Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தமண் எங்களின் சொந்த மண் ; விவசாய அமைச்சர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-1.png

வலி தெற்கு பிரதேச சபையில் கொண்டாடப்பட்ட உலக தண்ணீர் தின நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது  இந்தமண் எங்களின் சொந்த மண் என்று மீண்டும் பாடுவோம் என வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
 
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைய 1993 ம் ஆண்டு முதன்முறையாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கருப் பொருளை தண்ணீரை மையமாக கொண்டு உலக  தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
 
இந்த ஆண்டு தண்ணீரை எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவது என்பதை  கருப்பொருளாக கொண்டு கொண்டாடப்படுகின்றது.
 
ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்தது போல் யாழ்ப்பாண குடாநாட்டு நன்னீர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
 
நாம் மேற்கொள்ளும் செறிவு வேளாண்மை காரணமாக நைத்திரேற் அளவு செறிந்து காணப்படுவது உறுதிப்படுத்தப் பட்ட ஒரு விடயம் என தெரிவித்த விவசாய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய சுழ்நிலையில் இன்னுமொரு பூதம் யாழ் குடாநாட்டில் உருவெடுத்துள்ளது.  
 
அதாவது வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்திருக்கிறது என்பது நாங்கள் நீரில் எண்ணை கலப்பு இருக்ககூடாது என்று கருதுகிறோம் ஆனால் அதே சமயம் சிலர் எண்ணை கலப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
 
அன்பான பொது மக்களே நீண்ட காலத்தின் பின்னர் எமக்கு வாக்களித்து வடமாகாண சபை ஒன்றை இயங்க சந்தர்ப்பம் தந்துள்ளீர்கள் எங்களை நம்புங்கள் உங்கள் மீது எங்களுக்கு அக்கறை இருக்கின்றது.
 
எங்களுடைய தண்ணீரை மாசுக்களில் இருந்து நாங்களே மீட்டெடுப்போம் இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன் என்று சொல்லி  பாடிய நாங்கள் தண்ணீர் பிரச்சனைக்காக  எங்களுடைய சொந்த மண்ணை விட்டு எல்லையை விட்டு இடம்பெயர்ந்து போவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம்.
 
இந்த மண்ணை எல்லா விதமான மாசுக்களில் இருந்தும் காப்பாற்றி அதாவது அரசியல் மாசு இராசயன மாசு சமூக விரோத மாசு எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றி இந்தமண் எங்களின் சொந்த மண் என்று மீண்டும் பாடுவோம் என்று தெரிவித்தார் 
 
  • கருத்துக்கள உறவுகள்

நீர்வளமில்லை, நிலவளமில்லை என்று பாடாட்டி சரி :)

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரநேசனுக்கு பாட்டு பாடியது மட்டும்தான் தெரியும் போல.

உங்களை விட ஐங்கர நேசனுக்கு தாவரவியலும் விவசாயமும் பெட்டரா தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.  :D  :icon_idea:
 
வடமாகாண சபை அமைச்சரவையில் ஐங்கரநேசன் ஒரு மிக சிறந்த தெரிவு.
 " ஈழத்தில் விஷ குண்டு வீச்சா எதிரியே உனக்கு வேறான காற்றா "  என்று சொன்னவர்.
  சூழல் மாசடைதல் பற்றிய அறிவும் தெளிவும் உள்ளவர். 
 
ஐங்கரநேசன் பற்றி எழுதுபவர்களுக்கு அடியேன் சொல்ல விரும்புவது ஒரே ஒன்று தான்.  :o
         " நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன "   :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விட ஐங்கர நேசனுக்கு தாவரவியலும் விவசாயமும் பெட்டரா தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும். :D:icon_idea:

வடமாகாண சபை அமைச்சரவையில் ஐங்கரநேசன் ஒரு மிக சிறந்த தெரிவு.

" ஈழத்தில் விஷ குண்டு வீச்சா எதிரியே உனக்கு வேறான காற்றா " என்று சொன்னவர்.

சூழல் மாசடைதல் பற்றிய அறிவும் தெளிவும் உள்ளவர்.

ஐங்கரநேசன் பற்றி எழுதுபவர்களுக்கு அடியேன் சொல்ல விரும்புவது ஒரே ஒன்று தான். :o

" நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன " :icon_mrgreen:

உங்கட அறிவு பூச்சியம். இன்றைக்கு தண்ணீர் எண்ணைக்கலப்பு நீர் தொடர்பாக இவரது செயற்பாடுகள் உங்களுக்கு தெரியவில்லை.

இதை வாசித்தனீங்களோ

http://www.yarl.com/forum3/index.php?/topic/155265-ஆபத்தை-ஏற்படுத்தும்-மாசுக்கள்/

Edited by MEERA

உங்கட அறிவு பூச்சியம்.

இன்றைக்கு தண்ணீர் எண்ணைக்கலப்பு நீர் தொடர்பாக இவரது செயற்பாடுகள் உங்களுக்கு தெரியவில்லை.

 எங்கடை அறிவு எப்பவுமே பூச்சியம்தான் மீரா அக்கா. :D

மழைக்கும் பள்ளிகூடப்பக்கம் ஒதுங்கினதில்லை.  :(  

சரி உங்கடை கருத்துகளை வாசித்தாவது கொஞ்சம் அறிவை வளர்க்கலாம் என்றால்...   :o
 
சரி தண்ணீரில எண்ணை கலந்தது பற்றிய அவருடைய நடவடிக்கையில்
உங்களுக்கு என்ன பிரச்சினை? :o  
கொஞ்சம் தெளிவாக விளக்கினால் நாமெல்லாம் அறிந்து கொள்ளலாமே.  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பை முதலில் வாசியுங்கள்

உங்கட அறிவு பூச்சியம். இன்றைக்கு தண்ணீர் எண்ணைக்கலப்பு நீர் தொடர்பாக இவரது செயற்பாடுகள் உங்களுக்கு தெரியவில்லை.

இதை வாசித்தனீங்களோ

http://www.yarl.com/forum3/index.php?/topic/155265-ஆபத்தை-ஏற்படுத்தும்-மாசுக்கள்/

பிந்திய இணைப்பிற்கு நன்றி மீரா அக்கா.  :icon_idea:
அந்த நிபுணர்களின் ஆய்வறிக்கைக்கும் ஐங்கர நேசனின் செயற்பாடுகளுக்கும் 
என்ன பிரச்சினையை கண்டு பிடித்தீர்கள்? :o

Untitled-1.png

வலி தெற்கு பிரதேச சபையில் கொண்டாடப்பட்ட உலக தண்ணீர் தின நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது  இந்தமண் எங்களின் சொந்த மண் என்று மீண்டும் பாடுவோம் என வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
 
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைய 1993 ம் ஆண்டு முதன்முறையாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கருப் பொருளை தண்ணீரை மையமாக கொண்டு உலக  தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
 
இந்த ஆண்டு தண்ணீரை எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவது என்பதை  கருப்பொருளாக கொண்டு கொண்டாடப்படுகின்றது.
 
ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்தது போல் யாழ்ப்பாண குடாநாட்டு நன்னீர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
 
நாம் மேற்கொள்ளும் செறிவு வேளாண்மை காரணமாக நைத்திரேற் அளவு செறிந்து காணப்படுவது உறுதிப்படுத்தப் பட்ட ஒரு விடயம் என தெரிவித்த விவசாய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய சுழ்நிலையில் இன்னுமொரு பூதம் யாழ் குடாநாட்டில் உருவெடுத்துள்ளது.  
 
அதாவது வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்திருக்கிறது என்பது நாங்கள் நீரில் எண்ணை கலப்பு இருக்ககூடாது என்று கருதுகிறோம் ஆனால் அதே சமயம் சிலர் எண்ணை கலப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.   :D  :D  :lol:  :icon_idea: 
 
அன்பான பொது மக்களே நீண்ட காலத்தின் பின்னர் எமக்கு வாக்களித்து வடமாகாண சபை ஒன்றை இயங்க சந்தர்ப்பம் தந்துள்ளீர்கள் எங்களை நம்புங்கள் உங்கள் மீது எங்களுக்கு அக்கறை இருக்கின்றது.
 
எங்களுடைய தண்ணீரை மாசுக்களில் இருந்து நாங்களே மீட்டெடுப்போம் இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன் என்று சொல்லி  பாடிய நாங்கள் தண்ணீர் பிரச்சனைக்காக  எங்களுடைய சொந்த மண்ணை விட்டு எல்லையை விட்டு இடம்பெயர்ந்து போவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம்.
 
இந்த மண்ணை எல்லா விதமான மாசுக்களில் இருந்தும் காப்பாற்றி அதாவது அரசியல் மாசு இராசயன மாசு சமூக விரோத மாசு எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றி இந்தமண் எங்களின் சொந்த மண் என்று மீண்டும் பாடுவோம் என்று தெரிவித்தார் 
 
  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடி எண்ணைக் கலப்பு தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

எந்த அஞ்சத்தக்க அளவிலும்.. நச்சுக்கள் இல்லை என்கிறது நிபுணர் குழு. ஜங்கரநேசன் சொன்னதும்.. நிபுணர் குழு ஆராயும் வரை.. திடமான முடிவுக்கு வர முடியாது என்பதே.

ஒரு குழுவின் அறிவிப்பை மட்டும் நம்ப முடியாது. இன்னும் ஆய்வுகள் செய்யும் பிற குழுக்களின் அறிக்கைகளும் வரட்டும். வர வேண்டும். :icon_idea:

நெடுக்கர் சொல்வதுதான் அடியேனின் கருத்தும். 

Medical Toxicology ஆய்வு முடிவுகளில் ஏற்று கொள்ளகூடிய நியம அளவுகள் தொடர்பாக நிறைய முரண்பாடுகள் உண்டு. மருத்துவ ஆய்வுகளில் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் போது கூட அமெரிக்காவின் FDA நீண்ட கால அடிப்படையில் அதன் Toxicological effects அவதானித்தே அனுமதி 
வழங்குவார்கள். எனவே நீரில் கலந்த எண்ணெயின் அளவு தொடர்பாக பல குழுக்களின் விரிவான ஆய்வு அறிக்கைகளின்  பின்பே சரியான முடிவை எடுக்க முடியும். அதுவரை கிணறுகள்,
குழாய் கிணறுகளில் இருந்து நீரை பெறும் போது சில விசேட Filters மூலம் இத்தகைய எண்ணெய் மாசுக்களை வடிகட்டி பயன்படுத்துவது நல்லது.   :icon_idea:  
 
இது சம்பந்தமாக 2000 இல் ஒரு உண்மை கதையை அடிப்படையாக வைத்து ஒரு அருமையான 
திரைப்படம் " Erin Brockovich " வெளிவந்தது.
Julia Roberts க்கு சிறந்த நடிப்பிற்கான ஒஸ்கார் விருதை பெற்றுதந்த படம். 
 
மீரா அக்கா நேரம் இருக்கும் போது ஐங்கர நேசனை நக்கல் நையாண்டி பண்ணுவதை விட்டுவிட்டு  
இந்த திரைப்படத்தை பார்த்து பயன் பெறவும்.    :D  :icon_idea:

Edited by seeman

இந்த திரைப்படத்தை பார்த்து பயன் பெறவும். :D:icon_idea:

2012 இலங்கை சுகாதார அமைச்சினால் இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை 2014 இல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏலும் என்டால் அதை தேடி வாசியுங்கள்.

மேலும் நிலத்தடி எண்ணைக்கலப்பு தொடர்பாக நேற்று GTV இல் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றது அதையும் பாருங்கள்.

இது தொடர்பாக ஓரு ஆவணப்படம் தாயாரிப்பதற்கு ஐங்கரநேசன் பேட்டி தர மறுத்ததையும் ஏன் என கேளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.