Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சப்பென்று போன உலகக் கிண்ண இறுதிப்போட்டி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் வெல்லக் கூடியவர்கள் என்று எதிர்வுகூறப்பட்ட இரு அணிகளே இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டதால் போட்டி தொடங்குமுன்னரே எந்த சஸ்பென்சுகளும் இல்லாமலேயே எனது இறுதிப் போட்டி தொடங்கியது.

 

இல்லாத ஒரு எதிர்பார்ப்பை இருப்பதாக நினைத்து நானே சில விடயங்களைப் பலவந்தமாக எதிர்பார்த்திருந்தேன். அதாவது மக்கலம் அடித்து நொறுக்குவார், போல்ட்டும் சவுத்தியும் புடுங்கி எறிவார்கள்...அதேபோல பதிலுக்கு வோர்னரும் பிஞ்சும் பிரித்து மேய மக்ஸ்வெலும், வாட்சனும் இறுதியில் வந்து கமறுவார்கள்...இப்படிப் பலவந்தமாக என்னால் எனக்குள் திணிக்கப்பட்ட செயற்கைத்தனமான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டிருந்தேன்.

 

போதாக்குறைக்கு நண்பர் ஒருவரும், "மச்சான், ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வேலை ஒண்டும் இல்லாவிட்டால் வீட்டுக்கு வா, பைனலைப் பார்ப்பம், புரொஜெக்டரில போடப் போறன்" என்று கேட்கவும், நானும் உடனேயெ சரியென்று சொல்லிவிட்டேன். ஆக ஞாயிற்றுக்கிழமை மனிசி கேட்ட வேலையெல்லாம் செய்து கொடுத்துப்போட்டு "பைனலைப்" பார்க்க நண்பன் விட்டுக்குப் போனேன். 

 

நண்பன் வீட்டில் என்னைப் போலவே இன்னும் சிலரும் "பைனலை" பார்க்க வந்திருந்தனர், எல்லோரும் தெரிந்தவர்கள்தான். ஆகா, அற்புதம் இண்டைக்குப் பைனல் அந்தமாதிரித்தான் என்று மனசுக்குள் சந்தோஷம். 

 

நாணயச் சுழற்சியில் வென்ற நியுசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட நுழைந்தது. 

 

அருமை, குப்டிலும், மக்கலமும் களம் புகுந்தனர். குப்டில் ஒரு ரண்ணுடன் அடுத்த பக்கத்துக்கு வந்துவிட, மக்கலம் ஸ்டார்க்கின் பந்துவீச்சை முகம்கொடுக்க ஆயத்தமானார். இண்டைக்கு என்ன அடி விழப்போகுதோ என்று நான் கைய்யைப் பிசைந்துகொண்டிருக்க, முதலாவது பந்து, மக்கலம் பலமெல்லாம் சேர்த்து ஸ்டிரெயிட் டிரைவ் ஒண்டுக்கு கைய்யை விசுக்க, விக்கெட்டில் பட்டும் படாமலும் விக்கெட் கீப்பர் ஹடினிடம் போய்ச் சேர்ந்தது. அட, எஸ்கேப்பாயிட்டாண்டா என்று அடுத்த பந்துக்குக் காத்திருந்தேன். ஸ்டார்க் பந்து வீசமுன்னமே அரைப் பிட்சுக்கு மனுசர் வந்துவிட்டார் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன், அப்படியொரு அவசரம் மக்கலத்துக்கு ! பந்து காலுக்கால உள்ளெட்டு மறுபடியும் ஹடினிடம் போய்ச் சேர்ந்தது. 

 

உதென்ன விளையாட்டு ? இண்டைக்கு ஒரு பிளானோடதான் தலைவர் இறங்கியிருக்கிறார். ஏனென்றால் வேற எந்தப் போட்டியிலும் மக்கலம் இவ்வளவு அவசரம் காட்டியதுமில்லை, பந்தை அடிக்காமல் விட்டதுமில்லை. ஆக வித்தியாசமாக ஏதோ நடக்கப் போகுதென்று மனசு சொல்லியது. 

அந்த வித்தியாசம் என்னவென்பதை மக்கலம் எதிர்கொண்ட மூன்றாவது பந்து சொல்லியது. மக்கலம் மூர்க்கத்தனமாக மட்டையை விசுக்க பந்து அவரைக் கேலி செய்துகொண்டே ஓப் ஸ்டம்பிற்குள் கதறிக் கொண்டுபோய் விழுந்தது. இந்தமுறை போட்டிகளில் எதிரணிப் பந்துவீச்சாளர்களைக் கதிகலங்கவைத்து பல அணிகளுக்கு சிம்ம சொப்பமனமாக விளங்கிய பிரெண்டண் மக்கலம் என்கிற நியுசிலாந்தணியின் ஒப்பற்ற தலைவர் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஓட்டம் எதுவுமில்லாமல் மைதானத்திலிருந்து வெளியேறினார். 

 

பந்தை எறிந்த ஸ்டார்க்கிற்கு ஏதோ உலகக் கிண்ணத்தையே அந்தப் பந்தில் வீழ்த்திவிட்டதாக நினைப்பு !!! அப்படியொரு குதூகலிப்பு ! முழு ஆஸி அணியே ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. அப்போதுதான் மக்கலத்தின் விக்கெட்டை அவுஸ்த்திரேலிய அணி எவ்வள்வு தூரத்திற்கு மதித்திருந்தது என்பதும், அவரது அதிரடித் துடுப்பாட்டம் பற்றி ஆஸி அணி எவ்வளவு தூரத்திற்குப் பயந்திருந்தது என்பதும் புரிந்தது. 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை நியுசிலாந்து அணியின் துடுப்பாட்டக் காரர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது பிரிவு பிரெண்டன் மக்கலம் என்னும் ஒற்றை மைதர், மற்றைய பிரிவு அணியிலிருக்கும் மற்றைய துடுப்பாட்டக் காரர்கள் எல்லோரும். 

 

ஆகவே மக்கலத்தின் பின்னர் எனக்கு அந்த அணியில் இருக்கும் மற்றையவர்கள் பற்றி அதிக கவனம் இருந்ததில்லை. சரி, சரி, குப்டில் ரெட்டைச் சதம் போட்டார், கிராண்ட் இல்லியட் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடி வென்றார், இடைக்கிடையே அண்டெர்ஸனும் ஆடினார் என்பதெல்லாம் இருக்கட்டும், ஆனால் நியுசிலாந்தணியின் துடுப்பாட்டம் என்றால் அது மக்கலத்தின் துடுப்பாட்டமே என்பதும் மீதியெல்லாம் அவர் போட்டுக் கொடுக்கும் அடித்தளத்திலிருந்து கட்டப்பட்டவைதான் என்பது எனது அசையாத நம்பிக்கை. 

 

ஆக, இன்று மக்கலம் ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தபோது, மீதியைப் போட்டி பார்க்காமலேயே மனம் கணித்துக்கொண்டது. முக்கி முக்கி ஒரு 200 அல்லது 220 ஓட்டங்களை எடுப்பார்கள். ஆஸி அணி இதை இலகுவாக எடுத்துவிடும் என்று மனம் சொல்லியது.

 

மனது சொல்லியவாறே குப்டிலும் மக்ஸ்வெலின் பந்தில் போல்ட் செய்யப்பட்டார். அவரின் பின்னர் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமான கேன் வில்லியம்சனும் ஆட்டமிழந்து வெளியேற 3 விக்கெட்டுக்கு 39 ஓட்டங்கள் என்கிற நிலையில் நியுசிலாந்து தடுமாறிக் கொண்டிருக்க, தென்னாபிரிக்க ஆட்டத்தின் நாயகன் எல்லியட்டும், டெயிலரும் ஜோடி சேர்ந்தார்கள். எல்லியட் தனது வழமையான பாணியில் அடித்தாட, டெயிலர் நிதானமாக ஆடினார். ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய இருவரும் நேரம் செல்லச் செல்ல வேகம் காட்டினர். சடுதியான விக்கெட்டுக்களால் நிலைகுலைந்திருந்த அணியைத் தூக்கி நிறுத்திய இவர்களிருவரும் ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கினர். 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக இவர்களிருவரும் 111 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது போக்னரின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ஹடினிடம் பிடிகொடுத்து டெயிலர் வெளியேறினார். அப்போது ஓட்ட எண்ணிக்கை 150 இற்கு 4 விக்கெட்டுக்கள். இன்னும் 15 ஓவர்கள் இருக்கின்றன, அடித்தாடக் கூடிளெல்லியட், அண்டெர்சன், ரொங்கி போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆகவே முழு மாட்சையும் பார்க்கவாவது விளையாடுவார்கள் என்று நம்பியிருந்தேன். 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எனது எதிர்பார்பெல்லாம் மண் அள்ளிப் போட்டு அண்டெர்சனும், ரொங்கியும் அடுத்தடுத்து ஓட்டமெதுவும் பெறாமலேயே ஆட்டமிழந்து சென்றார்கள். போச்சு..எல்லாம் போச்சு ! அந்தமாதிரி ஒரு பைனல் ஒன்றைப் பார்க்கலாம் என்று நண்பனின் வீட்டுக்கு வந்தால் இப்படிக் கவுத்துப் போட்டாங்களே என்று ஆதங்கம் . 

 

எல்லியட்டுடன் சேர்ந்து ஆட விட்டோரியும் வந்தார். தட்டித் தட்டி 9 ஓட்டங்களுடன் அவரும் ஆட்டமிழக்க, மறுபக்கத்தில் நின்றிருந்த எல்லியட் பொறுமையிழந்து விசுக்க அவரும் ஆட்டமிழந்துபோனார். ஆக இப்படி எல்லோரும் வருவதும் போவதுமாய் விளையாடி 183 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துபோனது நியுசிலாந்தணி ! 

 

ஆஸி அணி இந்த இலக்கை இலகுவாக அடைந்துவிடுவார்கள் என்றே நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம்.  ஆரம்ப ஓவர்களில் போல்ட்டும், சவுத்தியும் வீசும் பந்துகளைச் சமாளித்துவிட்டால், பிறகு இலகுவாகிவிடும் என்று எதிர்பார்த்தோம். 

 

ஆனால் ஆஸி அணி துடுப்பெடுத்தாட நுழைந்த இரண்டாவது ஓவரிலேயே ஆரன் பின்ஞ்ச் போல்ட்டின் பதை அடிக்க முனைந்து அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் சுவாரசியமானது எமக்கு. அதேபோல வோர்னரும் ஆரம்பத்தில் தட்டுத் தடுமாறி விளையாட ஆட்டம் இன்னும் முடியவில்லை என்று தோன்றியது. 

 

ஆனால் வோர்னருடன் ஜோடி சேர்ந்து விளையாட வந்த ஸ்மித் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விளையாடினார். ஸ்மித்டுடன் சேர்ந்து வோர்னரும் அடித்தாட நியுசிலாந்தணியின் நம்பிக்கையும் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது.  ஆனால் 63 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் வோர்னர் அடித்தாட முனைந்து பிடிகொடுத்து ஆட்டமிழக்க மறுபடியும் ஆட்டம் மாறியது.

 

தனது இறுதி ஒருநாள் ஆட்டத்தை ஆடும் அணித்தலைவர் ஸ்மித்துடன் சேர்ந்து ஆடத் தொடங்கினார். ஆரம்பத்தில் இகவும் நிதானமாக ஆடிய கிளார்க், சிறிது சிறிதாக வேகம் எடுத்தார். ஒருகட்டத்தில் ஸ்மித்தை மிஞ்சிய அவர் 50 ஓட்டங்களைக் குவித்தார். நியுசிலாந்தணியின் நம்பிக்கை முற்றாக அழிந்துபோயிருந்தது அப்போது.

 

74 ஓட்டங்களைப் பேற்றிருந்த நிலையில் கிளார்க் ஆட்டமிழந்தபோது அஸி அணி வெற்றிபெறுவதற்கு இன்னும் 9 ஓட்டங்களே பெறவேண்டியிருந்தது.

 

மீதி ஓட்டங்களை ஸ்மித்தும், வாட்சனும் சேர்ந்து அடித்து முடிக்க, அவுஸ்த்திரேலிய அணி 33 ஓவர்களில் இலக்கை அடைந்து தனது 5 ஆவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டது.

 

கடந்த 45 நாட்களும் மிகவும் பரபரப்பாக நடந்துவந்த உலக் கிண்ணப் போட்டிகள், இன்று எந்த விறுவிறுப்பும் இல்லாமல் சப்பென்று முடிந்ததுபோன்றிருந்தது எனக்கு !

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய எதிர்பார்ப்புக்களும் எப்போதும் நிறைவேறாது.
நானும் ஏதோ 300 350 ஓட்டங்கள் அடித்து இரண்டு பேரும் பிரித்து மேய்வார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன்

உங்களுக்கு எதிர் பார்ப்பு சப்பென்று போய்விட்டது ரகுநாதன். இங்கு ஐரோப்பாவில் இப்படி ஒரு உலக கிண்ணப்போட்டி நடந்தது என்றதே பலருக்கு தெரியாது. முன்னணி விளையாட்டு செய்தி பத்திரிகைகள் பலவற்றில் இப்போட்டி பற்றி ஒரு பெட்டி செய்தி கூட இல்லை.  2016 ம் ஆண்டு நடைபெற உள்ள ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டத்திற்கான  தகுதி தேர்வு போட்டி முடிவுகள் இப்போதே சூடு கிளப்ப தொங்கிவிட்டன. இங்கு சுவிற்சர்லாந்தில் பார்க்கூடியதாக உள்ள 25 மேற்பட்ட ஆங்கில தொலைக்காட்சி சனல்களில் கூட உலக கிண்ண கிரிக்கெட்டுக்க்கு குறைந்த முக்கியத்துவத்தையே கொடுத்திருந்தன. ITV  மாத்திரம்  கிரிக்கெட்ட பற்றி வெறும் 30 நிமிட வர்ணனையுடன் கூடிய highlight காட்சிகளை மட்டும் ஒளிபரப்பியது.  அதே ITV   2016 ம் ஆண்டுக்கான  ஐரோப்பிய கிண்ணத்திற்காக  கடந்த வாரம் இங்கிலாந்திற்கும் லிதுவேனியாவிற்கும்  நடைபெற்ற தேர்வு போட்டி ரேடியம் நிறைந்த ரசிகர்களுடன் நேரடி ஒளிபரப்பு செய்யதது.  இங்கு நாம் கிரிக்கெட்டை பற்றி தமிழர்கள் அல்லாதவர்களிடம் பேசவே முடியாது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ரொராண்டோவில் 680நியூஸ் வானொலியில் ஆட்ட முடிவுகளை மட்டும் சொன்னார்கள். இந்த வானொலியில் போக்குவரத்து, செய்திகள், வானிலை, விளையாட்டுச் செய்திகளை மட்டும் ஒலிபரப்பியபடி இருப்பார்கள்.

ஆரம்பக்கட்ட போட்டிகள் ஒன்றில் ஒரு அணி 250 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற செய்தியைச் சொன்ன அறிவிப்பாளர் தொடர்ந்து சொன்னார்.. "I think it's a lot!" :lol:

நன்றி ரகு, மீண்டும் ஒரு வர்ணனைக்கு. உங்கள் கருத்துதான் எனதும் மிக ஆர்வமாக போட்டியை பார்க்க தொடங்கினேன். ஆனால் ஒரு சுவாரசியம் இல்லாத போட்டியாக நடந்து முடிந்து விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரைக்கு நன்றி ரகுநாதன்...

 

Spoiler
liquer.jpg
 இப்படி கொஞ்ச அயிட்டங்களை ஒரு சையிற்றிலை வைச்சிருந்தால் பார்க்கிறவைக்கு சப்பென்று இருந்திருக்காது.  :D  :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைக்கு நன்றி ரகுநாதன்...

 

Spoiler
liquer.jpg
 இப்படி கொஞ்ச அயிட்டங்களை ஒரு சையிற்றிலை வைச்சிருந்தால் பார்க்கிறவைக்கு சப்பென்று இருந்திருக்காது.  :D  :lol:

 

 

அது இல்லாமலா ??? :icon_mrgreen:  :D

அது இல்லாமலா ??? :icon_mrgreen:  :D

 

இனி அவர் இன்னும் கலர் கலராக படம் போட்டு இதில் 4 அயிட்டங்களை பக்கத்தில் வைத்திருந்தால் சலிப்பு வந்து இருக்காது என்பார். :o:icon_mrgreen::lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.