Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோன் கெரியுடனான சந்திப்பு திருப்தி: த.தே.கூ. தெரிவிப்பு

Featured Replies

article_1430659017-IMG_5199.jpg

 

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, பூரண திருப்தியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
43 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்கு இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
 
'ஜோன் கெரியுடனான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்பில், யுத்தம் காரணமாக  இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற சுமார் 67 ஆயிரம் நிலப்பரப்புகளை மக்களிடம் மீளக் கையளிப்பதனூடாகவே மீன்குடியேற்றம் சாத்தியப்படும் என்பதை வலியுறுத்தினோம். இதனை ஏற்றுக்கொண்ட ஜோன் கெரி, குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தும் என உறுதியளித்ததோடு தற்போது நாட்டுக்குக் கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
 
அத்தோடு, இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் நில விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீர்க்கமான அறிவித்தலை விடுப்பதனூடாக, மக்களுக்கு தெளிவான தீர்வொன்றினை வழங்க முன்வரவேண்டும் என்பதையும், இவை சாத்தியப்படும் பட்சத்திலேயே மீள்குடியேற்றம் சாத்தியப்படும் என்பதையும் வலுவாக வலியுறுத்தினோம்.
 
அது மட்டுமல்லாமல், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதையும், நியாயமான அதிகாரப் பகிர்வின் அவசியம் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதங்கத்தினை ஜோன் கெரியுடன் பகிர்ந்து கொண்டது. மாற்றுத் தலையீடுகள் இல்லாத பகிரப்பட்ட இறையான்மை அடிப்படையில் அரசியல் தீர்வு என்பதையும், காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பாகவும் வலியுறுத்தினோம்' என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, குறித்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவொன்றினை எட்ட ஒத்துழைப்பதாக குறிப்பிட்டதாகவும் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.
 
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

ஜோன் கெரியிடம் சிவியின் அறிக்கை

 

article_1430659234-CV.jpg

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையொன்று ஜோன் கெரியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/145316#sthash.dJTk5NBh.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, பூரண திருப்தியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 
 
 

ஜோன் கெரியிடம் சிவியின் அறிக்கை

 

article_1430659234-CV.jpg

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையொன்று ஜோன் கெரியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

 

இது புதுசு..

தேவையானது

நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

சிவியின் அறிக்கை நிச்சயம்நல்ல அறிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 25 நிமிடத்துக்குள் எதுவும் கதைக்க ஏலாது எண்டு தெரிஞ்சு அறிக்கை தயாரிச்சுக் கொண்டு போன சிவி வித்தியாசமாகத் தெரிகிறார். ஆனால் சம்பந்தருக்கு இது பிடிக்காதே????

  • கருத்துக்கள உறவுகள்

அது கிடக்க உவையிண்ட (புவா) ஏஜண்டுகள் ஜோன் கெரியைச் சந்திக்கேல்லையா? ஒரு அக்கா முந்தி இங்கிலாந்து பிரதமர் வந்தபோது ஓடித் திரிந்தவ! அவவும் நிறைய எழுதி வச்சிருந்தவ! :D

இந்த வயதில் எல்லா சந்திப்புகளும் உறவுகளும் சம்பந்தர் வயோதிப மடத்திற்கு திருப்தி தான். கிடைத்தவே போதும் என்ற திருப்தி இந்த வயதில் வருவது சாதாரணம் போலும்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில் எல்லா சந்திப்புகளும் உறவுகளும் சம்பந்தர் வயோதிப மடத்திற்கு திருப்தி தான். கிடைத்தவே போதும் என்ற திருப்தி இந்த வயதில் வருவது சாதாரணம் போலும்.

அப்ப யாரும் வரும்போது கோட் சூட்டுடன் போய் 
ஒரு போட்டோ எடுத்து செய்தியில் போட்டால் .....
நல்ல திருப்தி அவர்களுக்கு !
 
இந்த சந்திப்பில் எல்லாம் கண்ணை கட்டும் ஹய் குவாலிட்டியில் (hi quality)வந்திருக்கு 
எவளவு திருப்தியா இருக்கும் ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.