Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

இங்கே என் பாதையில்

இருள்களின் இடையே

மின்மினிப்பூச்சிகள்!

எங்கோ தொலைந்த

ஆதவன் வரும்வரை

மின்மினி வெளிச்சத்தில்

ஓட்டமும் நடையுமாய்!

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

ஓட்டமும் நடையுமாய்

பாட்டெடுத்த சோழியனே!

ஆதவன் தொலைந்ததென்று

ஆருக்கு இங்கு புலம்புகிறீர்?

இருளிடையே மின்மினிகள்

இதமான எழில் சேர்க்கும்.

இதை இரசிக்கா இதயமெனில்

உம்பாடு சோழிதான்!

வரைகவே

புலவரே

வரைகவே

வந்து வந்து

நல்ல கவி

புணைகவே...

அடுக்கு மொழியில்

வார்த்தைகட்டி

ஆடவே

ஜயனே ஓடி

இங்கு வருகவே...

அர்த்தம் தெரிந்த

கவிஞர்

இங்கு வருகவே

நீர்

''ஆதி'' அந்தம்

கோர்த்துயிங்கு

படிக்கவே...

நீ

மூத்த கவி

என்றால்

இங்கு வருகவே...

நல்ல

முத்தமிழை

கோர்த்து

கவி படைக்கவே...

நஞ்சு மொழி

வார்த்தைகளை

எறிகவே

மாற்றான் நெஞ்சமதில்

குத்துவதை

நிறுத்தவே....

உன்னால்

முடிந்தால்

வந்து கவி

படைக்கவே...

நீ முள்ளு வரி

எறிவதை

இன்று நிறுத்தவே...!!

வன்னி மைந்தன் -

நிறுத்தவே தேவையில்லை

நீட்டி முழங்கி

கவி அந்தாதி

களை கட்ட

வன்னிப் புதல்வா!

வானரத்தை அழைப்பதேன்?

சுருங்கச் சொல்கவியில்

அருங்கருத்தும் கரமிணைத்தால்

விரும்பும் ரசிகமனம்..... என்பது புரியாதா?

புரியாதா?

என்றதுந்தன் உள்ளத்தை எரிக்க அல்ல.

செறிவான உன் கவிகள்

செழுமையுற்று இன்னுமின்னும்

உயர்கவிகள் படைத்தல் பொருட்டே!

அறியாது உன் உளம் குழம்பின்

ஆற்றுப்படுத்து!....

இது ஆதியின் குறும்பென்று!

புரியாத

கவியொன்று

புரியாமால்

ஏதோ

ஒன்று

புரியாமால்

பேசுதிங்கே...ஏன்....????

ஏன்..என்ற

கேள்வி

கேட்கின்ற பிள்ளையை..

தட்டிக்கொடு..

நான் என்று

சொல்லும்..பிள்ளைக்கு

அடக்கம்

சொல்லிக்கொடு..

எனதென்று வாழும்..

பிள்ளைக்கு..

கீதை கற்றுக்கொடு..

கற்றுக்கொடு

தமிழா

கற்றுக்கொடு

உன்

கலாச்சார

பண்பாட்டை

கற்றுக்கொடு....

உன் பிள்ளை

வெளிநாட்டில்

இழந்தாச்சு

எம் தமிழர்

பண்பாடு

மறந்தாச்சு....

அவையாவும்

ஏனவை

மறந்தாச்சு....???

வெள்ளையர்

வாழ் நிலம்

புகுந்தாச்சு

அதனாலோ

உன் பிள்ளை

மறந்தாச்சு.....???

தாய்

மொழியாம்

தமிழ் மொழியும்

மறந்தாச்சு...

அவர்

தாய் நாடு

அது கூட

மறந்தாச்சு...

விடுதலை

அது கூட

மறந்தாச்சு...

அட

உன்

பிள்ளை

விடுகாலியாய

ஏனிங்கு

இன்றாச்சு....???

ஈது தான்

உன்

குடும்ப

வளர்ப்பாச்சோ....???

வளர்ப்பாச்சோ..

என்று

வாய்பிளக்கும்..

உறவுக்காரா..

என் வளர்ப்பு

தொலைக்காட்சி தொடரோடு

நின்றுபோச்சு..

உன் வளர்ப்பு..

உன் பிள்ளை..யாரோடயோ

ஓடிப்போச்சு..

இப்ப..பேசுவீரோ..

ஆச்சோ..போச்சோன்னு..

முடியாதோ..

முடியாதோ என் கனவு

மாண்டவர் மீண்டு வராரோ

ஈழத்தில் மகிழ்ச்சி திரும்பாதோ

அந்நியன் விலங்கு அறுபடாதோ

இதுவெல்லாம் ஒரு கனவோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவோ இல்லை இது நிஜம்

ஈழத்தில் மகிழ்ச்சி திரும்பாதோ

என்ற ஆதங்கத்துடன்

ஈழவன் அந்தாதியில் கவி படைத்து

நின்றதில் மகிழ்ச்சியின் உச்சம் எனக்கு

எனக்கு வந்து தொலைகின்ற..

கனவே..கனமில்லாக் கற்பனையே..

சுகத்தோடு துயிலும்.. சுகமாய்..

சொப்பனத்தின் அற்புதமாய்..

மாண்டவரை மீண்டுங்காட்டி..

மங்கையர்தம்..மேனி காட்டி..

வயதைக்கூட குறைத்துக்காட்டி..

வர்ணங்கள் பல காட்டி..

இறக்கையின்றி பறந்து காட்டி..

ஆழ்கடலில் நீந்திக்காட்டி..

அசாத்தியங்கள் நிகழ்த்திக் காட்டி..

வலியின்றிக் குருதிகாட்டி..

வலிமையொடு வீரம் காட்டி..

அரசனாயாக்கிக் காட்டி..

அரியணையேற்றிக்காட்டி..

மணமாலை மாற்றிக் காட்டி..

முதலிரவு.....வரையில் காட்டி..

அந்தப்புரத்திருந்து அக்கணமே..

எனை விரட்டி..அதற்குமேல்..

கனவு..கலைகிறதே..தினமும்..

தினமும் கண்விழிக்கையில்

இரத்தம் பாய்கிறது எம் மண்ணில்

சதைதுண்டங்களை கவ்வ

கழுகுகள் எம்மண்ணில் வட்டமிடுகின்றன

தினமும் கண்விழிக்கையில்

இரத்தம் பாய்கிறது எம் மண்ணில்

சதைதுண்டங்களை கவ்வ

கழுகுகள் எம்மண்ணில் வட்டமிடுகின்றன

வட்டமிடுகின்றன கண்கள்

அவற்றுள் இருவிழிகள்

மகிழ்ச்சியின் உச்சத்திலாமே!

ஆகா.. ஈழவன்

இரசிகையாக கறுப்பி!! :P :rolleyes:

வட்டமிடுகின்றன வல்லூறுகள்

மனிதம் புதைத்து நரபலி எடுக்க

திட்டம் தீட்டியே கொட்டம் போட்டே

தமிழினம் அழிக்க ஓரணி அவர்கள்

ஆனால்...

எமக்குள் சில கோடரிகள்

நக்கிப் பிழைக்கும் நாசச் செயலில்

நானா நீயா போட்டியில்!!

அம்மாவை உரிந்து அடுத்தவனுக்கு காட்டும்

அந்தகாரப் பிசாசுகள் அடுத்தவன் கழிவறையுள்!

இவர்கள் எல்லாம் நேரில் வந்தால்

தூசெனத் தூக்கித் துவம்சம் செய்ய

போதும் ஒரு தமிழ் மறக் கறுப்பி!

கறுப்பி அவள் சில லகரம்

சீதனம் வேணுமெண்டது

ஒரு ஆண் விபச்சாரி

அதற்கு தலையாட்டியது

அக்கறுப்பனின் கறுத்த பெற்றோர்

படித்த பெண்தேவை சீதனத்தூடன்

அ ஆ எழுததெரியாத மேதைக்கு

வெளிநாட்டில் குப்பைகூட்டும் அறிஞருக்கு

சீதனம் வேணுமாம்

சீதனம் என்பது பிச்சை

அந்த பிச்சைகாரனைவிட

தன்னுடல் விற்று வயிற்றை கழுவும்

விபச்சாரி மேல்

எப்ப திருந்தும் எம்சனம்

எம் விடுதலை என்பது

நில மீட்பு மட்டுமல்ல

எம்மை பழமையிலிருந்தும்

மீட்பதே விடுதலை

விடுதலை காணவே

எம்மவர் ஓடி

தொடுக்கிறார்

இன்றங்கு

யுத்தமே தேடி....

எங்களின்

மண்ணில்

அன்னிய படைகள்

ஆழ்வதோ

இன்று

சொல்லடா..தமிழா....???

எத்தனை

நாடகள்

அடிமையாய்

வாழ்வாய்....???

எத்னை காலம்

அகதியாய்

அலைவாய்....???

உன்

மண்ணில்

உனக்கு

இத்தனை கேடா....???

இதை

விதை;தவன்

அன்னியன்

இருப்பது

முறையோ....???

அவனை ஆழ

விடுவது

சரியோ....???

துன்பங்கள்

துயரங்கள்

நாம் இனி

சுமப்பதோ....???

எங்கள்

சுதந்திரம்

காணா

இனி இருப்பது

பிழையே....

இனி

அன்னிய

பேய்களை

அழிப்பதே சரி.....

சரி யார் சொல்லுவது சரி

சிங்களம் சொல்லுவதா

சர்வதேசம் சொல்லுவதா அல்லது

எம்மினம் சொல்லுவதா

பிழை பிழை என்னும்

சர்வதேசம் சிங்களத்தின் பிழைகளை

சரியாக்க முயலுவதேனோ-ஏன்

நாம் அடக்கபட்ட இனமா

எம்முயிர் உயிரல்லவா

எம் இனபடுகொலை தீவிரவாதமில்லையா

தீவிரவாத்துக்கு இலக்கணம்தானுண்டா

சொல்லு உலகமே

உங்கள் நாட்டு குழந்தைக்கு-போர்

என்பதை தெரியுமா

ஏன் எம்மை அடக்குகிறீர்-அனால்

அடக்கப்பட்டது குமிறினால் எரிமலை

சிறுவயதிலேயே போர்வாழ்க்கை

பாண்வெட்டும் கத்திப்பிடி கூட

சன்னக்கோதுகள்-ஏன் பாடசாலை

தளபாடங்கள் ஆட்லெறி கோதுகள்

போரின் வலி விடுதலை வேட்கையை

கொழுந்துவிட்டெரிக்கிறது இதுக்கு

பதில் விபரீதமானது-அதை

எதிர்கொள்ளப்போகிறது சிங்களம்

சிங்களம் கோரத் தாண்டவமாடுதே..என்..

தமிழ் ஊரிலே ஒன்றொன்றாய் சாகுதே..

இளைத்தலன் சளைத்தவன் ஈரலை அறுக்கிறான்..

வீரனின் நிழல் கண்டு சிறுநீரைக் கழிக்கிறான்

அப்பாவிக் குடிகளில் குண்டினைக் கொட்டுறான்..

பிஞ்சென்றும்..பூவென்றும்..பிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழக்கு முழக்கு தமிழனாய் வாழ முழங்கு

தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதை மறுத்தே

முழங்கு முழங்கு தமிழனாய் முழங்கு

பிறமொழி கலந்து கதைப்பதை எதிர்த்தே முழங்கு

தமிழ் வாழ உழைப்போருக்கு துணையாய் முழங்கு

தமிழை யார் எதிர்த்தாலும் எழுச்சியுடனே முழங்கு

தமிழா தமிழா தமிழ் வாழ பணி ஆற்று

ஆற்று நீரின் வேகத்திலே

அடிபட் டோடிய சருகுகளாய்

சிதைந்து போன எம்வாழ்வு

சீர்படும் நாளும் வாராதோ

வாராதோ அந்நாள் வாராதோ

வாசலில் கோலமிட்டு-அன்று

வாழ்ந்து நாம் வளர்ந்த பூமியிலே

வாழும் அந்தநாள் மீண்டும்-நம்

வாழ்க்கைப் பாதையில் வரும்

வாசலில் சுகந்திரப்பூக்கள் மலரும்

மலரும் என்றே காத்திருந்தோம்

மலரும் மலரைக் காணவில்லை

புலரும் என்றே காத்திருந்தோம்

புலரும் பொழுதைக் காணவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணவில்லை உன்னைக் காணவில்லை

கண்டபோது கவனிக்கத் தவறிவிட்டேனே

காணாமல் போனபோது எங்கே என்று

கண் தேடுதே மனமும் தேடுதே

கணப்பொழுதும் உன் வரவை நினைத்தே

நினைத்தே நின்றவேளை..

கண்கள் பனித்து..

இதயவறையில்..மூச்சடைத்து..

மூச்சடைத்து..

பேச்சிழந்து நின்ற பேதை

நீயா..கண்ணம்மா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.