Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதரமைச்சருக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது சுதந்திர கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண முதரமைச்சருக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது சுதந்திர கூட்டமைப்பு
கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இது தொடர்பாக குறித்த ஆறு பேரும் இன்று ஊடகவியலாளர் சந்திபோன்ரை நடாத்தி தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.

வாபஸ் பெற்றுக்கொண்ட ஆறு உறுப்பினர்கள்:
01. விமலவீர திஸாநாயக்க ( ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு)
02. டப்ளியு.டி.எச் வீரசிங்க ( ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு)
03. ஜயந்த விஜேசேகர ( ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு)
04. டி.எம்.ஜயசேனவும்
05. எம்.எஸ் உதுமாலெப்பை
06. எம்.எல்.எம். ஆமீர் லெப்பை (தேசிய காங்கிரஸ்)

 

தகவல் - சுரியன் பண்பலைவரிசை குறுஞ்செய்தி...

Edited by புலிக்குரல்

அன்ரன்பாலசிங்கத்தை பெரிய ஆள் என்று சொன்னவர் கவிழப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி முஸ்லிம்களை குளிர்விக்க வேண்டும்.. :lol:

ஆதரவை விலக்கிக்கொண்ட ஆறுபேரும் TNA க்கு ஆதரவு தருவதாக TNA தலைவர்களை சந்தித்தவர்கள் .இவர்களின் ஆதரவை ஏற்றுக்கொள்ளவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அவர்கள் அணில் போல இந்தக் கூட்டமைப்பின் திட்டத்திற்கு உறுதுணையாக இருப்பார் :D

மீண்டும் தேர்தல் ஒன்றுக்கு போவதே சரியான முடிவாக இருக்கும்.

 

11 கூட்டமைப்பு உருப்பிரன்ர்களுடன்  4 ஐ. தே . க உறுப்பினர்கள் சேர்ந்தாலும் பெரும்பான்மை கிடையாது. அதோட இந்த சுதந்திரகட்சி கூட்டமைப்பு சேர்வது நிரந்தரமில்லாத கூட்டணியாக இருக்கும் என்றைக்கும் கவிழக்கூடிய ஒரு நிலையில் தான் இருக்கும்.

 

ஆகவே திரும்பவும் தேர்தலுக்கு போவதே சரியானது. இராணுவ அரசியல் சசூழ்சி இல்லாமல் இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 13 இருந்து 15 வரையான இடங்களை பெறமுடியும். அத்தோடு  ஐ. தே . க உத்தவியுடன் ஆட்சியை அமைக்க முடியும்.

Edited by Sooravali

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான், அக்கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மேலும் கூட்டமைப்பிற்கு முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாபஸ் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறு சந்தித்துள்ளனர்.

sampanthan_pillaiyan_001.jpg

sampanthan_pillaiyan_002.jpg

sampanthan_pillaiyan_003.jpg

sampanthan_pillaiyan_004.jpg

நன்றி படங்கள் -  தமிழ்வின்

Edited by புலிக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.