Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயூரன் மற்றும் மைக்கல் சான்ஆகியோரின் தண்டனையைக் குறைக்க லஞ்சம் கேட்ட இந்தோனேசிய நீதிபதிகள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசிய பாலித் தீவில் 2005 இல் போதைப் பொருளை வைத்திருந்தனர் என்கிற பெயரில் கைதுசெய்யப்பட்ட 9 அவுஸ்த்திரேலியர்களின் குழுத்தலைவர்கள் என்றழைக்கப்படும் மயூரன் சுகுமாரன் மற்றும் மைக்கேல் சான் ஆகியோர் சார்பாக இதுவரை வாதிட்டு வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

அவரின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட, பாலி என்றழைக்கப்படும் உல்லாசபுரியில் போதைப் பொருள் வைத்திருந்த மற்றும் கடத்த முனைந்தவர்களுக்கான தண்டனை ஒரு போதுமே மரண தண்டனையாக இருந்ததைல்லை என்றும், அதிக பட்ச தண்டனையாக 20 வருடங்கள்தான் இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்படும் என்று இவர்களின் வழக்கில் தீர்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னர் கூறி வந்திருக்கிறது.

 

மேலும், இந்த 20 வருட தண்டனையை 15 வருடங்களாக தம்மால் குறைக்கமுடியும் என்றும் இந்தச் சட்டத்தரணியிடம் கூறிய அந்த மூன்று நீதிபதிகளும், அப்படி செய்வதானால் தமக்கு அவுஸ்த்திரேலிய நாணயப்படி 130,000 டாலர்களை லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார்கள். உடனேயே தனக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களூடாக இந்தப் பணத்தொகையை சேர்க்க தாம் முனைந்துகொண்டிருந்தவேளையில், திடீரென்று இவர்களது 20 வருட சிறைத்தண்டனை மரண  தண்டனையாக மாற்றப்பட்டதை ஆரம்பத்தில் தான் ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும்கூட பின்னர் அது உறுதிசெய்யப்பட்டது  தமக்கு அதிர்ச்சியளித்ததாக இந்தச் சட்டத்தரணி மேலும் கூறினார்.

 

20 வருட காலம் என்று தீர்மானிக்கப்பட்ட தண்டனை எதற்காக திடீரென்று மரண தண்டனையாக மாற்றப்பட்டது என்று தாம் இந்த நீதிபதிகள் குழுவை வினவியபோது, தமக்கு மேலுள்ள நீதித்துறை அதிகாரிகளின் வற்புறுத்தலினாலும், பலம் பொருந்திய இந்தோனேசிய அரசியல்வாதி ஒருவராலுமே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதென்று பதில் கிடைத்ததாக தெரிவித்திருக்கிறார்கள். 

 

இதற்குக் காரணம் அவுஸ்த்திரேலிய மற்றும் இந்தோனேசிய அரசுகளுக்கிடையில் அப்போது நிலவிவந்த இறுக்கமான போக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் தான் என்று இந்தோனேசிய அரசைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் இந்தச் சட்டத்தரணியின் கூற்றை ஆதரித்து கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

 

2001 இல் இந்தோனேசிய பாலித் தீவில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளால் உல்லாசப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 202 பேர் கொல்லப்பட்டது உங்களுக்கு நினவிருக்கலாம். இந்த 202 பேரில் 80 இற்கும் அதிகமானவர்கள் அவுஸ்த்திரேலியர்கள் என்பதும், அவர்களது கொலைக்குக் காரணமானவர்களை கைதுசெய்து தண்டிக்கும்படி அப்போதிருந்த அவுஸ்த்திரேலியாவின் ஜோன் ஹவார்ட் தலமையிலான அரசு சர்வதேசத்தினூடாக இந்தோனேசிய அர்சின்மேல் அழுத்தம் கொடுத்ததும், வேறு வழியின்றி எரிச்சலுடனேயே இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளை இந்தொனேசிய அரசு நடத்தியதென்பதும் குறிப்பிடத் தக்கது. 

 

வழக்கின் முடிவில் குண்டுத்தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் என்கிற பெயரில் இருவரைக் கைதுசெய்து காட்டிய இந்தொனேசிய அரசு இந்தத் தாக்குதலுக்குக் காரணமான இந்தொனேசிய இஸ்லாமியப் பயங்கரவாதிகளான ஜமாயித் இஸ்லாமியா என்கிற கொலைக் குழுவின் தத்துவ ஞானியான அபுபக்கார் அல் பஷீர் என்கிற பயங்கரவாதியை கண்துடைப்பிற்காக சிறையில் அடைத்ததும் , உள்ளே அவனை சகல அரச மரியாதைகளுடனும் நடத்தி, இறுதியில் எந்தக் குற்றச் சாட்டும் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டதும் ஊடகங்களில் வெளிவந்தது. 

 

ஆக, குற்றம் சாட்டப்பட்ட இரு பயங்கரவாதிகளுக்கும் வேண்டா வெறுப்புடன் மரண தண்டனையை நிறைவேற்றிய இந்தொனேசிய அரசியல்வாதிகளும், நீதித்துறையும் இதற்குப் பழிவாங்கக் காத்திருந்தன என்றும், 2005 பாலித்தீவில் 9 அவுஸ்த்திரேலியர்கள் போதைப் பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டது, தமது பழிவாங்கும் படலத்தை இவர்கள் தொடங்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததென்றும் கூறப்படுகிறது. 

 

அதனால்த்தான் 20 வருடங்கள் என்று ஆரம்பத்தில் எதிர்வு கூறப்பட்ட தண்டணை மரண தண்டனையாக மாற்றப்பட்டதும், இன்றுவரை அவுஸ்த்திரேலிய மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கும் மசியாமல் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனையை எப்படியாவது நிறைவேற்றியே தீர்வதென்று இந்தொனேசிய அரசும் நீதித்துறையும் கங்கணம் கட்டி நிற்கின்றன. 

 

இப்படிச் செய்வதன்மூலம், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தமது தோழர்களான இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் மரணத்துக்குப் பழி வாங்கியது மட்டுமல்லாமல், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடையேயான தனது சரிந்துபோன செல்வாக்கை உயர்த்த இந்த தண்டனை நிறைவேற்றம் உதவுமென்றும் இந்தொனேசிய அரசும், நீதித்துறையும் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

 

தற்போது வெளிவந்திருக்கும் நீதிபதிகளின் லஞ்ச கோரிக்கை பற்றி இந்தொனேசிய நீதித்துறையிடம் நிருபர்கள் கேட்டபோது, முதலில் மரண தண்டனையை நிறைவேற்றுவோம், பின்னர் இந்த வழக்கில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக சாவகாசமாக விவாதிக்கலாம் என்று அலட்சியத்துடன் பதிலளித்திருக்கிறது. 

 

ஆக, எது நடந்தாலும், எத்துணை அழுத்தம் வந்தாலும், அவுஸ்த்திரேலியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்காமலும், தனது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மரணத்துக்குப் பழிவாங்காமலும் இந்தோனேசிய அரசும் நீதித்துறையும் ஓயப்போவதில்லை என்பது தெளிவு !

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Wrong place at the wrong time doing wrong things: Destiny

அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்க, இங்குள்ள படிப்பினை என்னவெனில், சட்டத்துக்கு புறம்பாக குறுக்கு வழியில் பணம் உழைப்பதில் Risk ஆவது, உயிர் அல்லது சுதந்திரம் எனில் அதை எடாமல் இருப்பதே நல்லது.

Edited by Nathamuni

மைகேல் சான்?

அது அன்டுரு சான்.

  • கருத்துக்கள உறவுகள்

மைகேல் சான்?

அது அன்டுரு சான்.

ரெண்டு பேருமில்லை 

அது ஜாக்கி சான்  :D  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு பேருமில்லை

அது ஜாக்கி சான் :D:D:D:D

உயிர்....இந்த ரணகளத்திலும், சிரிப்பா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்....இந்த ரணகளத்திலும், சிரிப்பா?

வேறு என்ன செய்வது 

அவர்கள் செய்தது தவறு  என்பது ஒரு புறமிருக்க 

முஸ்லிம் நாடுகளிடம் மனித நேயம் முதலிய இவையெல்லாம் எடுபடக்கூடியவைகளா ...?

சும்மா நமது சக்தி மட்டும் தான் விரயம் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.