Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

மகிழ்வுறவேயென்று மண்ணில்ப் பிறந்தோமா..

மாண்புடனே துள்ளி மானாய் வளர்ந்தோமா...

மலர்கள் இடையே மலராய் மலர்ந்தேயிருந்தோமா...

மற்றவரிடரை கண்டு விழிகள் நனைந்தோமா...

அன்பும் அறனும்..மானுட சொத்து

பண்பும் பணிவும் கண்ணாய்க் காத்து

என்றும் இனிமை வதனம் பூத்து

இன்பம் என்னும் சோலை செய்வோமா

ஆயுதமென்பது...அரக்கரையழித்தி

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனாய் வாழ்வோமா ?மனதிலே இரக்கம் கொண்டு

பசியிலே அங்கு யாத்திரைகள் ,பசிக்காக இங்கு மாத்திரைகள்

கொடுத்து சிவந்த் கைகள் எத்தனை ?மறுத்த மனங்கள் எத்தனை

ஆரவாரமாய் பூசைகள் ஆண்டவனுக்கு, ஆடை இன்றிய அவலம் அங்கு

பஞ்சு மெத்தையிலே படுக்கை இங்கு ,தலை சாய்க்க இடமில்லை அங்கு

மெளனிக்கும் சர்வ தேசம் ,அதன் மெளனம் கலைவதேப்போ?

காலம் கனியும் ,அப்போது பார்கப்படும் தமிழ் ஈழம்

நம்பிக்கை ....நீயும் நம்பி கை வை ,ஈழத்தில்

நம்பிக்கை வை ஈழத்தில் .....,நிச்சயம் கிடைக்கும் ..........

நம்பிக்கை வை ஈழத்தில்... அது நிச்சயம் கிடைக்கும் - எம்

வேங்கைகளின் தியாகங்களுக்கு பதில் கிடைக்கும் - சுதந்திர

வேட்கையில் வாழுகின்ற தமிழினம் விடிவு பெறும்.

புலத்தை விட்டு வெளியில் வாழும் தமிழா - அங்கே

உன் கைகளுக்கு தேவை வரும்... சேவைக்கான நேரம் வரும் - எனவே

தாயகத்தை மறக்காதிருப்பாய்... உன் தாய் அகத்தை புரிந்து கொள்வாய்

  • கருத்துக்கள உறவுகள்

உன் தாயகத்தை புரிந்து கொள்வாய் உன் தாய் அகத்தை புரிந்து கொள்

உன் வார்த்தைகளை செவிமடுக்கவில்லை ,புரிந்து கொண்டேன் நான்

ஒரு தாய் ஆன போது , என் மகளுக்கு சொல்கிறேன் , புரிவதாயில்லை

அவளும் புரிவாள் ,அவள் தாய் ஆகும் போது .தாய்மையும் கடவுளும் ஒன்று

இருவரும் படைக்கிறார்கள் .கடவுளின் படைப்பு மனிதன் ,தாயின் படைப்பு குழந்தை.

:lol:மகிழ்ச்சியின் நல்வரவு :)

தாயின் படைப்பு குழந்தை - அந்த

சேயின் படைப்பு குடும்பத்தில் குதூகலம்.

பிள்ளையின் புன்னகை சோகத்துக்கு பிரியாவிடை.

மழலையின் பேச்சு மகிழ்ச்சிக்கு நல்வரவு - அதன்

சிறு சிறு தொல்லைகள் சமாளிக்க கஷ்டம் தான் - அந்த

குறு, குறுப்பு இல்லாவிடினும் மனத்துக்கு கஷ்டம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கு கஷ்டம் ,மழலை யின் சிறு குறும்பு

கன்னக் குழிய நீ கை கொட்டி சிரிக்கையிலே

எண்ணமெல்லாம் ,,என் உயிரே ,உருகுதடி

ஓடித்திரிதல் கண்டால் உள்ளம் கொள்ளை போகுதடி

சின்ன சின்ன காலடிகள் , தத்தி நடை பயில

விழுவதும் எழுவதும் வாழ்க்கையென அப்போதே

தெரிந்தனவா . அர்த்தங்கள் புரிந்தனவா ?

புரிந்தனவா என்ற வினா எதற்கு

அகராதியாய் நீயிருக்கையிலே

தெரிந்தனவா என்ற நினை வெதற்கு

அக ராகமாய் நீ இசை கையிலே!! :lol:

கையிலே தவழ்ந்த காதல் குழந்தை

இறங்கி நடந்தபொழுது

இன்னொருவரோடு கைகோர்த்து

சேர்ந்து நடக்கும் என

முன்னே தெரிந்திருந்தால்

என் காதல் குழந்தையை

கையிலேயே தவழவிட்டிருப்பேன்

நடை பயில விடாமால்...

அன்னைக்கு ஒரு கை... என் அன்புக்கு மறு கை

நடை பயில விடாமால் என்னை

தடை போட்டு விட்டிடலாம் - ஆனால்

மனத்தடை தான் போடமுடியுமா - போட்டிருந்தால்

மனத்திடை பாதிப்பு வந்திருக்கும் அம்மா

உன் கையில் மட்டும் என்னை தவழவிட்டிருந்தால்

நான் உலகமே அறியாத பயலாய் இருந்திருப்பேன்

நாளும் நான் வளர்ச்சி பெற உலகத்தை நான் புரிய வேண்டும்

நாலு பேருடன் பழக வேண்டும் நல்லது தீயது தெரிய வேண்டும்

காதல் உணர்வு இல்லை என்றால் - உனக்கு

மகனாய் நான் பிறந்திருபேனோ?

இறைவன் படைத்த உலகமிது

அவன் வகுத்த நியதி மாறிடுமா?

காதலியின் கை கோர்த்து நான் நடந்தால் - உனை

நான் கை விட்டேன் என ஏன் நினைத்தாய் அம்மா

இன்னுமோர் கை எனக்குண்டு நீ மறவாய் - அது

உன்னையே தாங்கிடும் நான் வாழும் வரை

நான் வாழும் வரை எனக்காக என

நீ உரைத்த வார்த்தையை கேட்டதும்

என் உதடு சிரிப்பதைக் கண்டு

உன் நெஞ்சில் என்னை அரவணைத்தாயே

அதை எப்படி என்னால் மறக்க முடியும்

உயிருள்ளவரை உன்னுடனேயே

உடனிருக்க நினைக்கின்றேன்

என் கைகளை இறுகப்பற்று..........

'என் கைகளை இறுகப்பற்று' என்றாய் தாயே,

உனை எந்நாளும் கை விடேன் நம்புவாய் நீயே.

முட்களும், கற்களும் நிறைந்த பாதையிலே தான்

தொடர்ந்திடும் எந்தன் வாழ்க்கைப் பயணம் - ஆனாலும்

தவழ்ந்திடும் வயதினில் எனை தோள் தூக்கிய தாயே,

என் தோள் மீது எப்போதும் தாங்குவேன் உனையே.

உனக்கு துணையாக என் துணையும் இருந்திடுவாள்.

உமது அன்பினில் முட்களும் கற்களும் பூக்களாகும்.

பூக்களாகும் என்றுதான்

பொத்தி பொத்தி வளர்த்தேன்

பிஞ்சு மொட்டுகள் ...

மூச்சுவிடமுடியாமல்..

காட்டிலும் மேட்டிலும்..

காலாவதியான உணவுப்

பொட்டலங்களையாவது..யாராவது

தாங்கி வருவார்களா

என்று எதிர்பார்த்திருந்த போது..

வந்தது...விழுந்தது

பொட்டலமல்ல..

இனவெறியல் அனுப்பிய

எமகுண்டு..கருகிய மொட்டுக்கள் காலடியில்..

கண்ணில்லாத கடவுளுக்கு

பூவெதற்கு.. மாலையெதற்கு..

கடவுளுக்கு பூவெதற்கு.. மாலையெதற்கு..

உன் வெள்ளை உள்ளத்தை மலராக்கி

அதை ஆண்டவனுக்கு அர்ச்சித்தால் மனிதா.

பூஜை, புனஸ்காரங்கள் தான் எதற்கு...

உன் மனதை கோயிலாக்கி - அன்பை

இறைவனாக்கி வழிபட்டால் பக்தா.

பால், தயிர், பழங்களால் அபிஷேகங்கள் ஏனோ...

ஏதிலிகளின் வயிற்றில் நீ பால் வார்த்தால்.

விரதங்களும், நேர்த்திகளும் இங்கு வீணே,

ஒழுக்கமும், வாய்மையும் உன் வாழ்வில் இல்லையெனில்

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கமும் வாய்மையும் உன் வாழ்வில் இல்லையெனில்

உன் வாழ்வு வெறும் மத்தளம் போன்றது , ஓசை அற்றது

இசையோடு கூடிய தாளம் நாதம் தருவது போல்

இல் வாழ்வு உண்மையும் ஒழுக்கமும் இணைந்த தாக வேண்டும்

சம்சாரமேன்பது வீணை அது மீட்ட பட வேண்டும்

இருகை ஓசை எழுப்ப வேண்டும் , நம்பிக்கை அதில்

வேர் ஊன்ற வேண்டும் ,ஆல் போல் தழைத்து

அறுகின்(அருகம்புல் ) உறுதியுடன் வேர் விட வேண்டும்

வேண்டும் இங்கே ஒரு புது பூமி...

வேண்டும்..அதிலேனும் மனநிம்மதி..

பொல்லாத மாந்தரும்..பொய்யான முகங்களும்

இல்லாமல் இனிக்கின்ற ஒரு அழகில்

வேண்டும் இங்கே ஒரு புது பூமி...

வேண்டும்..அதிலேனும் மனநிம்மதி..

வேண்டும் இங்கே ஒரு புது பூமி...

வேண்டும்..அதிலேனும் மனநிம்மதி..

இல்லாமை இல்லாமல்..எந்நாளும்

பசி தீர சிரிக்கின்ற ஏழைக்காய்

வேண்டும் இங்கே ஒரு புது பூமி...

வேண்டும்..அதிலேனும் மனநிம்மதி..

வேண்டும் இங்கே ஒரு புது பூமி...

வேண்டும்..அதிலேனும் மனநிம்மதி..

இதயத்தை நேசிக்கும் மனக் காயம் செய்யாத

இள உள்ளம் வளம் வாழ

வேண்டும் இங்கே ஒரு புது பூமி...

வேண்டும்..அதிலேனும் மனநிம்மதி..

வேண்டும் இங்கே ஒரு புது பூமி...

வேண்டும்..அதிலேனும் மனநிம்மதி..

நோய் என்ற குறை ஒன்று

தான் வந்து சேராமல்..

வேண்டும் இங்கே ஒரு புது பூமி...

வேண்டும்..அதிலேனும் மனநிம்மதி..

  • கருத்துக்கள உறவுகள்

மன நிம்மதி மது தருவதாய்த் தோன்றும் ஆனால் தராது!

மன நிம்மதி விலைமாது தருவதாய்த் தோன்றும் ஆனால் தராது!

மன நிம்மதி போதைப் புகை தருவதாய்த் தோன்றும் ஆனால் தராது!

மன நிம்மதி மனித நேயத்தில் தோன்றும் ஆனால் நிம்மதி தரும்.

மன நிம்மதி மனைவியின் பரிவில் தோன்றும் ஆனால் நிம்மதி தரும்.

மன நிம்மதி மழலைகள் சிரிப்பில் தோன்றும் ஆனால் நிம்மதி தரும்.

மன நிம்மதி ஏழைகளுக்கு இரங்கில் தோன்றும் ஆனால் நிம்மதி தரும்.

மன நிம்மதி ஏதிலிகளுக்கு உதவத் தோன்றும் ஆனால் நிம்மதி தரும்.

மன நிம்மதி தாய்மண் மீட்பில் தோன்றும் ஆனால் நிம்மதி தரும்.

மன நிம்மதி சுதந்திர நாட்டில் வாழத் தோன்றும் ஆனால் நிம்மதி தரும்.

மன நிம்மதி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தோன்றும் ஆனால்

சுவாசம் நிறைய்ய்ய்ய நிம்மதி தரும்.

நிம்மதி தரும் வழி தேடி நான் நாளெல்லாம் அலைந்தேன் நடைப்பிணமாய்,

கனத்த இதயச்சுமையை இறக்க இடங்கள் பல தேடினேன்

தனிமையின் வெறுமை என் நெஞ்சில் கல்லாக அழுத்திடவே.

கனிவுடனும், அனுதாபத்துடனும் எந்தன் துயரங்களை கேட்டறிந்தாள்.

இனிமையான வார்த்தை கூறி என் நெஞ்சத்தை பஞ்சாக்கினாள். - என்

அன்பான மனைவி ஆனாள், சுமை தாங்கும் தோழியானாள். - வறண்ட

என் மனதை பசுமை ஆக்கிவிட்டு மீளாத்துயில் கொண்டாள். - இப்போது

மன நிம்மதி தேடி மீண்டும் நான் அலைகின்றேன் அவள் நினைவால். :)

Edited by Mallikai Vaasam

அவள் நினைவாலே நான்

அல்லும் பகலும் துடித்தேன்

அவள் நினைவாலே நான்

ஊனை உண்ன மறந்தேன்

அவள் நினைவாலே நான்

தூங்க மறுத்து விழித்தேன்

அவள் நினைவாலே நான்

நண்பர்களை வெறுத்தேன்

அவள் நினைவாலே நான்

அனைத்தையும் இழந்தேன்

ஆனால்

அவளோ என்னை நினைக்கவில்லை

நானோ இன்னும் அவள் நினைவுடனே...

  • கருத்துக்கள உறவுகள்

நானோ இன்னும் அவள் நினைவுடன் ......

பத்து மாதம் சுமந்து பாலூட்டி சீராடி வளர்த்த

என் தாய் முகத்தை மண் விட்டு போகையிலே

கடைசியாக ஒருமுறை பார்க்க கொடுத்து

வைக்கவில்லையே இந்த பிறவிக்கு ....

ஆறது துன்பம் .தீராது தாகம் மாறாது நினைவு

ஒரு வேளை நான் என் குஞ்சுகளுடன் அக்கரை

சேர்ந்திருப்பேன் என்று , இக்கரையில் ஆறி இருப்பாய்

கொடிய காலனுக்கு ஏன் இந்த அவசரம் செல் வடிவில் ,

குண்டு மழை பொழிய ., உன்னை கவர்ந்து செல்ல

வாழும் வரை மறவாதே என்றா மண்ணோடு கலந்து விட்டாய் .........

மண்ணோடு கலந்துவிட்டாய் - என் தாய்

மண்ணோடு கலந்துவிட்டாய் என் அன்னை நீயே. - என்

கண்கள் எந்நாளும் கலங்கி நிற்க, நெஞ்சம்

புண்ணாகி வெந்து வெடிக்க, நீயோ

விண்ணோடு விண்ணவராக விரைந்துவிட்டாய்.

கண்ணைப்போல் எனைக்காத்து வளர்த்த தாயே,

உன்னைப்போல் யாரும் உண்டோ எனக்கு இங்கே? - என

எண்ணி நானும் வாடுகின்றேன் நாளுமிங்கே.

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

வாடுகின்றேன் நாளுமிங்கே ,தாய் நிலம் நோக்கி செல்வதேப்போ ?

சுதந்திர காற்று ,சுவையான வாழ்வு, சொர்கமே என்றாலும் அது

நம்ம ஊரை போல வருமா ? இது தங்குமிடம் ,ஒட்டவில்லை மண்ணோடு

இயந்திர வாழ்கை ,ஓடுவொரொடு சேர்ந்து ஓடனும்,காலநிலை வேறு,

சலித்து போகிறது ,வாழ்க்கை, இன்னும் வாழ தான் வேண்டுமா என்று

எதோ வாழ்கிறேன் ,எனக்காக அல்ல , என்னை நம்பி இருபவர்காக

நிஜமாக அல்ல நிழல் தரும் மரமாக ,வாழ்ந்து தான் பார்ப்போமே .......

வாழுமட்டும் வாழ்ந்து பார்போம் ,வாழ்வு யார் பக்கம் ? அது நம் பக்கம்

வாழ்வு யார் பக்கம் ? அது நம் பக்கம்

தாழ்வு கண்டு சளைத்திடாத

நாளும் பல முயற்சி செய்து

வாழும் நாம் பக்கம்

வெற்றி யார் பக்கம்? - நேரம்

முற்றும் தம் இலக்கை மட்டும்

பற்றியே நினைக்கும் கரும வீரர் ,

மற்றும் ஒழுக்கமுடையோர் பக்கம்

மகிழ்ச்சி யார் பக்கம் ? - தம்

புகழ்ச்சிக்காக உழைக்காமல் - நேர்ந்த

இகழ்ச்சிகளை வளர்ச்சிப்படிகளாக நோக்க

பழகும் மனிதர் அவர் பக்கம்

அவர் பக்கம் பார்தேன்

என் பக்கம் மறந்தேன்

வாழ்க்கை தேர்வு

நெருங்கையில்

என் பக்கங்களை

புரட்டிய

போது..!!

விடை

தெரிந்தும்

தேர்வில்

தோற்று

விட்டேன்..!! :D

அப்ப நான் வரட்டா!!

தோற்று விட்டேன்

நேற்று நாம் போட்ட

பாச சண்டையில்..

தோற்றுப்போனதிலும்

எனக்கு சந்தோசம்

நான் தோற்றதை நினைத்து

என் கண்கள் கலங்க

உன் கைகள் கொண்டு துடைத்து

உன் மெல்லிய இதழ்களால்

என் கன்னத்தை நனைத்தாயே

இதற்காகவேனும்

நான் எத்தனை தடவையேனும்

தோற்றுப்போவேன்

மீண்டும் எப்போ

நம் பாச சண்டை

ஆரம்பம்...?

சண்டை ஆரம்பம் - நம்

அன்னை தாய் மண்ணை

அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து மீட்க

மீண்டும் சண்டை ஆரம்பம்

பண்டை மரபு கொண்ட

மறத்தமிழினத்தை அழிக்கவந்த

பகைவருக்கு முடிவுகட்டும் முடிவுடனே

தமிழ்ப்படையின் யுத்தம் ஆரம்பம்

சிறுபான்மை இனம் தானே என்று

பேரினவாத கொடுங்கோலர்களால்

பறிக்கப்பட்ட எம் உரிமைகளை மீட்டிடும்

இறுதி யுத்தம் இது... ஒரு முடிவின் ஆரம்பம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.