Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளீ அரசுவைத்தியசாலை மற்றும் பாடசாலை மீது கிபீர் தாக்குதல்

Featured Replies

Kilinochchi Government Hospital And School Under Kfir jet Attack.

Kilinochchi Government Hospital (Nearly Build) And School (Kilinochchi Maha Viddijalajam) Under Kfir jet Attack. Kilinochchi Government Hospital damaged and School also damaged.

News From Colombo/

http://www.nitharsanam.com/?art=21234

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் 2:00மணியளவில் தொடர்ச்சியாக ஐந்துக்கு மேற்பட்ட குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இத் தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு பின்புறமாக வீசப்பட்ட குண்டுகளால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக் கட்டிடடமும் சேதமடைந்துள்ளது. வைத்தியசாலைக்கு 200 மீற்றர் தொலைவிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேறிவருகின்றனர். வைத்தியசாலைப் பணியாளர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்திற்கு சென்ற எமது செய்தியாளர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kohy2.jpg

kocr8.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
soow0.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
soow0.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kohy2.jpg

kocr8.jpg

  • தொடங்கியவர்

எல்லாத்துக்கும் பதிலை எதிர்பார்கிறது சிங்களம் போடப்பட்ட ரெயிலரே மிந்தவுக்கு குலை நடுங்கச்செய்தது எண்டால் மெயின் படம் எப்படி இருக்கப்போகுது

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பொது மருத்துவமனைப் பகுதிகள் மீது விமானக்குண்டுத் தாக்குதல்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, மக்கள் குடியிருப்பு என்பவற்றை இலக்கு வைத்து சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். (மேலதிக விபரம் இணைப்பு)

இன்று 2:00மணியளவில் தொடர்ச்சியாக ஐந்துக்கு மேற்பட்ட குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. வைத்தியசாலைக்கு பின்புறமாக வீசப்பட்ட குண்டுகளால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக் கட்டிடடமும் சேதமடைந்துள்ளது. வைத்தியசாலைக்கு 200 மீற்றர் தொலைவிலுள்ள வீடொன்றின் மீது மெற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீட்டின் உரிமையாளர் இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது சகோதரி ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நால்வரின் சடலங்களும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு மணித்தியாலத்தின் பின்னரே மீட்கப்பட்டுள்ளன. இத் தாக்குதலையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து அச்சம் காரணமாக வெளியேறியுள்ளனர். நகரின் ஏனைய செயற்பாடுகளும் முடக்கம் அடைந்துள்ளன.

http://sankathi.org/news/index.php?option=...d=1097&Itemid=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழந்தரப்புக்கு சமாதானகாலம் தரும் தீர்வு மரணங்கள்தானோ!

அப்பாவிவாழ்வுகளை மரணம் வேட்டையாடுகின்றது சமாதானத்தின் மேடையிலே!

சிங்களத்தரப்பை போர்உருதான் ஏற்றி அனுப்பி வைத்துள்ளதோ ஜெனீவா!

தமிழன் வயிற்றுப் பிரச்சினைக்கே இரங்கும் முயற்சிகள் கண்டே கோரத்தாண்டவம் ஆடுகிற சிங்கள இனவெறித்துவம்

எப்படி வாழாதிருக்கும் உரிமையைத் தாரைவார்க்கின்ற முயற்ச்சிகண்டு

ஒரு நெற்சப்பியைத்தான் சுமக்கமுடியும் என்ற நிலைக்கேதான் அவர்கள் பலம் ஒடுங்கினாலும் அந்த இனவெறித்துவத்தின் கனவுகூட சம்மதிக்காது தமிழன் உரிமையின் கழுத்தை நெரித்து நிற்க்கும் அந்த கையை விலக்குவதற்க்கு.

அடிபோல் உதவுவதற்க்கு யாரும் இல்லை, சிங்களவனுக்கு உலகில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெடுகுடி சொல் கேழாது

அட்டகாசத்தின் உச்சியில் நிற்கின்றது சிங்களம். அவலத்ததைத்; தந்தவனுக்கே......எங்கே எப்போது? போதும் பொறுத்தது. இனியும் பொறுக்க முடியாது. பதில் உடனடியாகவே இருக்கட்டும்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவையாறு கிளிநொச்சியைச் சேர்ந்த

முருகேசு மார்க்கண்டு(62)

முருகேசு சண்முகரத்தினம் (52)

சண்முகரத்தினம் சசி (18)

சண்முகரத்தினம் கிருசாந் (15)

இரத்தினம் சரஸ்வதி (62)

ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

  • தொடங்கியவர்

இன்னும் 26 நாட்களில் தெரியும் முடிவு அது நல்ல முடிவாகைருக்கும் என நம்புகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதத்தைத் தெரிந்திருந்தும் வெளிப்படுத்த மறுக்கும் சர்வதேசச் சமூகம்(!) -தனது பிராந்தியப் பொருளாதார கேந்திர நலன்சார்ந்து மௌனமாகக் காத்திருக்கிறது.

- சாவில் வாழ்வு நடாத்திக்கொண்டிருக்கும் நம்மவர்களது நிலையின் அவலம் நமக்குத்தான் தெரியும். எமது வீர எழுச்சியை எப்படியாவது மழுங்கடிக்க கடைசி முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டது சிங்கள பௌத்த பெருந்தேசியம்.

- நம்மக்கள் எழுச்சி உலக வரலாற்றுப் பதிவேட்டில் புதிய அத்தியாயமாகப் பதிவுறும் நாள் நெருங்கி வருகிறது.

- இதன் பரிவசைவுகளை புலம்பெயர் தேசமெங்கும் காவும் பொறுப்புடன் நாம் இருக்கவேண்டும்.

4 ஆம் இணைப்பு) கிளிநொச்சி மருத்துவமனைத் தாக்குதலில் 500 நோயாளிகள் உயிர்தப்பினர்- 5 பொதுமக்கள் பலி- 10 பேர் படுகாயம்

[வியாழக்கிழமை, 2 நவம்பர் 2006, 15:28 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் இன்று கிளிநொச்சி நகரின் மீதும் பூநகரிப்பகுதியிலும் நடத்திய வான்குண்டுத் தாக்குதல்களில் ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலால் கிளிநொச்சி பொது மருத்துவமனையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டு உயிர் தப்பியுள்ளனர்.

பூநகரிப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி நகரின் மீது பிற்பகல் 2 மணியளவில் கிபீர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும் ரொக்கட் குண்டுகளையும் வீசின. இதனால் கிளிநொச்சி நகரமே அதிர்ந்தது.

கிளிநொச்சி பொது மருத்துவமனை அதிர்ந்தது. அங்கிருந்த பொருட்கள் சிதறின. கண்ணாடிகள் உடைந்து நொருங்கின. கூரைத்தகடுகள் உடைந்து வீழ்ந்தன.

நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்து சிதறி ஓடினர். இதனால் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நோயாளிகள் பலர் அதிர்ச்சியில் மயங்கியுள்ளனர். பாதிப்புற்ற நோயாளிகள் மேலதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் நின்ற நோயாளி காவு வாகனங்கள் (அம்புலன்ஸ்) மருத்துவமனை வளாகத்தை விட்டு வேகமாக வெளியேறின.

நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீதிகள் எங்கும் சிதறி ஓடினர்.

பல தாய்மார்கள் கைக்குழந்தைகளுடன் சிதறி ஓடிய அவலம் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பாடசாலைகளும் விடும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த கிபீர் விமானத் தாக்குதலால் மாணவர்கள் பெரும் அவலப்பட்டனர்.

மாணவர்கள் கதறி அழுதவண்ணம் சிதறி ஓடினர். மாணவர்கள் பலர் மயங்கி விழுந்தனர்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு அருகாக இருந்தமையால் அங்கு மாணவர்கள் அதிகம் அதிர்ச்சியடைந்தனர்.

பிள்ளைகளைத் தேடி பெற்றோர் பாடசாலைகளுக்கும் நோயாளிகளைத் தேடி அவர்களின் உறவுகள்

மருத்துவமனைக்கும் அவலப்பட்டு அலைந்தனர். இதனால் கிளிநொச்சி நகரமே பெரும் துயரத்துக்குள்ளாக்கப்பட்டத

இதை போல பெரும் விமான தாக்குதல்

அம்மணியின் ஆட்சியில் நடந்தது பாருங்கோ.....????

எத்தனை பேர் பாவங்கள் துடிக்க துடிக்க சிதறுண்டதுகள்

என்ன இந்த உலகம் செய்தது....???

''அண்ணை'' தான் அதற்க்கு தீர்ப்பு எழுதினவர்...

பக்கத்தில மகளிர் பாடசாலை செந்திரேசா இருந்தது அதில

செஞ்சிலுவை கொடி கட்டி பாதுகாப்பு வேறா

உதை மாதிரி தான் உந்த மருத்துவ மனையும் இருந்தது என்ன

நடந்தது என்ன சொன்னது உலகம்...???

எங்கள் தலமை எங்கள் படை தான் உந்த மோட்டு சிங்களவனுக்கு

நல்ல பாடம் புகட்டினது

பொறுங்கோ கட்டு நாயக்கா மாதிரி ஒன்று இருக்கு ஏன் கவலை படுறியல்

ஆற விட்டு தாறம்.

முகாமாலை தொடர் காலி வரைக்கும் அதிர்ந்தது இன்னும் இருக்கு

அந்திரட்டி ஆட்டு துவசம் இன்னும் கணக்க நடக்கும் ஏன் அவசரம்....

புளுகல் ரம்புகல...மற்ற கழுதை... சும்மா புளுகுது.....

நல்ல செம மப்புல நின்டு ஏதோ புலம்புது அதை உவர் தமிழோசை காறன்

தூக்கி தலையில வைச்சு கொண்டாடுறார்.

அதில இறந்த மக்களின்ர பார்த்த சனத்தின்ந உள கொதிப்பு ஒன்றையும்

உவையள் இன்று போடாதது ஏன்....???

உதுகள் எல்லாம் கைகூலியள்....

அதுக்குள் மைக்க தூக்கி பிடிச்சு கொண்டு சுவிசுக்கு வேறா போட்டார்...

உதுகள் எப்ப திருந்தும்....???

கறுப்பு கண்ணாடியின்ர தம்பி தானே உவர்....!!!

இந்த கொடிய கோர தாண்டவத்தில் உயிர் நீத்த அந்த உறவுகளுக்கு

எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.....!!!

:evil: குறளோவியம் :evil:

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே............இந்த மனிதாபிமானமற்ற இழிசெயலை காண.........நெஞ்சு பொறுக்குதில்லையே................

சர்வதேசமும் மயிரும்! :evil:

கிளிநொச்சி மருத்துவமனையை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் நோயாளர்கள் இடம் மாற்றம்-4 பொது மக்கள் பலி.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

:roll:

கிளிநொச்சி மருத்துவமனையை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் நோயாளர்கள் இடம் மாற்றம்-4 பொது மக்கள் பலி.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

:roll:

இந்த தலைப்பில் என்ன குற்றம் கண்டீர் அண்னாச்சி :P

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலின் போது 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில் இருந்தனர்: பொறுப்பதிகாரி சதானந்தன்

சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலின் போது மருத்துவமனையில் நோயாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 2,000 பேர் வரை இருந்தனர் என்று கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை பொறுப்பதிகாரி சதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

கிளிநொச்சி பொதுமருத்துவமனையை செயலிழக்கச் செய்யும் நோக்குடன் இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

வன்னிப் பிரதேசத்தில் அதிக வசதிகள் உள்ள நம்பிக்கை தரும் வகையில் கிளிநொச்சி மருத்துவமனையே உள்ளது. ஆகையால் இந்த மருத்துவமனையை செயலிழக்கச் செய்யும் வகையில் சிறிலங்கா விமானப் படையினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

மருத்துவமனைக்குள் கிபீர் குண்டுகளின் துண்டுகள் வீழ்ந்துள்ளன. அதனால் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ நேரத்தில் சேலைன் ஏற்றிக்கொண்டிருந்த நோயாளர்கள் அவற்றை கழற்றி விட்டு ஓடியுள்ளனர். நோயாளர்கள் பெரிதும் பாதிப்புற்றுள்ளனர்.

இத்தகைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவிடம் மருத்துவமனை பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவில்லை.

தாக்குதலின் பின்னர் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மருத்துவமனையின் சேதங்களை பார்வையிட்டுச் சென்றனர்.

இன்றைய தாக்குதல்களையடுத்து மருத்துவமனை விடுதிகளில் தங்கியிருந்த நோயாளர்கள் வீடுகளுக்கும் சென்றுவிட்டனர் என்றார் சதானந்தன்.

கிளிநொச்சி மருத்துவமனையிலிருந்து 1.5 கிலோ மீற்றர் தொலைவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது அலுவலகம் உள்ளது.

http://www.eelampage.com/?cn=29581

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மருத்துவமனை மீதான தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்: இளந்திரையன் கடும் கண்டனம்

கிளிநொச்சி மருத்துவமனை அருகே சிறிலங்கா விமானப்படையினர் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியமை ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சாடியுள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இளந்திரையன் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலில் ஒரு வீடு நிர்மூலமானது. அதில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மருத்துவமனையிலிருந்து 500 மீற்றர் தொலைவிலும் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. இதில் மருத்துவமனையின் ஜன்னல்கள் நொருங்கின. நோயாளிகள் அச்சத்தினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஒரு பெண் பணியாளர் வீதியால் இரத்தம் சொட்ட சென்றிருப்பதை நீங்கள் காண முடியும். இது ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கையாகும் என்றார் அவர்.

தாக்குதல் நடத்தப்பட்ட ஏ-9 வீதியில் உள்ள ஆனந்தபுரம் கிளிநொச்சி மருத்துவமனை அருகே உள்ள மத்திய கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மருத்துவமனையை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

திருவையாற்றுப் பகுதியில் நடத்தப்பட்ட வான்குண்டுத் தாக்குதலில் ஒரு வீடு முற்றாக நிர்மூலமாகி இரு சிறார்கள்- அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களது அம்மம்மா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

"ஜெனீவாப் பேச்சுக்களால் களநிலைமைகளில் எதுவித சாதகமான ஒரு சூழ்நிலை ஏற்படாதிருப்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஓல்ப்ஸ்டொட்டிர் தெரிவித்துள்ளார்.

"வான்குண்டுத் தாக்குதலானது யுத்த நிறுத்த மீறலாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்று அழைத்துக் கொண்டே இருதரப்பினரும் ஒப்பந்தத்தை மீறுகின்றனர். நிலைமை மிகவும் மோசமடைந்து செல்வதற்கு முன்னர் இருதரப்பினரும் விழித்துக் கொள்வர் என்று நாம் நம்புகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.eelampage.com/?cn=29578

  • தொடங்கியவர்

கிளிநொச்சி மருத்துவமனையை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் நோயாளர்கள் இடம் மாற்றம்-4 பொது மக்கள் பலி.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

:roll:

மருத்துவமனையை இலக்கு வைத்துதான் தாக்கப்படுள்ளது மருத்துவமனையில் இருந்து வெறும் 200மீற்றர் தூரத்தில் குண்டு விழுந்துள்ளது இதில குற்றம் கண்டு பிடிக்க எதுவுமில்லை இது முற்று முழுக்க கிளி.வைத்தியசாலையை இலக்கு வைத்த காடத்தனமான தாக்குதல் :evil:

  • தொடங்கியவர்

 SRI LANKA AIR FORCE fighter craft this morning (2) on intelligence received struck two Tiger (LTTE) terrorist targets in MANNAR and KILINOCHCHI causing extensive damages to a Sea Tiger base and another weapon training camp.




     Fighter craft bombed the Sea Tiger base north of MANNAR this morning after intelligence confirmed that several weapon –laden boats were about to leave the Sea Tiger base for a major offensive against the Security Forces.




     The LTTE military training center, situated about 10 [color=red]km to the south east of KILINOCHCHI was another target [/color]taken by Kfir fighting jets of the Air Force a few hours after the attack on MANNAR.

என்ன கொடுமை இது பிபிசியில் பிரசாத் சமரசிங்க சொல்லுகிறார் தாகுதல் நடத்தப்பட்டது குறிக்கப்பட இலக்கு மீதாம்.நாடாளமன்ற உறுப்பினர் சொல்கிறாரே கொலப்பட்டவர்கள் சிவிலியன்கள் எனகேட்டதுக்கு தாந்தான் பாதுகாப்பு தரப்பில் பேசக்குடிய ஒரே ஒரு அதிகாரி எஸ்.எல்.எம் தான் விசார்க்கமுடியும் எண்டான் எஸ்.எல்.எம் கூறியதே எண்டதுக்கு இன்னும் அறிக்கை கிடைக்கவில்லையாம் தெரிந்தெடுக்கப்பட்ட இலக்கு எது என்பதை வருங்காலத்தில் புலி பாயும் போது தெரியும் பொறுங்கோ சமரசிங்க இனி செத்தவீட்டு அறிவித்தல்தான் இனி உங்களிண்ட வாயால் வரும் ஏனேனின் நீங்கள்தானே பாதுகாப்பு காடையர்களின் ஒரேஒரு பேச்சாளர் :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

தாக்குதலின் போது 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில் இருந்தனசிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலின் போது மருத்துவமனையில் நோயாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 2,000 பேர் வரை இருந்தனர் என்று கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை பொறுப்பதிகாரி சதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

கிளிநொச்சி பொதுமருத்துவமனையை செயலிழக்கச் செய்யும் நோக்குடன் இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வன்னிப் பிரதேசத்தில் அதிக வசதிகள் உள்ள நம்பிக்கை தரும் வகையில் கிளிநொச்சி மருத்துவமனையே உள்ளது. ஆகையால் இந்த மருத்துவமனையை செயலிழக்கச் செய்யும் வகையில் சிறிலங்கா விமானப் படையினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

மருத்துவமனைக்குள் கிபீர் குண்டுகளின் துண்டுகள் வீழ்ந்துள்ளன. அதனால் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ நேரத்தில் சேலைன் ஏற்றிக்கொண்டிருந்த நோயாளர்கள் அவற்றை கழற்றி விட்டு ஓடியுள்ளனர். நோயாளர்கள் பெரிதும் பாதிப்புற்றுள்ளனர்.

இத்தகைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவிடம் மருத்துவமனை பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவில்லை.

தாக்குதலின் பின்னர் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மருத்துவமனையின் சேதங்களை பார்வையிட்டுச் சென்றனர்.

இன்றைய தாக்குதல்களையடுத்து மருத்துவமனை விடுதிகளில் தங்கியிருந்த நோயாளர்கள் வீடுகளுக்கும் சென்றுவிட்டனர் என்றார் சதானந்தன்.

கிளிநொச்சி மருத்துவமனையிலிருந்து 1.5 கிலோ மீற்றர் தொலைவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது அலுவலகம் உள்ளது.

ர்: பொறுப்பதிகாரி சதானந்தன்

http://www.eelampage.com/?cn=29581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.