Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:

Featured Replies

இதுக்கெல்லாம் நீளமா - ஒண்ணும் சொல்ல தெரியல...

ஆனால்...

முற்றுப்பெறாத ஒரு போராட்டதினிடையினுள்...

குறுக்கிடும்....

உளவு ரீதியிலான... பாலியல் தொடர்பும்-தேசதுரோகம்!

பாலியல் தொடர்பு வைத்து- செய்யுற-உளவும்-அதேதான்!

  • Replies 189
  • Views 18.1k
  • Created
  • Last Reply

வர்ணன்! என்னுடைய கருத்துக்கள் இதில் தடுமாற்றமாக இருக்கிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

என்ன செய்வது?

எனக்கு இரண்டு பிரச்சனை

ஒன்று:

"ஆரோக்கியமான விவாதம்" என்றால் என்னவென்று இங்கு உள்ள பெரும்பாலானவர்கள் தெரியாது இருக்கிறார்கள். மிக இலகுவாக எனக்கு துரோகி பட்டம் கட்டி விடுவார்கள்.

இரண்டு:

அதிலும்"பாலியல்" என்று தொடங்கி விவாதிப்பதற்கு எமது சமூகம் இன்னும் முற்று முழுதாக தயாராகவில்லை. அதை ஒரு தீண்டத்தகாத ஒன்றாகவே பார்க்கிறார்கள்.

இந்தக் காரணங்களினால் நான் வெளிப்படையாக கருத்துக்களை தர முடியாமல் இருக்கிறேன்.

இவ்வாறான சமூக மீறல்கள் நடப்பதற்குரிய சமூக பொருளாதார அரசியல் பின்புலம் அடிப்படை மாற்றத்துக்குள்ளாகாத வரை மீண்டும் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் தலைப்புச் செய்தியாவதையே நாம் இன்றுவரை கண்டு வந்துள்ளோம்.

கடுமையான சட்டங்களாலும் தண்டனைகளாலும் மற்றும் திருத்தி எழுதமுடியாத தீர்ப்புகளாலும் சமூக விழுமியங்கள் செழுமை பெற்றதோ அல்லது மனித வரலாறு முன்னோக்கி நகர்த்தப்பட்டதோ இல்லை.

கருத்துக்களம் இதுபோன்ற பன்முகத்தளங்கள் (multidimensional) கொண்ட சமூக நிகழ்வுகள் குறித்து காய்தல் உவர்த்தல் அற்ற விரிவான பார்வைக்கு வழிவிடவேண்டுமென்பதே இன்றைய தேவை.

இவ்வாறான சமூக மீறல்கள் நடப்பதற்குரிய சமூக பொருளாதார அரசியல் பின்புலம் அடிப்படை மாற்றத்துக்குள்ளாகாத வரை மீண்டும் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் தலைப்புச் செய்தியாவதையே நாம் இன்றுவரை கண்டு வந்துள்ளோம்.

இதை - ஒரு வரியில் சொல்லுங்கள்...

என்ன சொல்ல வந்தீர்கள் - என்பதை!!

குழப்பம் - அதால கேட்கிறேன்!

தமிழீழ சட்டக்கோவையில் இவ்வாறு உள்ளது. 18 வயதிற்கு குறைந்த பெண்ணின் சம்மதத்துடனோ சம்மதமின்றியோ 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் சம்மதமின்றியோ பாலியல் உறவு கொள்வது சட்டப்படி தண்டனை்னு உரிய குற்றமாகும். எனக்கு ஒன்று விளங்கவில்லை.. இதனை ஏன் எல்லாளன் படை செய்ய வேணும்.. சட்டத்தின் படி குற்றத்திற்கான தண்டனை அதுதான் எனில் இதனை காவல்துறையின் பெயரிலேயே செய்யலாம் தானே.. குற்றத்தினையும் அதன் சான்றுகளையும்.. அதற்கான தண்டனையையும் பகிரங்கமாக அறிவித்து உரிமை கோரலாம் தானே
அப்பிடி எண்டால் என்ன சொல்லவாறியள் கொலையை காவல்த்தான் செய்து போட்டு எல்லாளன் படை எண்டு உரிமை கோருக்கிறது என்கிறீர்களா...??? இல்லை வடமராட்ச்சியில் இன்னும் தமிழீழ காவல்த்துறை கடமையில் இருக்குது எண்டுறீர்களா...???

தண்டனை வளங்கியவர்கள் யார் எண்டு நல்லா தெரிஞ்சு வைச்சு இருக்கிறீங்கள் போலகிடக்கு... விட்டால் ஆதாரம் எல்லாம் காட்டினாலும் காட்டுவியள்... (ஊருக்கே தெரிஞ்ச விசயம் உங்களுக்கு தெரியாதா எண்ட பழய பல்லவிகளை பாடாமல் உருப்படியா எதையாவது சொல்லுங்கோ கேப்பம்....!

இவ்வாறான சமூக மீறல்கள் நடப்பதற்குரிய சமூக பொருளாதார அரசியல் பின்புலம் அடிப்படை மாற்றத்துக்குள்ளாகாத வரை மீண்டும் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் தலைப்புச் செய்தியாவதையே நாம் இன்றுவரை கண்டு வந்துள்ளோம்.

இதை - ஒரு வரியில் சொல்லுங்கள்...

என்ன சொல்ல வந்தீர்கள் - என்பதை!!

குழப்பம் - அதால கேட்கிறேன்!

எப்பிடி சொல்லலாம் எண்டால்... ஊரை குதறுகிற வெறிநாய் ஒண்டுக்கு சோறு போட்டு வளர்த்த மாதிரி....!

அந்த நாய் சாப்பாடு கிடைக்காட்டால் மற்றய வீட்டிலும் வாய்வைக்க தூண்டுறது மாதிரி எண்டு வையுங்கோவன்...!

நாய்= இராணுவம்.

சாப்பாடு= பெண்சுகம்.

தமிழீழ சட்டக்கோவையில் 14 வயது என்று இருப்பதாகத்தான் எனக்கு ஞாபகம்.

உலகில் அதிகளவு மனித உரிமைகள் மீறப்படும் சவுதி அரேபியாவில் கொலை மற்றும் தவறான பாலியல் தொடர்புக்கு பொது இடத்தில் வைத்து தலை வெட்டுவது, திருட்டுக்கு கை கால் வெட்டுவது என மிகக்கடுமையான சட்டங்கள் அமுல் படுத்தியும் ஒவ்வெரு ஆண்டும் குற்றங்கள் அதிகரித்து செல்கிறதே ஒழிய குறையவில்லை.

முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபட்ட பெண்ணுக்கு எதோ ஒருவகையில் வறுமை அல்லது சமுக சூழ்நிலை காரணமாக அமைவதை எவரும் மறுக்க முடியாது.

இவ்வாறு ஒரு பெண் அவலத்தில் அகப்படுவதற்கு காரணமான அந்தச் சமுகத்ததையும் அவள் வாழும் சூழ்நிலையையும் யாரும் கண்டிப்பதில்லை.

ஒரு குழந்தை கெட்டால் தாயை சாடும் நாம், ஒரு பெண் கெட்டால் அதற்கு காரணமான சமுகத்தையண்றி அந்த பெண்ணை முழுப் பொறுப்பாளியாக்குகின்றோம்.

எந்தத் தமிழ் பெண்ணுமே தன் இனம் பூண்டோடு அழிய வேண்டும். சிங்களமே தளைத்து ஒங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களோடு ஒத்துளைப்பதில்லை.

பலமுள்ள ஆண்களிடம் இரணுவம் பலவந்தமாக தமக்குத்தேவையான வேலைகளை செய்விக்கும் போது அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக எவரும் நோக்குவது கிடையாது.

அதே இராணுவம் பெண்களிடம் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி நாம் மரண தண்டனை தீர்ப்பை வழங்குகிறோம்.

மேலதிகமாக ஒழுக்கம் கெட்டவள் என்ற பட்டத்தையும் வழங்கி அவளின் குடும்பத்தினரை குழந்தைகளை கெளரவிக்கின்றோம்.

அதனால் ஏதுமறியா பிஞ்சுகள் அடையும் வேதனைக்கும் அவளே காரணம் என்று கூறி தண்டனை வழங்கிய எங்கள் சமுகப் பொறுப்புணர்வை தட்டிக்கழிக்கின்றோம்.

சரியாக எண்ணி முன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று சாத்திர விளக்கம் விளக்கம் வேறு கொடுக்கின்றோம்.

அதற்கு ஆதரவாக மேலும் பல அடிப்படை வாதங்களை முன்வைக்கிறோம்.

ஆனால் அவர்கள் அங்கே எதிர் நோக்கும் அத்தியாவசிய மற்றும் நடைமுறை பிரச்சனைகளை கருத்திலெடுக்க மறுக்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் இராணுவ இயந்திரத்திற்கிடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வென்ன என்று கேட்டால்....விழிக்கிறோம்.

தாய்நாட்டிலிருந்து தப்பியோடும் கணத்தில் கட்டுநாயக்காவில் வழிமறித்த எதிரிக்கு காசைநீட்டி தப்பி வந்து புலத்திலிருந்து வீரம் கதைக்கிறோம்.

சாணக்கியனின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் சிந்திக்கத் தக்கதும் ஆகும்.

என்னுடைய வேண்டுகோள்:

பெண் உளவாளிகள் தண்டிக்கப்படும் பொழுது "பாலியல் தொடர்பு" என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் தவிர்த்து விட வேண்டும்.

சமூக விரோதச் செயல்கள் என்று குறிப்பிடுவது கூட நல்ல விடயம் அல்ல. "சமூக விரோதச் செயல்" என்ற பதத்தை உலகம் "பண்பாட்டு மீறல்கள்" என்றே விளங்கிக்கொள்ளும்.

இவைகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றால், எங்களை ஒரு காட்டுமிராண்டிச் சமூகமாகவே உலகம் நோக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கம் பக்கமாக வீணாக வளர்ந்து செல்கிறது இந்த தலைப்பு! துரோகச்செயல் ஒன்றுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.

அவள் இராணுவத்துடன் தகாத உறவும் வைத்திருக்கின்றாள்.

பெரிய ஆராய்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது

தண்டனை துரோகச்செயலுக்கா?

தகாத உறவுக்கா?

இராணுவ சம்பந்தம் இல்லாத தகாத உறவுகள் மரணதண்டனையைப் பெற்றுக்கொண்டா இருக்கின்றன?

பலாத்காரம் இல்லாத சிறுவர் துஸ்பிரயோகமும் இல்லாமல் மரணதண்டனை வழங்கப்பட்ட ஒரு தகாத உறவின் உதாரணம் சொல்லமுடியுமா? யாராலாவது?

நெஞ்சிலே பொங்கிவளியும் வஞ்சத்தை, தங்கள் முகத்தை திறந்து; கொட்டத்திராணி இல்லாத துன்பங்கள், புலிகளின் ஆட்சி, தகாத உறவுக்கு மரணதண்டனை கொடுக்குறது என்ற குற்றத்தை அம்பலத்துக்கு விற்க்க தலையால் நடக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் எழுதியது.

அதே இராணுவம் பெண்களிடம் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி நாம் மரண தண்டனை தீர்ப்பை வழங்குகிறோம். ===================================================

யார் எங்கே வழங்குகிறார்கள் சாணக்கியன் இப்படிப்பட்ட சம்பவத்துக்கு?

நாங்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்.

உங்கள் கருத்துப்படி மரணதண்டனைக்கான காரணம் அவள் உடம்பால் கெட்டுவிட்டாள் என்பதற்க்குத்தானா?

90களின் கடைசி வரை தகாத உறவுகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பலர் தண்டிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டவர்களில் முன்னாள் தொழிலாளிகளும் அடக்கம்.

ஆனால் பல நடைமுறைச் சிக்கல்களால் இப்படி தண்டிப்பது நிறுத்தப்பட்டது.

இடையில் "கலாச்சாரம் பேணும் குழுவினர்" சில அத்துமீறல்களில் ஈடுபட்டார்கள்.

ஆனாலும் இன்று பெருமளவில் பண்பாட்டு மீறல்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதில

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மீண்டும் மீண்டும் என்ன சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது?

எவருடைய இளமைச்சூடு கேட்க்கின்றது சிங்களவனைத்தான் கொண்டுவந்து தா என்று? போராட்ட சூழ்நிலையில் இராணுவ தோடர்புகளோடு முடிந்தவரை ஒதுங்கித்தான் நிற்க்கவேண்டும் அனைவரும். பிறகு கட்டிலோடு மட்டும்தான் எனக்கு உறவு உளவு ஒன்றும் செய்வதில்லை என்ற நிலை வேண்டாமே?

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அதிகளவு மனித உரிமைகள் மீறப்படும் சவுதி அரேபியாவில் கொலை மற்றும் தவறான பாலியல் தொடர்புக்கு பொது இடத்தில் வைத்து தலை வெட்டுவது, திருட்டுக்கு கை கால் வெட்டுவது என மிகக்கடுமையான சட்டங்கள் அமுல் படுத்தியும் ஒவ்வெரு ஆண்டும் குற்றங்கள் அதிகரித்து செல்கிறதே ஒழிய குறையவில்லை.

சனத்தொகை அதிகரிக்க குற்றச் செயல்களும் அதிகரிக்கும். ஆனால் மேற்குலக நாடுகளோடு ஒப்பிடும் போது பாலியல் சம்பந்தமான மற்றும் பொதுக்குற்றங்கள் குறைவு. எயிட்ஸ் போன்ற நோய்களின் பரவலும் மிகவும் குறைவு.

முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபட்ட பெண்ணுக்கு எதோ ஒருவகையில் வறுமை அல்லது சமுக சூழ்நிலை காரணமாக அமைவதை எவரும் மறுக்க முடியாது.

வறுமைக்கு பாலியல் தொழில் அல்ல தீர்வு. உங்களின் வாதப்படி பார்த்தால் வறுமையைப் போக்க ஒரு சமூகத்தையே சீரழிக்கவல்ல தொழிலைச் செய்யலாம் என்பது போன்றிருக்கிறதே. வறுமையைப் போக்க சுயதொழில் கற்றுக் கொள்ளவும் அதற்கான பயிற்சியும் அளிக்கின்றனர். நிதி உதவிகளும் செய்கின்றனர். குறிப்பாக வடமராட்சி கிழக்கில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு விசேட நிதி வழங்களும் வேலைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

குறித்த பெண் கூட சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர் என்று சொல்லப்படும் போது வறுமை என்பதை ஏன் முன்னிலைப்படுத்த முனைகிறீர்கள். இது வறுமையால் வந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு துரோகக் குழுக்களின் உதவி கிடைத்திருக்கிறது. சகோதரர்கள் கூட வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளனர். இவருக்கு வேலை வாய்ப்பை துரோகக்கும்பல்கள் இராணுவத்துக்கு இவரை விலைபேசி விற்று செய்து கொடுத்துள்ளன. இது மிகவும் ஆபத்தான உதாரணம் சமூகத்திற்கு.

இவ்வாறு ஒரு பெண் அவலத்தில் அகப்படுவதற்கு காரணமான அந்தச் சமுகத்ததையும் அவள் வாழும் சூழ்நிலையையும் யாரும் கண்டிப்பதில்லை.

இவளை விட மிகவும் கஸ்டமான சூழலில் வாழும் பெண்கள் கூட தாயகப் பற்றுறிதியோடு வாழும் போது இவருக்கு மட்டும் ஏன் அந்த நிலை முடியாது? பல போராளிகள் தங்கள் வறிய குடும்பங்களை விட்டுப் பிரிந்து போராடி வீழ்ந்துள்ளனர். அவர்களின் பெற்றோர் உறவுகள் என்ன இராணுவத்துக்கு பாலியல் தொழிலுக்கா பரிந்திரைக்கப்படுகின்றனர். இல்லையே.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைவர் மீதும் எல்லோருக்கும் கரிசணை உண்டு. அந்த வகையில் அவர்களின் வறுமை நிலையைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. அப்படிக் கிடைக்கவில்லை என்றால் கிராம அலுவலர்கள் மூலம் தங்கள் முறைப்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்பு அனுப்பி பலனைப் பெற்றுக் கொள்ளலாம். அதைவிடுத்து சமூகவிரோத தேச விரோதச் செயல்செய்து பணமீட்டி அடுத்தவர் அழிவில் இவர்களை வாழ வைக்க நீங்கள் கோருவது எந்த வகையில் நியாயம்.

ஒரு குழந்தை கெட்டால் தாயை சாடும் நாம், ஒரு பெண் கெட்டால் அதற்கு காரணமான சமுகத்தையண்றி அந்த பெண்ணை முழுப் பொறுப்பாளியாக்குகின்றோம்.

பெண் என்ன ஆணென்ன வளர்ந்து ஒரு தனி மனிதனாக பின்னர் அவரின் செயற்பாட்டுக்கு அவரேதான் பொறுப்பு. அந்த வகையில் அவரின் சமூக விரோதச் செயலுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் செய்த குற்றத்துக்காக உங்கள் பெற்றோரைத் தண்டிக்க முடியுமா? அல்லது வாழ்ந்த சமூகத்தைத் தண்டிக்க முடியமா? உங்களுக்கு என்ற சிந்தனை எங்கே போனது? சமூகத்தில் நடப்பவை அறிந்தும் ஏன் தவறான பாதையில் செல்ல வேண்டும்?

எந்தத் தமிழ் பெண்ணுமே தன் இனம் பூண்டோடு அழிய வேண்டும். சிங்களமே தளைத்து ஒங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களோடு ஒத்துளைப்பதில்லை.

அப்படி ஒரு நினைப்பே இல்லாமல் சுயநலத்தோடு சமூகச் சிந்தனையற்று செயற்படும் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு. அந்த வகையில் இதுவரை பல பெண்கள் இராணுவம் வழங்கிய தகவல் தொடர்பு சாதனங்களோடு விமானிகளுக்கு பாசறைகளை வழிகாட்டியதைக் குறிப்பிடலாம். பலர் புலிகளால் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர். இவர்களில் அநேகர் வெளிநாட்டில் உள்ள உறவினர்களோடு தொடர்புகொள்ள கொழும்பு செல்லும் போது இராணுவத்துடன் தொடர்புகளை வைத்து இந்த நாசகாரச் செயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்களின் செயலுக்கு வறுமைதான் காரணமா?

பலமுள்ள ஆண்களிடம் இரணுவம் பலவந்தமாக தமக்குத்தேவையான வேலைகளை செய்விக்கும் போது அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக எவரும் நோக்குவது கிடையாது.

அதே இராணுவம் பெண்களிடம் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி நாம் மரண தண்டனை தீர்ப்பை வழங்குகிறோம்.

இராணுவம் அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது என்று கண்டால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வாழ்வதுதான் நல்லது. இப்படியான பாலியல் தொடர்புகளைப் சில பெண்கள் பேணுவதன் வாயிலாக இராணுவம் ஏனைய பெண்களையும் பற்றி தவறான கண்ணோட்டத்தில் அணுகவும் நிர்ப்பந்தங்களைப் பிரயோகிக்கவும் ஏன் வல்லுறவு முயற்சிகளை மேற்கொள்ளவும் இவர்களின் நடவடிக்கைகள் துணை போகின்றன என்றால் இல்லை எங்கிறீர்களா?

மேற்குலகில் கூட கெடுவதற்குப் பல வழிகள் இருக்கிறது. பப் கிளப் என்று போய் கெட்டுக் குட்டிச்சுவராவோரும் உள்ளனர் தானும் தன் உழைப்பும் குடும்பமும் என்று வாழ்வோரும் உள்ளனர். இதில் எதைத் தேர்வு செய்வது சமூகத்திற்கு நல்லது என்பதை உணரமுடியாதவர்களுக்கு சமூகம் வழிகாட்டும். அதையும் ஏற்க முடியாது சமூகவிரோதச் செயல்களைச் செய்யும் போது சமூகம் பாதிக்கப்படும் போது தண்டனைகள் வழங்கப்படத்தான் செய்கின்றன.

மேலதிகமாக ஒழுக்கம் கெட்டவள் என்ற பட்டத்தையும் வழங்கி அவளின் குடும்பத்தினரை குழந்தைகளை கெளரவிக்கின்றோம்.

ஒழுக்கம் என்பது என்ன? ஒரு மனிதனின் நடவடிக்கை அவனையும் பாதிக்காது பிறறையும் அவர்களின் செயற்பாடுகளையும் வாழ்வையும் பாதிக்காது இருக்கும் வகையில் அமைவதே. அப்படி அமைய நடக்காதவர்களை அது ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கு இலக்கில்லாமல் ஒழுக்கமற்றவர்களாத்தான் பார்க்க வேண்டும். அது தடுப்படுதலே சமூகம் சீரான முன்னேற்றங்களை எட்ட உதவும்.

அதனால் ஏதுமறியா பிஞ்சுகள் அடையும் வேதனைக்கும் அவளே காரணம் என்று கூறி தண்டனை வழங்கிய எங்கள் சமுகப் பொறுப்புணர்வை தட்டிக்கழிக்கின்றோம்.

இதைப் பற்றி தவறு செய்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாகவே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வரும் வேளையில் அவற்றை உதாசீணம் செய்து எதிரிக்கு தன்னையும் தேசத்தையும் விலை பேசுபவர்களை அவர்களின் சந்ததிகள் கருதி காப்பாற்ற நினைத்தால் பல பேரின் சந்ததிகள் சீரழியும். இன்று இவள் விட்டுச் சென்றுள்ள இந்தத் துரோகப் பட்டமே அந்தப் பிள்ளைகளை அதிகம் பாதிக்கப் போகிறது. எனவே இதை உணர்ந்து எனி மேலும் இப்படியான தவறுகளைச் செய்வதை ஆண்கள் சரி பெண்கள் சரி தவிர்த்துக் கொள்வதே அவசியம்.

சரியாக எண்ணி முன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று சாத்திர விளக்கம் விளக்கம் வேறு கொடுக்கின்றோம்.

அதற்கு ஆதரவாக மேலும் பல அடிப்படை வாதங்களை முன்வைக்கிறோம்.

ஆனால் அவர்கள் அங்கே எதிர் நோக்கும் அத்தியாவசிய மற்றும் நடைமுறை பிரச்சனைகளை கருத்திலெடுக்க மறுக்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் இராணுவ இயந்திரத்திற்கிடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வென்ன என்று கேட்டால்....விழிக்கிறோம்.

இராணுவ இயந்திரத்துக்குள் வாழச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களை நோக்கி வாருங்கள் என்று அழைப்பும் விடப்படுகின்றன. அங்கெல்லாம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்தாலும் இப்படியான பாலியல் தொழில் செய்யவில்லை. எதிரிக்கு விலை போகும் நடவடிக்கைகளில் இறங்க முடியாது.

ஆனால் அதைப் புறக்கணித்து இராணுவ இயந்திரத்திற்குள் தாங்களா சிக்கிக் கொண்டுள்ள மக்களை பரிதாபத்தோடு பார்க்க முடியுமே தவிர பரிகாரம் தேடத் தெரிந்தவர்களாகப் பார்க்க முடியாது. எது எப்படி இருப்பினும் அவர்களை இராணுவ இயந்திரத்தை செயலிழக்கச் செய்வதன் மூலமே விடுவிக்க முடியும். அதுவரை மக்கள் போராளிகளுக்கு பூரண ஒத்துழைப்பை நல்குவதை விடுத்து இப்படியான சமூகவிரோதச் செயல்களைச் செய்து எதிரியின் இருப்புக்கும் பொய்ப்பிரச்சாரத்துக்கும் துணை போவது மட்டுமன்றி சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அழிக்கும் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடனான செயற்பாடுகளை தடுத்த நிறுத்த வேண்டிய கடமையும் மக்களுக்கு உண்டு.

மக்களே பல வன்முறைக் குழுக்களைப் போலிச் சாமியார்களை விரட்டி அடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. சட்டவிரோத மதுபானச்சாலைகள் மற்றும் பாலியல் படங்கள் என்பவை மக்களால் பறிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எதிரிக்கு பாலியல் தொழில் செய்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

தாய்நாட்டிலிருந்து தப்பியோடும் கணத்தில் கட்டுநாயக்காவில் வழிமறித்த எதிரிக்கு காசைநீட்டி தப்பி வந்து புலத்திலிருந்து வீரம் கதைக்கிறோம்.

புலத்தில் இருந்தல்ல. ஒரு பெண் துரோகியின் காட்டிக் கொடுப்புக்கு இலக்காகி சுப்பர் சொனிக் குண்டு வீச்சு விமானத் தாக்குதலில் உற்ற நண்பனைப் பறி கொடுத்த வேதனையுடன் எழுதுகின்றோம். பின்னர் அந்தப் பெண் போராளிகளால் கைது செய்யப்பட்டாள். அவர் கொழும்புக்கு சென்று வரும் வேளைகளில் இராணுவத்துடன் ஏற்படுத்திய தொடர்பின் மூலம் மிகவும் சக்தி வாய்ந்த சிறிய தொலைத் தொடர்வு கருவி மூலம் இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடக்கிறதா என்பதை விமானிக்கு சிக்னல் வழி வழிகாட்டுபவர் என்பது பின்னர் கண்டறியப்பட்டது. ஆனால் அந்தக் குண்டு வெறும் வளவில் வீழ்ந்து வெடித்த போது அங்கு பங்கருக்குள் பதுங்கி இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். பெண்கள் என்பதால் சந்தேகம் வராது என்று எதிரி பெண்களை விலைக்கு வாங்கியுள்ளான் என்பதும். உளவாளிகள் சரி பாலியல் குற்றவாளிகள் சரி ஆண் பெண் பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் எழுதியது

வினித்! கவனித்தீர்களா? சிறிது வெளிப்படையாக கதைக்கத் தொடங்கியவுடனேயே தேவன் எமக்கு "துரோகிப் பட்டம்" கொடுக்கத் தயாராகிறார்.இப்படி இருந்தால் எப்படி கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்?

=====================================================

விடயத்தின் பொருள் நழுவிக்கொண்டே இருக்காமல் தெளிவாக முன்வைக்கலாமே தலைப்பை இப்படி.

1.தகாத உறவு மரணத்துக்குரிய குற்றமா?

2.எதிரிப் படைகளோடு கொள்ளும் தகாத உறவை ஏன் சாதாரண தாகாத உறவாகக் கருதப்படக்கூடாது. அது பெண்களின் சுய உரிமை மீறுகின்ற செயல் அல்லவா?

3.உளவு வேலை மரண தண்டனைக்குரிய குற்றமா? இவை தெளிவான கருத்துக்களைக் கொடுக்கும் அல்லவா?

வாசகர்களுக்கு

90களின் கடைசி வரை தகாத உறவுகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பலர் தண்டிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டவர்களில் முன்னாள் தொழிலாளிகளும் அடக்கம்.

ஆனால் பல நடைமுறைச் சிக்கல்களால் இப்படி தண்டிப்பது நிறுத்தப்பட்டது.

இடையில் "கலாச்சாரம் பேணும் குழுவினர்" சில அத்துமீறல்களில் ஈடுபட்டார்கள்.

ஆனாலும் இன்று பெருமளவில் பண்பாட்டு மீறல்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதில

  • கருத்துக்கள உறவுகள்

துயவன் சொன்னது.....

சிறிலங்காவின் பத்திரிகைகளில் கிழமையில் ஒவ்வொரு செய்தியாவது சிறுவர் துஸ்பிரயோகம் பற்றி வருவதை நிச்சயமாகப் பலர் பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்றால் அது குறித்தான தண்டனைக் காலம் என்று அங்கு குறைவாகும். அதைப் பண்பாட்டு மீறல் என்று கண்டித்துக் கொண்டிருக்க முடியாது.

தங்களுடைய இந்த கருத்தில் எனக்கு முரண்பாடு உள்ளது

''தமிழீழ விடுதலைப் புலிகளின்'' ஆழுகைக்குள் உள்ள பிரதேசத்தில்

இவ்வாறான பாலியல் தொடர்பு உள்ளதா...???

பத்திரிகையில் நாளந்தம் வருகிறதா...???

என்பதே கேள்வி பதில் இல்லை...

ஏன்....???

இது தான் அவர்களது நிர்வாகம். பாதுகாப்பு.சட்டம்.

ஒழுக்கம். எம்தமிழர் பண்பாடு அங்கு தான் கட்டி காக்க படுகிறது

ஆனால் இலங்கை தேசத்தில் அல்ல.

அவர்கள் அங்கு ''சிவப்பு விடுதி' வைத்து நடாத்துகிறார்கள்

அது அவர்களின் சட்டம்.

எத்தனை சிறு பிள்ளைகள் வ Pட்டு வேலைக்கு என

அமர்த்தி எத்தனை இந்த கொடுமை நடக்கிறது

ஏன் எம் தமிழர் கூட இதை செய்கிறார்கள்.

அங்கு லஞ்சம் பாதுகாப்பு. நிர்வாக ஒழுக்கம்

என்பன கெட்டு போய் கிடக்கின்றன.

ஆனால் தமிழீழத்தில் அப்படி அல்ல.

இதற்கு ஒரு உதரணம் சொல்கிறேன் '' பளையில்''

சில வருடங்களுக்கு முன் ஒரு ஆசிரியயை வெட்டி கொலை செய்தார்கள் நால்வர்.

தான் காதலித்தபோது அப் பெண் தன்னை காதலிக்கவில்லையாம்

சாதிய அடிப்படையில் நடை பெற்றது.

காதலனே காதலியை கொலை நபரோடு சோந்து துண்டு துண்டாய் வெட்டி கொலை செய்தார்கள்

இதை அறிந் விடுதலை புலிகள் நடவடிக்கையில் இறங்கினர்.

உடனடி விரைவு உளவு தகவலின் அடிப்படையில் சொற்ப்ப மணி நேரத்தில் புலிகள்

அந்த நால்வரையும் கைது செய்து விசாரித்து.

அணைத்தும் ஆதர புர்வமாக உறுதிப் படுத்தி மக்கள் முன்னால் மரண தண்டணை கொடுத்தார்கள்.

அந்த பெண்ணின் தாயும். சகோதரனும். எனக்கு அந்த கதையை சொன்னபோது......

இங்கு தான் புலிகளின் நிர்வாகம். தொடர்பாக நாங்கள் சிந்திக்க வேண்டும்...

எனவே தூயவன் இலங்னை என்ற பதத்திற்குள் எம் தமிழர் நிகழ்வுகளை பார்க்காதீர்கள்.

நன்றி

வன்னி மைந்தன்

வன்னி மைந்தன் தவறாக விளங்கிக் கொண்டு விட்டீர்கள் என நினைக்கின்றேன். சபேசன் இவ்வாறன நிகழ்வுகளை கண்டிக்க வேண்டுமே தவிர தண்டிக்க கூடாது என்று சொன்னதால் தான் இலங்கையரச நிர்வாகத்தை உதரணம் காட்டினேன். அங்கே போதுமான சட்டங்கள் இன்மை, மேலும் குறைந்த பட்ச தண்டனைகளால் தான் அவ்வாறு தவறுகள் நடக்க காரணம் என்பதே என்கருத்து.

அவ்வாறன துர்நடத்தை கொண்ட குற்றவாளிகளுக்கு சிறிலங்கா அரசு மரண தண்டனை விதித்தால், அப்படிப்பட்ட சம்பவங்கள் குறையும் என்பது தான் சொல்ல விளைந்தது. மற்றும்படி தமிழீழத்தையும், சிறிலங்காவையும் ஓப்பீடு செய்யவில்லை.

என்னை பொறுத்தவரையில் போர்க்காலத்தில் மனிதாபிமானம் என்பது துரோகிகளுக்கு கூடாது என்பதுதான்.படையினருடன் சல்லாபம் செய்யும் பெண்களை மட்டுமல்ல தமிழருடன் விபச்சாரம் செய்யும் பெண்களுக்கும் இத்தண்டனை சரியானதே அது எந்தவிதமான காரணமிருந்தாலும் அது சரியானதே.அதுமட்டுமல்ல படியேறும் ஆண்களையும் தண்டிக்கவேண்டும் என்பது எனது விருப்பம் இவர்கள் கூட விபச்சார்த்துக்கு ஒரு துண்டு காரணி

இந்த விவாதத்தில் முதலில் நான் கேட்ட கேள்விகள் இவைகள்:

1.ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக தண்டிக்க முடியுமா?

2.ஒரு பெண் யாருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதைஇ ஒரு நாடோஇ இனமோஇ சமூகமோ தீர்மானிக்க முடியுமா?

3.பண்பாட்டு மீறல்கள் தண்டனைக்குரிய குற்றமா?

இவ் விவாதத்தின் முதற்பக்கத்தில் பார்த்து ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தக் கேள்விகள்தான் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாது இவ்வளவு து}ரம் வந்து நிற்கிறது.

இந்தக் கேள்விகளில் உளவு பார்ப்பது குறித்து எந்த விடயமும் உள்ளடக்கப்படவில்லை என்பதை கவனியுங்கள்.

ஒரு குற்றவாளி தண்டிக்கப்படும் பொழுது அவருடைய குற்றங்கள் பட்டியல் இடப்படுவது வழமை.

உதாரணம்: திருட்டு, கொலை, மோசடி, கடத்தல்......இப்படி பல.

ஆனால் என்னுடைய கேள்வி "பாலியல் தொடர்பு" ஒரு குற்றமா என்பதே. இதிலே சம்பந்தப்பட்டவர்களின் உரிமை மீறப்படாத இடத்து அவைகளை குற்றம் என்று என்னால் வகைப்படுத்த முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இன்றி கையை தொடுவது கூட குற்றம்தான். அல்லது மனம் நோகும் படி பாலியல் பகிடிகள் செய்வதும் குற்றம்.

ஆனால் வயது வந்த இருவர் அவர்களாக இணங்கி "பாலியல் தொடர்பு" வைத்துக் கொள்வது என்னுடைய பார்வையில் "குற்றம்" இல்லை.

அது ஒரு "பண்பாட்டு மீறல்" என்று பார்க்கலாம்.

ஆனால் இங்கே ஒருவருக்கு தண்டனை வழங்கப்படும் பொழுது குற்றமில்லாத ஒன்றை குற்றங்களின் வரிசையில் சொல்லப்படுகிறது.

இதுவே என்னுடைய கேள்விகளுக்கு காரணம்.

தமிழீழச் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

பாலியல் வல்லுறவிற்கு மரண தண்டனை வரை வழங்கப்படும் என்கிறது.

இன்னும் ஒன்றையும் சொல்கிறது.

14 வயதிற்கு உட்பட்ட ஒருவருடன் பலியல் உறவு வைத்துக்கொள்வது "வல்லுறவாக" கருதப்படும் என்கிறது.

திருமணமான ஒருவர் இன்னொருவருடன் உறவு வைத்துக்கொள்ளும் பொழுது அவருடைய கணவனோ, மனைவியோ வழக்குப் போடலாம் என்றும் அப்பொழுது குறைந்தபட்ச தண்டனையாக அபராதமும் அதிக பட்ச தண்டனையாக 2 வருட கடும் காவல் தண்டனையும் வழங்கப்படும் என்கிறது.

மற்றையபடி திருமணமாகத இருவர் உறவு வைத்துக் கொள்வதை தமிழீழ சட்டம் ஒரு குற்றமாக கருதுவதாக நான் அறியவில்லை. (மற்றவர்கள் அறிந்திருந்தால் சொல்லுங்கள்)

திருமணமானவர் விடயத்தில் கூட கணவனோ, மனைவியோ வழக்குப் போட்டால்தான் அது செல்லுபடியாகும்.

நிலமை இப்படி இருக்க, எப்படி ஒரு பெண்ணினுடைய "பாலியல் தொடர்பை" ஒரு குற்றமாக அறிவிக்க முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் எழுதியது

வினித்! கவனித்தீர்களா? சிறிது வெளிப்படையாக கதைக்கத் தொடங்கியவுடனேயே தேவன் எமக்கு "துரோகிப் பட்டம்" கொடுக்கத் தயாராகிறார்.இப்படி இருந்தால் எப்படி கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்?

=====================================================

விடயத்தின் பொருள் நழுவிக்கொண்டே இருக்காமல் தெளிவாக முன்வைக்கலாமே தலைப்பை இப்படி.

1.தகாத உறவு மரணத்துக்குரிய குற்றமா?

2.எதிரிப் படைகளோடு கொள்ளும் தகாத உறவை ஏன் சாதாரண தாகாத உறவாகக் கருதப்படக்கூடாது. அது பெண்களின் சுய உரிமை மீறுகின்ற செயல் அல்லவா?

3.உளவு வேலை மரண தண்டனைக்குரிய குற்றமா? இவை தெளிவான கருத்துக்களைக் கொடுக்கும் அல்லவா?

வாசகர்களுக்கு

சபேசன் எழுதியது

1.ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக தண்டிக்க முடியுமா?

2.ஒரு பெண் யாருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதைஇ ஒரு நாடோஇ இனமோஇ சமூகமோ தீர்மானிக்க முடியுமா?

இப்படி கேள்விகள் இதய சுத்திதனத்தோடு கேட்க்கப்படுவது அழகு சபேசன்.

எந்த ஒருநாட்டிலாயினும் போர்க்கால விதியாக இருப்பது. எதிரியுடனான தொடர்புகளை குறைக்க வேண்டும். சினேகபூர்வமாக அவர்கள் முகாம்களுக்கு visit செய்வதுகூட குற்றமாகும் போது, அதைக் கேட்க்கத் தோன்றவில்லை உங்களுக்கு சிநேகிதம் வளர்ப்பது யாருடன் என்பதை இவர்கள் யார் தீர்மனிப்பது என்று?

ஆனால் இந்த புண்ணியகரமான, புனிதகரமான உறவுக்கு மட்டும் விலக்கு வேண்டும் என்று வாதாடுகிறீர்களா?

காட்டிக்கொடுப்பவர்கள் ஆணோ, பெண்ணோ தண்டனையின் போது அவர்கள் அனைத்துக்குற்றங்களும் பட்டியலிடப்படுவது தண்டனையின் மரபே அதில் பால் வேறு பாடு காட்டப்படுவதில்லை. என்ன பெண்களாக இருப்பதால் ஒருவரிக்குரிய குற்றம் பொதுவாக இருந்து விடுகிறது அனைவருக்கும். அந்தவரி ஆண்களுக்கு ஏன் இல்லை என்று தெரியும் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் எழுதியது

1.ஒரு பெண்ணை பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காக தண்டிக்க முடியுமா?

2.ஒரு பெண் யாருடன் பாலியல் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதைஇ ஒரு நாடோஇ இனமோஇ சமூகமோ தீர்மானிக்க முடியுமா?

தண்டனை துரோகச்செயலுக்கா?

தகாத உறவுக்கா?

இராணுவ சம்பந்தம் இல்லாத தகாத உறவுகள் மரணதண்டனையைப் பெற்றுகின்றனவா?

பலாத்காரம் இல்லாத சிறுவர் துஸ்பிரயோகமும் இல்லாமல் மரணதண்டனை வழங்கப்பட்ட ஒரு தகாத உறவின் உதாரணம் சொல்லமுடியுமா? யாராலாவது?

குற்றங்கள் பட்டியல் இடப்படுவது மரபு.

ஆனால் இங்கே குற்றங்களின் பட்டியலில் (உளவு பார்த்தல், காட்டிக் கொடுத்தல்..) குற்றமற்ற ஒன்றும் (பாலியல் தொடர்பு) இணைக்கப்படுவதுதான் எனக்கு சரியாக படவில்லை.

நீங்கள் சொன்னது போன்று இன்றைய நிலையில் எதிரியின் முகாம்களுக்கு சென்று வருவதும், எதிரியுடன் நட்பை பேணுவதும் எமது போராட்டத்திற்கு ஆபத்தான விடயங்கள்தான். இதில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் பிரச்சனை அதுவல்ல.

உதாரணத்திற்கு ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அதற்கு காரணமான அறிக்கை இப்படி வருகிறது.

சம்பந்தப்பட்டவருக்கு கொலை, கொள்ளை, வல்லுறுவு, வீதியில் சிறுநீர் கழித்தல் ஆகிய குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இதை நீங்கள் படித்தால் என்ன நினைப்பீர்கள்?

இப்படி குற்றங்களோடு இன்றைய உலகில் குற்றமற்ற ஒன்றாக பார்க்கப்படுகின்ற ஒன்றையும் இணைப்பது, மற்றைய சமூகங்கள் எங்களை நாகரீகம் அடையாத சமூகமாக பார்க்கச் செய்யும்.

இதில் ஆங்கிலத்தில் வேறு செய்தி வெளியிடுகிறோம்.

ஆகவே வருங்காலங்களில் குற்றங்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்படுகின்ற பொழுது இந்த "பாலியல் தொடர்பு" என்பதை தவிர்த்து விட வேண்டும்.

எமது ஊடகங்களும் இதை பின்பற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

பாலியல் தொடர் என்பது எந்த வகையினது என்று நோக்கப்படும்.

1. கணவன் - மனைவி பாலியல் தொடர்பு

2. நம்பிக்கையின் அடிப்படையில் திருமணமாகாத ஆண் - பெண் வைக்கும் பாலியல் தொடர்பு

3. பாலியல் தொழில் செய்பவர் வைக்கும் பலருடனான பாலியல் தொடர்.

4. வல்லுறவு மூலமான பாலியல் தொடர்

5. இயற்கைக்கு மாறான பாலியல் தொடர்புகள்.

இந்த வகைகளில் முதலிரண்டுக்கும் தமிழீழச் சட்டத்தில் நெகிழ்வுத் தன்மை இருக்கிறது.

பின்னைய மூன்றும் கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்கள்.

குறித்த பெண் வைத்திருந்த பாலியல் தொடர்பு என்பது வகை 3க்குள் வருகின்றனது. அந்த வகையில் அது தண்டனைக்குரிய குற்றம். சமூக விரோதச் செயல். :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த மோசமான குறங்களும்; மரணத்தின் தண்டனையைப் பெறுவதற்க்கு தகுந்த பாவம் சுமப்பதாக தமிழீழத்தின் சட்டம் வரையப்பட மாட்டாது.

இது போர்க்கால நிலையின் விபரீதம், ஒரு ஒட்டு மொத்த இனத்தின் விடியல்களுக்கு ஆக, அளவுக்கு அதிகமான தண்டனை (நாட்டின் சாதாரண சூழ் நிலையின் தண்டனையோடு ஒப்பிட) சில பாவங்களுக்கு வழங்க நேருடுகின்றது.

தமிழ்த்தேசியத்தின் தேவை அறிந்து சட்டத்துறையின் புரட்சிகர செயல் வடிவங்கள் கண்டு மெய்சிலிர்த்துப் போனவர்களில் நானும் ஒருவன் இதுவரை இருந்துவந்த சட்டமரபாக கையகப்படுத்தப்பட்ட சமூகக் குற்றவாளிகளை சமுதாயத்தைக் கொண்டு ஓட ஓட விரட்டி அடிக்கும் உணர்வு வழங்கலையே தமது பணியாகச் செய்துவந்த சட்டத்துறையை இதுவரைக்காலம் பார்துவந்த எமது அநுபவத்துக்கு, கதைகளிலேயே வருவதுபோல் அவர்கள் உளப்புண்ணுக்கு மருந்து கொடுத்து அவர்கள் சிந்தனைக்கே மறுயேன்மம் கொடுத்து வெளியால் அனுப்புகிறது தமிழீழ சட்டத்துறை. போரின் பாதை கடந்து முடிக்கப்படமுன்பே காட்டுவளம், நிலவளம் போன்ற செயல்களிலேயே செயலை முடுக்கிவிட்ட அந்த புரட்சிகரசிந்தனைக்கு மனித உரிமைகளின் அக்கறைக்கு வெளியாரா சொல்லிக்கொடுக்கவேண்டும்

சமூக அக்கறையுள்ள எந்த இதயத்தையும் ஈர்க்கும் சமூகப் புண்களுக்கு அவர்கள் பணி; செயற்ப்படுகின்றவிதம்.

இன்னும் ஒரு பாலியல் தொடர்பு உண்டு. ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக எழுகின்ற உணர்வின் அடிப்படையில்சமூக கட்டுப்பாடுகளை மீறி உறவு கொள்வது.

இதில் இரண்டு வகை உண்டு.

திருமாணமானவர் திருமணமான, திருமணம் ஆகாத வேறொருவருடன் வைக்கின்ற உறவு

திருமணம் ஆகாத இருவர் வைக்கின்ற உறவு.

இது ஒரு பெண்ணுக்கும் அயிலில் இருக்கின்ற ஆணுக்கும் நடக்கலாம். விடுமுறையில் வந்து நின்றவர்களுடன் ஏற்படலாம். காவலரணில் நிற்கின்ற சிப்பாயுடன் கூட ஏற்படலாம்.

இந்த இடத்தில் வெறும் ஆண், பெண் என்கின்ற காரணத்தினாலேயே இது நடக்கிறது. (இதை நான் ஆதரிக்கவில்லை என்பதும், அதனாலேயே பண்பாட்டு மீறல் என்று சொல்கிறேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்)

இவ்வாறான சம்பவங்கள் ஈழத்தில் நடப்பதே இல்லை என்று சொல்லி விடாதீர்கள். இவைகளைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை என்பதாலும், பேச விரும்புவது இல்லை என்றாலும் இவைகள் நடக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

இது உலக நாடுகள் முழுவதும் நடைபெறுகின்றது.

தீவிரவாத இஸ்லாமிய நாடுகளில்தான் இவைகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய சட்டத்தின்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் உறவு கொள்வது விபச்சாரத்திற்குள் அடங்குகிறது. ஆனால் யாரும் அப்படி தண்டிக்கப்படுவதில்லை.

இந்தியா, சிறிலங்கா, தமிழீழம் போன்ற நாடுகள் இதை கண்டும் காணமல் விடுகின்றன. என்னுடைய பார்வையில் இந்த நாடுகள் செய்வது சரியான ஒன்றே.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி இணைவதை சட்டரீதியாக தடுக்க முடியாது. தண்டிக்கவும் முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.