Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு வழங்கிய கடன்கள் விடயத்தில் சீனா கடும்போக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் வேண்டுகோளின் பேரில், இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டதற்கமையவே, சிறிலங்காவுக்கு கடன்களை சீனா வழங்கியுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய 5 பில்லியன் டொலர் கடன்கள் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த சனிக்கிழமை கவலை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சீனாவுடன் பேச்சு நடத்த சிறிலங்கா நிதியமைச்சர் விரைவில் பீஜிங் வருவார் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து பீஜிங்கில் இன்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சன்யிங்,

“சிறிலங்காவின் அபிவிருத்தியை ஊக்குவிக்க உதவும் வகையில், பரஸ்பரம் நன்மையளிக்கும் கொள்கைகளுக்கு அமையவே கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் வேண்டுகோளுக்கு அமைய, கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் கடன்களை வழங்கியுள்ளோம்.

முழு நாட்டுக்கும், மக்களுக்குமாக வழங்கப்பட்ட இந்தக் கடன்கள், சிறிலங்காவின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் சாதகமான பங்கை ஆற்றியிருக்கின்றன.”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/99285.html

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்த கடனை, சீனா திருப்பிக் கேட்கிற பிளான் போலுள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை கூப்பிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசினால் என்ன..?! சீனாவின் கோபத்தில் கொஞ்சத்தை எங்கள் நன்மைக்காக பயன்படுத்திறதை விட்டிட்டு சீனா சீற்றம்... அமெரிக்கா பாசமுன்னு எழுதிக்கிட்டு இருந்து என்ன பிரயோசனம்.

 

அமெரிக்காவின் முஸ்லீம்கள் மீதான சீற்றத்தை வைச்சுத் தானே.. பயங்கரவாத அழிப்பு என்று.. தமிழனை சர்வதேச உதவி வேண்டி அழிச்சான் சிங்களவன். அவனுக்கிருக்கிற புத்தில 1% தன்னும்.. சம்பந்தன் தரப்பு பாவிக்குமா.?!

 

சம்பந்தன் தொட்ட இடமெல்லாம்.. தமிழருக்கு நாசம். கடைசியில இப்ப கிழக்கு மாகாண சபை. சம்பந்தனை சுமந்திரனை விட்டிட்டு.. கூட்டமைப்பு.. நீண்ட.. குறுகிய கால அரசியல்.. ராஜதந்திர இலக்குகளை வகுத்துச் செயற்பட்டால் அன்றி தமிழ் மக்கள் பிராந்திய.. சர்வதேச காய் நகர்த்தலுக்கு ஏற்ப அரசியல் செய்யாமல்.. வீணே எல்லாத்தையும் இழக்கவே நேரிடும்.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுத்த கடனை, சீனா திருப்பிக் கேட்கிற பிளான் போலுள்ளது. :D

 

பரம்பரை பரம்பரையாய் எங்களுக்கு வாங்கித்தான் பழக்கம். :lol:

கொடுத்த கடனை, சீனா திருப்பிக் கேட்கிற பிளான் போலுள்ளது. :D

 

நாங்களாவது திருப்பிக் கொடுக்கறதாவது.

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்த கடனை, சீனா திருப்பிக் கேட்கிற பிளான் போலுள்ளது. :D

 

அடுத்த அறிக்கை வரும்

நீங்க திருப்பிக்கேட்டா

நாங்க இந்தியாவிடம் வாங்கித்தான் தரணும் என்று

சீனா அடங்கிவிடும்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.