Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்கில், கடல்-வான்-தரை தாக்குதல் நடத்துவோம்: ரட்ண

Featured Replies

"வடக்கு - கிழக்கில், கடல்-வான்-தரை தாக்குதல் நடத்துவோம்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க"

இது புதினத்தில் வந்த ஒரு செய்தி.

"தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாடொன்றை, ஆயுதங்களால் மிரட்டுகின்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க முடியாது"

ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினாரா?

புதினம் தமிழீழ தேசியத்தையும் விடுதலைப் புலிகளையும் விரும்பும் தமிழர்களை தாஜா பண்ணுவதற்காக செய்திகளைத் திரிபுபடுத்தியும் அழகாகச் சோடித்தும் எழுதிவருவதற்கு இது ஒரு உதாரணம். அப்படி அவர் கூறியிருந்தால் தமிழீழத் தேசியத் தலைவராக மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டாரென்பதா அர்த்தம்.

புதினத்தின் செய்தியாளர்கள் இனிமேலாவது ஒருவர் சொன்னதைச் சொன்னபடியே பிரசுரிக்க கற்றுக்கொள்ளுவார்களா?

GoSL will attack Northeast over land, sea, air- Wickremenayake

[TamilNet, Friday, 03 November 2006, 10:31 GMT]

The Prime Minister of Sri Lanka, Ratnasiri Wickremanayake, said that his government has planned to launch offensives on the Tamil north and east provinces by land, sea and air, while speaking at a function held Friday at 11:00 a.m at the Prime Minister's office to announce financial assistance to the children of soldiers affected by the war, sources in Colombo said.

Ratnasiri Wickremanayake, Sri Lankan Prime Minister

"Many ask why we have not begun military offensives against the Tigers and we said that we have been patient for long," said the PM.

"We can no longer remain patient. We have therefore decided to launch offensives on the north and east by land, sea and air," added Wickremanayake.

"Ours is a government elected by the people and it is our duty to protect them. Mr. Pirabakaran thinks only he is right. The Tigers are threatening a democratic government with weapons, and we cannot allow this situation to continue," said the Prime Minister.

Sri Lanka Freedom Party (SLFP) ministers, parliamentarians and officials of the the Defence Ministry were present at the function.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20134

Co-Chairs express deep regret over Kilinochchi bombing

[TamilNet, Friday, 03 November 2006, 13:43 GMT]

The Tokyo Co-Chair (EU, Japan, Norway and the US) ambassadors in Sri Lanka express their deep regret over the bombing of a house in Kilinochchi on 2 November 2006 that resulted in the death of five civilians. The explosion also damaged the Kilinochchi District Hospital and caused patients to flee, comes at a delicate time when both sides should seek to build confidence and compromise to ensure further rounds of talks can soon be agreed, and an escalation of the conflict can be avoided.

Full text of the press release issued by the Co-Chairs follows:

PRESS RELEASE

Co-Chairs express deep regret over Kilinochchi bombing

The Tokyo Co-Chair (EU, Japan, Norway and the US) ambassadors in Sri Lanka express their deep regret over the bombing of a house in Kilinochchi on 2 November 2006 that resulted in the death of five civilians. The explosion also damaged the Kilinochchi District Hospital and caused patients to flee.

The Co-Chairs expect both the Government of Sri Lanka and the LTTE to refrain from military action.

This latest attack comes at a delicate time when both sides should seek to build confidence and compromise to ensure further rounds of talks can soon be agreed, and an escalation of the conflict can be avoided.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20136

"வடக்கு - கிழக்கில், கடல்-வான்-தரை தாக்குதல் நடத்துவோம்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க"

இது புதினத்தில் வந்த ஒரு செய்தி.

"தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாடொன்றை, ஆயுதங்களால் மிரட்டுகின்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க முடியாது"

ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினாரா?

புதினம் தமிழீழ தேசியத்தையும் விடுதலைப் புலிகளையும் விரும்பும் தமிழர்களை தாஜா பண்ணுவதற்காக செய்திகளைத் திரிபுபடுத்தியும் அழகாகச் சோடித்தும் எழுதிவருவதற்கு இது ஒரு உதாரணம். அப்படி அவர் கூறியிருந்தால் தமிழீழத் தேசியத் தலைவராக மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டாரென்பதா அர்த்தம்.

புதினத்தின் செய்தியாளர்கள் இனிமேலாவது ஒருவர் சொன்னதைச் சொன்னபடியே பிரசுரிக்க கற்றுக்கொள்ளுவார்களா?

நோர்வே என்னாப்பா சொல்ல வாறீங்கள்????????

புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாடொன்றை, ஆயுதங்களால் மிரட்டுகின்றது புலிகள் அமைப்பு. இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க முடியாது
.
  • கருத்துக்கள உறவுகள்

புதைகுழிக்குள் மேல் நின்று அமைதி மற்றும் அரசியல் பேச்சுக்களை மேற்கொள்ள முடியாது: க.வே.பாலகுமாரன்

புதைகுழிக்குள் மேல் நின்று அமைதிப் பேச்சுக்களையும் அரசியல் பேச்சுக்களையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.11.06) ஒளிபரப்பாகிய "நிலவரம்" நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:

பேச்சுவார்த்தையை 2 வகைகளாக பிரிக்கலாம்.

ஒரு பிரச்சனையின் தொடக்க கட்டத்திலேயே அது முனைப்படையும் போது அதனை அழிக்க அல்லது தனிமைப்படுத்த திட்டமிட்ட வகையிலே பேச்சுக்கள் நடக்கும். உதாரணமாக திம்பு பேச்சுவார்த்தை.

அதற்கு அப்பால் போராடும் இயக்கம் தனது திறன் சமநிலையால் மோதுகின்ற எதிரித்தரப்பை பலவீனப்படுத்தும்போது ஒரு பேச்சுவார்த்தை வரும்.

இதனை புரிந்துகொண்டுதான் சர்வதேச சமூகம் எமது பிரச்சனையில் தலையிட்டது.

ஆனால் சிங்களவர்கள் இன்றுவரை புரிந்துகொள்ளவே இல்லை.

இதில் சிக்கல் என்னவெனில், பேச்சுவார்த்தையில் இடம்பெறுகின்ற ஒருதரப்பானது எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு மாறான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.

சிங்களவர்களைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் இராணுவ ரீதியாக பலவீனப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று நம்புகின்றனர். இது யதார்த்தத்தை மறுக்கின்ற மிக மோசமான மனநிலை.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு புதிய முன்னகர்வான மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர்.

ஜெனீவாவில் தமிழர் தரப்பு எதிரித்தரப்புக்கு தன்னம்பிக்கையோடு முகம் கொடுத்து விவாதம் கொடுத்திருக்கின்றது. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்திருக்கிற நேர்காணல் மகிழ்ச்சியளிக்கிறது.

ஏ-9 பாதை திறப்பைக் காரணம் காட்டி புலிகள் தங்களது சுயநன்மைக்காக புலிகள் பேச்சுக்கு வருவதாக சிங்களவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாங்களோ, அரசியல் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எமக்கு தயக்கம் இல்லை. சரி.. உங்களிடம் உள்ள தீர்வுதான் என்ன? என்று கேட்டபோது சிங்களவர்கள் திடுக்கிட்டிருக்கின்றனர்.

புதைகுழிக்குள் மேல் நின்று அமைதிப் பேச்சுக்களையும் அரசியல் பேச்சுக்களையும் மேற்கொள்ள முடியாது. சிங்கள அரசாங்கத்துடன் நாம் பேச்சுக்களை நடத்தும்போது சிறிய அளவிலாவது எமது மக்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனைச் சிங்களத் தரப்பு நிச்சயமாக செய்ய வேண்டும். ஏனெனில் சர்வதேச சமூகத்தின் கோரிக்கை அது. ஆனால் சிங்களம் மறுக்குமானால் அது சிங்களத்துக்கு அழிவுக்கான வழிதான்.

ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், பேச்சுக்கள் இழுபறிபட்டுப் போனால் சர்வதேச சமூகம் பொறுமையிழக்க வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார். அனேகமாக எங்கள் வாயில் வந்த வார்த்தை அவரிடமிருந்தும் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறோம். எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றும் போது அவரது முகத்திலே ஒரு எரிச்சலும் அதிருப்தியுமான தொனி தென்பட்டது. இத்தகையதொரு உண்மை நிலையை இவ்வளவு விரைவில் அவர் உணர்ந்து கொண்டமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களும் பலியெடுக்கப்பட்டவர்களும் நாங்கள்தான். நாங்களே பிரச்சனையின் முழு பகுதியாகவும் இருக்கிறோம். நாங்களே பிரச்சனையை முழு மூச்சாகத் தீர்ப்பதற்கும் பாடுபடுகிறோம். நாங்கள் பேச்சுக்கும் போனோம்- போருக்கும் போனோம் ஏன்? தீர்வுக்காக. ஆக தீர்வுக்காக என்னென்ன தடைகள் உள்ளனவோ அந்தத் தடைகளை நாங்கள் நீக்கிவிடுவோம்.

- சிங்கள அரசாங்கத்தினது போர் முனைப்பைத் தணித்தோம்

- சிங்கள தேசம் ஒன்றுபட வேண்டும் என்று நாம் கூறியிருந்தோம்- கொள்கை ரீதியாக. ஆனால் அதற்குள் நடக்கின்ற குத்து-வெட்டு அரசியலைப் பற்றி நாம் கதைக்கவில்லை. சிங்களத்தின் இரண்டு பெரிய கட்சிகள் இணைவு தொடர்பில் கூட எரிக் சொல்ஹெய்ம் பெரிய அளவில் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. அதை விடுவோம்.

இன்று பிரச்சனைக்கு தடையாக உள்ளது யார்? அதனை ஏன் சர்வதேச சமூகம் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறது? அந்த தடை யார் என்று அடையாளம் கண்டு அவர்கள் மீது அழுத்தம் செலுத்த என்ன தயக்கம்?

ஆக நாங்களும் பொறுமையிழக்கிறோம். முதலில் பொறுமை இழந்தது தமிழ்த் தேசிய மக்கள்தான் என்பதை எரிக் சொல்ஹெய்ம் புரிந்துகொள்ள வேண்டும்.

"சிங்கள மைண்ட்" என சிங்கள மனத்தைக் கையாள்வதுதான் இப்போது எல்லோருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

அண்மைக்காலத்தில் சிங்களவர்களுக்கு ஒரு பெரிய இராணுவ வெற்றியைக் காட்டி- புலிகளை பூனைக்கூட்டம் என்று சொல்லும் அளவுக்கு விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தினார் மகிந்தர். அந்தக் கருத்துகள் முறியடிக்கப்பட்ட நிலையில் உடனடியாக திகைத்துப் போன சிங்களமானது தனது இயல்பு நிலைக்குத் திரும்ப குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது.

ஆகையால் புதியதாக ஒரு சமாதான வேடமிட்டு அதனை சிங்கள மக்களுக்குக் காட்டுவதற்காக பெருந்தொகையான ஊடகவியலாளர்களை ஜெனீவாவுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

சிங்களமானது

- ஏதாவது ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்

அல்லது

- கடும்வழியிலான நிலைப்பாட்டுக்குச் செல்ல வேண்டும்.

அதேநேரத்தில் எந்த ஒரு நிலைப்பாட்டை சிங்களம் மேற்கொண்டாலும் அதற்கு முகம் கொடுக்க தமிழ் மக்கள் தயாராகவே உள்ளனர். ஏனெனில் தமிழ் மக்களிடத்தில்தான் எந்த ஒரு சூழலிலும் பழைய நிலைக்குத் திரும்புகின்ற ஆற்றல்- இயல்பு நிலை எம்மிடமே உள்ளது. சிங்களத் தரப்புக்கு அப்படி இல்லை. ஒரு நெருக்கடி வரும்போது அதனை மாற்றிவிட ஒரு சதித்திட்டம்தான் தேவையானதாக இருக்கிறது.

இனிவரும் பேச்சுக்களோடு ஒரு திட்டவட்டமான முடிவை நாம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்று நாம் நம்புகிறோம். அதே நேரத்தில் பேச்சுவார்த்தையை இழுபறி நிலைக்குக் கொண்டு செல்லவும் மகிந்த திட்டமிடக்கூடும். அதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.

பேச்சின் முடிவு எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் இறுதி இலட்சியத்தைப் பொறுத்தவரையில் உறுதியாக உள்ளனர்.

ஏ-9 பாதை மூடல் என்பது 6 இலட்சம் மக்களின் கழுத்தைத் திருகுவதானது. அதனைக் கூட சிங்களம் புரிந்துகொள்ளவில்லை. ஜயந்த தனபால, எச்.எல்.டி.சில்வா உள்ளிட்ட எங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் தமிழர்களின் வில்லன்கள்- ஜே.வி.பி.யினரால் மாலை போட்டு வரவேற்கப்படுகிற இந்த நபர்களை ஜெனீவாப் பேச்சுமேசைக்கு அழைத்துச் சென்றிருப்பதானது ஒரு சித்துவேலை. இது எல்லை கடந்ததாக உள்ளதால் பொறுமையை யார் இழந்திருக்கின்றனர்?

சர்வதேச சமூகத்தின் முழு பரிசோதனைக் களமாக தமிழீழம் மாறியிருக்கிறது. இந்த பாரிய இராஜதந்திரத்துக்கும் பலவகைப்பட்ட வல்லரசுகளுக்கும் தன்னந்தனியே முகம் கொடுக்கும் ஒரு சிறிய அணியாக நாங்கள் இருக்கிறோம்.

வடகொரியா அணு ஆயுதம் கொண்டு மிரட்டுகிறது. ஈரானும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் செறிவூட்டப்பட்ட எமது படைபலம் உள்ளிட்டவைகளை பார்க்கிறோம். எங்களுக்குத் தனித்த சிக்கல்கள் உள்ளன.

சர்வதேச சமூகத்தின் இந்த மிரட்டல் போக்கை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஆகையால் நாங்கள் ஏலவே- எமது தீர்க்கமான கோரிக்கையான தமிழீழ கோரிக்கைக்கு மாற்றாக- இந்த சர்வதேச சமூகத்தினது அழுத்தத்துக்கு காப்பரணாக- ஒரு தகுந்த தர்க்க ரீதியான விவாதமாக தன்னாட்சி- சுயாட்சி அதிகார சபையை மக்கள் முன் வைத்தபோதுதான் ரணிலைத் தூக்கி எறிந்தார்கள்.

இன்று தமிழீழ மக்கள் ஒரு புதிய எண்ணங்களை- கருப்பையை- விழுமியங்களை நாடிச் செல்வதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் நாங்கள் வென்றுவிட்டதாகக் கூறவில்லை. வரலாற்றின் பாடங்களை நாம் கற்றுவருகிறோம். ஒரு போர்க்காலத்துக்கு முன்னர் போவதற்கான கடமைகள் என்ன என்பதை வரலாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

எமது பிரச்சனையில் கோடிக்கணக்கானவை உள்ளன. அதில் கடைசியானதுதான் ஏ-9. இந்தப் பாதையை திறக்க முன்வந்து மாற்றுத் தீர்வை சர்வதேச சமூகம் முன்வைக்க வருமாயின் நாம் அதனை விவாதிக்கவும் தயாரக இருக்கிறோம்.

அன்று மாவட்ட சபை அதிகாரத்தைக் கூட செயற்படுத்த அமெரிக்காவினாலோ- இந்தியாவினாலோ முடியவில்லை. வரலாறுகளும் பாடங்களும் உடனுக்குடன் வருகின்றபோது நாங்களும் அதனைப் படித்து உடனே தேர்வெழுத வேண்டிய நிலையில் உள்ளோம். இது கடினமானதாக இருந்தாலும் நிச்சயம் நாம் வெல்வோம். இந்த புதிய உலக ஒழுங்கிலும் பயணிப்போம். அதற்குரிய ஆற்றலை எமது தேசியத் தலைமை பெற்றிருக்கிறது என்றார்

க.வே.பாலகுமாரன்.

http://www.eelampage.com/?cn=29587

(இச் செய்தியில் புலிகள் எதிர்நோக்கும் சர்வதேச அழுத்தங்கள் உட்பட பல விடயங்களை பாலகுமாரன் மனந்திறந்து மக்களோடு பகிர்ந்திருக்கிறார்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்ன சொல்லவாறியள்.. புதினம் விடுதலைப்புலி பயங்கரவாதிகள் என்று எழுதவேண்டும் என்று சொல்லவாறியளோ?

"வடக்கு - கிழக்கில், கடல்-வான்-தரை தாக்குதல் நடத்துவோம்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க"

இது புதினத்தில் வந்த ஒரு செய்தி.

"தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாடொன்றை, ஆயுதங்களால் மிரட்டுகின்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க முடியாது"

ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினாரா?

புதினம் தமிழீழ தேசியத்தையும் விடுதலைப் புலிகளையும் விரும்பும் தமிழர்களை தாஜா பண்ணுவதற்காக செய்திகளைத் திரிபுபடுத்தியும் அழகாகச் சோடித்தும் எழுதிவருவதற்கு இது ஒரு உதாரணம். அப்படி அவர் கூறியிருந்தால் தமிழீழத் தேசியத் தலைவராக மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டாரென்பதா அர்த்தம்.

புதினத்தின் செய்தியாளர்கள் இனிமேலாவது ஒருவர் சொன்னதைச் சொன்னபடியே பிரசுரிக்க கற்றுக்கொள்ளுவார்களா?

  • தொடங்கியவர்

நான் மேலே எடுத்துக்கூறிய செய்திக்குள் புதைந்திருக்கும் ஒரு முக்கிய பத்திரிகைத் தொழில்தர்மம் என்ன என்பதை நீங்கள் எவருமே கண்டுகொள்ளவில்லை என்பது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது. அதாவது செய்திகளில் ஒருவர் கூறியதை அவரின் சொந்தக் கூற்றாகப் பிரசுரிக்கும்போது அவர் கூறியதை அப்படியே அச்சொட்டாகப் பிரசுரிக்க வேண்டும். சிலசந்தர்ப்பங்களில் அப்படிச் செய்வது முடியாவிடின் அதாவது ஒருவர் கூறியதை அப்படியே அச்சொட்டாகப் பிரிசுரிப்பது சாத்தியமற்றதாயின் ஆசிரியர் தனது சொந்தவார்த்ததைகளால் விடயத்தை விமர்சித்து ஒரு மூன்றாம் நபர் சொல்வதுபோல் எழுதவேண்டும்.

ரண்ணசிறி விக்கிரமநாயக்க தனது கூற்றில் உண்மையிலேயே தமிழீழம், தேசியத் தலைவர் என்பதுபோன்ற சொற்பதங்களைப் பயன்படுத்தியிருப்பாரா என்பதே எனது கேள்வி. ரட்ணசிறி ஒரு வடிகட்டிய இனவாதி, ஒரு தமிழின விரோதி, தமிழ்த்தேசியத்தைப் புூண்டோடு அழிக்கவென கங்கணங்கட்டிநிற்கும் ஒரு சிங்கள அரசியல்வாதி என்ற உண்மைகள் இதனால் மழுங்கடிக்கப்படுகிறது என்பதுதான் நான் கூறவந்த விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வேஜியன்...

நன்றி தங்கள் கருத்துக்கு.. தற்பொழுது புரிகின்றது நீங்கள் சொல்லவந்த விடயம்.. நானும் உங்களுடைய கருத்தோடு உடன்படுகின்றேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கதி அவர் சொன்னதை அப்படியே புனைவு ஒன்றும் இல்லாமல் பிரசுரித்துள்ளது..

----

“விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஏன் அரசு இராணுவத் தாக்குதல்களைத் தொடுக்காமல் இருக்கின்றது என்று பலரும் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றார்கள். அவர்களைப் பார்த்துப் “பொறுமையாக இருங்கள்” என்று நாங்கள் கூறி வருகிறோம்.

நாங்கள் நீண்ட காலம் பொறுமையாக இருந்துவிட முடியாது. எனவே, வடக்கு கிழக்கில் தரை, கடல், வான் வழிகளூடாகத் தாக்குதல் நடத்தத் தீர்மானித்து விட்டோம்.

எங்களது அரசு மக்களால் தெரிவு செய்யப்பட்டது. அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. பிரபாகரன் தான் செய்வதுதான் சரி என்று நினைக்கிறார். ஒரு ஜனநாயக அரசைப் புலிகள் ஆயுதங்கள் கொண்டு அச்சுறுத்துகிறார்கள். இந்த நிலைமை நீடிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

ஓமோம்....இப்ப புலிகள் தடம் வைக்கிறார்டகள்..பாருங்கள்...அத

  • தொடங்கியவர்

சிறிலங்கா அரசின் இன்றைய வான்வெளி இராணுவ நடவடிக்கைகளுக்கான முக்கிய நோக்கம் தமிழர் தாயகமெங்கணும் தேசியத் தலைவரின் வழிகாட்டலுக்கமைய நிறுவப்பட்டுவரும் தமிழினத்தின் ஆதார அமைப்புகளையும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கட்டமைப்புகளையும் (infrastructure) சிதைத்து நிர்மூலம் செய்வதாகும். எதிர்காலத்தின் தமிழீழத் தனியரசுக்கு முதுகெலும்பான தூரதரிசனத்துடன் நிறுவப்படும் இவ்வாறான சேவை நிலையங்கள் உதாரணமாக மருத்துவமனை, பாடசாலை மற்றும் வானொலிச்சேவையடங்கிய ஊடகத்துறை என்பன சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன என்பது கண்கூடு. இவ்வாறான தாக்குதல்கள் இஸ்ரேலியர்கள் கடந்தகாலங்களில் பெரியளவில் பாலஸ்தீனாவில் நடத்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒப்பானதாகும். சிறிலங்கா இனவெறி அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழ்தேசியம் மீளமுடியாத இழப்புகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகமுண்டு.

  • தொடங்கியவர்

புதினம் இப்போது தனது செய்தியில் திருத்தம் செய்து கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளது.

"எமது அரசாங்கமானது மக்களால் தெரிவு செய்யப்பட்டதாகும். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாட்டை ஆயுதங்களால் மிரட்டுகின்றனர் தமிழீழ விடுதலைப் புலிகள். இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க முடியாது என்றார் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.