Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா.சம்பந்தன் மீது தமிழரசுக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

378853181Untitled-1.jpg

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்கையின் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தையும் குற்றத்தையும் புரிந்த இரா.சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பும், கடமையும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உரியதால் இதனை உடனடியாக கூட்டவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.4tamilmedia.com/newses/srilanka/28893-2015-02-05-03-21-44

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் ஒரு சிலர் மட்டுமே எமது மக்களின் தலைவிதி பற்றி தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மிகச் சரியான கருத்து.

சம்பந்தன் மீது.... உடனடியாக, கட்சி நடவடிக்கை எடுத்து....

அவர் இதுவரை செய்த, அடாவடித்தனங்களை கட்டுப் படுத்தும் முகமாக,

அவரை கட்சியை விட்டே... நீக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

10959573_409769725868402_732335830167306

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரையும்,சுமத்திரனையும் கட்சியை விட்டே நீக்க வேண்டும்.அவர்களிடம் விளக்கம் கூடத் தேவையில்லை.கட்சியின் முக்கியமான தன்கணவரை கண் முன்னே இராணுவத்திடம் கொடுத்து விட்டு இருக்கிறாரா?இல்லையா என்று தெரியாத நிலையில் அதற்குக் காரணமானமனவர்கள் கலந்து கொள்ளும் தேர்தலைப் புறக்கணிக்கிறேன் என்று சொன்ன அனந்தி மீது கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என்று நடவடிக்கை எடுத்த கட்சி கட்டாயம்இவர்கள் மீத நடவடிக்கை எடுக்க வேண்டும். அனந்தி பணம் வாங்கிவிட்டார் என்று குற்றஞ்சாட்டியவர்கள் இன்று கட்சியின் முக்கியமான ஒரு தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்க சம்பந்தனும்,சுமத்திரனும் ஏன் பணம் வாங்கியீருக்க மாட்டார்கள் என்று சிந்திக்கவில்லை.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது புறக்கணித்த நிகழ்வில் சம்பந்தர் கலந்து கொண்டது எந்தத் துணிச்சலில்.தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பைத் தவிர வேறு தெரிவில்லை என்ற துணிச்சலில்தானே.எந்த வித விளக்கமுமின்றி இருவரையும் கட்சியை விட்டே நீக்கினால்தான் தமிழினத்தின் எதிர்காலத்துக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
சம்மந்தர் இந்தியாவின் கைபொம்பை!
அவரால் இனி எதுவும் செய்யமுடியாது அவர்கள் நூல் இழுக்கும் நேரமெல்லாம் இவர் ஆடித்தான் ஆகணும்.
தமிழர்களில் அக்கறை இருப்பின் சூழ்நிலையை புரிந்துகொண்ட  வயதை காரணம் காட்டி ஒதுங்கிவிட வேண்டும்.
அப்படி ஒரு பொதுநலம் சம்மந்தரிடம் எப்போதும் இருந்ததில்லை.
 
சம்மந்தரின் வயது காரணமாக உடல் நிலை சிந்திப்பு தன்மை போன்றவை சரியான செய்யட்பாட்டில் இருக்கபோவதில்லை.
கருணாநிதி தான் சாகும்போது தி மு கவிற்கு சேர்த்து கொள்ளிவைத்துவிட்டே சாவார்.
உண்மையான புத்திசாலி என்றால் 2007இல் விலகி தமிழர்களின் மனதில் பெருத்த தலைவர் ஆகி இருக்க முடியும். 
தி மு கா பலமாக கால் ஊன்றி இருக்கும்.
 
எப்போ எதுவும் இருக்க போவதில்லை.
அதற்கு முக்கிய காரணம் வயது உடல் நிலைதான்.
 
சம்மந்தர் இனி அறளை பெயர்ந்த செயற்பாடும் கதைகளும்தான் பேசிக்கொண்டு இருப்பார்.
அனகமாக இவரும் பாடை ஏறும்போது கூத்தமைப்பிட்கு கொள்ளிவைத்து விட்டுதான் போவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.