Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு பரம்பரை நோய்கள் வராமல் தடுக்க ஒரு மருத்துவ புரட்சி.

Featured Replies

இங்கிலாந்தில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு பரம்பரை நோய்கள் வராமல் தடுக்க ஒரு மருத்துவ புரட்சி.
 
 
மூன்று பேர்களிடமிருந்து பெறப்படும் டிஎன்ஏ இனைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குவதற்கும்  இதன் மூலம் பரிதாபத்துக்குரிய பரம்பரை நோய்கள் வராமல் தடுக்கவும் மருத்துவர்களை அனுமதிக்க புது சட்டமூலத்திற்க்கான  விவாதம் இன்று பிற்பகல் 2மணியளவில்  ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
 
மூன்று பேரின் பங்களிப்போடு  குழந்தைகளை உருவாக்க சட்டம் இயற்றிய உலகின் முதல் நாடு இங்கிலாந்து என்ற பெருமையை பெறுகிறது.
 
_62907355_pnt_slide1_624x398_2.gif1) Two eggs are fertilised with sperm, creating an embryo from the intended parents and another from the donors 2) The pronuclei, which contain genetic information, are removed from both embryos but only the parents' are kept 3) A healthy embryo is created by adding the parents' pronuclei to the donor embryo, which is finally implanted into the womb
_62905219_pnt_slide2_624x398.gif1) Eggs from a mother with damaged mitochondria and a donor with healthy mitochondria are collected 2) The majority of the genetic material is removed from both eggs 3) The mother's genetic material is inserted into the donor egg, which can be fertilised by sperm.
_74982321_line976.jpg

http://www.bbc.co.uk/news/health-31069173

 

  • தொடங்கியவர்
மூவரின் மரபணுக் குழந்தைக்கு பிரிட்டன் அனுமதி - காணொளி

6 மணி நேரங்களுக்கு முன்னர்

மூன்று பேரின் மரபணுக்களிலிருந்து குழந்தைகளை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை பிரிட்டனின் நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே மூன்று பெற்றோரின் மரபணுக்களில் இருந்து ஒரு குழந்தையை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கிய முதல் நாடாக பிரிட்டன் வருகிறது.

அதாவது தாய், தந்தையுடன் மூன்றாவதாக குறித்த சில மரபணுக்களை கொடையாக வழங்கும் இன்னுமொரு பெண்ணும் இதில் சம்பந்தப்படுவார்.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பரம்பரை நோய்களை தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு கடத்துவதில் இருந்து தடுக்கவே இந்த உத்தி.

இதன் மூலம் வருடாந்தம் சுமார் 150 தம்பதியினருக்கு உதவலாம்.

இந்த அனுமதி கிடைத்தால், அதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து முன்னதாக ஆராய்ந்த ஒரு காணொளி.

http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150203_3babies

 

 

  • தொடங்கியவர்

ஒரு குழந்தைக்கு மூன்றுபேர் பெற்றோர் என்பது சரியா தவறா?
  • 3 பிப்ரவரி 2015
பகிர்க
150119043158_human_cloning_designer_babiஆரோக்கிய குழந்தைகளை உருவாக்குவதில் இது ஒரு மைல்கல் என்கிறார்கள் மருத்துவர்கள்

மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

மனித செல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும். நியூக்ளியஸ் என்பது செல்களின் மையக்கரு என்றால், இந்த மைடோகாண்டிரியாக்கள் எனப்படுபவை செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை உற்பத்தி செய்யும் பேட்டரிகளைப் போன்றவை. செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை அளிப்பது தான் இவற்றின் முதன்மையான பணி.

மனித செல்களில் இருக்கும் இந்த மைடோகாண்ட்ரியாக்கள் பெண்களின் கருமுட்டைகளிலும் இருக்கும். செல்களில் இருப்பதைப்போலவே ஒவ்வொரு கருமுட்டையிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும்.

சிலபெண்களின் கருமுட்டைகளில் இருக்கும் மைடோகாண்ட்ரியாக்கள் பாதிப்படைந்திருக்கும். இப்படி பாதிப்படைந்த மைடோகாண்ட்ரியாக்கள் இருக்கும் கருமுட்டையில் இருந்து உருவாகும் குழந்தைகளின் செல்களில் இருக்கும் மைடோகாண்ட்ரியாக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். அது அந்த குழந்தைகளின் உயிரையே பறிக்கும் அளவுக்கு மோசமான மரபணு நோய்களை உண்டாக்கும்.

இயற்கையின் இந்த மோசமான சிக்கலுக்கு மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறார்கள். இந்த மரபணு மருத்துவ தீர்வு பல கட்டங்களில் நடக்கிறது.

150101121457_baby_624x351_thinkstock_nocமரபணு நோய்களை முறியடிக்க முடியும் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை

இதன் முதல்கட்டம் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டையில் இருக்கும் சேதமடைந்த மைடோகாண்ட்ரியாக்களை அகற்றிவிடுவது. அந்த கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸ் மட்டும் அப்படியே இருக்கும். அடுத்து, வேறொரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து பாதிக்கப்படாத ஆரோக்கியமான மைடோ காண்ட்ரியாக்களை மட்டும் தனியாக பிரித்து எடுப்பது. இப்படி பிரித்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை, முதல் பெண்ணின் கருமுட்டைக்குள் செலுத்துவது மூன்றாவது கட்டம். இதன் நான்காவது கட்டம் என்பது, இப்படி ஒரு பெண்ணின் நியூக்ளியஸையும், மற்ற பெண்ணின் மைடோகாண்ட்ரியாக்களையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த கருமுட்டைக்குள் விந்தணுவை சேர்த்து கருவுறச்செய்வது.

இந்த நடைமுறையையே கொஞ்சம் மாற்றி, மைடோகாண்ட்ரியாக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை கொண்டிருக்கும் பெண்ணின் கருமுட்டைக்குள் இருக்கும் நியூக்ளியஸை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்த முதல் பெண்ணின் நியூக்ளியஸை பதியவைத்து அந்த கருமுட்டையை கருவுறச்செய்யும் நடைமுறையும் செய்யப்படுகிறது.

இப்படி இரண்டுவிதமாக செய்யப்படும் நடைமுறையின் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பிறக்கவைக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் சோதனைச் சாவடியில் விலங்குகளைக் கொண்டு செய்துகாட்டியிருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக மனிதர்கள் மத்தியில் இந்த பரிசோதனைகளை நடத்த உலக நாடுகளின் அரசுகள் எவையும் இதுவரை அனுமதியளிக்கவில்லை.

அப்படியான சட்டரீதியிலான அனுமதியை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அளித்திருக்கிறது.

இந்த விஞ்ஞான முயற்சியின் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் சென்னையில் இருக்கும் செட்டிநாடு மருத்துவமனையின் இனப்பெருக்கத்துறையின் தலைமை மருத்துவர் என் பாண்டியன்.

மைட்டகொண்ட்ரியா நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்து மோசமாக பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலான இந்த மருத்துவ முயற்சி வரவேற்கத்தக்கது என்கிறார் பாண்டியன்.

இந்த நடைமுறையை மூன்று பெற்றோருக்கான குழந்தை என்பதாக இதை சொல்வதே தவறு என்று கூறும் பாண்டியன், இதில் ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை கொடுப்பவரின் குழந்தையாக இதை கருத முடியாது என்றும் கூறினார். சாதாரணமாக ரத்த தானம் செய்வதைப் போலத்தான் இவர் மைடோகாண்ட்ரியாக்களை தானம் செய்கிறார் என்றும், எனவே பிறக்கும் குழந்தையானது அவரது மரபணுக்கூறுகளை கொண்டிருக்காது என்றும் பாண்டியன் தெரிவித்தார்.

இந்த குழந்தையின் தோற்றம் உள்ளிட்ட அனைத்துவகையான மரபணுக்கூறுகள் அனைத்துமே அதனது கருமுட்டையின் நியூக்ளியசை கொடுத்த உண்மையான தாய் மற்றும் அதை கருவுறக்காரணமான விந்தணுவைக் கொடுத்த தந்தையிடம் இருந்து மாத்திரமே வருவதால் இந்த குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் என்பது தவறான கருத்து என்றும் பாண்டியன் கூறினார்.

http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F02%2Femp%2F150203_tamilsciencefeb32015.emp.xml&title=BBCTamil.com&product=news&lang=ta

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவிதத்தில் பார்க்கப்போனால் நல்ல விடயமாகப்பட்டாலும் இன்னொருவரும் குழந்தையுடன் தொடர்புபடுவதை எல்லோரும் விரும்புவார்கள் என்று நம்பவில்லை. பகிர்வுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இவ்வாறு முயல்கிறார்கள்??? :(

உலகம் அழியும் காலம் நெருங்குகிறதா?? :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்ரை குணம் நடையிலையும் சூர்யா எடுப்பிலையும் ஸ்ரீதேவி வடிவிலையும் ஒரு மிக்ஸ் வேணும்..... :icon_mrgreen:

ஐடியா சொல்லுங்கோப்பா... :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ரை குணம் நடையிலையும் சூர்யா எடுப்பிலையும் ஸ்ரீதேவி வடிவிலையும் ஒரு மிக்ஸ் வேணும்..... :icon_mrgreen:

ஐடியா சொல்லுங்கோப்பா... :D

 

வெளியில் கொண்டுபோகும்போது

சூர்யா என்று கூப்பிடுவார்கள்

 ஸ்ரீதேவி என்றும் கூப்பிடுவார்கள்

குமாரசாமி என்றும்  பரிமளமக்கா என்றும் கூப்பிடணும் என்று மூக்கை சிந்தப்படாது

தயாரா?? :(  :(  :( 

தயாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளியில் கொண்டுபோகும்போது

சூர்யா என்று கூப்பிடுவார்கள்

 ஸ்ரீதேவி என்றும் கூப்பிடுவார்கள்

குமாரசாமி என்றும்  பரிமளமக்கா என்றும் கூப்பிடணும் என்று மூக்கை சிந்தப்படாது

தயாரா?? :(  :(  :( 

தயாரா?

 

 உருவங்களை வைத்து நல்லவர்களை/நல்லதை அடையாளம் காண்பது கஷ்டம் என்கிறீர்கள்!!!!  :)

  • தொடங்கியவர்
கருத்துக்கள் எழுதிய உறவுகள்  எல்லோருக்கும் நன்றி. இவர்களது இந்த முயற்சியை ஆதரிக்கிறேன். அதற்க்கான காரணத்தை இறுதியில் சொல்கிறேன்.
 
பிபிசி தமிழில், தமிழ்நாட்டை சேர்ந்த இனப்பெருக்க மருத்துவர் பாண்டியன் அவர்கள் சொன்ன கருத்து கேட்டேன். அவற்றிலிருந்து நான் புரிந்து கொண்டது.
 
1. உண்மையில் இது டிசைனர் குழந்தைக்கான முயற்சி அல்ல. 
2. மூன்று  பேரின் குழந்தை என்று சொல்வது தவறு.
3. எல்லோருக்கும் இந்த தெரிவு கிடையாது. தேவையும் இல்லை.பரம்பரை பரம்பரையாக பாரதூரமான ஜெனற்றிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பெற்று   கஸ்ரப்படும் ஆக்கள் மட்டும் இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
4. பாதிக்கப்பட்ட தம்பதியரின், முட்டையில் காணப்படும் முக்கியமான நியுக்ளியஸ் மற்றும் ஆணின் விந்தும் பாவிக்கப் படுவதால் அவர்கள் சாயலில்தான் குழந்தை பிறக்கும். ஆனால் இதில் சம்பத்தப்படும் மூன்றாவது பெண்ணின் முட்டையிலிருந்து ஆரோக்கியமான mitochondria எனப்படும்  பதார்த்தம் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. இந்த mitochondria இல் பரம்பரை ஜீன்ஸ் தகவல்கள் ஏதும் கிடையாது. இது ஒரு ஊக்கி மாத்திரமே. எனக்கு இது  எப்படி விளங்கியது என்றால்... நியுக்கிளியஸ் என்பது மஞ்சள் கருவும் mitochondria என்பது வெள்ளை கருவும் போல. எனது இந்த விளக்கம் பிழை என்றால் யாழ் களத்தின் ஆஸ்தான மருத்துவர் வந்து விளக்கம் தரும்படி கேட்கிறேன்.
 
 
நான் இதனை ஏன் ஆதரிக்கிறேன் என்றால்.,, இந்த பரம்பரை குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் பார்க்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மேற்கு நாடுகள் என்றால் இந்தப்பிள்ளை களைப் பெரும் அக்கறையுடன் அரசாங்கமே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எல்லா வசதிகள் செய்து  பார்த்துக் கொள்ளும். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சூப்பர் சிங்கரில் பாடிய செந்தில் நாதனைக் கைவிட்ட பெற்றோரைப் போல்  குப்பைத் தொட்டிக்குள் போடுவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி..

இதில் மூன்றாவது பெண்ணின் முட்டையிலிருந்து பெறப்படும் mitochondria எனப்படும்  பதார்த்தத்திற்கும் குழந்தையின் பரம்பரை குணத்திற்கும் தொடர்பில்லை என மருத்துவர்கள் சொன்னாலும் பொது சனங்கள் அக்கூற்றை நம்பி வர காலமெடுக்கும். பின்னாளில் குழந்தையிடம் எந்த உரிமையோ அல்லது அதன் சொத்துக்களில் எந்த உரிமையோ மூன்றாவது பெண் (கொடையாளி) கொண்டாட முடியாதென சட்டமும் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பும் பிழை.. உள்ளடக்கத்திலும் பிழைகள் உள்ளன.

 

இது இழைமணி (mitochondria) குறைப்பாடுகளோடு முட்டையை உருவாக்கும் பெண்களின் மூலம் பரவச் சாத்தியமான குறைப்பாடுகளை (சில வகை.. நரம்பியல்.. தசையியல்.. இதயவியல் மற்றும் செவிப்புலன் சார்ந்த பரம்பரை நோய்கள் ஏற்பட முட்டையில் காணப்படும் இழைமணியில் உள்ள டி என் ஏ குறைப்பாடுகள் காரணமாக உள்ளன என்று ஆய்வுகள் கூறியுள்ளன.) அடுத்த சந்ததிக்கு கடத்தாமல் இருக்க நல்ல நிலையில் இழைமணிகளை கொண்ட முட்டையை உருவாக்கும் பெண்ணிடம் அதனை கடன்வாங்கி அவளின் முட்டையில் உள்ள கருவை (nucleus) அகற்றி சிதைத்துவிட்டு.. குழந்தை தேவையான பெண்ணின் முட்டையில் இருந்து கருவை அகற்றி அதனை இழைமணி நல்ல நிலையில் உள்ள பெண்ணின் முட்டைக்குள் செலுத்தி.. பின் அதனை குழந்தை பெற விரும்பும் பெண்ணின் ஆண் நபரின் உயிர்கலத்துடன் ஆய்வுசாலையில் கருக்கட்ட (IVF) அனுமதித்து.. அந்த முளையத்தை குழந்தை பெற விரும்பும் பெண்ணின் கருப்பையில் குழந்தையாக வளர்த்தலாகும்.

 

இதில் நன்மைக்குரிய விடயம்.. முட்டை.. விந்து கலங்களின் கருவில் உள்ள டி என் ஏ யில் உள்ள ஜீன்களின் தகவலின் படி தான் குழந்தை ஒன்று உருவாகிறது என்றாலும்.. முளையம் ஒன்றின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கலத்தில் சக்தி வழங்கியான இழைமணிகளின் அவற்றுள் உள்ள இழைமணி டி என் ஏ களின் பங்களிப்பும் செல்வாக்குச் செய்து வருகின்றன.

 

இந்த முறை முலம்.. ஆரோகியமற்ற இழைமணிகளோடு முட்டையை உருவாக்கும் பெண்களின் மூலம் பரவக் கூடிய பரம்பரை நோய்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதேவேளை.. பெண்ணிலைவாதிகள்.. விவாதிக்கலாம்.. ஏன் பெட்டையளை சந்தேகிக்கிறீங்கள்... என்று.. மீண்டும்.. ஆண்கள்.. இங்கும் சிங்கக் குட்டிக்கள்... தான். விந்து கலங்கள்..முட்டையில் உள்ளதை விட.. பல ஆயிரம் இழைமணிகளை அதிகம் கொண்டுள்ளன. காரணம்.. ஒரு தனிக்கல விந்து..  தானே நீந்திப் போய் முட்டையை அடையும் சக்தியை கொண்டுள்ளது. நீச்சல் தடாகத்தில்.. நீச்சலடிக்க உங்களுக்கு எவ்வளவோ சக்தி தேவைப்படும்..?!. ஆனால்.. சுக்கிலப்பாய் பொருள் என்ற ஆண் விந்து கொணரும் பாய்பொருளில்.. நீந்துவது என்பது அவ்வளவு இலகு அல்ல. அதைத்தாண்டி பெண்ணின் உடலில் உள்ள பாய்பொருட்களை தாண்டியும் நீந்தியே விந்து முட்டையை அடைய வேண்டும். இழைமணிக் குறைப்பாடுள்ள விந்துகள்.. இவ்வாறு முட்டையை அடைதல் குறைந்த நிகழ்தகவைக் கொண்டிருக்கின்ற படியால்.. முட்டை இழைமணி மூலம் தோன்றும் இந்தப் பிரச்சனைக்கு.. தீர்வை இன்னொரு பெண்ணை வைச்சு முடிவுகட்ட முனைகிறார்கள்.

 

இதில் உள்ள சாதகம்:

 

முட்டை இழைமணி மூலம் பரவக் கூடிய பரம்பரை நோய்களை கட்டுப்படுத்துவது. அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் இப்பரம்பரை நோயாளிகளை பராமரிக்க செய்யப்படும் செலவை சேமிப்பது. (இதில் ஒன்றைக் கவனிங்க.. இந்த நோய்கள்.. பொதுவில் அரிதாகவே ஏற்படுகின்றன. ஆனால்.. குடி.. புகை.. போதைப்பொருள்.. உடற்பருமன் சார் மக்களிடம் உள்ள பழக்க வழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு அரசு மிக மிக மிக அதிகம் பணத்தை செலவிடுகிறது. அதற்கு ஒரு கோதாரியாலும் தீர்வு வரல்ல.. என்பது மிகவும் வருந்தத் தக்கது. காரணம்.. பிரிட்டனின்.. உலகப் போர்களுக்குப் பின்னான சமூகப் பழகவழக்க மாற்றம். இன்னொரு செய்தி.. இன்னும் 50 ஆண்டுகளில்... பிரிட்டனின் சனத்தொகையில்..பாதி புற்றுநோயோடு வாழப் போகுது என்ற எச்சரிக்கை வந்துள்ளது. இதில்.. செலவு செய்வதை அதில்.. இன்னும் கூட செலவு செய்தால் நன்றாக இருக்கும்.)

 

பாதகம்:

 

இழைமணி சார்ந்த பரம்பரை இயல்புகள் சில குறித்த சிகிச்சையோடு பிறக்கும் குழந்தைகளின் சந்ததியில் மாறலாம்.

 

ஒரு ஆரோக்கியமான பெண்ணின் முட்டைக் கரு சிதைக்கப்படுகிறது. (ஒவ்வொரு மாதமும் எத்தனையோ முட்டை சிதையுது.. எத்தனையோ சிசுக்கள் சிதையுது.. அதற்கு எவனும் கவலைப்பட மாட்டான்.. இப்படி ஒரு சிகிச்சை முறையில்.. ஒரு கரு (nucleus) சிதைவதை இட்டு கவலைப்படுபவர்களும்.. அதனை எதிர்ப்பவர்களும் எழுவது.. ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. எதுஎப்படியோ இந்த எதிர்ப்புகள்.. அந்த மகா பாதகங்களையும் ஓர் நாள் எதிர்க்கும் என்று காத்திருப்போம். அவை பிறக்க முதல் அழிவனவிற்காக கவலைப்படுவதோடு பிறந்த பின் ஆயிரக்கணக்கில் குண்டை போட்டு அழிப்பதிலும் எதிர்ப்பை பதிவு செய்தால் நல்லா இருக்கும்.

 

ஆய்வு:

 

இந்த முறை ஏலவே குரங்குகளில் சோதிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

 

உசாத்துணை:

 

http://youtu.be/oKHKRji1qzw

 

http://www.nhs.uk/news/2010/04April/Pages/DNA-swap-and-inherited-disease.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.