Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

A9 வீதி திறப்பு நாடகம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka to open road to Jaffna

Sri Lanka has said it will temporarily open the main road to the Jaffna peninsula to allow supplies to reach 500,000 civilians trapped by fighting.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6164268.stm

பதிவுக்கும் உதயனுக்கும் தனித்து மகிந்த உத்தரவு போட்டவர் போல.

சிறீலங்கா அரசாங்க அறிவிப்பின் படி யாழ்- கண்டி ஏ9 பாதை தற்காலிகமாக திறக்கப்பட இருக்கிறதாகவே (எதிர்காலம்..உடனடியாகக் கூட இல்லை) என்று உள்ளது.

ஆக இந்த அறிவிப்பு சில தரப்பை திருப்திப்படுத்தவும் சில தரப்பை ஏமாற்றவும் என்று அரசாங்கம் அவசர அவசரமாக எடுத்துள்ள முடிவு.

ஒருவேளை வாகரை மீது பாரிய இராணுவ நடவடிக்கையை எடுக்க இதனைப் பயன்படுத்தவும் கூடும். உலகின் கவனத்தை திசை திருப்பும் நகர்வொன்றாகவே இது உள்ளது. பேச்சு மேடையில் இப்படி ஒன்றை ஒத்துக்கொண்டிருந்தால் புலிகள் மீது சர்வதேச அழுத்தத்தை ஜெனீவாவில் வைத்தே கொடுத்திருக்கலாம். ஆனால்...அரசு அப்படிச் செய்யவில்லை ஏன்..?

ஆக அரசுக்கு தற்போது ஐநா மற்றும் கண்காணிப்புக்கு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் விடும் அறிக்கையே அதிகம் தலைவலியாக உள்ளது. அதுமட்டுமன்றி நடைபெற உள்ள இணைத்தலைமை நாட்டுக் கூட்டத்துக்கு முன்னர் புலிகளை சொல்கைம் அணுகி அடுத்த பேச்சு வார்த்தைக்கான சாத்தியங்கள் கேட்டிருப்பார். புலிகளிடமிருந்து காட்டமான பதில் போயிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

தலைவரின் மாவீரர் உரை இம்முறையும் நெகிழ்வுப் போக்குடையதாகவே இருக்கும். தலைவரின் எந்த ஒரு மாவீரர் பேச்சிலும் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக் கூறுகள் முற்றுமுழுதாக மறுதலிக்கப்பட்டு இருப்பதில்லை. அதுவும் சர்வதேச அனுதாபங்கள் தமிழ் மக்களின் மீது திரும்பியுள்ள இந்த நிலையில் தலைவரின் பேச்சில் நிச்சயம் சிறீலங்காவுக்கு கடும் தொனியிலான இறுதி எச்சரிக்கையும் சர்வதேசத்துக்கு மதிப்பளிக்கும் விடயங்கள் அமைந்திருக்கும் என்று மட்டும் எதிர்பார்க்கலாம்.

Edited by nedukkalapoovan

ஏ-9' பாதையை திறப்பது பற்றி எதுவுமே எமக்குத் தெரியாது

[20 - November - 2006] [Font Size - A - A - A]

* அரச, இராணுவ அதிகாரிகள்

யாழ். குடாநாட்டுக்கு ஏ-9 பாதையூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அரச மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை குறித்து அரச மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டுக்கு உடனடியாக அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி, அங்கு ஏற்பட்டுள்ள மனித பேரவலத்தை உடனடியாக போக்குமாறு சர்வதேச சமூகம் உட்பட அனைத்துத் தரப்பும் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்த நிலையிலேயே, ஏ-9 பாதையூடாக `ஒரு முறை நடவடிக்கையாக' அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரைகளை விடுத்துள்ளதாக நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்திலிருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வடக்கில் சம்பந்தப்பட்ட அரச அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்களுக்கு இது பற்றி எதுவுமே தெரியாதெனக் கூறிவிட்டனர்.யாழ். குடாநாட்டுக்கு வவுனியா ஊடாகவே பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டுமென்பதால், இதுவரை இந்தப் பொருட்களை `ஏ-9' பாதையூடாக அனுப்புவது குறித்து தங்களுக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லையென வவுனியாவில் உயர் அரச அதிகாரிகளும் சிரேஷ்ட படை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற பதிலையே யாழ். குடாநாட்டின் சிரேஷ்ட அரச அதிகாரிகளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் தெரிவித்தனர்.

முகமாலையில் `ஏ-9' பாதையை குறுக்கறுத்து பாரிய பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இது எந்த விதத்தில் சாத்தியப்படுமென தங்களுக்குத் தெரியவில்லையெனவும் குடாநாட்டில் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி நேற்றிரவு விடுதலைப் புலிகள் தரப்புடன் தொடர்பு கொண்ட போதிலும் இது குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாதென அவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் குடாநாட்டுக்கு `ஒரு முறை நடவடிக்கையாக' அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உடனடியாக எவ்வாறு அனுப்பப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

http://www.thinakkural.com/news/2006/11/20...s_page15604.htm

மகிந்தவின் நாடகத்திற்கு புலிகள் மறுப்பு.

Rebels reject Sri Lanka President aid convoy plan

20 Nov 2006 08:45:33 GMT

Source: Reuters

COLOMBO, Nov 20 (Reuters) - Sri Lanka's Tamil Tigers on Monday rejected government plans to send a one-off aid convoy through its territory to the far north, demanding instead that island's main north-south highway be opened permanently.

President Mahinda Rajapakse's government closed the A9 highway that runs from the northern army-held Jaffna peninsula to the south in August as a new chapter in a two-decade civil war flared, arguing rebel artillery fire had made it unsafe.

That left around 500,000 Tamils cut off from the rest of the island by rebel lines, and while government has been shipping in provisions by sea, food on the peninsula is in short supply and residents say insufficient rations are distributed.

Analysts say the Tigers want the highway reopened because the closure has curbed the movement of their fighters and military equipment, hindered their ability to mount ambushes and prevented them from raising revenue with a "tax" they charge from passing vehicles.

"We want the road to be reopened permanently," rebel media coordinator Daya Master told Reuters. "A one-off convoy is not possible."

Rajapakse's office said late on Sunday it would allow a convoy of sealed trucks to travel overland to Jaffna at an unspecified date "as a one time measure", and appealed to lorry owners to provide vehicles to take part.

The gesture, which comes after weeks of requests by aid organisations and rights groups to reopen the road to allow freedom of movement and goods, also comes ahead of a key donor meeting in Washington later on Monday.

Sri Lanka's main financial donors -- the United States, Japan, Norway and the European Union -- are expected to call for a halt to hostilities that have killed more than 3,000 people so far this year and for the reopening of the A9.

Residents in Jaffna, where around 25,000 people are still queueing up for scarce seats on boats to escape the blockade, say they desperately need additional stocks of food.

Prices of goods from vegetables to mosquito coils have soared on the peninsula, and some of the poorest are selling their state rations of rice and lentils to be able to buy other essentials.

"Today's important need is food at normal price. We are tired of paying 50 rupees (45 cents) for an egg," said 56-year-old Jaffna government servant James Ratnananthan.

"When food comes in regularly at the normal price, there will not be a rush to go to Colombo," he added.

Many ordinary Sri Lankans fear renewed fighting, with near daily attacks and military clashes, couild snowball into a full-blown return to a war that has already killed more than 67,000 people since 1983.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL234618.htm

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பிலான மகிந்தவின் திடீர் யோசனை சாத்தியமற்றது: தயா மாஸ்ரர்

[திங்கட்கிழமை, 20 நவம்பர் 2006, 14:46 ஈழம்] [ச.விமலராஜா]

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை ஒரே முறையில் முகமாலை ஊடாக ஏ-9 பாதையில் கொண்டு செல்வதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்ரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து:

ஏ-9 பாதை நிரந்தரமாக மீளத் திறக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு ஒரே முறையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு செல்வது சாத்தியமில்லை என்றார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு:

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய ஏ-9 பாதையூடாக ஒரே முறையில் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். இந்தப் பணியைச் செய்வதற்கு பல நூற்றுக்கணக்கான பாரஊர்திகள் தேவைப்படும் என்பதால் அவற்றைத் தந்து உதவ வேண்டுகிறோம்.

ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச் சாவடிகள் ஊடாக வாகன அணிகளைக் கொண்டு செல்வதற்கு சுயாதீன அமைப்புக்களின் உதவியை சிறிலங்காஅரசாங்கம் நாடும். யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் "சீல்' செய்யப்படும். வாகன அணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்ததும் பொதுமக்கள், மதப் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் "சீல்' திறக்கப்படும்.

மனிதாபிமான நோக்குடன் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அனைத்துத் தரப்புக்களிடமும் கேட்டுக்கொள்ளப்படும். குடாநாட்டுக்கு எடுத்துச்செல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கண்காணிப்புடனேயே விநியோகிக்கப்படும்.

அவசர தேவைக்கு விநியோகிப்பதற்கென ஒதுக்கிச் சேமித்து வைக்கப்படும் மேலதிக பொருட்களும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்படும். ஒரே முறையில் பொருட்களை எடுத்து வரும் வாகன அணிக்கு பாரஊர்திகளைக் கொடுத்து உதவ விரும்பும் பாரஊர்தி உரிமையாளர்கள் அத்தியாவசிய சேவைகள் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

சர்வதேச அமைப்புக்களின் உதவியும் கோரப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்களுக்குத் தேவைப்படும் சகல பொருட்களையும் மனிதாபிமான ரீதியில் அனுப்பி தேவையான மேலதிக கையிருப்பை வைத்திருப்பதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் உதவியையும் அரசு கேட்டுக்கொள்கிறது. இந்த ஏற்பாடு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதோடு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும் பெரிதும் உதவும்.

பாதகமான காலநிலை, வர்த்தக நிலையங்களை மூடுமாறு வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், மனிதாபிமானப் பொருட்களையும் மக்களையும் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் மத்தியிலும் அரசாங்கம் குடாநாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்களைத் தளர்வின்றி எடுத்துச் சென்றதாக மகிந்தவின் செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இராணுவத்தில் சிறார் சேர்ப்பு, பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் என சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்துக்குள்ளாகியிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மனித அவலங்களை புறக்கணித்து செயற்படுகிறது சிறிலங்கா அரசாங்கம்: சு.ப.தமிழ்ச்செல்வன்

[செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2006, 04:54 ஈழம்] [ம.சேரமான்]

தமிழர்களின் மனித அவலங்களை புறக்கணித்து சிறிலங்கா அரசாங்கம்: செயற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

அமெரிக்க தலைநகர் வோசிங்ரனில் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் நடைபெறும் நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான கடைசி நிமிட முயற்சியாகத்தான் ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறப்பதாகக் கூறியுள்ளது.

ஏ-9 பாதையை மீளத் திறப்பது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ அல்லது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமோ எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை.

ஏ-9 பாதையை திறப்பதில் உண்மையான அக்கறை இருக்குமேயானால் அவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக எதுவித தகவலையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. ஊடகங்களின் ஊடாகவே நாம் தெரிந்து கொண்டோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்து பத்திரிகை தான் "A9 being opened" A9 பாதை திறக்கப்படுகிறது என்று எழுதினா எங்கடை ஊடகங்கள் மகிந்த உத்தரவு என்று மகிந்தவிக்கு பிரச்சாரம் செய்யினம்....

போர் நிறுத்த விதிப்படி நிபந்தனை அற்று திறந்திருக்க வேண்டியதை மூடி வைத்துவிட்டு 1 முறை திறப்பதாகவும் அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கா திறப்பதாகவும் கூத்து காட்டிறாங்கள். இவை ஏதோ விடிவு வந்துவிட்டமாதிரி தலையங்கம் தீட்டீனம். பந்தி பந்தியா எழுதீனம்.

தமிழர் சார்பு ஊடகங்கள் சிறிலங்கா ஜனாதிபதி செயலகம் இப்படியான அறிக்கை விட்டிருப்பதாகவே சொன்னவே தவிர, மகிந்த கருணைக்கடல் என்றோ, இரட்சகன் என்றோ புகழ் பாடவில்லை. மேலும், இந்து எழுதிய செய்தியல்ல, முதன்நாள் பிற்பகல் சிறிலங்கா அரசு சொன்னகருத்தையே அவர்கள் சொன்னார்கள்.

அதிலும், உதயன், தினக்குரல் அரச கட்டுப்பாட்டில் இருந்து இயங்குபவை. எனவே அரசுக்கு எதிராக செயற்படவும் முடியாது. ஆனால் இது ஒரு ஏமாற்றுவேலையாக இருக்குமோ என்று வேறு அச்சம் தெரிவித்தும் இருக்கின்றார்கள்.

எனவே எங்கே குறை பிடிக்கலாம் என்று திரிவது சரியானது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இணைத் தலைமைகளைச் சமாளிக்க இறுதி நேரக் காய் நகர்த்தல்கள்

இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமை களின் மிக முக்கிய கூட்டம் நேற்று அமெரிக்காவின் வாஷிங் ரன் நகரில் நடைபெறவிருக்கையில் திடீரென முக்கிய அறி விப்பு ஒன்றை இலங்கை ஜனாதிபதியின் செயலகம் அதிரடி யாக விடுத்திருக்கிறது.

பாதுகாப்புக் காரணம் என்ற சாட்டைக் கூறி கடந்த நூறு நாள்களுக்கு மேலாகத் தான் மூடி வைத்திருக்கும் ஏ9 பாதை ஊடான யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் போக்குவரத்தை ஒரேயொரு ஒரு தடவை திறந்து விடுவதற்குப் பெருமனது பண்ணி அனுமதி தரப்போவதான அரச அறிவிப்பே அது.

யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்த ஏற் பாடுகளின்படி ஏ9 பாதை ஊடான இந்தப் போக்குவரத்தைத் திறந்து விடுவது இலங்கை அரசத் தரப்பு எழுத்து மூலம் ஒப்புக் கொண்ட கடப்பாடாகும்.

அந்தக் கடப்பாட்டைத் திடீரென நிறைவேற்ற நடை முறைப்படுத்த மறுத்து, யாழ். குடாநாட்டில் பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கியதன் மூலம், இலங்கைத் தமிழ் மக் களின் விசனத்துக்கும் சீற்றத்துக்கும் மட்டுமல்லாமல், சர்வ தேச சமூகத்தின் எரிச்சலுக்கும் இலங்கை அரசுத் தலைமை உள்ளாகியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் பேரில் கடந்த மாத இறுதியில் ஜெனிவாவில் இலங்கை அரசுத் தரப்புக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதிப் பேச்சு கள் முன் நகர்வேதுமின்றி பயனேதும் தராமல் முடிவுற்ற மைக்கும், இவ்வாறு யுத்தநிறுத்த ஒப்பந்தப்படியான தனது கடப்பாட்டை நிறைவு செய்யமறுத்து, ஏ9 பாதையை மூடி வைப்பதில் உறுதியாக இருந்த இலங்கையின் பிடிவாதப் போக்கே காரணமாக அமைந்தது.

தனது இராணுவத் தந்திரோபாய நோக்கங்களுக்காக, இவ் வாறு மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் ஒரு நெருக்கடியை இலங்கை அரசுத்தரப்பு விடாப்பிடியாக உருவாக்கி நிற்கின் றமை, சர்வதேச அதிருப்திக்கும் எரிச்சலுக்கும் உள்ளாகியிருக் கின்றது.

இந்நிலையில்தான்

கடந்த மாத இறுதியில் பயனேதுமின்றி முடிவடைந்த "ஜெனிவா 2' பேச்சுகள் குறித்தும் அதன் தொடராக எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நேற்று வாஷிங்ரனில் கூடவிருந்தன.

இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கையில் இலங்கையின் வடக்கில் நிலவும் மிகமிக அசாதாரணமான மோசமான நெருக் கடியான நிலைமையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி, இணைத் தலைமைகளின் அவசரத் தலையீட்டைக்கோரி, இறுதி நேர விண்ணப்பம் ஒன்றை யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் அடிகள் இணைத்தலைமைகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

""யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத் தும் வகையிலும் யாழ். மக்களைத் திறந்த வெளிச் சிறையில் அடைப்பதினின்றும் விடுவிற்பதற்காகவும் வடக்கில் பட்டி னிச் சாவு மற்றும் போஷாக்கின்மை போன்ற மனிதப் பேரவ லங்களைத் தவிர்ப்பதற்காகவும் குடாநாட்டு மக்களுக்கு நேர்ந்துள்ள மிகக் கொடூரமான நெருக்கடியிலிருந்து அவர் களை மீட்பதற்காகவும் ஏ9 பாதையைத் திறக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இணைத் தலைமைகள் அழுத்தம் கொடுப்பது அத்தியாவசியமானது''

இவ்வாறு யாழ். மக்களின் சார்பில் பகிரங்க வேண்டு கோளை இணைத் தலைமைகளுக்கு முன்வைத்திருக்கிறார் யாழ். ஆயர்.

இராணுவத் தந்திரோபாய நோக்கங்களுக்காக ஏ9 பாதை யைத் தான் மூடி வைத்திருப்பதும், அதனால் எழுந்துள்ள மனி தப் பேரவலமும், இவ்விடயத்தில் தான் வெளிப்படுத்தும் பிடி வாதமும் சர்வதேச மட்டத்தில் தனக்கு எதிராக மிகவும் மோசமான கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி வருவதை உணர்ந்துகொண்ட இலங்கை அரசு, அதைச் சமாளிப்பதற்காக இப்போது "அந்தர் பல்டி' அடித்திருக்கிறது.

நேற்றுக் கூடவிருந்த இணைத்தலைமைகளின் கூட்டத்தின் முடிவில், இவ்விடயத்தில் தனது பிடிவாதப் போக்கு மிக மோசமாகவும், காட்டமாகவும் விமர்சிக்கப்படும் என்பதை உணர்ந்துகொண்ட இலங்கை அரசு, அதைத் தவிர்க்கச் செய்யும் இறுதி நேர எத்தனமாக சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டது.

அதன்படி

""சமயத் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் விடுத்த வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் வாரங்களில் வடக்கிற்குக் கப்பலில் பொருள்களைக் கொண்டு செல்வதைப் பாதிக்கும் வகையான சீரற்ற காலநிலை நிலவும் என்பதாலும் முகமாலை ஊடாக ஏ9 பாதையில் ஒரே தடவையில் பொருள்களை வடக்கே கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.'' என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏ9 பாதையை யுத்த நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு முர ணாக மூடி, வடக்கில் பெரும் மோசமான மனிதப் பேரவலத்தை ஏற்படுத்திய தனது கொடூரப் போக்குக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு திரண்டு வந்துள்ள நிலையில் இது விடயத்தில் உலகின் சீற்றம், இணைத்தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் கூட்டறிக்கையாக வெளிவர இருக்கையில் அதைச் சமாளித்துத் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி நேரத் தந்திரமாக இவ்வாறு ஏ9 பாதையை ஒரு தடவை மட்டும் திறக்கும் "தாராளப் போக்குக்கு' இறங்கி வந்திருக்கின்றது இலங்கை அரசு.

ஆனாலும், இவ்விடயத்தில் காதில் பூச்சுற்றுவது போன்ற இலங்கையின் இந்தத் தந்திரோபாயக் காய் நகர்த்தல் இறுதிநேர எத்தனம் இது போன்ற பல விடயங்களையும் கையாண்டு தேர்ந்த இணைத்தலைமை நாடுகளிடம் பலிக்கும் என நம்புவதற்கு இடமில்லை.

இன்று இப்பத்தியை வாசிக்கும் இச்சமயத்தில் இவ்விடயம் பற்றிய இணைத்தலைமை நாடுகளின் நிலைப்பாடு கூட்டறிக்கை வடிவத்தில் வெளியாகி, உண்மையை வெளிப்படுத்தி நிற்கும் என எதிர்பார்க்கலாம்.

அது மட்டுமல்ல வாகரையில் தமிழர்கள் அனுபவிக்கும் நெருக்கடிகள், தமிழர் தாயகமான வடக்குகிழக்கைப் பிரிப்பதற்குத் தென்னிலங்கை மேற்கொண்டுள்ள தந்திரங்கள், கொழும்பு அரசின் இராணுவ முனைப்புப் போக்கு, சிறுவர்களைப் பலவந்தமாகப் படைதிரட்டும் அரச இராணுவ மற்றும் கருணா குழுவின் கூட்டுச் சதி நடவடிக்கைகள் போன்றவை குறித்தெல்லாம் தமது கருத்துகளை இணைத்தலைமைகள் வெளிப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கலாம்.

-உதயன்

இணைத்தலைமைக்கு அஞ்சியே அரசு அவசரமாக உணவு அனுப்புகின்றது

மனிதாபிமானத்தில் அல்ல என்கிறார் சம்பந்தன்

வாஷிங்ரனில் நடைபெறுகின்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்துக்கு அஞ்சியே மஹிந்த ராஜபக்ஷ அரசு ஏ9 வீதி வழியாக அத்தியாவசிய உணவுப்பொருய்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. மனிதாபிமான ரீதியில் உணவுப்பொருள் கள் அனுப்பப்படுவதாக அரசு கூறுவதில் உண்மையில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுச் சபையில் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கை விடுத்ததையடுத்தே இரா. சம் பந்தன் எம்.பி. எழுந்து இவ்வாறு தெரி வித்தார்.

யாழ். குடாநாட்டில் உணவுத் தட்டுப் பாடு ஏற்படாதவகையில் தொடர்ந்து உணவுப் பொருள்களை அனுப்பிவைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு தடவையில் உணவு அனுப்புவது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்றும் சம்பந்தன் கூறினார்.

-உதயன்

விமானம் மூலம் அத்தியாவசியப் பொருள்கள்

குடாநாட்டுக்கு 6 ஆயிரம் கிலோகிராம் லக்டோஜன் குழந்தை பால்மா, பிஸ்கட் ஆகி யன விமானம் மூலம் எடுத்துவரப்பட்டுள்ள தாக பலாலி படைத் தலைமையகம் தெரிவித் துள்ளது.

பலாலி படைத் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:

கடந்த 18 ஆம் திகதி விமானம் மூலம் எடுத்துவரப்பட்டுள்ள இப்பொருள்கள் சிவில் நிர்வாக அலுவலகம் மூலம் அரச அதிபரின் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இவை இராணுவ நலன்புரி வர்த்தக நிலையங்கள், கூட்டுறவுச் சங் கங்கள் ஆகியன ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்பட விருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.