Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

மறக்கமுடியுமா..

என் பள்ளி நாளை

மனதில்

பட்டாம்பூச்சி

பறந்தநாட்களை

மறக்கமுடியுமா..

சின்னவயதில்..

துள்ளிச்சிறகடித்த

பழைய நாளை

மறக்கமுடியுமா..

சோவென்று மழைகொட்ட

புத்தகப்பையை

தூக்கி

எறிந்து..

சேற்றில் காலடித்து..

குளித்து

மகிழ்ந்ததுவும்..

காய்ச்சல் வந்து..

வீட்டில்..எல்லாரும்..

விழுந்து விழுந்து

கவனித்ததுவும்..

மறக்கமுடியுமா..

சுற்றுலா நேரத்தில்..

வாத்தியாரை ஏய்த்துவிட்டு..

பிரிந்து சென்று..

மகிழ்ந்ததுவும்..

பேச்சு விழுமென்று..

விட்டுவிட்டு போனதாக.

அழுது நடித்ததுவும்

மறக்கமுடியுமா..

மேசைக்கரையில்.

அழுக்கைப்பூசி..

பெண்கள் வெள்ளாடையை..

கறைகள் செய்தததுவும்..

பெண்கள் பின்னல் இழுத்து..

சேட்டைகள் செய்ததுவும்..

மறக்கமுடியுமா..

அணிவகுப்பு வேளையில்..

கால்வலி

எனச்சொல்லி

வகுப்பறையில் அமர்ந்து..

வண்ணப்படம் ரசித்ததும்..

விளையாட்டுப்போட்டியில்..

வென்ற நாடகளையும்..

மறக்கமுடியுமா..

பிரியும் நாளில்

நெஞ்சு கனத்து..

நண்பரெல்லாம்

அழுததையும்..

கணக்காசிரியர் காலைத் தொட்டு

ஆசி பெற்றதையும்..

என்னாயுள் நாளில் என்றேனும்..

மறக்கமுடியுமா..

எப்படி முடியும்.

  • Replies 1.9k
  • Views 181.9k
  • Created
  • Last Reply

மறக்கமுடியுமா..

என் பள்ளி நாளை

மனதில்

பட்டாம்பூச்சி

பறந்தநாட்களை

மறக்கமுடியுமா..

சின்னவயதில்..

துள்ளிச்சிறகடித்த

பழைய நாளை

மறக்கமுடியுமா..

சோவென்று மழைகொட்ட

புத்தகப்பையை

தூக்கி

எறிந்து..

சேற்றில் காலடித்து..

குளித்து

மகிழ்ந்ததுவும்..

காய்ச்சல் வந்து..

வீட்டில்..எல்லாரும்..

விழுந்து விழுந்து

கவனித்ததுவும்..

மறக்கமுடியுமா..

சுற்றுலா நேரத்தில்..

வாத்தியாரை ஏய்த்துவிட்டு..

பிரிந்து சென்று..

மகிழ்ந்ததுவும்..

பேச்சு விழுமென்று..

விட்டுவிட்டு போனதாக.

அழுது நடித்ததுவும்

மறக்கமுடியுமா..

மேசைக்கரையில்.

அழுக்கைப்பூசி..

பெண்கள் வெள்ளாடையை..

கறைகள் செய்தததுவும்..

பெண்கள் பின்னல் இழுத்து..

சேட்டைகள் செய்ததுவும்..

மறக்கமுடியுமா..

அணிவகுப்பு வேளையில்..

கால்வலி

எனச்சொல்லி

வகுப்பறையில் அமர்ந்து..

வண்ணப்படம் ரசித்ததும்..

விளையாட்டுப்போட்டியில்..

வென்ற நாடகளையும்..

மறக்கமுடியுமா..

பிரியும் நாளில்

நெஞ்சு கனத்து..

நண்பரெல்லாம்

அழுததையும்..

கணக்காசிரியர் காலைத் தொட்டு

ஆசி பெற்றதையும்..

என்னாயுள் நாளில் என்றேனும்..

மறக்கமுடியுமா..

எப்படி முடியும்.

எப்படி முடியும் இந்த

சிங்களம் தனைத் துரத்த

என்றுநாம் ஏங்கி நிற்க

எழுந்துமே வந்த வீரர்

நாயெனச் சொல்லி எம்மை

ஏளனஞ் செய்த கூட்டம்

புலியெனச் சொல்லி யஞ்சும்

புரட்சியைச் செய்த வீரர்

தமிழினை காக்க வென்று

தம்நலம் துறந்து வந்தே

மண்ணினைக் காத்து நிற்கும்

மறவரே வாழி வாழி

எப்படி முடியும்...???

என்னவளே

உன்னை

சுமக்கும்

என்

இதயத்தால்

உன்னை

மறக்க

என்னால்

எப்படி முடியும்...???

தவறாய்

வந்து

ஏதோ

தவறாய்

உரைக்கிறாய்...

தவறி

வந்து இனி

ஏதும்

தவறாய்

உரைக்காதே

உன்னை

என்னால்

மறக்க முடியாது...

என்

அன்பே

மன்னித்து விடு...

வன்னி மைந்தன்

அட..மன்னிக்கவும்..அதற்குள் ஜயா முந்தி விட்டார்..சரியான போட்டி..வாசன் இணைந்திருங்கள்...

வாழி..வாழி..என்ற தலைப்பில..தொடருங்கள்..இனி வருபவர்கள்

வாழி..வாழி

தாய்த்தமிழ்

நீடூழி வாழி..

தரணியில்

புகழொடு

தளைத்திட

வாழி..

கனத்தவானம்..

கையொடு

வசப்பட வாழி..

காற்றிலும்..

கடலிலும்.

மழையிலும்..

மண்ணிலும்..

நாற்றிடும்

நெல்லிலும்

மழலையின்

சொல்லிலும்..

வாழி..எந்நாளும்..

எம்தமிழ்..

குறைவின்றி வாழி

ஆங்கிலமும்..டொச்சும்..

பிறஞ்சும்..பிறமொழியும்..

எல்லாமும்

கலந்தாலும்.

தாய்த்தமிழ் அழியாமல்..

எந்நாளும் வாழ்க

வளர்க..

வளர்க

கவியே

வளர்க...

புரட்சி

கவியாய்

பாரினிலே

விகடகவியே

வளர்க...

உன்

திறமைகளை

இன்னும்

நீயே

திறம்படவே

வளர்க்க...

திரண்டு

வந்து

கவிகளையே

திரட்டி

வந்து படைக்க...

எத்தனையோ

திறமைகளை

உன்னகத்தே

வைத்திருக்காய்...

அட

உந்தன்

கவி

கண்டு

நானும்

வியந்து

எல்லோ

நின்று

போனேன்...

வன்னி மைந்தன்

போனேன்..எனப்

பொய்யுரைத்தேன்..

பூங்கொடியே..

கோவிலுக்கு நான்..

போய்..

நான்கு வருடமடி

என் நாயகியே..

கோவிலுக்கு போகச்சொல்லி

பணிக்காதே..

அம்மணி..

வியாபார சந்தையாட்டம்

கண்ணுக்கு தெரியுதடி..

வருகின்ற கூட்டங்கள்..

நாடகமும்..நாட்டியமும்..

காணச்சகிக்ககேனே..

கண்மனியே..

கோவிலிக்குப்போகச்சொல்லி

என்னைக் கெஞ்சாதே..

வசதியில்லை என்று..

வருகின்ற காணிக்கை

சுருட்டும் கயவரும்..

சுருட்டவிடாததால்..

சிவலிங்கத்தை..

தும்புக்கட்டையால்..

தாக்கும் பூசகரும்..

காணச்சகிக்காத

கண்றாவி கண்மணி

வேண்டாமடி..

வீட்டிலிருந்தே..

வணங்கிடுவேன்..

கோவில்

போகக்கேட்காதே..

கண்மனியே..

கண்மணியே!

காணச் சலிக்காத

காட்சிபல காண்பதற்காய்

கண்ணுள்ளே சிறையிருக்கும்

கணிமணியே நன்றியம்மா

கண்மனி

என்றுன்னை

காலமெல்லாம்

நான்

உரைத்தேன்...

நெஞ்சமதில்

தூக்கி

வைத்து

நெசமாக

கொஞ்சி

நின்றேன்...

அடி

பாவி புள்ள

ஈற்றினிலே

வேறு மனம்

தவி விட்டாயே

இது

எனக்கே

நியாயமா...???

கண்மனி

என்றுன்னை

காலமெல்லாம்

நான்

உரைத்தேன்...

நெஞ்சமதில்

தூக்கி

வைத்து

நெசமாக

கொஞ்சி

நின்றேன்...

அடி

பாவி புள்ள

ஈற்றினிலே

வேறு மனம்

தவி விட்டாயே

இது

உனக்கே

நியாயமா...???

அட..ஒரே நேரத்தில் இருவரும்..வாசன்..வியப்பா இருக்குதய்யா..

நன்றியம்மா

அம்மா

உந்தனுக்கு

நன்றியம்மா

எனை

பெற்றெடுத்து

உத்தமியே

உந்தனுக்கு

நன்றியம்மா...

உன்

உதிரத்தை

பாலாக்கி

எனக்கு

ஊட்டியவளே..

உன்

கடன

அடைக்க

எனக்கு

ஜென்மாதி

ஜென்மம்

எடுத்தாலும்

போததம்மா..

நியாயமா..

தோழர்களே..

விடுமுறை

நாளிலென்னை..

விடாமல் பிடித்து

வைத்து..என்ன

இது கவிக்கூத்து..

நடக்கட்டும்.

சலிக்காத..என்

தமிழ்..

சலித்திடுமோ

என்று பயம்..

இப்போது

வந்தென்னைக்

குடையுதே..

குடையுதே

என்று

நீ

குழம்பாதே....

வீணாக

கிலி நீ

கொள்ளாதே...

தேனிலும்

இனியது

எம் தமிழ்...

தெவிட்டாது

உனக்கது

மறவாதே.....

விடுமறை

என்று

கெஞ்சிறாய்...

சரி

விடுமறை

தருகிறேன்

போய் வா....

வன்னி மைந்தன்

குடையுதே தினம்தினம் மனதினைக் குடையுதே

பாதகச் செயலினைச் செய்திடக் கூசிடா

படையதன் அராஜகச் செயலெனைக் குடையுதே

தமிழிராய்ப் பிறந்ததால் தினம்தினம் இறந்திடும்

தமிழரை எண்ணினால் மனமது குடையுதே

பதறிடும் தமிழரைப் பகடையாய் பார்த்திடும்

பாதக முதல்வரின் செயலெனைக் குடையுதே

சரியான போட்டி!

கொஞ்சம் பிந்திவிட்டேன்.

வன்னிமைந்தனின் போய்வா என்ற தலைப்பிலேயே தொடரலாம்.

போய்வா என்று சொல்லிப்

போர்க்களம் அனுப்பி வைத்த

பிள்ளையை இழந்து நிற்கும்

பெற்றவர் மனதில் உள்ள

துயரினைக் களைவ தற்காய்

தூரவே வாழும் நாமும்

எதுவுமே செய்ய வில்லை

என்றதை நினைத்ததுண்டா?

நினைத்ததுண்டோ..

நெஞ்சே..நீ

முன் செய்த தவறுகளை..

துடித்ததுண்டோ.. அது

பிழைகளெனவுணர்ந்து..

கண்ணில் நீர்..

வடித்ததுண்டோ..சொல்..

கடைசிப்பொழுதினிலேனும்..

குற்றமெனக்கறியினினும்..

சுற்றமறியாமல்..நெஞ்சக்கூட்டி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு....எனும் சொல்லால்

மனிதத்தை தூக்கிலிட்டு

மனங்களை உடைத்து விட்டு

வலி செய்து, வலி செய்து

வாழ்வெடுத்து நடக்கிறது அநீதி

அநீதி தீ வளர்க்கும்

அரசியல் யாகத்தில்

இலஞ்சமும் வஞ்சமும்

எரிபாகங்களாய்

இட்டு வளர்ந்த தீ

எல்லா ஜனங்களையும்

சுட்டெரிக்கும்

அவலம்

அவலம்..

எது அவலம்.?

பிறந்த நாட்டில்..

தமிழன்

நாடுகடத்தப்பட்டதா..

பிள்ளைகள்

சிதைக்கு

பெற்றோர்

தீ மூட்டுவதா..

ஒரு கூட்டுக் குருவிகள்..

திசைக்கொன்றாய்ப்

பறந்த பின்..

கூட்டைச் சுமந்த

மரம்.. அது கூட

எரிகிறதே..அதுவா..

தலை நிமிர்ந்து நடந்த

கல்விமான்

தலைமுறைகள்..

கல்வி கலைந்திட்டதே..

அதுவா..

கவரிமான் இனம் போல

கற்புடைக் காத்துநின்ற..

மங்கையரை..

தொட்டதா..

அழித்ததா..

ஆயிரம் நடந்தபின்னும்..

யாருமதைக் கேட்காமல்..

அனுதாப வார்த்தை மட்டும்

அப்பப்போ சொல்வதுவா..

எது அவலம்..

அறியேனே.. ஐயா..

ஜயா

மகிந்தா

ஆட்சியிலே

அவலம் தானுங்க..

ஜயோ

தாமிழர்

நிலையதுவோ

ஜயோ

பாவங்க...

உலகம்

எல்லாம்

ஏனோ அதை

காணவில்லைங்க...???

நித்தம்

நித்தம்

தமிழர் விழியில்

கண்ணீர் ஆறுங்க...

அதை

நிறுத்தவில்லை

இன்னும் ஏனோ

இந்த உலகுங்க....???

வன்னி மைந்தன்

வன்னிமைந்தன் வரக்

கண்டு வனக்

குயில்கள் பாடும்..

வற்றாத தேனாறு

தெம்மாங்காய் ஓடும்..

பாக்கேட்டு..

இராக்கூட

தூங்கும்..

தாய்த்

தாலாட்டாய்...

தமிழ்ப்பிள்ளை

பாட்டு..

பாட்டு ஒண்ணு

எழுதிடவே

பகலிரவாய்

நான்

முனைஞ்சேன்...

ஆனாலும்

என்ன பயன்

ஜயோ

எனக்கு

வரவில்லை...

வேதனையால்

வெந்து

போனேன்

வெட்கி தலை

குனிந்து

கொண்டேன்...

எத்தனை நாள்

முயன்று

பார்த்தேன்

தோல்வியதில்

தளுவி கொண்டேன்...

என்

எண்ணங்களை

கொண்டு போயு

எங்கோ

நானும்

அடைகு வைத்தேன்...???

எந்தனுக்கு

தெரியவில்லை

தெரிந்தால்

வந்து - நீ

பதில் கூறு....

வன்னி மைந்தன்

பதில் கூறு..

பதில் கூறு

பாட்டாலே

பதில்கூறு...

ஐயா..

என்றழைத்து

கால் பிடித்து..

கைபிடித்து..

சேவகம் செய்து..

அரியாசனமேறும்..

ஏகவித்தை..

அரசியல் போல்..

வேறுலகில் உண்டோ..

பதில் கூறு..

பதில் கூறு

பாட்டாலே

பதில்கூறு...

முகம் பார்த்து ஒன்று

அகம் பேசும் ஒன்று...

சொல்லாலும் கொல்லும்

குணம் தேவர்களுக்குண்டோ..

பதில் கூறு..

பதில் கூறு

பாட்டாலே

பதில்கூறு...

பசியோடு பலபேர்

பல்லாக்கில் சிலபேர்

இளகாத இரும்பாய்

இருக்கின்ற நெஞ்சம்..

இந்திரருக்குமுண்டோ..

பதில் கூறு..

பதில் கூறு

பாட்டாலே

பதில்கூறு...

இல்லாமை வரும்போது

இகழ்கின்ற உறவும்..

இயலாமை வரும்போது

மறைகின்ற மனதும்..

எங்கெல்லாம் உண்டு

நானறியலாமோ..

நானறியலாமோ

நாள்தோறும் நீவடிக்கும்

கவிப் புலமைக்கு

காரணம் யாதென?

நானறியலாமோ

நண்பனே உன்கவிவரியில்

உலாவரும் தேவதை

உன் உள்ளம் கவர்ந்தவளா

இல்லை கற்பனை நாயகியா?

நானறியலாமா...???

அன்பே...

அன்றுன்னை

நான் கண்டு

என்னையதை

நான்

மறந்து

உன்னையன்று

தான் பார்த்தேன்...

நெஞ்சுக்குள்ளே

உனை சுமந்து

நெடு நாளாய்

தேடி வந்தேன்...

எங்கினுமே

உந்தனையே

இன்றுவரை

காணவில்லை...

எனையறிந்த

என்னவளே

உந்தனது

முகவரியை

இன்று

நானறியலாமா....???

நானறியலாமோ

என நங்கையவள்

கேட்டதற்கு..

நல்ல பதில்

நான் தருவேன்..

என் மனையாள்..

அருகில்லையேல்..

அருகில்லையேல்

அன்பே

நீ

அருகில்லையேல்...

இன்பம் கூட

எனக்கு

ஏனோ

துன்பாமாகுது...???

தூக்கம் கூட

எனக்கு

ஏனோ

தூக்காய்

தெரியுது...???

புன்னகைகள்

தொலைத்து

அகம்

வெளிச்சு கிடக்குது...

ஊரடங்கு

போட்டு

உதடு

மௌனம் காக்குது...

உண்ணா விரத

போராட்டம்

வேறு

நடத்துது...

என்னருகில்

நீ

இல்லை

என்றால்

ஏன்

இவைகள்

நடக்குது....???

நடக்குது நடக்குது

எல்லாமே நடக்குது

பிறப்பும் நடக்குது

இறப்பும் நடக்குது

சமாதான முயற்சியும் கூடவே

யுத்தமும் நடக்குது

நிம்மதி ஒன்றில்லையேல்

இவையாவும் நடந்து

இங்கேது பயன்?

பயன் காண

வந்த

பேச்சு

பயனற்று

ஏன் போச்சு....???

பாவிகளை

வந்து பகை

பகலிரவாய்

ஏன்

கொன்று போச்சு...??

குருதியிலே

தேசமதை

பகை

குளிப்பாட்டி

ஏனோ

போச்சு...???

குடிமனையில்

எறிகணையை

ஏவியின்று

அழித்திருச்சு....

கூடயிருந்த

உயிர்களையும்

கூட உண்டு

அது போச்சு...

அவலத்திலே

இலங்கையதை

ஏன்

உருவாக்கி

இன்று போச்சு...???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.