Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் மூவரிடம் விசாரணை!

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜின் கொலை குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறிலங்காவின் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
 
இந்த கொலை தொடர்பில் மூன்று கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் கப்பம் பெறல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்திருப்பதாக காவற்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
 
தற்போது அவர்கள் மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்ப்பட்டுள்ளனர்http://www.pathivu.com/news/38869/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால், இது வரை இந்த கைதுகளை தடுத்தது கோத்தா தானே?

தடுத்தது மட்டுமல்ல அவன் தான் இந்த கொலையின் சூத்திரதாரி .

ரவிராஜ் கொலையின் சூத்திரதாரி டக்ளஸ் என்பது கொலை நடந்த போதே தெரிந்த உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் கொலையின் சூத்திரதாரி டக்ளஸ் என்பது கொலை நடந்த போதே தெரிந்த உண்மை

உதென்னப்பா உது,

புதுக் கதை! அது மகேஸ்வரன் MP.

இது வேறை MP. ஒருக்கா, வடிவா விசாரியுங்கோவன்.

உதென்னப்பா உது,

புதுக் கதை! அது மகேஸ்வரன் MP.

இது வேறை MP. ஒருக்கா, வடிவா விசாரியுங்கோவன்.

நாதம்,

எங்களுக்கு எல்லா கும்பிகளையும் தெரியும் :icon_idea:

ஆரையும் நான் விசாரிக்கவில்லை, விசாரிக்கவேண்டிய தேவையும் இல்லை

டக்கர் தான் செய்தது

நீங்கள் ஒருமுறை விசாரித்து பார்க்கவும்

அக்காலப்பகுதியில் கோட்டாவின் செயல்பாடுகள் பெரிதாக ஆரம்பிக்கப்படவே இல்லை

மண்ணென்னையை போட்டதும் டக்கர் தான்

அது சரி, ரவிராஜ் இறப்பதற்கு முக்கிய காரணத்தை கூறுங்கள் பார்க்கலாம் :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்,

எங்களுக்கு எல்லா கும்பிகளையும் தெரியும் :icon_idea:

மண்ணென்னையை போட்டதும் டக்கர் தான்

அது சரி, ரவிராஜ் இறப்பதற்கு முக்கிய காரணத்தை கூறுங்கள் பார்க்கலாம் :icon_mrgreen: :icon_mrgreen:

 

உதென்னப்பா, இந்தாள், 'நான் தான், அவர் சுருட்டடிக்க, போயிலை சுத்திக் கொடுத்தனான்' எண்ட ரீதில, காலுக்க, கையுக்க வெடி போடுறார்.  :icon_mrgreen:
 
மகேசுவரன் பங்காளி, பகையாளி, டக்கர் போட்டார். விளங்குது.  :icon_idea:
 
ரவிராஜ் அப்படி இல்லை எண்டுதானே நான் நினைத்தேன். :o
ஏதும் கதையால் தெரிஞ்சால் சொல்லுங்கோவன், காதோட, உங்களான, ஒருத்தொருக்கும் சொல்லன்.... சரியோ.  :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சிவராமை போட்டது போல - செய்தது தமிழ் குழுவாக இருக்கலாம். ஆனால் கோத்தவின்/ஆமி இண்டின் உத்தரவிலேயே ரவிராஜ், சிவராம் போடப்பட்டனர்.

காரணம் - counter insurgency strategy - அதாவது கிளர்சியை கிளர்சியால் அடக்குவது. இது இஸ்ரேலின் பாடம்.

ரவிராஜ் சிங்களத்தில் மீடியாவில் கதைத்தும், சிவராம் ஆங்கிலத்தில் எழுதியும் ராணுவத்தின் நடவடிக்கைக்கு தடையாய் இருந்ததால் - போட்டார்கள்.

கோத்த அபய சீனில் வரமுன்பே குமாருக்கு இது நடந்தது. லசந்தவும் இப்படியே.

கூலிக்கு வேலை செய்த அம்பு யாராயும் இருக்கலாம்,ஆனால் கூலி கொடுத்து மினிஸ்ரி ஒப் டிபென்ஸ் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவராமை போட்டது போல - செய்தது தமிழ் குழுவாக இருக்கலாம். ஆனால் கோத்தவின்/ஆமி இண்டின் உத்தரவிலேயே ரவிராஜ், சிவராம் போடப்பட்டனர்.

காரணம் - counter insurgency strategy - அதாவது கிளர்சியை கிளர்சியால் அடக்குவது. இது இஸ்ரேலின் பாடம்.

ரவிராஜ் சிங்களத்தில் மீடியாவில் கதைத்தும், சிவராம் ஆங்கிலத்தில் எழுதியும் ராணுவத்தின் நடவடிக்கைக்கு தடையாய் இருந்ததால் - போட்டார்கள்.

கோத்த அபய சீனில் வரமுன்பே குமாருக்கு இது நடந்தது. லசந்தவும் இப்படியே.

கூலிக்கு வேலை செய்த அம்பு யாராயும் இருக்கலாம்,ஆனால் கூலி கொடுத்து மினிஸ்ரி ஒப் டிபென்ஸ் தான்.

 

ரவிராஜ் கொலையின் பின்னர் நான் கேள்விப்பட்டதும் அதேதான்...

சிவராமை போட்டது அவர் முன்னர் இருந்த அமைப்புத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் தர்மரத்னம் சிவராம் (தராகி) படுகொலையும், இலங்கையின் நிலைப்பாடும் !:எம்.ரிஷான் ஷெரீப்

0

ஊடகவியலாளர் தர்மரத்னம் சிவராம் (தராகி) படுகொலையும், இலங்கையின் நிலைப்பாடும் !

sivaram_dharmeratna.jpg‘தராகி’ என அழைக்கப்பட்டுவந்த ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தர்மரத்னம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு (28.04.2014) 09 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இக் காலத்தில் இலங்கை, இந்தியாவில் ‘அரசியல்’ செய்துவரும் அநேகர் இவரை மறந்திருக்கக் கூடும்.

1959 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி, மட்டக்களப்பில் பிறந்த தர்மரத்னம் சிவராம், 1980 களின் பின்னர் ப்ளொட், EPLF போன்ற இயக்கங்களுடன் இணைந்து தனது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்தவர். ‘தராகி’, ‘எஸ்.ஆர்’ ஆகிய பெயர்களில் அச்சு மற்றும் இணையத்தில் எழுதி வந்த இவர், பிரபல அரசியல் விமர்சகராகவும், பத்தி எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும் அறியப்பட்டவர்.

2005 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி, இலங்கை, பம்பலபிடிய பொலிஸ் நிலையத்துக்கருகே வைத்து, வேனில் வந்த குழுவினரால் கடத்தப்பட்ட இவரது சடலத்தை மறுதினம் இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் கண்டெடுத்தனர். பொலிஸ் நிலையத்துக்கருகே வைத்துக் கடத்தி, பாராளுமன்றத்துக்கருகிலேயே வைத்து சுட்டுக் கொலை செய்து, சடலத்தை விட்டுச் செல்வார்களாயின் கடத்தல்காரர்கள் மற்றும் கொலைகாரர்கள் எவ்வளவு பலமும், அதிகாரமுமுடையவர்களாக இருந்திருக்கக் கூடும்?! இலங்கையின் அதி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து இவ்வாறான குற்றச் செயல்களை யாரால் செய்யவியலும்?!

ஒன்பது வருடங்கள் கடந்தும் இன்னும் உயர் அதிகாரிகளாலும், பாதுகாப்புப் பிரிவாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரகசியக் கேமராக்கள் பதிக்கப்பட்டுள்ள, இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நடந்த இப் பாதகச் செயலின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஏன் இன்னும் முடியவில்லை? எனில் குற்றவாளிகள் யார்? தராகி என அழைக்கப்பட்ட தர்மரத்னம் சிவராமைப் படுகொலை செய்தவர்கள் யார்?

இலங்கையில் நேர்மையான ஊடகவியலாளர்களாகவும், அரசியல் விமர்சகர்களாகவும் இருப்போர் பலருக்கும் இந்த முடிவுதான் இறுதியாகக் கிட்டும் போலும். சிவராமைப் போலவே, இலங்கை ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்களான காரணத்தால் கொலைசெய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுக் காட்டமுடியும். இதில் இன மத பேதமில்லை. கொலைசெய்யப்படவும், கடத்தப்படவும், காணாமல் போகச் செய்யப்படவும், கண்மூடித்தனமாகத் தாக்கப்படவும், நாடுகடத்தப்படவும் அவர்கள் செய்த ஒரேயொரு குற்றம் நேர்மையான ஊடகவியலாளர்களாக இருப்பதுதான்.

எவர்க்கும் இன்னும் நீதி கிட்டவில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, காணாமல் போயுள்ள ப்ரகீத் எக்னெலிகொட போன்ற பலருக்கும் கூட இன்னும் நீதி கிட்டவில்லை. எனில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான நீதியை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லை.

படுகொலைகளுக்கும், குற்றச் செயல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக பல சாட்சியங்கள் இருந்தபோதிலும், குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க முடியாத ஒரு நிலைப்பாடு பல வருடங்களாக இலங்கையில் இருப்பதானது, குற்றவாளிகளை ஏவிவிடும் அதிகாரம் படைத்தவர்கள் குறித்து வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் யார்? அவர்கள்தான் இலங்கையை வழி நடத்துபவர்களா? இலங்கைக்கான ‘சிறந்த எதிர்கால’த்தை உருவாக்கித் தரப் போகிறவர்கள் அவர்கள்தானா?

சிவராம், நீங்கள் இப்பொழுது இல்லை. நீங்கள் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் கூட ‘இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக உள்ள’ (பால்ய வயதினர் உள்ளடங்கலாக) பலரும் கைது செய்யப்பட்டும், தண்டனை வழங்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் அதிகாரம் படைத்தவர்களது பார்வையில் ‘நீதி’ வழங்கப்பட்டு வருகிறது. கேட்பார் எவருமில்லை.

செல்வந்தர்கள் இன்னுமின்னும் செல்வந்தர்களாகவே ஆகிக் கொண்டிருக்க, ஏழைகள் தம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து இழந்து இன்னும் வறுமைக்குள்ளேயே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆட்சி அதிகாரங்கள், சௌபாக்கியங்கள் என எதுவும் வேண்டாமெனத் துறந்து சென்ற புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் புத்த பிக்குகள் சிலர் அதிகாரத்தையும், ஆயுதங்களையும் கையிலேந்தியவாறு வெறி பிடித்த விலங்குகளைப் போல நாவில் எச்சில் வடிய நடமாடித் திரிகின்றனர். கண்டவர்களையும் தாக்குகின்றனர்.

இலங்கையின் முன்னேற்றம் பற்றியும் உங்களிடம் கூற வேண்டும். இலங்கை எனும் தேசம் இப்பொழுது அழகாகவும், தூய்மையாகவும் உள்ளது. பகிரங்கமாகத் திரிந்த யாசகர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். இப்பொழுது அதிநவீன வசதிகள் எல்லாம் இலங்கையில் பாவனையில் உள்ளன. அதிவேகப் பாதைகள், நட்சத்திர ஹோட்டல்கள் எனப் பலதும், பல கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. விலைவாசிகளும், வரிகளும் அதிகரித்துள்ளன. அவை மாத்திரமன்றி, நாம் ஒவ்வொருவரும் உலகின் பல நாடுகளுக்கும் பல மில்லியன் டொலர்கள் கடனாளிகளாக உள்ளோம். இவை நாட்டின் முன்னேற்றங்கள் எனில், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு?

அது மட்டும் அன்று போலவே இன்றும் கேள்விக்குறியாகவேயுள்ளது சிவராம்.

http://inioru.com/40014/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/

- எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

28.04.2014

 

இவர்கள் குற்றவாளிகளாயின் இந்தியாவின் பீகார் அல்லது குவாண்டனாமோ சிறைகளில் இவர்களைத்தடுத்து வைக்க இலங்கை அரசு தயாரா?

உதென்னப்பா, இந்தாள், 'நான் தான், அவர் சுருட்டடிக்க, போயிலை சுத்திக் கொடுத்தனான்' எண்ட ரீதில, காலுக்க, கையுக்க வெடி போடுறார்.  :icon_mrgreen:

 

மகேசுவரன் பங்காளி, பகையாளி, டக்கர் போட்டார். விளங்குது.  :icon_idea:

 

ரவிராஜ் அப்படி இல்லை எண்டுதானே நான் நினைத்தேன். :o

ஏதும் கதையால் தெரிஞ்சால் சொல்லுங்கோவன், காதோட, உங்களான, ஒருத்தொருக்கும் சொல்லன்.... சரியோ.  :D

நாதம் அண்ணை,

தெரிந்த விடயம் என்பதால் கூறினேன், கண்டதிற்கும் தெரிந்தமாதிரி நான் பீத்துவதும் இல்லை

விளக்குகளை ஒளிரவிடுவது பதிலாகாது, பதிலுடன் ஒளிரவிட்டால் வாசிக்க இலகுவா இருக்கும்

மண்ணெண்ணையின் கதைய விடுங்கோ, அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, மனிசியே மறந்திட்டுது

ரவிராஜ் கொலையின் சூத்திரதாரி யார் என்பதே பிரச்னை.....

ஏதாவது ஆதாரம் இருந்தா வையுங்கள், பேந்து பத்தவையுங்கள் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.