Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mai.jpg

இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசே 13ஆவது அரசமைப்புத் திருத்தம், இனப்பிரச் சினைத்தீர்வு மற்றும் பிரதான பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யும்.

 

பொதுத் தேர்தலின் பின்னரே இவை நடக்கும். அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.  இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன.

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் முகாமையாளர்களை நேற்றுக் காலை சந்தித்துப் பேசினார். அதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
 

அப்பிடி என்னத்தை புதுசா சொல்லிட்டார் எண்டு செய்தியா போடுறிங்க? 

Edited by Sooravali

 

இப்போது எமது உடனடித்தேவை சிங்கள அரசுகள் எமக்குச் செய்த தவறுகளிற்கான பிராயச்சித்தம்தான் அரசியல் தீர்வு இல்லை. இவை காணாமற் போனவர்களின் விபரங்களைத் தருதல், அரசியற் கைதிகளை விடுவித்தல், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை ஒப்படைத்தல் போன்றவை. இவற்றை செய்வதனால் தமிழர்களிடையே சிறு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். இது பின்னரான அரசியல் தீர்விற்கு அடித்தளமாக இருக்கும். யாருமே இலங்கை அரசுகள் செய்தது சரி எனக் கூறவில்லை. ஆனால் இப்போதுதான் தேவையற்ற கைதுகள், கடத்தல்கள் குறைந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

 
இப்போதுதான் ஜெயகுமாரியடன் மேலும் 8 பேரை விடுவித்திருக்கன்றர்கள், மூதூரின் சிலபகுதி, வளலாய் போன்ற இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. திரிகோணமலை கடற்படை முகாமில் இயங்கிவந்த கோத்தா முகாம் பற்றிய விசாரணை போன்றவை  இவற்றின் ஆரம்பம்தான். எல்லாவற்றையும் எடுத்த எடுப்பிலேயே செய்துவிட்டு வரும் தேர்தலில் மண்கவ்வ மைத்திரி ஒன்றும் முடடாளில்லை. மைத்திரியின் தலைமீதும், இலங்கை அரசின் தலைமீதும் இந்தியா, மேற்குலக நாடுகள், ஜநாவின் மனித உரிமைச்சபை போன்ற கத்திகள் தொங்கிக்கொண்டுதான் இப்பவும் உள்ளன. இம்முறை இலங்கை அரசு இலகுவாகத் தப்ப முடியாது. 
 
இதற்கு மேல் இலங்கை அரசு தேர்தலின் முன்னர் எதையாவது செய்யுமாவென்பது கேள்விக்குறிதான். மே மாதத்தில் தேர்தல் வந்து மைத்திரி வென்றால் பல விடயங்களை மிகவும் குறுகிய காலத்திற்குள் செய்ய வேண்டி வரும். அதாவது செப்ரெம்பருக்குள். இருப்பது 3 மாதங்கள்தான். இக்காலகட்டம்தான் எமக்கு முக்கியமானது. மைத்திரிமேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களிற்கு அரசாங்கத்தை தோலுரித்துக் காட்டப்போகும் காலம்.
 
தேசிய அரசாங்கம் ஒன்றை மைத்திரியால் உருவாக்க முடிந்தால் இலகுவாக பல விடயங்களைச் செய்யக்கூடியதாக இருக்கும், நாட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லலாம். பல நாடுகள் இக்கட்டான நிலைகளைச் சமாளிக்க தேசிய அரசாங்கத்தை உருவாக்கி நாட்டை ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளன. உதாரணமாக பிரித்தானியாகூட முதலாம், இரண்டாம் போர்களின்போது இத்தகைய  அரசாங்கத்தை உரிவாக்கியிருந்தது. 
 
67 வருடங்கள் காத்திருந்துவிட்டோம் இன்னொரு 6 மாதம் நம்பிக்கையுடன் காத்திருப்போம். 

என்ன பிரச்சனை இப்போது  உண்மையைத்தானே சொல்கிறார்

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் என் ஆட்சியை உறுதி செய்து கொள்கிறேன். அப்புறம் பார்த்துப்பம்.. பொழுதுபோக்க உங்க விசயத்தை எடுத்துக் கதைப்பம் ஆனால் தீர்வு காண வேண்டிய கட்டாயம் இல்லைத்தானே என்று சொல்லாமல் சொல்கிறது சிங்களம்.

 

இதை வைச்சு.. என்ன ஆலாவரணம் போடப் போகினமோ.. சம்பந்த சுமந்திர கும்பலினர்.  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அதுக்கு பிறகு தேர்தலே வராதா??

 

வருடா வருடம் ஏதும் ஒரு தேர்தல் வரும்
அப்போதெல்லாம் எமக்கும் தீர்வு வந்துகொண்டே இருக்கிறது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.