Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி

Featured Replies

கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி MAR 13, 2015 | 1:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

modi-300x199.jpgஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.

இதையடுத்து வாகனப் பேரணியாக அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொழும்பில் இன்று தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் மற்றும், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும், இன்று பிற்பகல் 3.15 மணியளவில் சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் இந்தியப் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

இந்தியப் பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொராய்ஜி தேசாய் ஆகியோருக்குப் பின்னர், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நான்காவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறவுள்ளார்.

1987ஆம், ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தையடுத்து, 28 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் சிறிலங்காவுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கொழும்பில் பேச்சுக்களை நடத்தும் இந்தியப் பிரதமர், நாளை யாழ்ப்பாணம், அனுராதபுர, மன்னார் ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/03/13/news/4345

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர்களாக இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொராய்ஜி தேசாய் ஆகியோருக்குப் பின்னர், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நான்காவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறவுள்ளார்.

 

அட... இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது, பெருமையான விடயமா?m1714.gifsconfused_100-123.gif?w=20&h=20

  • தொடங்கியவர்

அட... இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது, பெருமையான விடயமா?m1714.gifsconfused_100-123.gif?w=20&h=20

 

 

சும்மா நக்கல் பண்ணாதீர்கள்.பாராளுமன்றத்தில் இருக்கும் உணவுச் சாலை வரயும் தான் எனக்கு தெரியும்.என்ன மாதிரி விழுந்து விழுந்து கவனிப்பார்கள் தெரியுமா? அப்போ இவர் போகுமிடம் அதற்கும் மேலே.

  • கருத்துக்கள உறவுகள்

பல அனுபவங்கள், கற்றறிவுகள், அரசியல் மாற்றங்கள், பிராந்திய உறுதிப்பாடு, புலிகளின் அழிவு இவற்றின் பின்னணியில் இந்தியப் பிரதமரின் வருகை அமைந்துள்ளது. நல்லது நடக்குமென நம்புவோம்!

அட... இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது, பெருமையான விடயமா?m1714.gifsconfused_100-123.gif?w=20&h=20

 
சிறியர் அதை விட பெருமையான விஷயம் சிறிலங்காவில் அடிவாங்கிய இரண்டாவது பாரத பிரதமர் 
என்ற பெயரை பெறுவது. :D
அப்படி நடக்குமா? அந்த அதிஷ்டம் மோடிக்கு கிட்டுமா?  :lol:  :icon_idea:

Edited by seeman

  • தொடங்கியவர்

ரொம்பத் தேவை. :wub:

 

இந்திய நாடாளுமன்றில் கூக்குரல் தாங்க முடியாமல்தான்.இலங்கை நாடாளுமன்றில் பேச வருகிறார்

  • தொடங்கியவர்

c41cbedf0b76db5329fd8eeb0f7575c2

Edited by BLUE BIRD

MODI%20ARRAIVE%20SRILANKA%2002.jpg

 

MODI%20ARRAIVE%20SRILANKA%2003.jpg

 

MODI%20ARRAIVE%20SRILANKA%2001.jpg

 

MODI%20ARRAIVE%20SRILANKA%2004.jpg


MODI%20ARRAIVE%20SRILANKA%2005.jpg


  • தொடங்கியவர்

 

 
சிறியர் அதை விட பெருமையான விஷயம் சிறிலங்காவில் அடிவாங்கிய இரண்டாவது பாரத பிரதமர் 
என்ற பெயரை பெறுவது. :D
அப்படி நடக்குமா? அந்த அதிஷ்டம் மோடிக்கு கிட்டுமா?  :lol:  :icon_idea:

 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/154965-%E2%80%98%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை பார்த்தவுடன்தான் யாழ்களத்தில் ஏன் 'டிஸ்லைக்' பொத்தான்கள்(dislike option) இல்லை? என்பதும், அதன் அருமையும் புரிகிறது. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.