Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமுதினி படகும் – நெடுந்தீவும் திரிவுபடும் வரலாறுகளும்.. நடராஜா குருபரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணி ஒன்று அண்மையில் நெடுந்தீவில் கால்பதித்தது... முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் சென்ற அணியினர் மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களுடன் உரையாடியிருந்தனர்...

இலங்கையில் இருந்தும் ஏன் யாழ் குடாநாட்டில் இருந்தும் கைவிடப்பட்ட தீவுகளாக இருக்கும் தீவுகளில் நெடுந்தீவு பிரதான இடத்தை வகிக்கிறது....

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினதும், கடற்படையினரதும் இரும்புப்பிடிக்குள் சிக்கித் தவித்த தீவுகளில் நெடுந்தீவும் முக்கியம் பெறுகிறது.

அந்த வகையில் தேசிய அரசியலில் மாற்றத்தின் அணியில் பங்கெடுத்த, தேசிய அரசுப் பேரவையில் பங்கெடுக்கும் கூட்டமைப்பு தீவகத்தில் கால்பதித்தமை மக்களுக்கு ஆறுதல் கொடுத்த விடயமாகிறது...

அந்த ஆறுதலின் ஆரம்பமாகத்தான் பெருவாரியான மக்கள் ஒன்று திரண்டு கூட்டைமைப்பு பிரதிநிதிகளை வரவேற்றார்கள்...

கூடியிருந்த மக்களிடையே கூட்டமைப்பு பிரமுகர்களின் உரைகள் தூளைக் கிளப்பின... பாராளுமன்ற தேர்தல் நெருங்குகிறது என்பதனை சிலரது உரைகள் நினைவுபடுத்தியது.. மக்களிடம் வாக்கு வேட்டைகளுக்கான அஸ்திவாரங்களை சில பிரமுகர்கள் போடத் தவறவில்லை...

பாராளுமன்ற தேர்தல் வந்தால் வாக்கு வேட்டைகளை ஆரம்பிக்கத்தான் வேண்டும்... ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்த பின் மக்கள் எதிர்கொள்ளும் இரண்டாவது பாராளுமன்ற  தேர்தல் இது.

யுத்தத்தின் பின்னான முதலாவது தேர்தலிலும், மாகாண சபைத் தேர்தலிலும், போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் மக்களுக்கு அள்ளி வீசிய வாக்குறுதிகளில் எதனைச் சாதித்தார்கள்? என்பது தொடர்பாக மக்களின் அதிர்ப்திகளிடையே மீண்டும் பாராளுமன்றக் கதிரைகளுக்கான மரதன் ஓட்டங்களை பலர் ஆரம்பித்து விட்டார்கள்...

இந்த கதிரைப் போட்டிகளிடையே நெடுந்தீவுக் கூட்டத்தில் இடம்பெற்ற உரை தொடர்பாக சில தவறுகளை இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டியது மிக முக்கியம் என நினைக்கிறேன்...

காரணம் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னான வரலாறுகள்,  ஈழ விடுதலைப் போராட்ட வரலாறுகள், தமிழ் அரசியலின் பாராளுமன்ற பிரவேசம் தொடர்பான வரலாறுகள், தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாறுகள், ஈழமாணவர் போராட்ட வரலாறுகள், ஈழவிடுதலை இயக்கங்களின் தோற்றம், நடைமுறை, அழிவு குறித்த வரலாறுகள் 1985களிற்கு பின் வந்த இளைய தலைமுறையினருக்கு தெளிவாக தெரிய வரவில்லை என்ற மனக் குறை என்னிடம் உண்டு...

ஆங்காங்கே தொட்டும் தொடாமலும் சிலவற்றை தெரிந்து கொண்டு இன்று சமூக வலைத்தளங்களில் முட்டி மோதுகின்ற வரலாறுகள்தான் கண்முன்னே காண்கின்றோம்...

இப்படியான சூழலில் பாராளுமன்ற, மாகாண, உள்ளுராட்சி சபைகளின் அரசியலில் ஈடுபட்டுள்ள பிரமுகர்களும், அரசியல் கட்சிகளில் செயற்பாட்டாளர்களும் பொது வெளியில் கருத்துக்களை வரலாறுகளை முன்வைக்கிறார்கள். அவை செய்திகளாக, ஒளி, ஒலிகளாக இணையங்களில் பதிவேற்றப்படுகின்றன. பின்னர் இளையவர்களின்  கூகுள் தேடலில் தரவுகளாக இந்த அரசியல் பிரமுகர்கள் கூறும் விடயங்களே கிடைக்கின்றன... அவ்வாறாயின் அவற்றை பொறுப்புடன் முன்வைக்க வேண்டாமா? அவ்வாறு தவறான வரலாறுகள் பேசப்படும் போது பொறுப்புள்ள ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அதனை கூட்டிக் காட்டாது இனியும் மௌனமாக இருக்க முடியுமா?

அதனால் இந்த விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்... தவிர தனிப்பட்ட வகையில் வேறு நோக்கங்கள் இருப்பதாகவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ இந்த விடயத்தை முன்வைக்க வில்லை...

.

குமுதினி படகு பற்றி இந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றியவர்.. கூறுகிறார்... குமுதினி படகு 50 ஆண்டுகளுக்கு முன் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ. இரத்தினம் தனது முயற்சியால் கொண்டு வந்தார்... அவரது மனைவி குமுதினியின் பெயரில் இந்த சேவையை ஆரம்பித்தார் எனக் கூறியிருந்தார்.

 

உண்மையில் கா.பொ. இரத்தினத்தின் மனைவியின் பெயர் சிந்தாமணி...

1960 ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சித் தேர்தல் தொகுதியிலும், 1970 ஆம் ஆண்டில் ஊர்காவற்துறைத்  தேர்தல் தொகுதியிலும் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஊர்காவற்துறைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் தீவகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக 1947–1956  அல்பேர்ட் தம்பையாவும் (Alfred Thambiayah) பின்னர் 1956–1963 வீ.ஏ கந்தையாவும் அதன் பின்னர் 1963–1970 வி. நவரட்ணமும்  1970–1983 கா.பொ.ரட்ணமும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்...

எனினும் அல்பேர்ட் தம்பையாவின் முயற்சியினாலேயே வீ.ஏ கந்தையா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 1960களில் குமுதினி படகு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அல்பேர்ட் தம்பையாவின் தந்தையார் 1900களில் ஊர்காவற்துறையில் கப்பல் கம்பனியின் சொந்தக்காரர்... அல்பேர்ட் தம்பையாவும் 21 வயதில் வியாபாரத்தில் இறங்கி 1936களில் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் அதிபதியானார்... கப்பல் கட்டும் நிறுவனங்களிலும் பங்குகள வைத்திருந்தார்...  அந்த வகையில் நெடுந்தீவிற்கான போக்குவரத்தில் குமுதினி படகை ஈடுபடுத்தியதன் ஆரம்ப கர்த்தா அல்பேர்ட் தம்பையாவே... இதற்கு முன் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ராஜேஸ்வரி படகு அல்பேர்ட் தம்பையாவின் மனைவி இராஜேஸ்வரியின் பெயரில் அமைந்திருந்தது.

தவிரவும் தீவகத்தில் பாதை அமைப்பு, பாடசாலைகளின் அபிவிருத்தி, வைத்தியசாலைகள், தொலைத்தொடர்பு, போக்குவரத்து என பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் முதன்மையானவராக விளங்குகின்றார்.... இவரை ஊக்குவித்தவர்களில் இவரது வலதுகரமாக இருந்த நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவராகவும், கிராம சபைத் தலைவராகவும் இருந்த கொடுவேல் விதானையார் என்று அழைக்கப்பட்ட சுப்ரமணியம் நாகேந்திரன் எனத் தெரியவருகிறது...

இது இப்படி இருக்க கா.பொ. ரத்தினத்தின் மனைவி குமுதினி என்றும், அவரது பெயரையே குமுதினி படகுக்கு வைத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது எனவும் வரலாறு புனையப்படுகிறது.... ஆயின் தமது அம்மா சிந்தாமணியை தவிர தமக்கு தெரியாமல் குமுதினி என்ற மனைவி கா.பொவிற்கு இருந்தாரா என பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நினைக்கப் போகிறார்கள்.

எனக்கு தெரிந்த வகையில் தேடிக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், குமுதினி 1960களில் இலங்கை பொது வேலைத் திணக்களத்தினால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இது திருகோணமலை ‘டொக்யாட்டில்” கட்டப்பட்டு ஜேர்மனியின் புக் எந்திரம் பொருத்தப்பட்ட ஒரு குட்டிக்கப்பலின் பரிமாணத்தில் மரக்கலமாக குமுதினி உருவாகியிருந்தது. தீவகத்தின் ஆழக்கடலில் தனித்துநின்ற நெடுந்தீவு மக்களின் வெளியுலகத் தரிசிப்புக்கான பாதையை திறந்துவைத்தது.

குமுதினியுடன் காலத்துக்கு காலம் பல படகுகள் நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டாலும் குமுதினிதான் தன் வாழ்வை உழைப்பை அரை நூற்றாண்டாக தொடர்ந்துவந்தது.

அந்த காலத்தில் குமுதினிக்கு சகோதரப்படகுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.கப்பலின் வடிவிலான உருக்கினால் உருவாக்கப்பட்ட வசதி மிக்க மணிமேகலை, வடதாரகை ஆகிய படகுகளும்,எலரா என்ற மரத்தினாலான படகும் சேவையில் இறங்கின. இவற்றில் எலரா வல்வெட்டித் துறையைச்சேர்ந்த தனியார் ஒருவரின் படகு. கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அது ஸ்ரீலங்கா படையினரால் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்கப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட அந்த இழுவைப்படகு அரசால் நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்துக்காக வழங்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய படகு திருத்தத் தளம் காரைநகர் ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்துக்கு மேற்காக நீலாங்காடு என்ற இடத்தில்இருந்தது.

கடலில் இருந்து படகை துலாவினால்(வின்ச்) டொக்கில் ஏற்றப்பட்டு தண்டவாளம் மூலம் திருத்த வேலைத்தளத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வசதியினை இந்த வேலைத்தளம் கொண்டிருந்தது. வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னர் பொது வேலைத் திணைக்களம் என்ற பெயரில் இயங்கிவந்தது. அப்போது இந்தத்தளம் ‘BWD” வேலைத்தளம் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது.

இவையே நெடுந்தீவு போக்குவரத்து தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்கள்... இவற்றில் கூட தவறுகள் இருக்கலாம் தெரிந்தவர்கள் கூறுங்கள் வரலாற்றை சரிப்படுத்துவோம்.... பாராளுமன்ற அரசியலுக்காக அல்ல எமது எதிர்கால சந்ததியின் தேடலுக்காக....

பிற்குறிப்பு...

குமுதினி படுகொலை குறித்தும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகி வருகின்றன.... 26பேர் - கொல்லப்பட்டார்கள் என்கிறார்கள்...28  பேர் என்கிறார்கள் – 36 பேர் என்கிறார்கள்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது.

 

இதேவேளை புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் 75நாட்களுக்கு மேல் மீதம் இருக்கிறது... அரசியல் தீர்வு அல்ல இந்த நாட்களுக்குள் புதிய ஆளுநர் – புதிய செயலாளர் – நிதி ஒதுக்கீட்டை தடுக்காத அரசாங்கம்.... இரும்பு பிடியில் இருந்து விடுப்பட்ட தீவகம்.... 4 கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள்.... கூட்டமைப்பின்  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொடுத்த வாக்குறுதிகளில் எதனைச் செய்யப் போகிறார்கள்? என பொறுத்திருந்து பார்ப்போம்.....

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116035/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கா.பொ.இரத்தினம் ஐயா அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என நினைக்கின்றேன்

அந்த இடத்து மக்கள் உறுதிப்படுத்துவீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

அவற்ற வீட்டின் ஒவ்வொரு மூலையும் எனக்கு அத்துப்படி:)

  • கருத்துக்கள உறவுகள்

கா.பொ.இரத்தினம் ஐயா அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என நினைக்கின்றேன்

அந்த இடத்து மக்கள் உறுதிப்படுத்துவீர்களா??

 

கா. போ. ரத்தினம் ஐயா அவர்களுக்கு ஒரு மகன் இருக்கவேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

கா.பொ.இரத்தினம் ஐயா அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என நினைக்கின்றேன்

அந்த இடத்து மக்கள் உறுதிப்படுத்துவீர்களா??

உண்மை!

 

அவருக்குப் பிள்ளைகள் இல்லை என்றே நினைக்கிறேன்! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழுக்காக இறுதிவரை உழைத்த க.பொ.இரத்தினம்

தமிழுக்காக இறுதிவரை உழைத்த க.பொ.இரத்தினம் அவர்களும், எனது நினைவுத் திரைகளும்

(க.பொ.இரத்தினம் அவர்களின் நினைவு அஞ்சலிக் கூட்டம் 733,பேர்ச்மவுண் வீதி கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் 9-1-2011 ஞாயிறு மாலை 5மணிக்கு நடைபெறுவதையிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.)

ந.நகுலசிகாமணி

www.vvthistory.com

வேலணையில் கந்தப்பர் கார்த்திகேசு பொன்னம்பலம் பத்தினிப்பிள்ளை அவர்க ளுக்கு மகனாக இரத்தினம் அவர்கள் 1914ம் ஆண்டு மார்ச் திங்கள் 10ம் நாள் பிறந்தார். அவர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியராகி, பண்டிதர் பரீட்சையில்தேறி பண்டிதராகி விரிவுரை யாளராக உயர்ந்து, சென்னை பல்கலைக்கழத்த்தில் தமிழாராய்ச்சி செய்வதற்கு 1940இல் புலமைப்பரிசில் பெற்றுச் சென்று, தமிழ் மூதறிஞராக நடமாடும் பல்கலைக்கழகமாக தமிழ் வளர்த்ததோடு, திருக்குறள் மாநாடுகளை இலங்கையிலும், பல வெளிநாடுகளிலும் நடாத்தி யிருந்தார். மாநாட்டில் ம.பொ.சிவஞானம், இலக்குமணச்செட்டியார், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் இவர்கள் போன்று பல தமிழறிஞர்களை வரவழைத்து பங்கேற்க வைத்தார். 1955ல் கொழும்பு மகரகம அரசின் ஆசிரியர் கலாசாலையில் பணியாற்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவித்தவர்.

 

தனிச் சிங்கள சட்டம்

இலங்கையின் வரலாற்றிலே 1956ம் ஆண்டு ஒரு கொந்தளிப்பான ஆண்டாகும். இந்த ஆண்டிலேதான் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் மட்டும் சட்டம்

நிறைவேற்றப்படுவதற்கு முன்பு 1944ம் ஆண்டில் சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகள் என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை நிறைவேற்ற உருவாக்கப் பட்ட அரசகரும மொழிகள் திணைக்களத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக அரசினர், இரத்தினம் அவர்களை அந்தப் பதவியில் அமர்த்தினர்.

 

எல்லாம் “தமிழ் இயக்கம்” எனும் பெயருடன் ஓரியக்கத்தை ‘தந்தை செல்வா’ வின் “சுதந்திரன்” ஏட்டின் மூலம் நடாத்தி வந்தார். அரச கருமத்திணைக்கழக மூலம் தமிழ்மொழியை பல திணைக்கழகத்திலும் நடைமுறைப்படுத்திய செயல்வீரன் க.பொ. இரத்தினம் அவர்கள் அதில் பணிபுரியும்போது பதினையாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் ஆட்சிச் சொற்களைச் சீர்படுத்திச் செம்மைப்படுத்தி நான்கு தொகுதிகளாக இலங்கை அரச அச்சகத்திலே வெளியிட்டு வைத்தவர்.

 

1963ல் தனிநாயக அடிகளாரும் க.பொ.இரத்தினம் ஐயா அவர்களும் சேர்ந்து கோலாலம்பூரில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவினார்கள். அதன் தொடர்ச்சி யாக பல தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடந்ததோடு இன்று செம்மொழியாக அங்கீகரிக்கப் பட்டு செம்மொழி மாநாடும்  நடந்துள்ளது.

 

கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர்

தமிழின்மீதும் தமிழ் மக்கள் மீதும் உள்ள பற்று காரணமாக அவரை அரசியலில் ஈடுபடவைக்கத் தூண்டியது. தமிழ்அரசுக்கட்சியின் உப பத்திரிகையான ‘விடுதலை பரணி’ என்னும் ஏட்டின் ஆசிரியராக பணியாற்றியிருந்த வேளையில் கிளிநொச்சி தொகுதியில் போட்டியிட தமிழரசுக்கட்சி வேட்பாளராக நிறுத்தியிருந்தது. அன்று இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் மந்திரி வே.குமாரசாமி, வி.ஆனந்தசங்கரி ஆகியோரை தோற் கடித்து இரத்தினம் அவர்கள் பாராளுமன்றத்திற்கு முதற்தடவையாக தெரிவுசெய்யப்பட்டு மீண்டும் அத்தொகுதியைத் தமிழரசுக்கட்சிக்கு பெற்றுக் கொடுத்தார். கிளிநொச்சியில் தனி யான காணி அலுவலகம், தருமபுரத்தில் பாலம், வீரமடு குடியேற்றம், போன்ற பணிகளை அரச உதவியுடன் செய்வித்தார்.

 

ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினர்-:1970

 

தேசிய அரசில் அடையாள அட்டை இலங்கையில் அனைவருக்கும் வழங்கும் மசோதாவை கட்சிக்கட்டுப்பாட்டை மீறி எதிர்த்து வாக்களித்தமையால், கட்சி கட்டுப் பாட்டை மீறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வ.நவரத்தினம் அவர்களைத் தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றியிருந்தது. அதன்பின்னர் வ.நவரத்தினம் (தமிழரசுக்கட்சி மூளை என்று வர்ணிக்கப்பட்டவர்) தமிழர் சுயாட்சிக்கழகம் என்னும் புதியகட்சியை ஆரம் பித்து இருந்தார். 1970 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது நவரத்தினம் அவர்களைத் தோற்கடிப்பதற்காக க.பொ அவர்களை ஊர்காவற்றுறைத் தொகுதியில் போட்டியிடப் பணித்தது. அவருடன் நவரத்தினமும் வேறு மூவரும் போட்டியிட்ட தேர்தலில் பெரும் பான்மையான வாக்குகளால் வெற்றிவாகை சூடினார்.

 

தடுப்புக்காவலில்

1972ஆம் ஆண்டில் தமிழினத்தின் சில அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் புதிய குடியரசு அமுலுக்கு வரஇருந்தது. அப்போது அதன் எதிர்ப்பு நடவடிக் கையாக தமிழ்ஈழத்தை அமைக்கக் கூறி துண்டுகளை வைத்திருந்ததாகவும் மக்களுக்கு வழங்கியதற்காகவும் 1976 மே 13ம் நாள் பத்து நாட்கள் பிற தலைவர்களோடு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர். பின்பு விசேட நீதிமன்றத்தினால் (வுசயைட யவ டீயச) விடுதலை செய்யப் பட்டார்.

 

மீண்டும் ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினர் 1977

மீண்டும் 1977ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது இத்தேர்தலிலும் தன்னை எதிர்த்து சுயாட்சிக்கழகச் சார்பில் போட்டியிட்ட திரு.நவரத்தினம் அவர்களை வென்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். பண்டிதர் அவர்கள் 18 ஆண்டுகள் நாடாளு மன்றஉறுப்பினராக இருந்து தனது தொகுதிக்கும் தமிழுக்கும் சேவை பல ஆற்றியுள்ளார்.

மதுரை உலகத்தமிழாராய்ச்சி மாநாடு

madurai.jpg

1981 தமிழ்நாடு சுற்றுலாவின்போது க.பொ.ரத்தினம்

1981ம் ஆண்டு தமிழக அப்போதைய முதல் அமைச்சர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்தப்பட்டது. தமிழர்விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இளைஞரணி சார்பில் நானும் தலைமன்னார் வழியாக கப்பலில் சென்று மாநாட்டில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. மாநாட்டு முடிவில் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு தனிரயில்(தொடர்) வண்டி  யில் தமிழகஅரசினால் நான்கு தினங்கள் ஒழுங்குசெய்யப்பட்ட சுற்றுலாவில் பங்குபற்றிய போதும்  திரு.கா.பொ. இரத்தினம் அவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது எனது மனத்திரைகளில் இன்றும் திரையிட்டவாறே உள்ளது.

தமிழ்மறைக்கோட்டம்

திரு.கா.பொ.இரத்தினம் அவர்கள் எழுதிய “நினைவுத் திரைகள்” என்ற நூலில் யாழ்நகரில் தமிழ்மறைக் கோட்டத்தை நிறுவும் நோக்குடன் தான் ஐம்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டுச் சேர்த்தநூல்கள் யாவும் தமிழ் ஈழத்தில் நடைபெறும் தமிழீழப் போரினால் அழிந்துவிட்டன. இலங்கை அரசுப்படைகளின் குண்டுத்தாக்குதலினாலும் வேலணையி லுள்ள என் வீட்டின் ஒருபகுதியும் இந்நூல்களும் ஏனைய தமிழ் ஆங்கில சமஸ்கிருத நூல்களும் அழிந்தன.  எனது வீட்டின்மேல் 24-5-1987இல் இலங்கை, விமானப்படை நான்கு குண்டுகள் போட்டது. அப்பொழுது அவ்வீட்டில் மைக்கல் பிலிப்போப், தோமஸ்கோன்சன் என்னும் பிரான்சுநாட்டுப் பத்திரிகைநிருபர்கள் இருவர் விடுதலைப்புலிகளின் விருந்தினர் களாகத் தங்கியிருந்தனர். இவர்கள் தப்பித் தமிழ்நாட்டுக்கு வந்துசேர்ந்து இக்குண்டு வீச்சின் கொடுமையினைப் பத்திரிகைகளுக்கு எடுத்துரைத்தனர். என்று எழுதியுள்ளார்.

 

chennai.jpg

1987ல் சென்னை மரினா கடற்கரையில் உண்ணாவிரதம்

 

திரு.இரத்தினம் அவர்கள் தடுப்புக்காவலில் பத்து நாட்கள், தூக்குக்கயிறு, தனிஆட்சி, மனப்பால், அடிமைச்சாசனம், இலங்கையில் இன்பத்தமிழ், காவியமணம், நினைவுத்திரைகள் என்பன அவர் வெளியிட்ட நூல்களில் சில இவருடைய மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டு தமிழ்மக்கள் அனைவரிற்கும் பேரிழப்பாகும்.

 

உசாத்துணை நூல்கள்:

1 . நினைவுத் திரைகள் - பேராசிரியர் முனைவர் க.பொ.இரத்தினம்.

2. ஈழத்தமிழர் இறைமை – மு.திருச்செல்வம்.

3. வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள் - ந.நகுலசிகாமணி.

4. இலங்கைத்தமிழரசுக்கட்சி வெள்ளிவிழா மலர் - 1974ம் ஆண்டு.

 

 http://www.vvthistory.com

கொசுறுத் தகவல்:

 

உலகதின் முதல் பெண் பிரதமர் இலங்கையர் போலவே உலகதின் முதல் பெண் கிராமசபை தலைவியும் இலங்கையர் தான் அதுவும் நெடுந்தீவில் தான்,அதுவும் மேலே குறிப்பிட்ட திருவாளர்.சு.நாகேந்திரன் அவர்களின் துணைவியார் தான் என்று கேள்வி பட்டதுண்டு. (இளவயதில்  இவர்களின் பேரப்பிள்ளைகள் நண்பர்கள் வட்டத்தில் இருந்தார்கள்)

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.