Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

எனக்குள் தோன்றி எனக்குள்

மறையா அர்தங்களை

அடிக்கடி கிறுக்கிய அந்தாதியோ

மறைந்து தொலைந்தது ஏன்?

தொல்லையாய் போனவாழ்வில்

தொலைந்தவருடன் நீயுமா?

வந்தவரும் போனவரும் வராது

போக

எடுதவருக்கும் தொடுந்தவருக்கும்

எடுக்காது போக

எடுக்கின்றேன் உன்னை

தொலையாது வாழ

எழுதிய கரங்கள் மீண்டும்

எழுதிட...................

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எழுதிட எழுதுகோல் எழுந்து நிக்கும்

விழுந்திடும் கண்ணீரில் கருத்தும் கரையும்!

வலிகளை மட்டும் வாழ்க்கையாய் கொண்டோம்

வழித்தடத்தையும் தொலைத்து உழல்கின்றோம்

மேதினியில் மாந்தரெல்லாம் கூடிக்களிக்க

மே18 ல் ஈழமெங்கும் கூடி மாரடிக்க

காரிருளும் விலகியோடும் காலமாகும்

கதிரவனும் வைகறையில் உதயமாகும்!

கதிரவனும் வைகறையில் உதயமாகும்

கண்ணீரின் வழித்தடங்கள் மறைந்துபோகும்!

நீளுகின்ற கதிரின் கைகள் பற்று

கவலைகள் போகுமே அற்று!

விரயமாகும் காலத்துளிகளை எண்ணு

உயரமாகும் உனது வாழ்க்கை கண்ணு!

எழுந்து நில்லு நீயும் கொஞ்சம்

விழுந்து கிடந்த புல்லும்

எழுந்து நிற்கும் கோலமது பாரு

துணிந்து செல்ல பாதை பல உண்டு

குனிந்து நீயும் நிற்பது ஏன் இங்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இங்கு நான் வந்தேன் , என்னை நானே கேட்கின்றேன்! எழில் மிகுந்த நகரங்கள், எச்சில் துப்பலில்லாத சாலைகள்!

சொகுசான பயணங்கள், சுகமான வாழ்க்கைகள்!

சுத்தமான அங்காடிகள், சத்தான உணவுப் பொருட்கள்!

ஏமாறும் நுகர்வோரையும், ஏமாற்றத வியாபாரிகள்!

சுகாதாரமான வைத்திய சாலைகள், நவீன சோதனைக் கூடங்கள்!

கண்ணான வைத்தியர், கருணைமிகு செவிலியர்!

கண்ணியாமான காவல்துறை, காருண்யத்துடன் மாந்தர்!

கண்மூடி ஒரு கணம் கடந்த காலம் செல்கின்றேன்!

கொழும்பு செல்லும் யாழ்தேவி, கடுகி வருமே காங்கேசன்துறை!

காலத்தின் கோலத்தினால், கயவர் கை ஓங்கியதால்!

மதவாச்சியில் மண்டை உடைய மலைத்து நின்றது!

அனுராத புரத்தில் ஆட்களை வெட்ட அலறி நின்றது!

காலன் கையில் கையளித்து விட்டு, கட்டையின் மேல் கட்டையாய் நின்றது!

வீட்டினுள் கள்ளர் கூட்டம் வாசலால் வந்து, பொன்னும் பொருளும் புடுங்கிச் சென்றது!

விழி தூக்கி வியந்து பார்த்த விமானங்கள், விரைந்து வந்து குண்டெறிந்து பறந்தது!

பதங்கு குழியில் பாதிக்காலம், புழுவுடன் பாண் வாங்க மீதிக் காலம்!

அமைதிப்படை வந்து கொஞ்ச அமைதியையும் பறித்துச் சென்றது!

பாடசாலைகளும், கோவில்களும் புகலிடமாய்! அங்கும் அகோரச் செல்லடியும் அப்பப்ப விருந்தாளியாய்!

கண்முன்னே உறவுகளும், அயலவரும் உடல் சிதற, உதிரம் பெருக!

இன்னும் வேண்டுமா இந்த வாழ்க்கை, கணப்பொழுது தான்,

அம்மா நான் கண்முழித்து விட்டேன்!

அம்மா நான் கண்முழித்து விட்டேன்!

பூனைக்கு யாரோ மணிகட்டுவர்,

பொல்லானை பொடியர் போக்கிடுவர்,

பாவிகளை பகலவர் பொசுக்கிடுவர்,

மிலேச்சர்களை மானிடர் மிதித்திடுவர்,

மிருத்துகாரனை மிருடன் மாய்த்திடுவர்,

என்று வாளாவிருந்தேன் - இப்போ

அம்மா நான் கண்முழித்து விட்டேன்!!!

கண்முழித்துவிட்டேன்...

இட்டாரும்...தொட்டாரும்..

இளமை கலையக் காணோமே..

எனக் கதறி..கண்ணீர்

பாய்ந்தோடக் கண்டேதான்..

காலங்கள் தாமதமாய்

கண்முழித்துவிட்டேன்...

தொட்டுத் திலகமிடடான்..

தொடைநடுங்கி..அழகுக்கு

காவல் இருக்கமுடியாத ஆண்...

அலறலுக்கு ஓடிப்போன..

ஆடு அவன்..

இரப்பை காயாமல்..

அழகை மேயவிட்டு..

தொட்டான்..தொடர்ந்து

எவன் எருமை...

காய்ந்த புல்லில்

கவனம் விட்டு

பூத்த பூவில் நாட்டம்

கொண்டான்..அவன் மேயமுன்

பூவைக் காத்தல் அவசியமெனக்

கண்முழித்துவிட்டேன்!

கண்முழித்துவிட்டேன்

கனவிலிருந்து

காரிகை உந்தன்

பட்டுக் கரங்கள் பட்டு!

முழித்தபின் உணா்ந்தேன்

காரிகை நீ வந்ததுவும்

கர ஸ்பரிசம் தந்ததுவும்

கனவென்று!

கனவென்று ஆகிடுமோ...

அந்தக் கொடுங் கணங்கள்..

ஆழ் மனதில்

வீழ்ந்திட்ட துயர் வழியும்

கூர் ஈட்டிகள்..

உறவுகள்.. எரிந்ததும்..

உண்மைகள் புதைந்ததுமான..

அந்தக் கொடுங் கணங்கள்..

கனவென்று ஆகிடுமோ...

  • கருத்துக்கள உறவுகள்

ஆகிடுமா?( வீண்) நம் தலை முறை கண்ட கனவு

ஆண்டுகள் பல வீழந்த விதைகளாய் போராளிகள்

தியாகங்கள் அர்ப்பணிப்புகள் உழைப்புக்கள்

பசி மறந்துஉறவு மறந்து கண் துஞ்சாது ,

உன்னத நோக்கமாம் விடுதலை யுணர்ந்து

தணியாது இத்தாகம் .வீண் ஆகாது இந்த நோக்கம்

நானும் நீயும் மண்ணோடு போகலாம்

விடுதலை உணர்வும் வீரமும மறு பிறபெடுத்து

உன் சந்ததி மீண்டும் விடுதலைபெறும்.

விடுதலை பெறும் நாள்

விரைவினில் வருமோ-வெறும்

வீறுடன் விரைந்தால் போதுமோ

அரசியல் என்பது

ஆழ்குழி ஆய்வெனின்-நம்

அறிஞர்கள் அறிவிலிதாமோ..

எத்தனை வீரம்...

எத்தனை தியாகம்-அத்தனையும்

எரிந்ததுமேனோ..

பகைமைக்கு கிடைத்த பரிசோ-எம்

பகைவருக்குள்ள மவுசோ

எதிரிக்கு கிடைத்த நட்போ-இது

எம் நேர்மைக்கு கிடைத்த பரிசோ

நியாயமும் தர்மமும்

நீதியும் மண்ணுக்கு புதைந்து போமோ-மற

வீரமும் தீரமும்..

வேங்கையர் தியாகமும்-இன்று

வீணென்று ஆகிடுமோ..

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்

தர்மம் மீண்டும் வெல்லும்..என்ற

இறை வாக்குகள் மெய்ப்படுமோ..

இறைவாக்குகள் மெய்ப்படுமோ..

  • கருத்துக்கள உறவுகள்

இறைவாக்குகள் மெய்ப்படுமோ...

கறைவாக்குகள் அரசாளுதே!

சிறைச்சாலையில் நல்லோர் நிறைய

பறைமேளங்கள் நாடெங்கும் முழங்குதே!

முள்ளிவாய்க்கால் தூர்ந்து போனதால்

கள்ளிச்செடிகள் வேர்விட்டு மெய்வருத்துதே!

பள்ளியறைகள் பாதகரின் பள்ளியறையானதால் _ செம்

புள்ளிப் பொட்டுகள் செங்குருதியோடு கரைந்தோடுதே!

பாரதத் தாயென்று நம்பினோம் _ படுபாவி

பாதகத் தாயாய் பல்லிளித்து போனாளே!

ஈழமாதர் தாலி காவுகொள்ள

இத்தாலியிலிருந்து இறங்கினாளே!

Edited by suvy

இறங்கினாளே...இளவரசி...பல்லக்கு மேலிருந்து

உறங்குவாளே அழகரசி பஞ்சணை மேல் விழுந்து..

காண்பதெல்லாம் அழகுமாடங்களும்... அரசபீடங்களும்..

தெரிந்ததெல்லாம்..ஆயகலைகளும்..தங்கசிலைகளும்..

மேகத்தில் மிதந்தவள் சேரிக்குள் வருவாளோ...

சேவகத்தில் வாழ்ந்தவள் சேவகியாவாளோ...

ஆணையிட்டு வாழ்ந்தவள் ஆணைக்குள் வாழ்வாளோ..

ஆம்..அவள் இளமையில் காதல் துளிர்த்தால்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளிர்த்தால் துளிர்விடுமே காதல்

களிப்பில் கனவுலகின் சஞ்சாரத்தில் மனம்

சேரிக்குள் வாழ்ந்தவள் மணமேடைதனில்

சேவகியாய் சேர்ந்தவனுக்கு

சேவகம் செய்து செய்து

சே தாரமாய் வாழ

சேவகன் என்ன முடமா

ஆள வந்தவள் கேட்கிறாள் அன்பாய்

அன்பாய் கேட்டதுவும்-பெண்

அகத்தே முளைந்த அகந்தைதானே..

சமைந்தவளுக்கெல்லாம் சமவுரிமை யழித்து

இல்லற இன்பத்தின் எல்லையைச்சுருக்கி...

விவாக இரத்துகளை விலை மலியச் செய்வதற்காய்...

ஆண் முடமாயும்..பெண் ஜடமாயும் வாழ்க...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க இம் மேதினி வளமுடன்!

பொழிக கார்மேகம் நிலமகள் குளிர்ந்திட!

ஆழ்க துன்ப,துயரம்,வஞ்சம்,பழி,குரோதம்!

வெல்க நம் தாய்நிலம், நிலைக்க நீங்காப் புகழுடன்!

சிறுவர்,சிறுமியர்,ஆடவர்,பெண்டிர்!

கூடிக் களித்திட குவலயம் செழிக்க!

இற்றை நாள் அயலவனும் எதிரியாய் இருந்திட்டான்!

இவன் மனம் இளகிட இறையருள் புரியணும்!

உடலெல்லாம் ரணங்கள்,மனமெல்லாம் குரோதம்!

நீரெல்லாம் இரத்தம், நிலமெல்லாம் பிணங்கள்!

மரங்கள் முறிந்ததினால், மரம்கொத்திகளும் சோம்பலுடன்!

யந்திரப்பறவை கண்டு வெருண்ட எம் பறவைகளும்!

தம்பயம் விட்டு கிளைகளிலே கூடும் கட்டி!

முயங்கி முட்டையிட்டு முழுசாய் அடை காக்கவேண்டும்!

வனத்து விலங்குகளும்,ஊரும் உயிரினங்களும்!

தம்மினம் பெருக்க உயிர்ப்புடன் உறவாட வேணும்!

நம் பிள்ளை சிந்தும் அன்னம் பொறுக்க,

முற்றத்து எறும்புகள் வரிசையாய் நகர வேணும்!

இனியொரு யுத்தமும் வேண்டாம்!

இனச் சேதமும் இனி வேண்டாம்!

அண்டை நாடுகளும், அயல் நாடுகளும்,

அநியாயமாய் விளையாடிய அரசியலும் அழியட்டும்!

பிரளயம் முடிந்து புது உலகம் பிறந்ததுபோல்!

யாழும் இன்று புதிதாய் பூத்தது போல்!

எம்மீழ உறவெல்லாம் சிரித்து மகிழ்ந்திட, உயர்ந்திட,

நின்று நிலைத்திட நாமெல்லாம் மனமுவந்து உதவ வேண்டும் தாயே!!!

  • கருத்துக்கள உறவுகள்

தாயே எந்தன் உயிர்த்தாயே-எனக்கு

நோயெ வந்ததில்லை உந்தன் அரவணைப்பில்

பந்த பாசம் என்னவென்று வாழ்ந்தாய்

சொந்த நலம் பாராமல் எம்மை வளர்த்தாய் - நீயே

மாசற்ற நேசத்தின் வரைவிலக்கணமாய்

காசற்றுக் கடமைகளைச் செய்தாய் -எமக்குத்

தேசத்தில் ஓர் அடையாளம் தந்தாய் - நீயோ

வேசத்தில் பலதாய் அடையாளம் கொண்டே

வாத்தியார்

...............

பலதாய் அடையாளம் கொண்டே

அது இதுவெனக்

கை காட்டுவார்

கடவுளை!

கல்லன்றி ஏதும் காணாது

எது வெனத் தேடுவார்

மூடரும்!

உள்நின்று சிரிப்பான்

கடவுள்

உனக்குள் நின்று சிரிப்பான்

கடவுள்

கட உள்

காணாத காட்சி காணலாம்

கண்டபின்

ஆனந்தக் கூத்தாடலாம்!

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாடலாம் கும்மியடிக்கலாம்

சுதந்திரம் மட்டும் கிடைத்தால் போதும்!

தந்திரம் மிகுந்த உலகத்திடம்

சுதந்திரம் யாசிப்பதும் கேவலமே!

விரும்பியா அடிமைப் பட்டோம்

போராடியா அடிமையானோம்!

தந்திரமாய் அடிமை செய்யாவிடின்

இந்த சுதந்திரம்தான் எமக்கெதற்கு!

வலியவன் எளியவனை அடிமை கொள்வதும்!

எளியவன் சுதந்திரத்திற்காய் அல்லலுறுவதும்!

தொடர் கதையாய் தொடரு மென்றால்

தந்திரம் மலிந்த உலகத்திலே

சுதந்திரமும் கேவலமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

கேவலமே கேவலமே இன்றைய ஈழத்தமிழன் நிலை கேவலமே

கோவலன் வாழ்ந்த ஊரான் நம்மை தாழ்ந்தவன் ஆக்கி விட்டான்

காவலன் கட்டிக் காத்த நம் தேசத்தை காட்டியே கொடுத்து விட்டான்

பாவலன் என்ற பெயரால் எம்மைப் பாடியே அழித்து விட்டான்

மேலவன் என்று வருவானோ அன்று நம் தானையின்

காலவன் வழி சென்று நம் கரிகாலனின் கனவை நனவாக்கும்

வாத்தியார்

*********

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நனவாக்கலாம் நம்

கனவை என்றே

நினைத்திருந்த வேளைதனில்

கனவின் சுவடே தெரியாமல்

காட்டெருமைகளாய் கனவை

கலைத்தொழித்து விட்டனரே

இதயத்துக்குள்ளும் ஓர் ஆதங்கம்

எமக்கென ஓர் நாடு மலராத

எழுகிறது நித்தமுமாய் ஓர் கேள்வி

கேள்வி கேட்க யாருமில்லையடி

நம் இனத்துக்கே நாதியில்லையடி...

மானமில்லா ஈனமும்..

பேராசைப் பேய்களும்..

எமக்குள் இருந்ததால்..

வீரம் குழிக்குள் விழுந்த கதை கேளடி

வெள்ளம் குடிகளை அழித்த கதை கேளடி

தன் இனத்துக்காக ஆசைப்பட்டு

தன் இனத்துக்காக கோபப்பட்டு

தன் இனத்துக்காக துன்பப்பட்ட

அந்த ஜீவ அவலத்தில்

மௌனம் காத்த உலகில்

கேள்வி கேட்க யாருமில்லையடி

நம் இனத்துக்கே நாதியில்லையடி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதியில்லையடியம்மா எனக்கு

உயிர் தந்தவள் அங்கே

ஆவி விட்டுப்போகையில்

பாவி நானிங்கே நாண் அறுந்த

ஏதிலியாய் ஏகாந்தமாய்

விதிமுறை வாழ்வு

எதுவரை போகும் என்றே

கதி கலங்கிப் போனேனே

அம்மா மடியில் அன்புமுகம்தேடி

அன்பின் அளவை சொல்லி

அளவிட முடியாத அம்மா

இழந்துவிட்டாலும் மனிதினில்

வாழ்பவள் என்றும் அம்மாதான்

தேடிய அம்மாவின் ஸ்பரிசம்

தேயாதா தேடலின் புதையல்

Edited by கறுப்பி

தேடலின் புதையல்

தேடாமல் கைகளில்

ஏந்தியதால்

தேடாப் புதையல்

மண்ணில் புதைந்த பின்னர்

அழுகின்றது புதையல் தேடி

  • கருத்துக்கள உறவுகள்

புதையல் தேடி அலையும்

உலகுக்கு புரியவில்லை ,

அகதிக்கு உதவுதல்

பெரும் புண்ணியம் என்று

தன் சுகம் தன வாழ்வு என

சுய நலமுடன் வாழ்வார்

எல்லோருக்கும் ஆறடி நிலம்

என அறியாமல்.

  • கருத்துக்கள உறவுகள்

அறியாமல் வாழும் மனிதா

உன்னையே அறியாமல்

வாழும் மனிதா எப்படி

அறிந்து கொள்வாய்

நீ வாழும் உலகத்தை

செப்படி வித்தை காட்டுவார் பலர்

சேர்ந்ததே கழுத்தறுப்பார் சிலர்

முற்றையும் துறந்ததாக

முனிவனே தானாக

பத்தையும் பார்த்ததாக

பலமாக கூறுவார்கள்.

நம்பாதே முடிந்தால்

உன்னையே அறிந்து

கொள்ள முயற்சி

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.