Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தப்பிச்செல்ல வழிவிட்டதா இந்திய அமைதிப்படை?- கேணல் ஹரிகரன் பதில்

Featured Replies

பிரபாகரன் தப்பிச்செல்ல வழிவிட்டதா இந்திய அமைதிப்படை?- கேணல் ஹரிகரன் பதில் APR 16, 2015 | 1:10by புதினப்பணிமனைin செய்திகள்

col-hariharan-1-300x200.jpegதனக்குத் தெரிந்தவரையில், இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியது குறித்து கருத்து வெளியிட்ட போதே, கேணல் ஹரிகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அமைதிப்படையை சிறிலங்காவுக்கு எடுத்த முடிவு கொள்கை ரீதியான உயர்மட்டத் தவறு என்று குறிப்பிட்டிருந்த ஜெனரல் வி.கே.சிங், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அமைதிப்படையினருக்கு பலமுறை சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், ஒவ்வொரு முறையும் பிரபாகரனை பத்திரமாகத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியான கேணல் ஹரிகரன்,

“இந்திய அமைதிப்படையின் இராணுவக் குறிக்கோள்கள் தெளிவாக இருக்கவில்லை.

எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு முறைதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இந்தியப் படையினர் நெருங்கினர். அப்போது பிரபாகரன் அங்கிருந்து தப்பிவிட்டார்.

இந்திய- சிறிலங்கா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் அதிக அளவு உயிரிழப்புக்களை சந்தித்தது.

நகர்ப்புறங்களில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை அமைதிப்படை கட்டுப்படுத்தினாலும், காடுகளுக்குச் சென்று பதுங்கிய விடுதலைப் புலிகள் கெரில்லா போர் முறையை கையாண்டு இந்திய அமைதிப்படைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர்.

இந்திய அமைதிப்படை எத்தகைய அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றப் போகிறது என்ற தெளிவில்லாத சூழல் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2015/04/16/news/5226

 

 

எதற்காக இப்போது இதுபற்றி இந்தியா வாய் திறக்கின்றது;விரைவில் சிறிலங்கா அரசியல் இழுபறியால் விடுதலைப்புலிகளின் முழு உலகத்தமிழினத்தின் தலைவரின் உண்மைகள் வெளிவந்தால்........ இந்தியா முன்னெச்சரிக்கையுடன் தப்ப வழி சமைக்கின்றது ."அப்போ வெளியிட்ட புத்தகங்கள் எல்லாம்....?

இதனை தான் சிறிலங்காவும் கடைசியில் சொல்லப்போகின்றார்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் இரத்தக்கறைகளை.. சுத்தப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதி தான் இது.

 

ரணில் அண்மையில் கூட சொல்லி இருந்தார்.. இனப்படுகொலை என்று வந்தால்.. இந்தியப் படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்ததும் உள்ளடங்கனும்.. என்று..! ஆக சிங்களவன் தான் மாட்டுப்பட்டால்.. தனக்கு வால் பிடித்த அத்தனை பேரையும் மாட்டுவான். உலக சட்டாம்பியரும் மாட்டுவார். அதனால் அவரும் அளவுக்கு மிஞ்சி ஆடார்.

 

என்ன தீமை எமக்குத் தான். எம் அழிவுகளுக்கு..  நீதியை இன்றைய உலகில் எதிர்பார்த்து ஏங்கியே சாக வேண்டியான். :(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

-----

இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

-----

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அமைதிப்படையினருக்கு பலமுறை சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், ஒவ்வொரு முறையும் பிரபாகரனை பத்திரமாகத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியான கேணல் ஹரிகரன்,

“இந்திய அமைதிப்படையின் இராணுவக் குறிக்கோள்கள் தெளிவாக இருக்கவில்லை.

எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு முறைதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இந்தியப் படையினர் நெருங்கினர். அப்போது பிரபாகரன் அங்கிருந்து தப்பிவிட்டார்.

------

 

இந்திய அட்டூழியப் படையால்... தலைவர் பிரபாகரனின், நிழலை கூட தொட்டிருக்க முடியாது.

தமது, இயலாத்தனத்தை மறைக்க... இப்போ கதை சொல்ல வந்துவிட்டார்கள். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.