Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு காதல் கதை!

Featured Replies

ஒரு காதல் கதை!

அவனும் அவளும் பார்த்தவுடனேயே காதலிக்கத் தொடங்கி விட்டார்கள். அவன் அவளுக்காக காத்திருப்பான். காத்திருப்பது சுகம் என்று கவிதை சொல்வான். அவள் அவனுடைய கவிதை கேட்பதற்காகவே நேரம் பிந்தி வருவாள். அவனும் அவளும் யாரும் இல்லாத நேரத்தில், யாரும் இல்லாத இடத்தில் சந்தித்துக் கொள்வார்கள். அதிகமாகப் பேசி கொஞ்சமாக தொட்டுக் கொள்வார்கள். அவனும் அவளும் வீதியில் காணுகின்ற பொழுது கண்காளால் மட்டும் பேசிக் கொள்வார்கள். காணாத போது மனதால் பேசிக் கொள்வார்கள்.

அவனும் அவளும் பேசிக் கொள்வதைப் பற்றி ஊரும் பேசத் தொடங்கியது. அரசல்புரசலாக தொடங்கியது ஒரு நேரத்தில் அதுவே எங்கு பார்த்தாலும் பேச்சு என்று ஆகிப் போனது. வழமை போன்று ஊருக்கெல்லாம் தெரிந்த பிறகுதான் அவனுடைய வீட்டிலும் அவளுடைய வீட்டிலும் தெரிய வந்தது. இரண்டு வீடுகளிலும் பூகம்பம் வெடித்தது. ஒரு வீட்டில் தூக்குக் கயிறும், மற்றைய வீட்டில் அரளி விதையும் ஆயுதங்கள் ஆகின. ஆனால் யாரும் இறக்கவில்லை. பெரியவர்கள் இறந்து விடுவோம் என்பார்கள். ஆனால் உண்மையில் இறந்து போவது காதலிப்பவர்கள்தானே?

நல்ல வேளை! அவனும் அவளும் அந்த முடிவை எடுக்கவில்லை. காதல் மட்டும் செய்வோம் என்ற முடிவை எடுத்தார்கள். அவளை அவளுடைய வீட்டார் தூர தேசத்தில் யாரோ ஒருவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டார்கள். சிலகாலம் கழித்து அவனுக்கும் அவனுடைய வீட்டார் பக்கத்து ஊரில் ஒரு பெண்ணை கலியாணம் செய்து வைத்தார்கள்.

காலம் உருண்டோடியது. இப்பொழுது அவன் "அவர்" ஆகி விட்டார். அவருக்கு ஊரில் நல்ல மதிப்பு இருந்தது. அவருடைய பேரப்பிள்ளைகள் தாத்தாவின் பெயரைச் சொல்லி தங்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்துகின்ற அளவிற்கு அவர் எல்லோரிடமும் அறிமுகமாகி இருந்தார். ஊர் மக்களுக்கு பல உதவிகள் செய்தார். நலத்திட்டங்களுக்கு வாரி வழங்கினார். அத்துடன் பல திட்டங்களை அவரே உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். மாதத்திற்கு ஒரு தடவையாவது பத்திரிகைகளில் அவரைப் பற்றிய செய்தி வரும்.

அவர் அவ்வளவையும் செய்தது அவளுக்காக. அவள் என்ன ஆனாள் என்று அவருக்கு தெரியாது. ஆனால் எங்கோ ஒரு மூலையில் அவள் இருப்பாள் என்றும், அவளுடைய இதயத்தின் ஒரு மூலையில் அவரும் இருப்பார் என்றும் அவர் நம்பினார். அவரைப் பற்றி யாராவது ஒருவர் அவளிடம் சொல்வார்கள் என்றும், அவருடைய பெயர் பத்திரிகையில் வருகின்ற போது அவள் படித்து பரவசம் அடைவாள் என்றும் அவர் அடிக்கடி கற்பனை செய்து கொள்வார். அவருடைய கற்பனைகள் அத்தோடு நின்று விடுவதில்லை.

அவருடைய அன்பான மனைவிக்கு வெளியே போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவனும் அவளும் சந்தித்த அந்த இடங்களுக்கு சென்று சில நிமிடங்கள் இருந்து விட்டு வருவார். சில நாட்களில் மணிக் கணக்கிலும் இருப்பது உண்டு. ஆனால் அவர் அவளை தேட முயற்சி செய்தது இல்லை. இதயத்தில் இருப்பவளை எதற்கு தேட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அவள் வயதினை ஒத்த பெண்களை கண்டால் அவளாக இருக்குமோ என்று அவர் மங்கலான கண்களால் கூர்ந்து கவனிப்பது உண்டு.

இயற்கையின் விதிப்படி ஒரு நாள் அவர் படுக்கையில் வீழ்ந்து விட்டார். வைத்தியர்கள் வந்தார்கள். அவர்களால் நாளை மட்டும்தான் குறிக்க முடிந்தது. நிறையப் பேர் அவரை வந்து பார்த்தார்கள். ஒவ்வொருவர் வருகின்ற பொழுதும் அவர் கண் முழித்துப் பார்ப்பார். அவளாக இருக்குமோ என்று ஒரு எண்ணம். அவர் விரைவில் விடைபெறப் போகிறார் என்ற செய்தி பல இடங்களில் பரவியது. பத்திரிகைகளிலும் வந்தது. அவரைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. அவள் வரவில்லை. வைத்தியர் குறித்த நாளும் முடிந்து விட்டது.

அவர் உயிரைக் கையில் பிடித்திருந்தார். எப்படியும் அவள் செய்தி கேட்டுப் பார்க்க வருவாள் என்று அவர் போக இருந்த உயிரை பிடித்து வைத்திருந்தார். இயங்காமல் இருக்கின்ற அவர் இறப்பது நல்லது என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் உயிரோடு இருப்பது அவருக்கும் மற்றவர்களுக்கும் சுமை என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் அவருடைய விழிகள் வாசலைப் பார்த்தபடி இருந்தன. அவள் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் கடும் வேதனையை அனுபவித்தார்.

அன்று ஒரு நாள் வழமை போன்று விடிந்தது. அன்றும் நிறையப் பேர் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். வந்தவர்களில் இருவர் பேசிக் கொள்வது அவருக்கு கேட்டது. "இப்பொழுதே இத்தனை பேர் வந்தால், இவர் இறந்தால் எத்தனை பேர் வருவார்கள், இப்பொழுது வராதவர்களும் அப்பொழுது வருவார்களே" அவர்கள் பேசிக் கொண்டார்கள். அதைக் கேட்டதும் அவருடைய உடல் ஒரு முறை சிலிர்த்தது. தினம் தினம் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த அவர் நிம்மதியாகக் கண்ணை மூடினார்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சார் உங்கட கதைய வாசிக்கிறப்ப முதல் மரியாதை படம் நினைவுக்கு வருதே

ஒரு பெரிய நாவலுக்குரிய கதையை..சுருக்கி சிறுகதையாக்கிவிட்டீர்களே..

அதுசரி..என்னதான் காதலி என்றாலும்..இன்னொருவன் மனைவியான பின்..நினைப்பது சரிதானா..

ம்ம்ம்ம் பாவம்..சோகமா இருக்கு முடிவு...ஆனால் எழுத்த்டு வாசிக்கும் போது தடையில்லாம போறது..நானும் இப்படி தான் எழுதனும் என்று நினைக்கிறேன்..வருதில்லை..வாழ்

  • தொடங்கியவர்

கறுப்பி! இன்னொருவனோடு உறவு வைத்திருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவளின் கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு பெரிய மனிதரின் மனதுக்குள் காதல் பூப்பது "முதல் மரியாதை" படத்தின் கதை!

அதற்கும் என்னுடைய கதைக்கும் சம்பந்தம் இல்லை.

ஆயினும் கதையில் வருகின்ற 2 காட்சிகள் "முதல் மரியாதை" படத்திலும் வருகின்றன.

அவர் மீது ஊர் மக்கள் மரியாதை வைத்திருப்பது

அவர் மரணப் படுக்கையில் அவளுக்காக காத்திருப்பது

இதனால் அந்தப் படத்தின் ஞாபகம் உங்களுக்கு வந்திருக்கலாம். வேறு சிலருக்கும் வரக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி! இன்னொருவனோடு உறவு வைத்திருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவளின் கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு பெரிய மனிதரின் மனதுக்குள் காதல் பூப்பது "முதல் மரியாதை" படத்தின் கதை!

அதற்கும் என்னுடைய கதைக்கும் சம்பந்தம் இல்லை.

ஆயினும் கதையில் வருகின்ற 2 காட்சிகள் "முதல் மரியாதை" படத்திலும் வருகின்றன.

அவர் மீது ஊர் மக்கள் மரியாதை வைத்திருப்பது

அவர் மரணப் படுக்கையில் அவளுக்காக காத்திருப்பது

இதனால் அந்தப் படத்தின் ஞாபகம் உங்களுக்கு வந்திருக்கலாம். வேறு சிலருக்கும் வரக் கூடும்.

கதையென்று எல்லாரும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் தான் நிற்கிறார்கள். காதலிப்பது கைவிடுவது இல்ல இன்னொன்றை திருமணம் முடிப்பது பின் களவா இன்னொன்றைக் காதலிக்கிறது...அல்லது கலியாணம் முடிக்கிறது...இரக்கப்படுறது ஒரு வாழ்வை அழித்து இன்னொரு வாழ்வுக்கு மறுவாழ்வு அளிக்கிறது...மனப்பலவீனங்களால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்தக் கதையின் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

சிறுகதையின் மூலம் நல்ல கருத்துக்கள் பரப்பப்பட வெண்டும்.

இதிலே நீங்கள் காதலித்துவிட்டு பெற்றோரின் எதிர்ப்பினால் கைவிட்டதைச் சொல்கிறீர்கள்.

பிறகு இன்னொருவனுக்கு மனைவியாகிவிட்டவளை நினைத்துக் கொண்டிருந்ததைச் சொலகிறீர்கள்.

ம்ம்ம் எல்லாருக்கும் 'புத்தி' சொல்லும் நீங்களே இப்படி எழுதலாமா?

அதுவும் முதல் மரியாதை படத்தை உல்டா வேறு பண்ணியிருக்கிறீர்கள். தேவையா இது.

முதலில் நல்ல சிறுகதைகளை வாசியுங்கள். பிறகு கதை எழுத முயற்சியுஙகள்

  • தொடங்கியவர்

எந்த ஒரு கருத்தை சொல்வதற்கோ, விவாதத்தை உருவாக்குவதற்கோ நான் இந்தக் கதையை எழுதவில்லை.

வழமையாக நான் அப்படித்தான் எழுதுவது உண்டு. ஆனால் இந்தக் கதையில் என்னுடைய நோக்கம் அதுவல்லை.

வழமையான கண்ணோட்டத்தோடு இந்தக் கதையை பார்க்க வேண்டாம்.

முதல் மரியாதை படம் போன்று இருக்கிறது என்று குற்றச்சாட்டு மீண்டும் வருகிறது.

நான் குறிப்பிட்ட இரண்டு ஒற்றுமைகளை தவிர படத்திற்கும் என்னுடைய கதைக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.

அத்துடன் இங்கே நான் கண்ணியமான காதலை சொல்லி இருப்பதாகத்தான் நினைக்கிறேன். அவர் அவளை நினைக்கிறார். அவருக்கு அவள் காதலிதானே. அத்துடன் அவர்கள் காதலை "மட்டும்" செய்வோம் என்ற முடிவையும் எடுக்கிறார்கள். மற்றையபடி தன்னுடைய குடும்பத்தை நன்றாக வைத்திருக்கிறார். காதல் என்பது வேறொருவரை திருமணம் செய்வதன் மூலம் இல்லாமல் போய்விடும் என்றால், காதல் குறித்து இத்தனை காலமும் சொல்லி வந்தது பொய் என்று ஆகிவிடும்.

இக் கதையை பெரிய நாவலாக எழுதியிருந்தால், மேலும் தெளிவு சில வேளைகளில் ஏற்பட்டிருக்கலாம்.

கதை படித்து ஒரு எழுத்தாள நண்பர் தொலைபேசி எடுத்தார். அவர் ஏறக்குறைய விகடகவி சொன்னது போன்று சொன்னார். ஒரு பெரிய நாவலை சிறுகதையாக எழுதுவது எப்படி என்பதை உங்களின் கதை சொல்கிறது என்றார். ஒவ்வொரு பந்தியிலும் ஒரு தனிக்கதை இருக்கிறது என்றும், எழுத்துக்குள்ளே சொல்லப்படாத விடயங்கள் இருக்கிறது என்றும் சொன்னார்.

உதாரணமாக ஒன்று சொன்னார்: "அவளை தூர தேசத்தில் கலியாணம் செய்து வைக்கிறார்கள். அவனுக்கு பக்கத்து ஊரில் கலியாணம் நடக்கிறது." இதை அப்படியே படிக்கின்ற பொழுது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மீண்டும் படிக்கின்ற பொழுது, ஒருவனை காதலித்த பெண் தூர இடத்தில் கலியாணம் செய்ய வேண்டிய நிலையும், ஆனால் ஆணுக்கு எந்தப் பிரச்சனையும் இன்றி பக்கத்து ஊரில் கலியாணம் செய்யக்கூடியதாக இருப்பதும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது தெரிகிறது.

இப்படி அவர் என்னுடைய சிறுகதையை ஒரு மணித்தியாலம் ஆய்வு செய்து தள்ளி விட்டார்.

அவருடைய பாராட்டுக்களையும் ஏற்றுக் கொண்டேன். அதே போன்று விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய நாவலுக்குரிய கதையை..சுருக்கி சிறுகதையாக்கிவிட்டீர்களே..

அதுசரி..என்னதான் காதலி என்றாலும்..இன்னொருவன் மனைவியான பின்..நினைப்பது சரிதானா..

நல்ல கேள்வி விகடகவி சார்.

இன்னொருவன் மனைவியான பின் நினைப்பது தவறு என்று வாதிட்டாலும் நடைமுறை வாழ்வில் நினைப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

இது ஒரு காதல்கதை எண்டு சபேசன் சார் வேறு சொல்லி விட்டாரே.

முதல் காதலும் சரி முதல் முத்தமும் சரி யாராலும் மறக்கமுடியாது என்று சொல்வார்களே. அப்படி மறந்து வாழ்வது என்பது ஒருவேளை தன்னினைவு அற்றவனாக இருக்கலாம் அல்லது காதலை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துபவராக இருக்கலாம்.

திருமணம் செய்பவர்கள் எல்லோரும் முதல் காதலை முதல் காதலியை மறப்பவராக இருக்கமுடியாது இதயத்தில் எங்கோ ஓர் மூலையில் அதைப்பற்றிய நினைவு இருக்கத்தான் செய்யும் என்பது என் எண்ணம் விகடகவி சார்.

அதனால் தான் கதையில் சபேசன் சார் காதல் கதையில் அவளைப்பற்றிய நினைவை மறக்க முடியாமல் சித்தரித்திருக்கிறார் எண்டு நினைக்கிறன்.

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காதலர்களைப் பெற்றோர்கள் பிரித்தார்கள். சிறிலங்கா பயங்கரவாத அரசின் கொலைப்பசிக்குத் தப்ப ஒடி உலகப் பந்தில் வெவ்வேறு திசையில் பல காதலர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். அந்தக்காதலர்களும் ஒரு நாள் பார்ப்போமா என்று ஏக்கம் இருக்கும்.

கந்தப்ஸ் உங்களுக்கு ஒரு பச்சைப்புள்ளி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்ஸ் உங்களுக்கு ஒரு பச்சைப்புள்ளி :rolleyes:

உங்களுக்கு சொந்த அனுபவம் எதோ இருக்கிறது போலக்கிடக்குது ஆதிவாசி....

  • 1 month later...

கதைதானே. வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது. சபேசனுக்கு கதைவிடவும் தெரியும், எழுதவும் தெரியும். ஐயோ ஐயோ. :rolleyes:

ம்ம்ம்ம் பாவம்.. சோகமா இருக்கு முடிவு... ஆனால் எழுத்த்டு வாசிக்கும் போது தடையில்லாம போறது.. நானும் இப்படி தான் எழுதனும் என்று நினைக்கிறேன்..வருதில்லை..வாழ்த்துக்கள்

எப்படித்தான் எழுதனும் என்று நினைக்கிறீங்கள்? :icon_idea:

கதையென்று எல்லாரும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் தான் நிற்கிறார்கள். காதலிப்பது கைவிடுவது இல்ல இன்னொன்றை திருமணம் முடிப்பது பின் களவா இன்னொன்றைக் காதலிக்கிறது...அல்லது கலியாணம் முடிக்கிறது...இரக்கப்படுறது ஒரு வாழ்வை அழித்து இன்னொரு வாழ்வுக்கு மறுவாழ்வு அளிக்கிறது... மனப்பலவீனங்களால் ஒழுக்கம் எங்க கெடுகுதோ அதெல்லாம் கதையாகும்..அதையே புரட்சி என்றது..ஆக மொத்தத்தில் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட நினைக்கும் எண்ணங்கள். :P

நெடுக்ஸ் 2006இல் எழுதுவதற்கும் தற்போதும் எழுதுவதற்கும் கொள்கையில், சிந்தனையில் மாற்றங்களை காணவில்லை. வட்ஸ் ரோங்க் என்று கேட்பதோ அல்லது வாழ்த்துகள் என்று கூறுவதோ... தெரியவில்லை.

இந்தக் காதலர்களைப் பெற்றோர்கள் பிரித்தார்கள். சிறிலங்கா பயங்கரவாத அரசின் கொலைப்பசிக்குத் தப்ப ஒடி உலகப் பந்தில் வெவ்வேறு திசையில் பல காதலர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். அந்தக்காதலர்களும் ஒரு நாள் பார்ப்போமா என்று ஏக்கம் இருக்கும்.

அதனால்தான் வலைத்தளம் ஊடாக உங்கள் தேடல் தொடர்கின்றதோ கந்தப்ஸ்? :wub:

சபேசன், மேலே குறுகிய கதையாக வாசிக்கும்போதுள்ள சுவாரசியம் நாவலில் கிடைக்குமா என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காதலர்களைப் பெற்றோர்கள் பிரித்தார்கள். சிறிலங்கா பயங்கரவாத அரசின் கொலைப்பசிக்குத் தப்ப ஒடி உலகப் பந்தில் வெவ்வேறு திசையில் பல காதலர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். அந்தக்காதலர்களும் ஒரு நாள் பார்ப்போமா என்று ஏக்கம் இருக்கும்.

இப்போ புலம்பெயர் மாவட்டங்கள் மிகவும் சுருங்கி விட்டன, ஒருநாள் பார்ப்போமா என்று ஏங்கியவர்கள் பார்த்ததுமட்டுமல்ல மீண்டும் காதலையும் வாழ வைத்துக் கொண்டு கட்டியதையும் சாகடித்துக் கொண்டு இருக்கிறார்கள்! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.