Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்புக்கு தேசிய நெல் உற்பத்தில் 04ஆவது இடம்

Featured Replies

article_1430833751-a.jpg

 

 
மட்டக்களப்பு மாவட்டம் தேசிய நெல் உற்பத்தியில் 04ஆவது  இடத்தைக் கொண்டுள்ளபோதிலும் மாவட்டத்தில் இம்முறை 62,000 ஏக்கர் சிறுபோகச்செய்கை பண்ணப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சிவலிங்கம் தெரிவித்தார்.
 
வருடத்துக்கான உணவுத் தேவைகளுக்காக வருடாந்தம் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் ஜூன் மாதம் வரையான மூன்றரை மாத கால நெல் பயிர்ச்செய்கை செய்வதில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னின்று வருகின்றது.
சிறிய நீர்ப்பானக் குளங்களான கல்லடி வட்டை, தாந்தாமலை, நல்ல தண்ணி ஓடை ஆகிய குளங்களிலிருந்து மட்டும் சுமார் 10,000 ஏக்கருக்கு நீர் பாய்ச்சப்படுவதாக உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
 
தற்பொது நெல் வயல்களில் நீர் பாய்ச்சுதல், பசளையிடுதல், களை பிடுங்குதல் போன்ற வேலைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
அனுபவமிக்க விவசாயிடம் அறுவடை பற்றிக் கேட்டபோது, எந்தவித நோய்த்தாக்கமும் இல்லாத நிலையில் ஏக்கருக்கு 80 புசல் நெல் அறுவடையாகப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.
 
இந்த வயல் வெளிக்கு பெரிய நீர்ப்பானக் குளங்களான நவகிரி, உன்னிச்சை, கட்டுமுறிவு மற்றும் வாகனேரிக் குளத்திலிருந்தும், நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களான புழுக்குணாவை, கிரிமிச்சை ஓடை, மியான் கல்ல மற்றும் மதுரங்குளத்திலிருந்தும் நீர் பாய்ச்சப்படுகின்றன.
 
article_1430833766-c.jpg
 
article_1430833780-e.jpg
 
article_1430833786-f.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு நெல் உற்பத்தியில், முதலாவது இடமாக இருந்ததாக.... பாடசாலைக் காலங்களில், படித்த ஞாபகம்.

விளை நிலங்கள் சிங்களவர் கைக்கு அம்பாறை மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. நிலங்களை விளைச்சலுக்குப் பயன்படுத்த முடியாமல் நீர்ப்பாசன வழிகளை தடை செய்தல் இது போன்றனதான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட மாவட்டமாக பல காலம் விளங்கியுள்ளது. அதேபோல் வன்னியும் விடுதலைப்புலிகள் காலத்திலும் கூட நெல் மற்றும் சிறுதானியங்கள்.. கெளபி உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருந்தது. இப்போ.. இவற்றின் நிலைமை..?! யாழ் மாவட்டமும் ஒரு காலத்தில் சிறுதானியம்.. நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்டிந்தது. இப்போ.. காணிகள் சிங்கள இராணுவ படைத்தளங்களாக மாற்றப்பட்டுள்ளன.

 

இதைப் பற்றி கதைக்க ஆக்களில்ல.. இந்தியா 13க்குள் தீர்வு என்டதும்.. வாற அமெரிக்கனிட்டும்.. அதையே முன்னிறுத்தும் கோமாளி அரசியல்வாதிகளை வைச்சுக் கொண்டு அரசியல் உரிமை விடுதலை நில விடுதலைக்கு அவசியம். இவை இன்றி பொருண்மிய முன்னேற்றம் விடுதலை நிரந்தரமாகாது. பொருண்மியத்தில்.. நாம் எதிர்பார்ப்பதை எட்ட முடியாது. எதிரி தான் நினைப்பதையே எம்மில் திணிப்பான். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

போரால் மீண்ட தேசம்

மீண்டும் செழிப்பாக இருப்பது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது..

நான்காவது இடத்துக்கு வந்ததே பெரியவிடயம்

அடுத்து மேலே வர தமிழரால் முடியும்

அதற்கு எம்மால் முடிந்ததை தற்பொழுதே செய்யணும்..

சிறிமாவோ காலத்தில யாழ்ப்பாணத்தில அமோக வெங்காய விளைச்சல் அதோடு போயிலை, சிறிமாவுக்கு வெங்காய மாலை அணிவித்து தமது பெருமைகனடனர்.

 

மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் வெள்ளைப்பச்சை அரிசி விளைச்சல் அமோகம்.

 

யுத்தம் வந்து எல்லாம் எல்லாமே நிலைகுலைந்து போச்சு. இந்த செய்தி கொஞ்சம் நல்ல செய்திதான். 

 

அது என்னவோ தெரியாது, அதை அதை பற்றி வந்தால் எல்லோரும் அதுகளை பற்றி பண்டிதராகின்றோம்.

 

நாளைக்கே மீனைப்பறி வரும் உடன நாங்கள் எல்லோரும் கடல் வித்துவான்களாக மாறி கருத்து சொல்லுவோம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயம், மிளகாய் உற்பத்தியில் வடக்கு மாகாண விவசாயிகள் பணக்காரர்கள் என தெரிந்தவுடன் அடுத்து வந்த ஜே.ஆர் திறந்த பொருளாதார கொள்கை என்று கூறி எல்லாவற்றையும் இறக்குமதி செய்து தமிழரின் தலையில் மண்ணை போட்டதாக கூறப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.