Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டுமொரு மாணவர்கள் கொலை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா தாண்டிக்குளத்தில் சிறிலங்காப் படையினரால் மாணவர்கள் நால்வர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது.

வவுனியா விவசாயக் கல்லூரிக்குள் நுழைந்த சிறிலங்காப் படையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டிலேயே மாணவர்கள் நால்வரும் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-புதினம்-

அண்மைக்காலமாக மாணவர்களை சுட்டுக் கொல்வதில் இராணுவம் முனைப்புடன் செயற்பட்டுவருவதை காணமுடிகிறது. இது தொடர்ந்தால் நிலமை என்னவாகும்??????????????

நிலைமை என்னவாகும் தமிழன் பாடசாலைகள்

சுடுகாடாகும்....

புதைகுழிகளாகும்..

கல்வி எதிர்காலம்.. கனவாகும்..

மகிந்தாவை துண்டுதுண்டாய் வெட்டி எறிந்தால்தான்..அநியாயமாக அழிக்கப்பட்ட

எங்கள் உறவுகள் ஆன்மாவாவது சாந்தி பெறும்.

அவன் உலகத்திலேயே மிகவும் கொடியவனாகிவிட்டான்.

பட்டினி போட்டும்..திட்டம் தீட்டியும் எல்லோர் கண்ணெதிரேயும் எம்மக்களை அழிக்கிறானே..

அப்பாவி ஆதரவாளன் அனுதாபி என்ற நிலைகளை எல்லாம் விட்டு மக்களனைவரும் முழு நேரப் பங்காளிகளாவதே இருக்கும் ஒரே வழி!

இதில் நேரடி வாக்கு மூலம்

கொடுத்த மாணவர்களின் உயிருக்கு இனி ஆபத்து

விசாரணைகள் ..எதுவித பயனும் கிட்டா...

அந்த மாணவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்....

பிபிசியில் கெகலியா றம்புக்வெல தெளிவுபடுத்தியிருக்கிறார். சிவிலியன்களை கொல்லுவோம் அதற்கு நட்டஈடு வழங்குவோம்

கையும் கணக்கும் சரி

கைகளை உயர்த்தி மாணவன் என்று கூறியபோதும் தலையில் துப்பாக்கிச்சூடு

வீரகேசரி வாரவெளியீடு

நிலத்தில் படுத்திருந்த அச்சுதன் கையை உயர்த்தியவாறு எழும்பி நின்று நாங்கள் அனைவரும் மாணவர்கள், மாணவர்கள் இது அரசாங்கத்தின் கல்லூரி என்று படையினரிடம் தெரிவித்தார். ஆனால் படையினர் துப்பாக்கி பிடிகளால் அச்சுதனை கடுமையாக தாக்கிவிட்டு தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுதனை சுட்டுக்கொலை செய்தனர். அதேபோல் நிலத்தில் படுத்திருந்த சிந்துஜனின் தலையிலும் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொலை செய்தனர்.

வவுனியா விவசாயக்கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகசம்பவம் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பெறச் சென்ற மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனிடம் இப்படி தெரிவித்துள்ளனர் மேற்படிசம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள்.

சக மாணவர்கள் ஐந்து பேரை பறிகொடுத்த சோகத்தில் அழுது குழறியபடி மாணவர்கள் தாங்கள் கண்டவற்றை நீதிபதியிடம் வாக்குமூலமாகக் கூறினர்.

""நாங்கள் 30 பேர் கல்லூரி வளாகத்திற்குள் வெளிக்கள வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது காலை9.30 மணிக்கு மிகப்பெரிய சத்தம் கேட்டது. அனைத்து இடங்களையும் கரும் புகை சூழ்ந்துகொண்டது. வீதியில் புகைøயை கக்கியவாறு வாகனம் ஒன்று நகர்ந்து செல்வதைக் கண்டோம். தொடர்ந்து துப்பாக்கி குண்டுச் சத்தங்கள்கேட்டன. அனைவரும் நிலத்தில் வீழ்ந்து படுத்தோம்.

குண்டுச் சத்தத்திற்கும் துப்பாக்கி பிரயோகத்திற்கும் பின்னர் சிறிய அமைதி நிலவியது. அப்போது ஏ9 வீதி பக்கமாகவிருந்தும் கல்லூரிக்கு பின்புறமுள்ள வயல் பக்கமாக இருந்தும் திடீரென வந்த படையினர் எம்மை சுற்றி வளைத்துக்கொண்டனர்.

நிலத்தில் படுத்திருந்த எங்களை எழும்பிவருமாறு படையினர் கூறியபோது அச்சுதன் கையை உயர்த்திக்கொண்டு எழும்பி நாங்கள் மாணவர்கள் என தெரிவித்தார். ஆனால் அவரை படையினர் துப்பாக்கி பிடிகளால் கடுமையாக தாக்கினர். நாங்கள் மாணவர்கள் என்று சிங்களத்திலும் கூறினோம்.

ஆனால், படையினர் தொடர்ந்தும் எம்மை தாக்கினர். அச்சுதனின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொலை செய்த படையினர் கீழே படுத்திருந்த சிந்துஜனின் தலையிலும் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொன்றனர்.

thank vk

வட இலங்கைத் தாக்குதல்களில் இராணுவத்தினர் உட்பட 12 பேர் பலி

18 நவம்பர், 2006

bbc1ip4.png

இலங்கையின் வடக்கே வவுனியா, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதல், துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் 5 இராணுவத்தினர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா தாண்டிக்குளம் ஏ-9 வீதியில் இராணுவத்தினர் பயணம் செய்த ட்ரக் வண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஓர் அதிகாரி உட்பட 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

மாணவர்கள் பலி

இந்தத் தாக்குதலையடுத்து இராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் சம்பவ இடத்திற்கு மிக அருகில் உள்ள அரச விவசாய பாடசாலையின் முதலாம் வருட மாணவர்கள் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

காயமடைந்த இராணுவத்தினரும், விவசாய பாடசாலை மாணவர்களும் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. காயமடைந்த இராணுவத்தினரும், மாணவர்களில் 6 பேரும் மேல்சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

bbc2ov1.png

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்தவர்களான 25 வயதுடைய இராமச்சந்திரன் அச்சுதன், 21 வயதுடைய சங்கரலிங்கம் கிந்துஜன், திருகோணமலையைச் சேர்ந்த 22 வயதுடைய சித்திரவேல் கோபிநாத், மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த 22 வயதுடைய சித்திக் ஹசன் ரிஸ்வான் மொகமட், வவுனியா மன்னார் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய திருநாவுக்கரசு சிந்துஜன் ஆகிய மாணவர்களே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், போர்நிறுத்த கண்காணிபபு குழுவினர் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் நடைபெற்ற இடத்தையும், தாக்குதலில் சேதமடைந்த இராணுவ ட்ரக் வண்டியையும் இவர்கள் பார்வையிட்டு விபரங்களைக் கேட்டறிந்தனர்.

விவசாயக் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்திய நீதிபதியிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமக்கு நேர்ந்தவற்றைத் தெரிவித்தனர். கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி, பொலிசாரின் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவ அதிகாரிகளுககும் உத்தரவிட்டுள்ளார். வவுனியா பொலிசார் மேல் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள், இராணுவத்தினர் மற்றும் மாணவர்களின் கருத்துகளை எமது நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.

யாழ் வன்செயல்கள்

bbc3ot1.png

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நீர்வேலி அச்செழு திருநெல்வேலி பாற்பண்ணை வீதி ஆகிய இடங்களில் தமது வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த போது நேற்றிரவு அடையாளம் தெரியாதவர்களினால் கூட்டிச் செல்லப்பட்ட இருவர் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் அச்செழுவைச் சேர்ந்த 26 வயதுடைய முருகையா தர்மசீலனுடைய உடல் கோப்பாய் பகுதியிலும், திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதுடைய நாகேசு வினோதனின் உடல் முத்துத்தம்பி வித்தியாசாலை பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உயிரச்சுறுத்தல் காரணமாக இன்னுமொருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக பொலிசாரின் உதவியோடு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் தஞ்சம் புகுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி பிபிசி தமிழோசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளைமோர் பொருத்தியவர்களுக்கு விவசாயப் பயிற்சிக் கல்லூரி இருப்பது நன்றாகத் தெரிந்திருந்தும் கிளைமோர் பொருத்தியது ஏன் ?

அவர்கள்எதிர்பார்த்தது நடந்துள்ளது .......... . .. ... .

சீவகன் எதிர்பார்த்தது தான் நடந்துள்ளது. ஒரு பக்கச்சார்பானது என்று தெரிந்தும் BBC கேட்ட VERNON இற்கு முளைச்சலவை செய்யப்பட்டு விட்டது.

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்னால் கிளைமோர் வெடித்தால் பல்கலைக்கழக மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து சுடுவார்களா?

தமிழர்கள் எல்லோருமே புலிகள் என அரசு பகிரங்கமாக ஒத்துக் கொள்ளுமா?

சீவகனுக்கு கிளைமோரை யார் வைத்தது என்று ஒரு புதிய சந்தேகம் தோன்றி அதனாலேயே மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக நியாயப்படுத்தியும் உள்ளார்.

என்னைக் கேட்டால் சீவகனை விட கெகெலிய மேல் என்பேன், எனென்றால் அவன் கூட புலிகள் மாணவருக்கு பின்னால் மறைந்து நின்று சுட்டதாலேயே இடையில் அகப்பட்ட மாணவர்கள் பலியானதாக பொய் கூறியே தன்னை நியாயப்படுத்த முயன்றுள்ளான்.

பிற்குறிப்பு (VERNON அவர்களுக்கு ஒரு வசனத்தில் ஈழப்போராட்டம் குறித்த விளக்கம்):

தமிழ் சிறுபாண்மையினரின் அரசியல் பிரச்சனைக்கு நியாயமான தீர்வை வழங்குவதாக கூறிக் கொண்டு அரச அதிகாரம், நீதித்துறை, இராணுவம், சட்டவிரோத ஆயுதக்குழுக்கள், உணவுத்தடை போன்ற அனைத்தையும் பயன்படுத்தியும் தமிழர்களை கொன்றொழிக்கும் அரசுக்கு எதிராக 30 வருடங்களாக அரசியல் போராட்டத்தையும் பின்னர் அது பலனளிக்காதவிடத்து கடந்த 23 வருடங்களா புலிகள் என்ற அமைப்பு அரசியல் கலந்த ஆயுதப் போராட்டத்தையும் நடத்திவருகின்றது.

மேலதிக விபரங்களுக்கு http://ta.wikipedia.org/ இனைப் பார்க்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப் பயங்கரவாதிகள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரிந்திருந்தும் போரளிகள் ஏன் இப்படிச் செய்கிறார்கள். தமிழ் மாணவர்களின் கொலை செய்யப்படுவதை அவர்கள் விரும்பகிறார்களா?

Veenan Wrote "கிளைமோர் பொருத்தியவர்களுக்கு விவசாயப் பயிற்சிக் கல்லூரி இருப்பது நன்றாகத் தெரிந்திருந்தும் கிளைமோர் பொருத்தியது ஏன் ?

அவர்கள்எதிர்பார்த்தது நடந்துள்ளது .......... "

Mayavi wrote "சிங்களப் பயங்கரவாதிகள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரிந்திருந்தும் போரளிகள் ஏன் இப்படிச் செய்கிறார்கள். தமிழ் மாணவர்களின் கொலை செய்யப்படுவதை அவர்கள் விரும்பகிறார்களா?"

Q: In Sri Lanka, do you have to provoke the Sri Lankan Military in order to be killed?

A: No, Not at all. Born as a Tamil is more than enough reason to be killed in the hands of the Sri Lankan Military. If you don't believe it, please read a few examples below and click on the links to read more.

1.) On 22 September 1995, Nagerkoil Central School in the Jaffna peninsula was bombed. The intensified aerial bombing and shelling by Sri Lankan government forces came about within hours of the government's imposition of Press Censorship midnight September 21.

Nagerkoil Central School in the Jaffna peninsula was bombed.

2.) Sri Lanka Air force kills 61 school children and wounds 129 in Vallipunam, 14 August 2006

3.) Trincomalee residents are shocked and angered over the killing of five old students of Trincomalee Sri Koneswara Hindu College in a grenade attack by unidentified men Monday night at about 7.50 p.m. Two old students, one from Sri Koneswara Hindu College and another from St.Joseoh's College in Trincomalee are warded in the intensive care unit (ICU) of the Trincomalee general hospital. All the dead and injured are identified as Tamils and below the age of 20 years. Two of the dead students have gained university admission for the current academic year, police sources said.

Trincomalee residents are shocked and angered over the killing of five old students of Trincomalee Sri Koneswara Hindu College in a grenade attack by unidentified men Monday night at about 7.50 p.m.

கிளைமோர் பொருத்தியவர்களுக்கு விவசாயப் பயிற்சிக் கல்லூரி இருப்பது நன்றாகத் தெரிந்திருந்தும் கிளைமோர் பொருத்தியது ஏன் ?

அவர்கள்எதிர்பார்த்தது நடந்துள்ளது .......... . .. ... .

ஆகா என்ன ஒரு கண்டுபிடிப்பு :P :P தமிழர் பகுதியில் உள்ள சிங்கள வெறியர்களை வெளியேற்ற எப்படி தாக்குதல் செய்யவேண்டும் என்று நாக்கை தொங்க போஒட்டு கொண்டு ஒரு இனப்பிறவி கருத்து எழுதி இருக்கு.......

இதே இனப்பிறவி இதுவரை சிங்கள விமானப்படையினரின் தாக்குதலில் இறந்த பொதுமக்களின் இறப்புக்கு சொல்ல வரும் காரணம்????? சிங்களவனுக்கு குண்டி கழுவிக்கொண்டு இருந்தால் இந்த வீண் இழப்புக்கள் வராது என்றா? :unsure:

போராளி மேல ஆமி குண்டு போடலாம்..

ஆமியை போராளி கொல்லக்கூடாது...அப்படியா..

கிளைமோர் ஆமிக்கு வைக்கிறது.. நாகிறதும் ஆமிதான்..

சிங்கள் நாய்களைப்போல் மக்களைச் சாகடிப்பது இல்லை..

பொதுமக்களுக்கு எதுவும் ஆகாமல்தான் எல்லாத் தாக்குதலும் திட்டமிடப்படுகின்றன..

இதற்கு சிறந்த உதாரணம்..கட்டுநாயக்கா விமானநிலயத்தாக்குதல்..

நீங்களெல்லாம் தமிழர்கள்தானா..

தமிழச்சி வயிற்றில்தான் பிறந்தீர்களா..

எழுதுவதை சிந்தித்து எழுதுங்கள்.

மாயாவி,

சங்கிலித் தொடர் போன்ற நிறைய சம்பவங்களை கோர்வையாக கொண்ட ஒரு நீண்ட தொகுப்பில் இறுதியாக நடைபெற்ற ஒன்றை உங்களுக்கு விளக்க நாம் ஆரம்பம் வரை சென்றாக வேண்டும். பொதுவாக சொல்வதானால்,

புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே யுத்தம் நடக்கிறது.

அது போர்களத்திலும் (முன்னரங்குகளில்) நடக்கிறது.

யுத்தகளத்திற்கப்பால் வெகு தொலைவிலும் நடக்கிறது.

புலிகள் நேருக்கு நேர் தாக்குகிறார்கள், மறைந்திருந்து தாக்குகிறார்கள்.

யாரை தாக்குகிறார்கள்? இராணுவ இலக்குகளை தாக்குகிறார்கள்.

ராணுவம் திருப்பித் தாக்குகிறது. அது மக்களை ஏன் தாக்குகிறது.

ஏன் புலிகளுக்கு அவ்வாறு சிங்கள மக்களை தாக்குவது கடினமானதா?

83 இல் 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதை நியாயமாக காண்கிறீர்களா?

மக்களை கொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

மக்கள் கொல்லப்பட்டதாலேயே போராட்டம் ஆரம்பமாயிற்று.

இப்போதும் எதிரி எங்களை கொல்கிறான் என்பதால் போரை நிறுத்திவிடச் சொல்கிறீர்களா.

எங்கள் மக்கள் கொல்லப்படுவதை கண்டு நாங்களே சந்தோசப் பட முடியுமா.

காயமடைந்த மாணவர்களின் வாக்கு முலங்களை கேட்டீர்கள் தானே? அவர்கள் யார் மீது கோபமாக இருக்கிறார்கள்?

போராளி என்பவன் ஒரு வேற்றுக் கிரகவாசியா? ஒரு அப்பாவி மாணவனாகவும் தமிழ் தாய்க்கு மகனாகவும் இருந்தவனே இந்தச் சமுகத்தின் அவல நிலையால் பாதிக்கப்பட்டு தன்னை போராளியாக உறுமாற்றிக் கொண்டவனே.

தட்டிக் கேட்க ஆளில்லாமல் கட்டுக்கடங்காமல் அடாவடி செய்யும் ஒருவனை கண்டிக்க வழியில்லை என்பதற்காக அவன் செய்வதை நியாயப்படுத்தியும் பாதிக்கப்பட்டவனை குற்றம் சாட்டுவதும் எவ்வகையில் நியாயம்?

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில்தான் வவுனியா மாணவர்கள் படுகொலை: கண்காணிப்புக் குழு

சிறிலங்கா இராணுவத்தினரால்தான் வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

"வவுனியாவில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த இருதரப்பு மோதலில் சிக்கி 5 பொதுமக்கள் உயிரிழந்தனர்" என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இதனை நிராகரித்துள்ளது.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஓல்ப்ஸ்டொட்டிர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வவுனியா சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து:

தங்களது கல்லூரிக்கு அருகே நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் கிளைமோர் தாக்குதல் சத்தத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக தரையில் படுத்திருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். கல்லூரி வேலியைத் தாண்டிக் குதித்து வளாகத்துக்குள் உள்நுழைந்து இத்துப்பாக்கிச் சூட்டை இராணுவத்தினர் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மிக அருகில் நின்று இராணுவத்தினர் நடத்திய இத் துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார் அவர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

S.Lankan troops opened fire on students -- monitors

COLOMBO, Nov 19 (Reuters) - Nordic truce monitors said on Sunday Sri Lankan troops opened fire on a group of agriculture students at close range in the island's north on Saturday, killing five, after a deadly rebel ambush on government forces.

A military spokesman said ground troops told him the civilians were killed in crossfire after a Tamil Tiger blast in the northern district of Vavuniya killed five soldiers on Saturday, and that police were investigating.

"These soldiers fired indiscriminately at a group of students who had thrown themselves on the ground seeking safety after an LTTE (Tamil Tiger) Claymore mine blast nearby," Helen Olafsdottir, spokeswoman for the Sri Lanka Monitoring Mission that oversees the 2002 ceasefire, told Reuters.

"Witnesses say that soldiers jumped over the fence, into the agricultural school premises, and opened fire," she added. "They shot from close range, five of the students were killed and at least 10 others were injured."

The killings are the latest in a series of abuses monitors have pinned on both sides in a new chapter in the island's civil war, which has cause more than 67,000 deaths since 1983 -- more than 3,000 of them this year alone.

-Reuters

http://www.alertnet.org/thenews/newsdesk/COL244139.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை கண்காணீப்பு குழுவின்ர அறிக்கை யாருக்கு வேணும் தூக்கி குப்பையில போடுங்கோ ஒரு சதத்துக்கும் பிரியோசனமில்லாதது

மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் படுகொலைகளை ஆண்டவனாவது தடுத்து நிறுத்துவாரா?

`படுகொலை கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள்' என்று சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் சர்வதேச சமூகமும் கடுமையாக வலியுறுத்தியும் வேண்டுகோளும் விடுத்து வருகின்ற போதிலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை வவுனியா விவசாயக் கல்லூரியில் 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். `நாங்கள் மாணவர்கள், அரச கல்லூரியில் படிக்கின்றவர்கள்' என்று மாணவன் ஒருவன் தலைக்கு மேல் கைகளை உயர்த்தியவாறு கூறியபோதும் அவரை படையினர் சுட்டுக் கொன்றதாக மாணவி ஒருவர் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனிடம் மரணவிசாரணையின் போது வாக்குமூலம் அளித்திருக்கிறார். `எங்களுக்கு பயமாக இருக்கிறது பாதுகாப்பு இல்லை' என்று மாணவர்கள் நீதிபதியிடம் கதறியழுதவாறு தெரிவித்துள்ளனர்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசாங்கக் கல்லூரி வளாகத்தில் இந்தப் படுகொலைகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் இது தொடர்பாக அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்பதே மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வியாகும்.மூன்று தசாப்த காலமாக உக்கிரமாக நீடித்துச் செல்லும் இன மோதல்களுக்கு சர்வதேச சமூகத் தலையீட்டினால் 2001 இன் ஆரம்பத்தில் சிறிதளவுக்கு முடிவு கட்டப்பட்டது.அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கையையிட்டு சுமார் 4- 1/2 வருடங்கள் தணிந்திருந்த வன்செயல்கள் கடந்த ஒரு வருடமாக மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

இந்த வன்முறைகளினால் தமிழ் மக்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வட,கிழக்கில் ஆட் கடத்தல்கள், படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைது செய்யப்படுவதும் நள்ளிரவில் வீடுகளில் உறங்கிக் கொண்ருக்கும் வேளையில் இனந்தெரியாதோரால் கடத்தப்படுவதும் சடலங்களாக வீசப்பட்டுக் கிடப்பதும் யாழ்.குடாநாடு உட்பட வட,கிழக்குப் பகுதிகளில் அன்றாடம் இடம்பெறும் நிகழ்வுகளாகி விட்டன. இந்த கொடூரச் செயலின் ஓரங்கமாக வவுனியாவில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 10 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கிளேமோர் தாக்குதலில் படை வீரர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்தே அருகிலிருந்த விவசாயக் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கின் பாதுகாவலர்களாலேயே இந்த அடாவடித்தனங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் அப்பாவி மக்கள் யாரிடம் நீதி கேட்பது என்பதே பிரதானமான கேள்வியாகும். நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான விசாரணைக் குழுவை சர்வதேச அவதானிகளின் பங்களிப்புடன் செயற்படுத்துவதாக அரச தலைமைப்பீடம் உறுதியளித்திருக்கின்ற போதிலும் அவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பாரிய அசம்பாவிதங்கள் இடம்பெறும் போதெல்லாம் சட்டரீதியான நடவடிக்கைகள் இடம்பெற்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் நீதியின் முன் அனைவரும் சமம் என்றும் தெரிவிக்கப்படும் உறுதிமொழிகளின் நம்பகத் தன்மையை அங்கீகரிக்கும் நிலையில் மக்கள் இப்போது இல்லையென்றே கூற வேண்டும்.

உயிருக்கு உத்தரவாத மற்ற நிலையில் விரக்தியில் தவிக்கும் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு நம்பிக்கைக் கீற்றாக அண்டை நாடான இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் கரிசனையே காணப்படுகிறது. `இந்த மாதிரியான வன்முறைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதென்பதை நாங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறோம். அப்பாவி பொதுமக்கள் அதிலும் அதிகமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தை அவர் பகிரங்கப்படுத்தியிருக்கிறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.