Jump to content

இரு உயிர்களை தொலைத்து...


Recommended Posts

பதியப்பட்டது

சில வருடங்களுக்கு முன்னர் யாழில் தான் நான் முதன் முதலில் கதை எழுத ஆரம்பித்தேன்...இப்பொழுது என்னுடைய சிறுகதைகளில் ஒன்று தாயகபறவைகள் இதழில் வெளியாகி உள்ளது... இந்த கதையும் யாழுக்கே சமர்ப்பணம்...

thuya.JPG

தொடர்ந்து வாசிக்க....:

http://thayakaparavaikal.com/stories.php

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானியாவில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு யாபகத்துக்கு வருகிறது. தாயார் மேல் மாடியில் நித்திரையில் இருக்க, வீட்டின் கீழ்ப்பகுதியில் 4 வயதுப்பிள்ளையும் 7,8 மாதக்கைக்குழந்தையும் விளையாடிக்கொண்டிருக்க, அக்குழந்தையின் உடையில் விளையாடும் போது அழுக்கு ஏற்படுகிறது. இதனால் உடையில் ஏற்பட்ட அழுக்கினை நீக்க, 4 வயதுப்பிள்ளை, அந்தக்குழந்தையினை உடுப்புத்தோய்க்கும் இயந்திரத்தினுள் இட்டு இயந்திரத்தினை வேலை செய்ய அழுத்தியினை அழுத்தியது.

தாய் நித்திரை விட்டு எழும்பி குழந்தையினைத்தேட, 4 வயது பிள்ளை, உடுப்புத்தோய்க்கும் இயந்திரத்தில் குழந்தை இருப்பதாகச் சொல்ல, அங்கே சென்று திறந்து பார்க்க காயங்களுடன் உயிரற்ற நிலையில் குழந்தை.

Posted

கொடுமை கொடுமை....பிள்ளைகள் மேல் கவனமில்லா

Posted

நான் முதலில் வாசிக்கவில்லை இப்போது தந்த இணைப்பில் வாசித்தேன் நன்ராக இருந்தது வாழ்த்துக்கள்.

Posted

மிக்க நன்றி ஈழவன் :)

Posted

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளினைக் கவனமாகப்பார்க்கவேண்டும் என்பதை உணர்த்தும் கதை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நல்லாருக்கு பாராட்டுக்கள்

Posted

பெற்றோரின் கவனக்குறைவால் எவ்வளவு விபரீதங்கள். இது நிஜச்சம்பவம் என்று நினைக்கிறேன். இல்லையா தூயா? அதனை அழகாக கதையிலும் கூறி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Posted

தூயா ... உங்கள் முதல் சிறுகதையா....கதையின் கரு தாக்கத்தை நன்றாக உணர்த்துகிறீர்கள். பாராட்டுக்கள்.......வருங்காலத்த

Posted

மிக்க நன்றி அரவிந்தன், கறுப்பி, ரசிகை & சின்னகுட்டி :lol:

சின்னகுட்டி - இதற்கு முன்னரும் சில கதைகளை எழுதி உள்ளேன்...யாழில் இருக்கே..இல்லை எனில் என்னுடைய ப்ளொக்கிலும் பார்க்கலாம்.. உங்கள் கருத்திற்கு நன்றி..வடிவம் என்ன என்பதே எனக்கு தெரியாது..நீங்கள் சொல்லி தந்தால் கற்றுகொள்வேன் ..ஆவலுடன் பதிலை எதிர்பார்க்கின்றேன்..

Posted

வாழ்த்துக்கள் தூயா. தொடர்ந்து உங்களுடைய படைப்புக்களை தாருங்கள். இப்போது உங்களுடைய எழுத்துநடை மெருகேறி வருகின்றது. தொடர்ந்து எழுதி வந்தீர்களானால் காலப்போக்கில் சிறந்த எழுத்தாளரா ஆகலாம்.

புலம்பெயர்ந்த பல தமிழ் குடும்பங்களின் நிலையும் கதையில் வரும் வரதன் குடும்பத்தின் நிலையை போன்றது தான். :lol: தாயகத்தில் என்றால் அந்த குழந்தைகளை கொஞ்சவும் பராமரிக்கவும் எத்தனை உறவுகள் நம்மை சூழ இருக்கும். ஆனால் புலம்பெயர்ந்த தேசத்தில் யாரிருக்கின்றார்கள் ......

Posted

புலம் பெயர்ந்த அநேகமான தமிழ் குடும்பங்களில் இப்படியான பிரச்சனைகள் தான் அதிகம். 3 வயதுப்பிள்ளையையும் அந்த சிறு குழந்தையையும் தனியா விட்டு போக எப்படித்தான் அந்த தாய்க்கு மனம் வந்ததோ?

அழகாக நிஐக்கதையை அப்படியே எழுதுகின்றீர்கள் தூயா. பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.

Posted

மிக்க நன்றி அரவிந்தன், கறுப்பி, ரசிகை & சின்னகுட்டி :(

சின்னகுட்டி - இதற்கு முன்னரும் சில கதைகளை எழுதி உள்ளேன்...யாழில் இருக்கே..இல்லை எனில் என்னுடைய ப்ளொக்கிலும் பார்க்கலாம்.. உங்கள் கருத்திற்கு நன்றி..வடிவம் என்ன என்பதே எனக்கு தெரியாது..நீங்கள் சொல்லி தந்தால் கற்றுகொள்வேன் ..ஆவலுடன் பதிலை எதிர்பார்க்கின்றேன்..

:(:lol::)

நல்ல ஆளை கேட்டீங்கள்.. இந்த.சின்னக்குட்டி உந்த புளக்கிலை அநுப பகிர்வு தலைப்பு கீழை தான் எழுதிறனான்... இன்னும் ஒரு சிறு கதையே வாழ் நாளில் நான்... எழுதினதே இல்லை... நான் எப்படி உங்களுக்கு சொல்லி தாறது... அதுவும் ஒரு கதை தான்...

உங்களுக்கு தெரியாததே... தூயா...சிறுகதை என்றால் சின்னக்கதை இல்லையாம்... அதற்கு வடிவம்,சமன்பாடு தேற்றம்... எல்லாம் இருக்காம் எண்டு உந்த இலக்கிய பெரிசுகள் விமர்ச்சிக்கிறாகள் சொல்லிக்கொண்டு நிக்கிறவை....

நீங்களும் பார்த்தால் நல்லாய் எழுதிறீங்கள்... இந்த இலக்கிய சமுத்திரத்திலை இறங்கக்கை உங்கட சிறுகதை நல்லாயிருக்கட்டும் என்று சொல்லிப்போட்டன்...குறை நினைக்க வேண்டாம்...

சொல்லப்போனால் இவையின்ரை கலை வடிவம் இலக்கணம் , இலக்கிய வடிவம் அதுகள் இதுகள் என்ற கோட்டுக்குள்ளை நிற்க நான் விரும்பிறேல்லை... ஏதோ டைரி மாதிரி எழுதிட்டு போறனான்,, எனக்கு பிரச்சனை இல்லை...

நீங்கள் வாழும் பிள்ளை வளரும் பிள்ளை அதனால் சொன்னான்..... :):(

Posted

:cry: :cry: :cry: :cry: :cry:

தூயா பபா இது உண்மைச் சம்பவம் தானே. லண்டனில் நடந்ததாகவும் ஒரு ஆசிய நாட்டு தம்பதியினர்க்கு தான் இக்கதி நேர்ந்ததாக முன்பு யாழில் வாசித்த நினைவாக இருக்குது.

பாவம்

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#32198

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Posted

வாழ்த்துக்கள் தூயா. தொடர்ந்து உங்களுடைய படைப்புக்களை தாருங்கள். இப்போது உங்களுடைய எழுத்துநடை மெருகேறி வருகின்றது. தொடர்ந்து எழுதி வந்தீர்களானால் காலப்போக்கில் சிறந்த எழுத்தாளரா ஆகலாம்.

புலம்பெயர்ந்த பல தமிழ் குடும்பங்களின் நிலையும் கதையில் வரும் வரதன் குடும்பத்தின் நிலையை போன்றது தான்.  :lol:  தாயகத்தில் என்றால் அந்த குழந்தைகளை கொஞ்சவும் பராமரிக்கவும் எத்தனை உறவுகள் நம்மை சூழ இருக்கும். ஆனால் புலம்பெயர்ந்த தேசத்தில் யாரிருக்கின்றார்கள் ......

மதன் அண்ணா, மிக்க நன்றி...முன்னேற தான் முயற்சி எடுத்துள்ளேன்....உங்கள் கருத்துக்களால் நிறைய படிக்கிறேன்..நன்றி

Posted

புலம் பெயர்ந்த அநேகமான தமிழ் குடும்பங்களில் இப்படியான பிரச்சனைகள் தான் அதிகம்.  3 வயதுப்பிள்ளையையும் அந்த சிறு குழந்தையையும் தனியா விட்டு போக எப்படித்தான் அந்த தாய்க்கு மனம் வந்ததோ?

அழகாக நிஐக்கதையை அப்படியே எழுதுகின்றீர்கள் தூயா. பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.

உண்மை தான்...:lol: நினைத்தாலே மனதை ஏதோ செய்யும்...புலத்தில் இப்படி எத்தனை அவலங்கள்...

நன்றி ரமா

Posted

மிக்க நன்றி நிலா, சின்னகுட்டி, & இலக்கியன்..

நெடுக்கால போவான் என்ன சொல்ல வாறிங்க...பார்க்க தெரியலையே!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.