Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி

Featured Replies

இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி FEB 11, 2015 | 1:50by கார்வண்ணன்in செய்திகள்

India-300x200.jpgவடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

ஆனால், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தை அளவிடுவதற்கு முன்னரே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த இனப்படுகொலைத் தீர்மானம் ஜெனிவா கூட்டத்தொடரில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அதிகாரிகள் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானம், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு இட்டுச் செல்லக் கூடும்.

இத்தகைய தீர்மானம் எதையும் நிறுத்துவதற்கு இந்தியா கவனம் செலுத்தும்.

வடக்கு மாகாணத்துக்கு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவின புதிய அரசாங்கத்துக்கு காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்தியத் தரப்புக் கருதுவதாக கூறப்படுகிறது.

இந்தக் கட்டத்தில் அனைத்துலக இனப்படுகொலை விசாரணை குறித்து சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தைச் சவாலுக்குட்படுத்தும் எந்த முயற்சியும், சிக்கலான நிலையை ஏற்படுத்தக் கூடும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் போர்க்கற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது  என்ற தீர்மானமும் சமர்ப்பிக்கப்படக் கூடும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு இந்தியா எப்போதுமே எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது.

இந்த நிலைப்பாடு காரணமாக, 2014ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கியது.

இந்தியப் பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் அடுத்த வாரம் நடக்கவுள்ள பேச்சுக்களின் போது, நல்லிணக்கம் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளின் புனர்வாழ்வு என்பன முக்கியமான விவகாரங்களாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தங்கியுள்ள ஒரு இலட்சம் அகதிகளைத் திருப்பி அனுப்பும் விடயத்தில், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் கலந்துரையாட இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/02/11/news/3555

 

  • கருத்துக்கள உறவுகள்

சாமி வரங்கொடுத்தாலும், பூசாரிக்கு ஏன் உடம்பெல்லாம் பத்தி எரியுது..? :huh::o

  • தொடங்கியவர்

வடக்கு மாகாணசபையின் தீர்மானம் மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதாகும்.விரைவில் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் நிலை தோன்றியுள்ளதால் அல்லது அவர் தொடர்ந்து பதவி வகித்தாலும் பொது தேர்தலில் ஆட்சி கை மாறும் நிலையே அதிகளவில் இருக்கின்றது.வடக்கு கிழக்கு மக்கள் தற்போதுள்ள நிலையில் பொதுத்தேர்தலில் அதிகளவு அக்கறை செலுத்த போவதும் இல்லை. ஆகவே ஐ நாவுடன் சேர்ந்து பயணிப்பதே நல்லது.

சரியான தருணத்தில் வந்த பிரேரணை . இந்தியன் எங்களுக்கு ஒன்றும் கொடுக்க விட மாட்டான் .இதுதான் உண்மை . ஐ .நா விசாரணையை துரித படுத்துவதே நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு அதிருப்தி என்றால்.....
சம்பந்தன், சுமந்திரன் கோஸ்டியளுக்கும், அதிருப்தியாய் இருந்திருக்குமே.
விக்னேஸ்வரன் மீது, அடுத்த கட்ட நடவடிக்கையை பாச்சப் போறாங்கள், பாவியள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலைத் தீர்மானம் - இந்தியா கரிசனை! 

[Wednesday 2015-02-11 07:00]
modi-wikki-200-news.jpg

வடமாகாண சபையில் நேற்று தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை எந்தளவில் பாதிக்கும் என்பதை தற்போதைக்கு அளவிடமுடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகளை கோடிட்டு தெ ஹிந்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

 

வடமாகாணசபையின் தீர்மானம் இலங்கையில் வியாகூல தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த பிரேரணையானது, ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை எந்தளவில் பாதிக்கும் என்பதை இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படாதநிலையில் அது, இலங்கையின் புதிய அரசாங்கம், தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் என்று இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதேவேளை புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை, சர்வதேச இனஅழிப்பு விசாரணைகள் சவால்களை ஏற்படுத்துமானால், அது முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.இதற்கிடையில், இனஅழிப்பு பிரேரணை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமானால், அதில் இந்தியா 2014ஆம் ஆண்டைப்போன்று பிரசன்னமாகாது இருக்கலாம்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லும்போது அங்கு இந்திய பிரதமர் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் விரிவாக ஆராய்வார் என்றும் ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=126352&category=TamilNews&language=tamil

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எந்தக் காலத்தில் தமிழருக்கு ஆதரவாக இருந்திருக்கிறது.இந்தியா சொல்வதைச் சொல்லட்டும்.இந்தத் தீர்மானம் முக்கியமான காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட மிக முக்கிய தீர்மானமாகும்.இந்தத் தீர்மானத்தின் மூலம் பல நாடுகளின் உண்மை முகம் வெளிப்படும். சிறிலங்காவும்.இந்தியாவும் தங்கள் முகத்தை வெளிக் காட்டியுள்ளன.2 நாடுகளுமே இன அழிப்பின் சூத்திரதாரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னுமொரு நாட்டின் இறையான்மை சம்மந்தப்பட்ட விடையம் என்பதினால்  எமது உள்நாட்டு பிரச்சனையில் இந்தியா தலையிடவேண்டாம்.   :icon_mrgreen:

மகிந்த, மைத்திரி, மற்றும் மோடி  ஆட்சிக்கு அப்பால் இந்த பிரேரினை எப்ப வந்தாலும் இந்தியா எதிர்க்கும். 

சாமி வரங்கொடுத்தாலும், பூசாரிக்கு ஏன் உடம்பெல்லாம் பத்தி எரியுது..? :huh::o

 

பூசாரி நினைச்சார் தனக்கு மட்டும் தான் double game விளையாட தெரியும் எண்டு.. இப்ப நாங்களும் double game விளையாடுறது அவருக்கு பிடிகேலை.....

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோல் பட்டடை நாய்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.