Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே அணையில் இருந்து 22,500 மெகாவாட் மின் உற்பத்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் அதிக நீர் மின்உற்பத்தி செய்யும் மேட்டூரில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

ஆனால் சீனாவில் ஒரு அணையிலேயே 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளனர். சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ் அணையில் இருந்துதான் இவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

இதற்கு முன்பு உலகிலேயே அதிக நீர்மின் உற்பத்தி பிரேசில் நாட்டில் உள்ள இதைப்பூ அணையில் கிடைத்தது. அங்கு 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. அதைவிட 2 மடங்கு மின்சாரம் திரீ கார்கஸ் அணையில் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டின் மொத்த மின்சார தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஏராளமான அனல்மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மத்திய அரசு தரும் மின்சாரம் இப்படி பல இருந்தும் 12 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்காமல் தட்டுப்பாடு நிலையிலேயே உள்ளோம்.

ஆனால் ஒரு அணையில் இருந்தே 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மிகப்பெரிய ஆச்சரியமாகவே கருதப்படுகிறது.

சீனாவில் உள்ள மிகப்பெரிய ஆறுகளில் யாங்ஸ் நதி முதலிடத்தில் உள்ளது. இந்த ஆற்றில் சராசரியாக 10 லட்சம் கனஅடி தண்ணீர் செல்லும். அவ்வப்போது பெரும் வெள்ளம் ஏற்பட்டு கரையோர ஊர்களை அழிப்பதும் உண்டு. 1931–ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். ஏராளமான கிராமங்களும் அழிந்தன. இதேபோல பல தடவை பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டில் மட்டும் இந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

இப்படி அதிக வெள்ளம் வந்து அழிவு ஏற்படுத்தும் நதியை ஆக்க சக்திக்கு பயன்படுத்த வேண்டும் என்ற திட்டம் சீனாவிடம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. 1919–ல் சீன அதிபராக இருந்த சன்யாட்சென் இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறி வந்தார். ஆனாலும் உடனடியாக பணிகளை தொடங்க முடியவில்லை. 1932–ல் அதிபராக இருந்த ஜியாங்கைசேக் அணை கட்டுவதற்காக ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினார். இந்த நிலையில் 1939–ல் ஜப்பான் சீனாவுடன் போரிட்டு இந்த பகுதிகளை கைப்பற்றி கொண்டது. இதனால் அணை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ஜப்பான் வெளியேறிய பிறகு மீண்டும் அணை திட்டம் கையில் எடுக்கப்பட்டது. 1944–ம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல என்ஜினீயர் ஜான் சேவேஜ்ஜை வரவழைத்து ஆய்வு நடத்தினார்கள். அவர் முழு ஆய்வு செய்து திட்டங்களை வடிவமைத்தார். பின்னர் சீனாவை சேர்ந்த 34 என்ஜினீயர்களை அமெரிக்கா அழைத்து சென்று அணை கட்டுமானம் தொடர்பான பயிற்சி அளித்தார்.

ஆனால் அணை கட்டுவது தொடர்பான சாத்தியக்கூறு விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால் கட்டுமான பணியை தொடங்க முடியவில்லை. ஆனாலும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

இறுதியாக 1991–ம் ஆணடு தான் அணை கட்டும் பணிக்கு தேசிய மக்கள் சபை அனுமதி அளித்தது. 1994–ம் ஆண்டு டிசம்பர் 14–ந் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின.

ஜான்ஜிங் நகருக்கும், உகான் நகருக்கும் இடையே உள்ள சன்டோபிங் என்ற இடத்தில் மலைப்பகுதியில் அணை கட்டப்பட்டது. 2 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2009–ம் ஆண்டுக்குள் அணையை கட்டி முடிக்க திட்டமிட்டனர்.

ஆனால் கட்டுமான பணிகள் 2012–ல் தான் முற்றிலும் முடிந்து மின் உற்பத்தி தொடங்கியது.

அணையின் மொத்த நீளம் 2335 மீட்டர் அணையின் அடிப்பகுதி சுவர் 377 அடி அகலத்திலும், மேல்பகுதி 131 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ளது. அணையின் உயரம் 361 அடி.

அணையை கட்டி முடிக்க 98 ஆயிரம் லட்சம் கன அடி காங்கிரீட் கலவை, 4 லட்சத்து 63 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரீசில் உள்ள ஈபிள் டவர் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பைவிட இது 63 மடங்கு அதிகமாகும்.

மின் உற்பத்தி செய்வதற்காக மொத்தம் 34 டர்பைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 டர்பைன்கள் தலா 700 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடியது. 2 டர்பைன்கள் தலா 50 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடியது. 700 மெகாவாட் திறன் கொண்ட 6 டர்பைன்கள் நிலத்துக்கு கீழே சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மற்றவை மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

டர்பைன் எந்திரங்கள் அனைத்தும் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மின் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு ஜெனரேட்டரும் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. வினாடிக்கு 21 ஆயிரத்தில் இருந்து 31 ஆயிரம் கன அடி தண்ணீர் இதன் வழியாக செலுத்தப்பட்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.

இந்த ஆற்றில் ஏற்கனவே கப்பல் மற்றும் படகு போக்குவரத்து நடைபெற்றது. அணை கட்டியதால் கப்பல் போக்குவரத்து தடைபட்டது.

தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நடக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேக திட்டம் ஒன்றையும் உருவாக்கி உள்ளனர். ஆற்றில் அணைக்கு அடி பகுதியில் வரும் கப்பல்களை அப்படியே தூக்கி மேல்பகுதியில் விட ராட்சத கிரேன்களை அமைத்து உள்ளனர். அவை அப்படியே கப்பல்களை தூக்கி மேல் பகுதியில் கொண்டு சென்றுவிட்டு விடும். இதற்காகவே அணையின் பக்கவாட்டு பகுதியில் பிரத்யேக வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அணை, மின் உற்பத்தி நிலையங்களை கட்ட மொத்தம் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளனர். சீனாவில் நீர்மின் நிலையத்தில் கிடைக்கும் மொத்த மின்சாரத்தில் 14 சதவீதம் இந்த அணையில் இருந்து கிடைக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 3 ஆயிரம் மெகாவாட் சீனாவின் முதன்மை தொழில் நகரமான ஷாங்காய்க்கு அனுப்பப்படுகிறது.

திரீஹார்கல்ஸ் மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அணு மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்வதாக இருந்தால் 15 அணு மின் நிலையங்கள் கட்ட வேண்டும். அனல் மின்நிலையம் மூலம் உற்பத்தி செய்வதாக இருந்தால் ஆண்டுக்கு 3 கோடியே 10 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படும். இந்த நீர் மின்திட்டத்தால் சீனாவில் நிலக்கரி தேவை பெருமளவு குறைந்து உள்ளது. அவ்வப்போது நிலக்கரி எரிப்பதால் ஏற்படும் மாசுவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் பல ஆயிரம் பேர் உயிர் இழந்தது வாடிக்கையாக இருந்தது.

அணை கட்டப்பட்ட பிறகு வெள்ள சேதம் நின்று விட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 1365 டி.எம்.சி. ஆகும். எனவே ஆற்றில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அணையில் தேக்கப்படுகிறது. எனவே திடீர் வெள்ளம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/2015/04/25171111/Three-Gorges-Dam-Worlds-bigges.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11187787_982926618393497_213652995567897


11010979_982926568393502_683686636750748

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டூருக்கு தண்ணீர் வரத்தும் குறைவு. உயரமும் குறைவு. குறைந்த உயரத்தில் அதிக சக்தியை எப்படி உருவாக்க முடியும்? சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும். :D

இதை பாருங்கள். இந்த அணை கட்டியது பற்றிய விவரண படம் 

  • கருத்துக்கள உறவுகள்

வெகு சுவாரசியமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பெருமாள் &  சேர்வயர்....! பிரமிப்பாய் இருக்கு ....!!

பகிர்வுக்கு நன்றி பெருமாள் , சேர்வயர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலாவதியான அணு உலைகளை ஒரு நல்ல விலையை போட்டு இந்திய போன்ற நாடுகளிட்க்கு விற்க்க இருந்த அமெரிக்கா,ரஸ்யா  நாடுகளிற்கு இந்த திட்டம் வெற்றி பெற்றது உள்ளுக்குள் கலக்கம் இந்த அணை திட்டத்தை இவர்களின் ஊது குழல்கள் நேர வெடிகுண்டு என்றே வர்ணிக்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

11187787_982926618393497_213652995567897

 

அணை நீரின் அடிமட்டத்தில் அழுத்தப்படும் மிக உயரிய நீரின் அழுத்தம் (Water head) இந்த படத்தின் மூலம் உணரக்கூடியதாக இருக்கிறது.

 

கட்டிட வடிவமைப்பு பொறியியல்(Structural Engineering) திறமைக்கு மிகச் சிறந்த சான்று..

வாழ்த்துக்கள் பொறியாளர்களே! 

 

"Engineers make the world"  சரிதான் !. :icon_idea:

 

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.