சீறிப் பாயலாம். ஆனால், பிரான்ஸ் பிரதமர் Valls கூட, பிரான்சில் அப்பார்ட்ஹைட் (Apartheid) எனும் இனப் பாகுபாடு நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். (Apartheid : Valls taille Sarkozy http://www.liberation.fr/politiques/2015/01/22/apartheid-valls-taille-sarkozy_1186459) அதாவது, பிரான்ஸ் நாட்டில், இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது.

பெரும்பான்மையான பிரெஞ்சு வெள்ளையர்கள் வசதி, வாய்ப்புகளை அதிகமாக கொண்டவர்களாக உள்ளனர். அதற்கு மாறாக, பெரும்பான்மையான "முஸ்லிம்கள்" (வட ஆப்பிரிக்கர்கள்) வருமானம் குறைந்த ஏழைகளாக இருக்கின்றனர். அதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. ஒரு தடவை, பாரிஸ் நகரில் இருந்து கிளிஷி சூ புவாவுக்கு பயணம் செய்து பாருங்கள். ஒரு மணிநேரத்திற்குள், முதலாம் உலகில் இருந்து, மூன்றாம் உலகிற்கு சென்று விட்டதாக உணர்வீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு:

Niemand verhuist vrijwillig naar Clichy sous Bois http://www.volkskrant.nl/dossier-aanslag-op-charlie-hebdo/niemand-verhuist-vrijwillig-naar-clichy-sous-bois~a3837299/

2005 பாரிஸ் கலவரம் தொடர்பாக, உயிர்நிழல் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

french%2Bcheri.jpg

http://kalaiy.blogspot.co.uk/2015/01/blog-post_26.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கிடையிலேயே சாதி மத வாதபேதங்கள்  இருக்கும்போது
பிரான்சில் வெளிநாட்டவர்களுக்கெதிரான  நிறவாதம் இனவாதம் இருக்காதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.