Jump to content

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!


Recommended Posts

Posted

உங்கள் அனுபவங்களில் இருந்து, பொருத்ததம் பார்த்து நிகழ்ந்த திருமணங்கள், காதலித்து நிகழ்ந்த திருமணங்கள். இவற்றிலே பிரிவுகள் குறைவாக உள்ள வகையினரை ஒப்பிட்டுப் பாருங்கள்!

நான் விசாரித்ததில் கிரேப்வாட்டர் குழந்தைகளுக்கு குடல் புண்ணை உருவாக்கும் காரணிகளை உடையது என்று சிலர் கூறினார்கள். இவைகளை வாங்க டொக்டர் சிபார்சும் செய்யமாட்டார்.. நம்ம கடைகளில் மேசைகளுக்கு கீழே வைத்து விற்கிறார்கள். அவளவுதான். இதை ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். அவளவுதான். உதாரணம் பொருந்துகிறதா என்பதை விளக்க எனக்கு அந்த தகுதி இல்லை. ஆனால் கறுப்பி அவர்களுக்கு விளங்கியதை அவருடைய கருத்து மூலம் விளங்க முடிகிறது. :P

மற்றும், புகலிட நாடுகளில் பொருத்தம் பார்ப்பது திருமண நாள் குறிப்பது போன்றவற்றை ஐயர்மார்களே செய்கிறார்கள். அவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்து குறித்துக் கொடுப்பதை ஏற்று அதன்படி செயற்படுவதுதான் பெரும்பாலான வாடிக்கை நிகழ்வாக உள்ளது.

பஞ்சாங்கம் சோதிடமல்ல. அதன் ஒரு பகுதி. அவசரத்துக்கு தேவையான குறிப்புகளை உள்ளடக்கிய ஒரு பகுதி. உயர் வகுப்புகளில் நாம் எழுதும் பெளதீக அல்லது இரசாயண நோட்ஸ் கொப்பி எனவும் வைத்துக் கொள்ளலாம். (ஆனால் அவற்றில் விபரங்கள் கூடுதலாக இருக்கும்.)

சோதிடத்துக்கெனவும் அந்தத் துறையில் வித்தகர்கள் உள்ளார்கள். அவர்களை நாம்தான் தேடிப் போகவேண்டும். மற்றும்படி மேலெழுந்தவாரியாக வெளிவரும் சோதிடத் தரவுகளை வைத்துக் கொண்டு அது மூடத்தனமானது என்ற முடிவுக்கு வர முடியாது.

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூல நட்சத்திரம் உடைய பெண்களினைத்திருமணம் செய்தால் மணமகனின் தகப்பன் இறப்பார் என்று சொல்லி பல மூல நட்சத்திர பெண்களுக்கு திருமணம் இழுபட்டுகொண்டு போகிறது. 10,15 வருடங்களுக்கு முன்பு ஈழத்தமிழ்பெண்களுக்கு உந்த மூல நட்சத்திரப்பிரச்சனை இருக்கவில்லை. ஈழப்போர் காரணமாக தமிழ் நாட்டுக்குப் புலம் பெயர்ந்ததினாலும், ஈழத்தமிழர்களின் வீடுகளில் சின்னத்திரை நாடகங்கள் பார்ப்பதினாலும், தமிழ் நாட்டு மூடனம்பிக்கையான மூல நட்சத்திரப்பிரச்சனை இப்ப ஈழத்தமிழருக்கும் தொத்திவிட்டது. (சைவசமயத்தில் இல்லாத ஆஞ்சனேயர், அய்யப்பன் வழிபாடுகளும் ஈழத்துக்கு வந்ததற்கு இன்னுமொரு காரணம் சின்னத்திரை நாடகங்களும், தமிழ் நாட்டுக்கு அகதியாகப்போனவர்களும் தான் காரணம்)

எனக்கு தெரிந்து பல மூல நட்சத்திர பெண்களின் மாமனார் மார்கள், இப்பெண்ணின் திருமணம் முடிந்தபின்பும் 10,20 வருடங்களாக உயிரோடு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த பலர் தங்களது பிள்ளைகளுக்கு ஆங்கிலப்பெயர்கள் சூடி அடையாளத்தினை இழப்பது போல, சைவசமயத்தவர் பலர் சாத்திரங்களினை நம்பி பிறக்கிற பிள்ளைகளுக்கு தமிழில் இல்லாத வடமொழிச் சொற்களிலும், வேறு மொழியில் உள்ளவர்களின் பெயர்கள் இட்டு அடையாளங்களினை இழக்கிறார்கள். சாத்திரத்தினை நம்பி 'ட' வில் டில்சன், டுலுக்சன் என்றும் பெயர் வைக்கிறார்கள்.

ஒரு பேப்பரில் முன்பு வந்த கட்டுரை.

http://www.orupaper.com/issue14/pages_K__27.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல்புூச்சு புூசப்படுவது சில காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

விபுூதியில் நோய் எதிர்புச் சக்தி இருப்பதாக சிலர் கிளப்பி விட்ட வதந்தி இன்று வரை பலரால் நம்பப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்று இருப்பதாக அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

ஊறில் சாப்பாடு கொண்டுசெல்லும்போது கரி இட்டு கொண்டு செல்லுதல் வழமை. இதற்கான காரணமாக கரி co2 வை உறிஞ்சும் என்று கூறுவார்கள்.

மஞ்சல் தெளிப்பார்கள்; இது கிருமி நீக்கி என்பர்.

மூட நம்பிக்கைகள் எமது தமிழ் சமுதாயத்தில் மட்டுமா இருக்கின்றது?. இங்கு வெள்ளையர்கள் 13 வெள்ளி என்றால் பயப்படவில்லயா?

எனது தனிப்பட்ட கருத்து என்னவெண்றால் காலம் காலமாக எமது மூதாதையர்கள் பட்ட அறிவு தான் காலப்போக்கில் நம்மிக்கையாக வந்துள்ளது. இவற்றில் சில காலத்துக்கு ஒவ்வாதவை காலப்போக்கில் அழிந்துள்ளது; அல்லது மூட நம்மிக்கையாக மாறியுள்ளது.

வாழ்க்கயில் ஒரு நம்பிக்கை இருந்தால் எதயும் சாதிக்கலாம் என்பார்கள். குறிப்புப் பார்த்து அது பொறுந்தினால்; அவர் ஒரு நம்பிக்கயுடன் தனது வாழ்வை தொடங்கலாம்தானே?

நான் சிறு வயதில் பாடசாலையில் சமூகக்கல்வி படிக்கும் போது எனது ஆசிரியர் கூறுவார் கொமினிசம் தான் உலகில் சிறந்தது என்று. அப்போது எனது பார்வையில் அது சரியாகவே பட்டது. எனெனில் எழை பணக்காரன் இல்லை எல்லோரும் சமம்; அத்துடன் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம். ஆனாலும் உலகில் இது எடுபடவில்லை. இங்கு சிந்தனை சிறப்பாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமாகவில்லை. தமிழீழத்தனியரசுகூட சோசலிச அரசே ஒழிய கொமினிசம் இல்லை.

இங்கும் பல சிந்தனைகள் வைக்கப்படுகின்றன (குறிப்புப்பார்த்தல்) இவை இக்காலச்சூழலுக்கு பொருந்தாத பட்சத்தில் தாமே அழிகின்றன.

குறிப்புப்பார்த்தல் என்பது பெரும்பாலும் பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்திலேயே நடைபெறுகின்றது. ஆகவே பெற்றோர்கள் நிச்சயிக்கும் திறுமணங்கள் நடைபெறும்வரை குறிப்புப்பார்த்தல் நடைபெறத்தான் போகின்றது.

Posted

சோழியன் நீங்கள் எப்படியான பிழையான விளக்கத்தைக் கொண்டிருகிறீர்கள் என்பது இந்த க்ரேப் வோடெரே நல்ல உதாரணம்,பிரித்தானியாவிலும் கிரேப் வோடெரை ஒருவருக்கும் வைத்தியர்கள் சீபார்சு செய்வதில்லை.அதற்கான காரணம் ஜேர்மனியிலும் ,பிரித்தானியாவிலும் ஒன்றே.ஒரு விடயத்தைத் தீர விச்சாரித்து அறிந்து அது சரிதானா என்று ஆராய்வதே பகுத்தறிவு.ஒரு விடயத்தை ஒருவர் கூறி விட்டார் என்பதற்காகவோ அதைப் பலரும் கூறுகிறார்கள் என்பதற்காகவோ அது சரியாகி விட முடியாது.அப்படியாயின் நாம் இன்னும் உலகம் தட்டையானது என்று தான் கூற வேண்டும்.இப்போ கறுப்பிக்கு விளங்கி இருப்பதால் அது சரியாக இருக்கும் என்னும் வாதமும் முழு முட்டாள் தனமான வாதம்.கறுப்பி என்பவர் இரு வரிகளில் தனக்கு விளங்கி இருக்கு என்று எழுதி உள்ளாரே தவிர ஏன் எதற்கு என்பதையோ கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதிலையோ எழுதவில்லை.இதில் இருந்து தெரிவது என்ன? கறுப்பி உங்கள் உறவினராக இருக்கலாம் நண்பியாக இருக்கலாம்,களத்தில் அவர் ஒரு முகமூடி அவர் விளங்கிய மாதிரி எழுதியதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அதற்காக உங்கள் ஒப்புவமை சரி என்று பகுத்தறிவுச் சிந்தனை உடயோரால் ஏற்றுக் கொள்ள முடியாது.சிந்தனையும் தேடலும் அற்றதாலையே தமிழ்ச் சமூகத்தில் இவ்வாறான பல மூட நம்பிகைக்கள் இருந்து வந்துள்ளனன்.அறிவியலும் சுய சிந்தனையும் பெருகும் போது இவை வழக்கொழிந்து போகும்.புலத்திலும் இன்று இளய சமூகத்தில் இது நடந்து வருகிறது.அதற்கு ஏற்ற வகையில் நாமும் எது மூட நம்பிக்கை எது எமது பாரம்பரியம் என்பதை பகுத்தறிவால் ஆராய்வோமாயின் தமிழர்களை புலத்தில் உள்ள இழஞர்களும் பகுதறிவானவர்கள் என்று ஏற்பதற்கான சூழல் உருவாகும்.

Posted

சோழியன் சொல்கிறார்:

நீங்கள் கொலை, கொள்ளை கூடாது என்று சொல்வதற்கு அதில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். பாலியல் வல்லுறவு கூடாது என்று சொல்வதற்கு அதிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

எய்ட்ஸ் ஆபத்து என்று சொல்வதற்கு........ஐயோ!!

சாத்திரத்தைக் காட்டி ஏமாற்றிப் பிழைப்பவன் எப்படி அது கூடாது என்று சொல்வான். விற்பவன் தன் பொருளை தரமில்லை என்று சொல்வானா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி என்பவர் இரு வரிகளில் தனக்கு விளங்கி இருக்கு என்று எழுதி உள்ளாரே தவிர ஏன் எதற்கு என்பதையோ கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதிலையோ எழுதவில்லை.இதில் இருந்து தெரிவது என்ன? கறுப்பி உங்கள் உறவினராக இருக்கலாம் நண்பியாக இருக்கலாம்

என்ன நாரதர் சார் இப்படி ஒரு முடிச்சை போடுறிங்க. எனக்கு சோழியன் சாரையோ உங்களையோ தெரியாது. ஒருதருடைய கருத்துக்கு என் மனதில் பட்டதை எழுதுறதுக்கு உறவினராவவோ நண்பியாவோ இருக்கோணும் என்று இல்லையே

Posted

அத்தினி பத்மினி சித்தினி .. என்று பொண்ணுகளை .காம அடிப்படையிலும் பிரிச்சு கணிச்சு வைச்சிருக்கிறாங்களாம்.....உதுக

Posted

என்ன நாரதர் சார் இப்படி ஒரு முடிச்சை போடுறிங்க. எனக்கு சோழியன் சாரையோ உங்களையோ தெரியாது. ஒருதருடைய கருத்துக்கு என் மனதில் பட்டதை எழுதுறதுக்கு உறவினராவவோ நண்பியாவோ இருக்கோணும் என்று இல்லையே[/quote

கறுப்பி இருக்கலாம் என்று தான் கூறினேன் இருக்க வேண்டும் என்று அல்ல,சும்மா டென்சன் ஆகாதீங்க.கருதாடலுடன் சம்பந்தமான் கேள்விகளுக்கு பதில் அழியுங்கள்,சும்மா ஒரு வரியில் வந்து ஆதாரவு தெருவிப்பதை நிறுத்துங்கள்.அதனையே தமது கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக சோழியன் உதாரணமும் காட்டி உள்ளார்.

Posted

சோழியன் "சாதகம் பற்றி கருத்துச் சொல்ல அதில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்" என்று நகைச்சுவை செய்திருந்தாலும், பின்பு ஒரு சீரியசான கேள்வியை கேட்டிருந்தார்.

பொருத்தம் பார்த்து செய்த திருமணங்களா அல்லது காதல் திருமணங்களா அதிகமாக விவாகரத்தில் முடிகின்றன என்று கேட்டிருந்தார்.

இதற்கான பதில் காதல்; திருமணங்களே அதிகமான விவாகரத்தில் முடிகின்றன என்பதுதான்.

இந்தக் கேள்வியை வைத்துத்தான் சாத்திரத்தை ஆதரிப்பவர்கள் தங்களின் வாதத்தை நடத்துவார்கள். இதை ஒரு வலுவான வாதம் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இப்படி காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் மிக இலகுவானது.

அந்தக் காரணத்திற்கு "பொருத்தம் பார்த்தல்" என்பதற்கு சம்பந்தம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வரியில் எழுதிய பழக்கதோசம் தான் நாரதர் சார். பார்ப்போம் எழுத முயட்சி செய்யிறன்

Posted

பொருத்தம் பார்க்கிற பிரச்சனைக்கு பிறகு வருவோம்.

ஏன் காதல் திருமணங்கள் அதிகமாக விவாகரத்தில் முடிகின்றன?

இந்தக் கேள்விக்கு இப்பொழுது உங்களின் கருத்தை தெரிவியுங்கள்.

நான் சிறிது நேரத்தில் மீண்டும் வந்து என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறிப்புப் பார்த்தல் என்பது ஆதிகாலந்தொட்டு ஆண் - பெண் வாழ்வியலில் அவதானிக்கப்பட்டு வந்த நடைமுறைகளின் தேர்வுகளைக் கொண்ட ஒரு தொகுப்பினாலான ஒரு custom method.

இந்த நடைமுறைகளுக்கு இன்னும் அறிவியல் ஆராய்ச்சிகளினூடான நிரூபணங்களின் வாயிலான உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விடயம்.

சோழியான் அவர்கள் இங்கு சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடவில்லை. ஒரு custom இன்னொரு இடத்தில் தவிர்க்கப்படக் கூடியது என்பதையே தனது உதாரணம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Anticeptic (நோய்க்கிருமிகள் கொல்லி) and Disinfectant (கிருமி கொல்லி) என்பன புழக்கத்தில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப பாவிக்க அனுமதிக்கப்படுகின்றன. பிரித்தானிய தயாரிப்புக்களுக்கு மாற்றீடான தயாரிப்புக்கள் கிடைக்குமிடங்களில் அவர்கள் அவற்றிற்கு கட்டுப்பாடு விதிப்பதில் தவறில்லை. ஆனால் குழந்தைகளுக்கு இந்த கிரேப்வோட்டர் கொடுப்பதென்பது ஒரு Custom ஆகவே வளர்ந்து வந்திருக்கிறது. இலங்கை இந்தியா என்று பிரித்தானிய குடியேற்ற நாடுகள் இங்கும் இது முக்கியமாக பாவிக்கப்படுகிறது. குழந்தைகள் உள்ள வீட்டில் இது நிச்சயம் இருக்கும்.

அதன் மருத்துவக் குணம் அறிகிறார்களோ இல்லையோ கிரேப்வோட்டர் கொடுக்க வேணும் என்பதை ஒரு நடைமுறையாக தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வருகின்ற போது அதனால் பயனும் கிடைக்கின்ற போது அதுவே ஒரு custom ஆகிவிடுகிறது.

அதன் உண்மையான மருத்துவக் குணம் அதன் பக்க விளைவுகள் எல்லாம் அறிவியல் ஆய்வினால் சொல்லப்படுகின்ற போதும் மக்கள் தலைமுறையாக பாவித்து உடனடி நன்மைகள் பெற்ற விடயங்களை இலகுவில் கைவிடமாட்டார்கள். அதன் பாவனை நீண்ட நோக்கில் பாதிப்பு என்று கூறினாலும் கூட. இதேபோலத்தான் தேங்காய் எண்ணைப் பாவனையும். இதில் ஒரு அறிவியல் போரே நடக்கிறது. மேற்குலக ஆய்வுகள் தேங்காய் எண்ணை கொலிஸ்ரோல் உற்பத்தில் அதிகம் பங்கு வகிக்கிறது என்று சொல்ல இந்திய ஆய்வாளர்களோ அப்படியல்ல இது மேற்குலகத்தினர் தங்கள் உற்பத்திகளை தேங்காய் எண்ணைக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்த இப்படியான சோடிப்புக்களை செய்தியாக வெளிவிடுகின்றனர் எங்கின்றனர். இது மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவதோடு குறிப்பிடத்தக்க அளவுக்கு தேங்காய் எண்ணைப் பாவனையையும் குறைத்துள்ளது.

ஆனால் மேற்கில் இன்னும் தேங்காய்த் துருவல்கள் தகரத்தில் அடைக்கப்பட்ட தேங்காய்ப் பால் என்பன சுப்பர் மார்க்கெற்றுக்களில் வெள்ளையர்களால் கூட வாங்கிப் பாவிக்கப்படுகின்றனதான்.

இதே போன்றதே குறிப்புப் பார்த்தலும் ஒரு Customமாக மக்களின் நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க இடம்பிடித்துள்ளது.

அது மக்களின் நம்பிக்கையில் இடம்பிடித்திருக்கிறது என்பதற்காக அது அறிவியல் ரீதியானது என்பதைப் போலிக்காரணங்களைக் காட்டி நிறுவ முயல்வது மிகவும் தவறானது.

அதேபோல் குறிப்புப் பார்ப்பதனூடு மக்களின் மனங்களில் விதைக்கப்படும் சில தகவல்கள் மனித ஆளுமையைப் பாதிக்கக் கூடியனவாகவும் உள்ளன. குறிப்பாக சில ஆண்களுக்கு நீ இரண்டு தாரம் உள்ளவன் என்று கூறிவிட அதுவே அடிமனத்தில் பதிந்து அவனுடைய செயற்பாடுகள் திருமணம் முடித்துள்ள பெண்ணின் மீது கூட அன்பை பாசத்தைக் காட்ட முடியாத சூழலைத் தோற்றிவித்து விடும்.

பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவனுக்குக் குறிப்புப் பார்ப்பார்கள். சாத்திரியும் இவருக்கு சனி தோசம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று எடுத்துவிட அதுவரை திறமையாக மனப்பயமின்று இருந்து வந்த மாணவனுக்கு அடிமனதில் அவனின் திறமை மீதே சந்தேகத்தை விதைத்துவிடுவதால் அது பரீட்சையில் கூட அவனுடைய முழுத்திறமையும் வெளிப்பட முடியாதபடி செய்துவிடலாம். இதற்கு அறிவியல் பூர்வமான உளவியல் விளக்கங்கள் உண்டு. ஆனால் சாத்திரம் சொல்பவருக்கோ குறிப்புப் பார்ப்பவருக்கோ இவை குறித்து சிந்திக்கும் ஆற்றல் இருப்பதாக அநேகரில் தெரிவதில்லை.

எனவே குறிப்புப் பார்ப்பதென்பது மக்கள் நம்பிக்கைகுரிய ஒன்றாக வளர்ந்துவிட்டது என்பதற்காக அது மக்களுக்கு உபயோகமாக உள்ளது என்று கூறிவிட முடியாது. சில சந்தர்ப்பங்களில் அதிஸ்டம் அடிப்பது போல சொல்வது சரியாகி விட அதுவே நம்பகத்தன்மையை வளர்த்தும் விட மக்களின் சிந்தனையில் குறிப்புச் சொல்வதால் விதைக்கப்படும் கருத்தின் தாக்கம் என்பது குறித்து சிந்திக்கப்படுவதில்லை.

பல வேளைகளில் குறிப்புச் சொல்வதை விட அது சொல்வதால் மனதளவில் ஏற்படும் மாற்றங்களும் செயற்பாடுகளுமே சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது. அதற்காக குறிப்புச் சொல்வது சரியென்று கருதிவிட முடியாது.

சாஸ்திரமும் இந்த வகையினதே.

ஆனால் பஞ்சாங்கம் என்பது கணிதவியல் சார்ந்தது. அது காலக்கணிப்பீடு பற்றிய ஒரு பதிவு மட்டுமே. இந்த நாளில் சந்திரகிரகணம் என்றால் அந்த நாளில் விஞ்ஞானக் கணிப்பீடுகளின் படியும் சந்திரகிரணம் அமையும். பழைய காலத்தில் மணல் கடிகாரத்தை வைத்து நேரத்தை அளவிட்டது இன்று Digital கடிகாரங்களில் எண்களில் காட்டப்படுகிறது. கணிப்பிடப்படும் அளவீட்டுக்குரிய காரணி மாறவில்லை. அந்த வகையில் பஞ்சாங்கம் பழைய கணிப்பீட்டு முறைகளூடு செல்கிறது. அதனாலேயே நவீன கணிப்பீடுகளோடு வரும் விஞ்ஞான வானியல் மாற்ற அறிக்கைகளோடு அவையும் ஒத்துப் போகின்றன.

அதற்காக பஞ்சாங்கத்தை வைத்து சொல்லப்படும் சாஸ்திரமென்பது விஞ்ஞானரீதியானது என்பதாகிவிடாது.

குறிப்புப் பார்ப்பது சிலருக்கு மனதளவில் நம்பிக்கையைத் தருகிறது என்பதை வாதக் கருவாக்கினாலும் கூட அது மூடத்தனமான சிந்தனைகளூடு மனங்களையும் செயற்பாடுகளையும் மாற்றி வீழ்ச்சிக்கும் வேதனைக்கும் வழியும் வகிக்கிறது என்பதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இப்போ மருத்துவம் என்பது நங்கு முன்னேறிவிட்டது. மருத்துவம் முன்னேறாத காலத்தில் வாழ்வியலில் கண்ட அனுபவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு (கை வைத்தியம் என்பார்கள்) இன்று அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. அவற்றின் மீதான நம்பிக்கைகளும் அகன்று கொண்டிருக்கின்றன. இருந்தாலும் அவை கூட சில இடங்களில் custom ஆக இன்றும் இருக்கின்றன.

இன்று பாரம்பரிய நோய்களற்ற குழந்தையைக் கூட தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு மருத்துவ உயிரியல் தொழில்நுட்ப உலகம் முன்னோறிவிட்டது. அண்மையில் கூட பிரித்தானியாவில் முற்றிலும் பாரம்பரிய புற்றுநோய்களின் தாக்கத்துக்கு சந்தர்ப்பம் அளிக்க முடியாத ஒரு சிசு உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர் வருங்காலங்களில் குறிப்புப் பார்ப்பதற்குப் பதில் DNA figer print பார்ப்பதை அறிமுகப்படுத்துவதே உண்மையில் அதிக பொருத்தத்தை உடல் உள ரீதியில் தரும் என்றால் அது மிகையல்ல. அதை நோக்கி தமிழர்களின் குறிப்புக் custom முன்னேற வேண்டும். முன்னேறுமா????. தமிழர்களின் சிந்தனைப் போக்கு அதற்கு முன்னேற வேண்டும். நடக்குமா????!

வெள்ளையர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக அவர்களின் Custom எல்லாம் அறிவுபூர்வமானதென்பதோ பகுத்தறிவானது என்பதோ தவறு. அவற்றிலும் அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பினும் தவறுகள் இருக்கலாம். நேற்றைய அறிவியல் இன்று இன்னொரு அறிவியலால் மறுதலிக்கப்படுகிறது. எனவே அறிவியல் உலகில் எதுவும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறுநிலைகளில் தான் உள்ளன. ஆனால் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மனங்களில் வலுவான சிந்தனைகளை வளர்க்க வேண்டும். வலுவற்ற சிந்தனைகளை வளர்த்து சமூகப் பாதிப்புக்களை உண்டாக்கவல்ல செயற்பாடுகளை பாரம்பரிய நம்பிக்கைகள் என்று எல்லாவற்றிலும் தொடர வேண்டும் என்பதில்லை. பாரம்பரியத்திலும் தகாததுகளை விடுத்து விழுமியங்கள் ( அவசியமான நல்ல பயன்களை என்றும் தரவல்ல) இனங்கண்டு உள்வாங்கக் கற்றுக் கொடுப்பதன் மூலமே நவீனத்துவத்தோடு பாரம்பரிய தனித்துவங்களும் மிளிரும் சமூகத்தை உலகிற்கு அளிக்க முடியும். சிந்திப்பார்களாக. :!:

Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலே சிறிய தவறு - ஆன்டிசெப்டிc என்பது தவறுதலாக ஆன்டிcஎப்டிc ஆகிவிட்ட

Posted

சோழியன் என்ன சொல்லவாறார? antiseptic & disinfectent ஒன்றும் யேர்மனியில் விற்பதே இல்லை என்றாரோ? இல்லை மருந்தக அத்தாட்சி உடையவர்களால் தான் விக்கலாம் என்றாரோ இல்லை prescription ஓடு தான் மருந்தகத்தில் வேண்டலாம் என்றாரோ?

குறுக்காலபோவானின் கேள்விக்கு பதில் கூறினேன். மற்றும்படி கிரேப்வாட்டருக்கு மருத்துவர் சிபார்சு செய்வதில்லை என்பது தெரியும். ஜேர்மனியில் அதன் விற்பனைக்கு தடை என்பதைத்தான் மேலே திரும்பத் திரும்ப கூறியுள்ளேன்.

ஒரு சிறு விடயத்தையே மறுதலித்து வாதாடுபவர்களால் இப்படியான விடயங்களுக்கு தெளிவான கருத்தை முன்வைக்க முடியுமா என்பது சந்தேகமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலே சிறிய தவறு - Antiseptic என்பது தவறுதலாக Anticeptic ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலும் ஒரு தவறு DNA fingerprint என்பதாக வர வேண்டும்.

Keyman Keyboard பாவிப்பதால் எழுத்துருவை மாற்றி எழுத வேண்டு அமைவதால் இத்தவறுகள் நேர்ந்து விடுகின்றன. தவறுகளுக்கு வருந்துகின்றோம். சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திவிட்டு இப்பதிவுகளை நீக்கினால் சிறப்பாக இருக்கும்.

Posted

என்னுடைய கேள்விக்கு இதுவரை யாரும் கருத்துச் சொல்லவில்லை. சரி, பராவியில்லை என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

பேச்சுதிருமணங்களை விட காதல் திருமணங்களே அதிகமாக விவாகரத்தில் முடிகின்றன என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கக்கூடும்.

ஆனால் இதை வைத்து பொருத்தம் பார்த்து செய்கின்ற திருமணங்களே சிறந்தன என்று சொல்ல முடியுமா?

விவாகரத்துக்களின் எண்ணிக்கையை வைத்து இதை தீர்மானிக்க முடியுமா?

பேச்சுத் திருமணம் செய்து கொண்டு சட்டப்படி பிரியாமல் ஒரே வீட்டிலேயே மனதால் பிரிந்து வாழுகின்ற தம்பதிகளை கணக்கில் எடுக்காது எப்படி இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்?

காதல் திருமணங்கள் அதிகமாக சட்டப்படி பிரிவதற்கான அடிப்படைக் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் திருமணம் என்பது ஒருவகையில் ஒரு புரட்சியாகும்.

பெற்றோர்கள் பார்க்கின்றவரையே திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டை உடைக்கின்ற புரட்சியை காதல் திருமணம் செய்பவர்கள் செய்கிறார்கள்.

திருமணத்தை பொறுத்தரை முக்கியமான இரண்டு கட்டுப்பாடுகளை பார்க்கலாம்.

1. பெற்றோர் சொல்கின்றவரை திருமணம் செய்ய வேண்டும்

2. காலம் முழுவதும் அவருடனேயே வாழ வேண்டும்.

இதிலே முதலாவது கட்டுப்பாட்டை உடைத்து காதல் திருமணம் செய்பவர்களால், வாழ்க்கை சரியாக அமையாத போது இரண்டாவது கட்டுப்பாட்டையும் உடைக்க முடிகிறது.

அதே போன்று முதலாவதிற்கு கட்டுப்பட்டு பெற்றோர் கை காட்டியவரை கை பிடித்தவர்கள், வாழ்க்கை நரகமாக அமைந்தாலும் இரண்டாவதிற்கு கட்டுப்பட்டு தொடர்ந்து வாழ்கிறார்கள்.

ஆகவே இங்கே அர்த்தமற்ற கட்டுப்பாடுகளை உடைக்கின்ற புரட்சியாளர்கள் அப்படியே இருக்கிறார்கள். அடங்கிப் போகின்றவர்கள் தொடர்ந்து அடங்கிப் போகின்றார்கள்.

இதை புரிந்து கொள்வதில் கடினம் ஒன்றும் இல்லை.

இதை வைத்து திருமணங்களின் வெற்றியை கணிக்க முடியாது. இனிமையான மகிழ்ச்சியான வாழ்க்கையே திருமணத்தின் உண்மையான வெற்றி.

அது காதல் திருமணத்தில் உள்ளதா, பேச்சுத் திருமணத்தில் உள்ளதா என்பதுதான் சரியான கேள்வியே தவிர, விவாகரத்து எங்கு அதிகம் என்ற கேள்வி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் திருமணம் என்பது ஒருவகையில் ஒரு புரட்சியாகும்.

காதல் என்பது ஒரு உயிரின உணர்வு. இது உயிரினம் தோன்றிய காலந்தொட்டு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகிறது. மனிதரிலும் கூட. இதில் என்ன புரட்சி.

புரட்சி என்றால் என்ன? அர்த்தம் தெரிந்துதான் இப்பதத்தைப் பாவிக்கிறீர்களா?

காதல் திருமணம் என்பதைப் புரட்சியாகக் காட்டுபவர்கள் திருமணம் என்பதையே வாழ்க்கையையாகக் கருதுபவர்கள். திருமணம் என்பது வாழ்வின் ஒரு அத்தியாயம். வாழ்க்கையை ஒரு நூலாகக் கருதினால் இது ஒரு அத்தியாயம். காதல் திருமணம் மூலம் அதைப் பலர் தாங்களே எழுதிக் கொள்கின்றனர். சிலர் பெற்றோர் மூலம் எழுதிக் கொள்கின்றனர். இதில் புரட்சியும் கிடையாது விடுதலையும் கிடையாது. காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறைதான்.

விவாகரத்து என்பது காதலுக்கு அப்பால் பட்டது. அது மனித மனங்களின் சகிப்புத்தன்மையற்ற நிலையின் வெளிப்பாடு.

காதலுக்கும் விவாகரத்துக்கும் முடிச்சுப் போடுவதைவிடுத்து ஆண் - பெண் சகிப்புத்தன்மை குறைவடைந்து வருவதற்காக காரணங்களைக் கண்டு நிவர்த்தித்து ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்தும் புரிந்துணர வலியுறுத்துவீர்கள் என்றால் அதை விவாகரத்துக்கு எதிரான புரட்சியாகக் காட்டலாம். சகிப்புத்தன்மையே விட்டுக்கொடுப்புக்கும் புரிந்துணர்வுக்கும் அடிப்படையாகிறது.

காதலிக்கும் போது சகித்துக் கொள்பவை திருமணத்தின் பின் சகிக்கப்படமால் முக்கியப்படுத்தப்படுவத்தே விவாகரத்து என்ற சட்டத்தின் தீர்மானத்துக்குள் மனித வாழ்வை சிறை வைத்து விடுகிறது.

திருமணம் என்பது உணர்வோடு கலந்த பின்னும் விவாகரத்து என்ற சட்டத்தின் மனித உச்சரிப்புக்கள் மனித உடல்களைப் பிரித்து வைக்கலாம் மனதை நினைவுகளை அனுபவங்களை பிரிக்க மறக்கச் செய்ய வழி செய்யுமா? நிச்சயம் இல்லை. விவாவகரத்து என்பது முற்றிலும் மனிதப் போலித்தனத்தின் வெளிப்பாடு. எது எப்படியோ திருமணத்தின் மூலம் உடல் உள உபாதைகளை அனுபவிப்பவர்களுக்கு விவாகரத்து ஒரு நிவாரணி மட்டுமே. :idea:

Posted

குறுக்காலபோவானின் கேள்விக்கு பதில் கூறினேன். மற்றும்படி கிரேப்வாட்டருக்கு மருத்துவர் சிபார்சு செய்வதில்லை என்பது தெரியும். :arrow: ஜேர்மனியில் அதன் விற்பனைக்கு தடை என்பதைத்தான் மேலே திரும்பத் திரும்ப கூறியுள்ளேன்.

ஒரு சிறு விடயத்தையே மறுதலித்து வாதாடுபவர்களால் இப்படியான விடயங்களுக்கு தெளிவான கருத்தை முன்வைக்க முடியுமா என்பது சந்தேகமே!

உதாரணமாக, யுகே தயாரிப்புகளான குழந்தைகளுக்கு கொடுக்கும் 'கிரேப் வாட்டர்' மற்றும் 'டெட்ரோல்' போன்ற பொருட்களை ஜேர்மனியில் பாவிக்க முடியாது. அவற்றை மறைத்தே நமது கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள்.

:arrow: ஆக, மேற்குலகில் அவர்களுடைய தயாரிப்புகளிலேயே உடன்பாடில்லாதபோது, ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் சாஸ்திர சம்பிரதாயங்களை பிழை என்று முற்றுமுழுதாக ஒதுக்கிவிட முடியாது.

அப்படி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டுமாயின், முதலில் தீர்மானிப்பவர்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

.

சோழியன் இது சிறிய விடயம் அல்ல, ஏனெனில் நீங்கள் கூறிய கிரேப் வோட்டர் என்னும் உவமானம் மேற்குலகிலயே மாறுபாடான விடயங்கள் இருக்கும் போது சாத்திரத்தில் மட்டும் எப்படி பிழை இருக்க முடியும் என்பதே.இங்கே சுட்டிக் காட்டப்பட்டது மேற் குலகில் நீங்கள் கூறுவதைப் போல் யுகேயிலும் ஜேர்மனிலும் வேறு வேறான நடை முறைகள் இல்லை என்பதே.அறிவியல் ரீகியான அணுகுமுறைகள் எங்குமே ஒன்றாகவே இருகின்றன.னம்பிக்கையின் அடிப்படயிலான மூட பழக்க வழக்கங்களே மாறுபாடானதாக இருகின்றன.அறிவியலின் அடிப்படை இல்லாதவை காலப் போக்கில் வழக்கொழிந்து விடும்.

நெடுக்கலாபோவானின் பல கருதுக்களுடன் நான் உடன் படுகிறேன்.தமிழர்கள் மத்தியில் இருக்கும் இந்தப் பிழையான நம்பிக்கைகளால் பாதிக்கப்படோர் பலர்.உளவியல் ரீதியாக பலரை இந்தப்பிழையான நம்பிக்கைகள் சீரழித்துள்ளன.சமூகவியல் ரீதியாக இவை கழயப்பட்டு இவை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே சபேசனின் கருதாடலின் நோக்கம்.இங்கே இந்தமூட நம்பிக்கைகள் தான் இவ்வறான பிற்போக்கான பழக்க வழக்கங்களுக்குக் காரணமாக இருகின்றன. நமதே சிறந்தது எப்போதுமே என்பதுவும் பழமையைப் பேண வேண்டும் என்பதுவும் சரியான பார்வைகளாக இருக்கமுடியாது.எமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு பிற்போக்கானவற்றைக் கழைவதே தமிழர்கள் முன் நேறுவதற்கு அடிப்படை. நெடுக்கால போவானும் அதனையே கூறி உள்ளார் என்று நம்புகிறேன்.

தனி நபர்கள் மேல் அவர்களிப்படி இவர்கள் இப்படி என்று குறை கூறாமல் கருதுக்களுக்குப்பதிற் கருதுக்களை எழுதுங்கள்.

Posted

காதல் என்பது ஒரு உணர்வுதான். நான் அதை புரட்சி என்று சொல்லவில்லை.

உலகில் பிறக்கின்ற எல்லோருக்கும் காதல் வரும். ஆனால் காதல் வருகின்ற எல்லோரும் காதல் திருமணம் செய்து கொள்வது இல்லை. சமூகக்கட்டுப்பாடு அதற்கு எதிரானது. அதை உடைப்பதும் ஒரு புரட்சிதானே.

இன்றைக்கு இளைய சமுதாயம் செய்த புரட்சியினால் காதல்திருமணத்தை சமூகம் வேண்டாவெறுப்பாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டது. முக்கியமாக புலம்பெயர் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. அந்த வகையில் இப்பொழுது காதல் திருமணங்களே இங்கு அதிகமாக நடக்கின்றன.

அதனால் உங்களுக்கு இந்த "புரட்சி" என்ற வார்த்தை சிறிது அதிகப்படியாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேச்சுதிருமணங்களை விட காதல் திருமணங்களே அதிகமாக விவாகரத்தில் முடிகின்றன என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கக்கூடும்.

ஆனால் இதை வைத்து பொருத்தம் பார்த்து செய்கின்ற திருமணங்களே சிறந்தன என்று சொல்ல முடியுமா?

அன்றைய காலகட்டத்தில் பொருத்தம் பார்த்து பேசிச் செய்த திருமணங்கள் நீண்டகால வாழ்வில் இணைந்திருக்கினம். பிடிக்கின்றதோ இல்லையோ ஊரின் வாழ்வியலில் முறையில் கட்டுப்ப்ட்டு வாழ்ந்த முறை அன்று. அனுசரித்துப்போகும் முறை, உற்றார் உறவினரின் ஆதரவு அனைத்தும் நிறையவே இருந்தது.

ஆனால் அன்று பேசிபொருத்தம் பார்த்த திருமணங்கள் இன்று புலம்பெயர் வாழ்வுக்கு வந்தபோது பல குடும்பங்கள் பிரிந்திருக்கினறன.

இதை பார்க்கும் போது பேசி பொருத்தம் பார்த்து செய்த திருமணங்கள் சிறந்தன என்று சொல்லமுடியாமல் இருக்கிறது

காதல் திருமணங்களை பொருத்தமட்டில் புலம்பெயர் வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டபின் தான் திருமணமே செய்கின்றார்கள். ஊரில் காதல் வயப்பட்டு புரிந்துணர்வு தன்மைக்கும், இங்கு காதல் வயப்பட்டு புரிந்துணர்வு தன்மைக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றது.

என்னைப்பொருத்தமட்டில் பொருத்தம் பார்த்து பேசி செய்வதிலும் பார்க்க காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செய்யும் திருமணம் சிறப்பாக இருக்கும் என்றே நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

A 39-year-old father who killed his wife and eldest daughter before jumping to his own death had a history of violence and suffered from mental illness, according to a police source.

:lol::(

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.