Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதயங்களால் இணைந்துள்ளோம்! மைத்திரி அரசு பற்றி சுமந்திரன்!!

Featured Replies

தமிழ் மக்களுக்கான வெளியில் உள்ள வழி” என்ற தொனியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமான இன்றைய பொது விவாதம் ஈரோவில் மாநாட்டு மண்டபத்தனில் நடந்திருந்தது.

சுமார் நான்கரை மணித்தியாலங்கள்  விவாதம் நீடித்தது. இருதரப்பும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துகின்றன. பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம் தீர்வென தெரிவித்திருந்தார்.ஆனால் சுமந்திரன் அது சமஷ்டியாக இருக்கலாம் என்கிறார். கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைவதற்கு ஆட்சேபனை இல்லை என சுமந்திரன் தெரிவக்க ஏன் இணையமுடியாதென்பதற்கு கஜேந்திரகுமார் விளக்கமளித்திருந்தார்.
 
சிங்கக்கொடி விவகாரம் மற்றும் இலங்கை சுதந்திரதினத்தினில் சம்பந்தன் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு சுமந்திரன், தான் சட்டத்தரணி என்பதை நிரூபிக்கும் வகையில் பதில்களை முன் வைத்திருந்தார் .சம்பந்தனின் தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் கேட்ட கேள்விக்கு தேசிய கீதத்தினை தமிழில் பாடவேண்டும் என நாம் ஏன் கேட்கவேண்டும் அதைக்கேட்கிறோம் ? அதை ஏற்றுக்கொள்கின்றோம் அல்லவா அதேபோலத்தான் தேசியக்கொடியை ஏற்கத்தான் வேண்டும் என்றார்
இலங்கையின் தேசியக்கொடியை தமிழரசுக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஆனால் ஒரு நாட்டின் கொடி என்றவகையினில் ஏற்றுக்கொள்வதாக தெரிவத்தார்.அதற்காகவா சம்பந்தன் அதனை கையினில் வைத்து ஆட்டினார் என்ற கேள்விக்கு சுமந்திரன் பதிலளிக்கவில்லை.
 
மஹிந்த ஆட்சியினை மாற்றி நாங்கள் சென்றுகொண்டிருக்கும் படகினை கூத்தடித்து கவிழ்க்க வேண்டாமென்று சுமந்திரன் கேட்டுக்கொண்டதுடன் புதிய அரசுடன் இதயத்தால் இணைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் மைத்திரி அரசாங்கத்துடன் பேச்சளவில் செய்யப்பட்ட உடன்படிக்கை குறித்து தேர்தலுக்கு முன்பாக கூட்டமைப்பு வெளியிடும் என்றும் சுமந்திரன் கூறினார்.

அதற்கு பதிலளித்து உரையாற்றிய கஜேந்திரகுமார் யுத்தத்தை தானே இறுதி நாட்களினில் மூன்று வாரம் பாதுகாப்பு அமைச்சராக இருந்து முடித்து வைத்ததாக ஜனாதிபதி மைத்திரி சொல்கின்றார்.சந்திரிகாவோ யுத்தத்தின் 75சதவீதத்தை தானே முடித்து வைத்ததாக சொல்கின்றார்.பிரதமர் ரணிலோ கருணாவை பிரித்து புலிகளினை பலவீனப்படுத்தியதாக கூறுகின்றார்.அதேவேளை இராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவோ இவர்கள் அனைவரும் குளிரூட்டிய அறையினுள் இருந்தனர்.நானே யுத்தத்தை வென்றேன் என்கின்றார்.
அவ்வாறானவர்களுடன் நட்பு பாராட்டி இதயத்தால் பிணைந்துள்ளவர்கள் பற்றி சந்தேகிக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். http://www.pathivu.com/news/40090/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதயத்தால் இணைந்தால்!!!!!!    அரோகரா இனியென்ன கலியாணம்தான்.........

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தால் இணைந்தால்!!!!!!    அரோகரா இனியென்ன கலியாணம்தான்.........

 

பிறகு என்ன அடுத்தது தேனிலவு தான்

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen:அவனா நீ ??? சொல்லவேயில்லை ??!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கோல் ஃபேசில ஒரு டூயட் பாடிட்டாப் போச்சு. நெருங்கின இதயங்கள்.. சங்கமிச்சிடும். அப்புறம் இலங்கைத் தீவில்... அப்பி  ஒக்கம சிங்கள ஹெட்டி நெய்த. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

. அப்புறம் இலங்கைத் தீவில்... அப்பி  ஒக்கம சிங்கள ஹெட்டி நெய்த. :lol::D

 

அப்பே ரஜ,அப்பே ஆண்டுவ ,அப்பே பக்ஷ்சய சிங்களதெமிழ ஹெல உறுமய ....பிரிவினை கோரிய புலிகள் ஒழிக....கூட்டணி கோரிய தமிழ்தேசியம் ஒழிக.....:D

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், கஜேந்திரகுமார் நேருக்கு நேர் சூடான விவாதம்: - வழைத்து வசைபாடினர் மக்கள்.

[saturday 2015-05-16 19:00]
sumanthiran-kajenthiran-160515-300-seith

தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சூடான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சூடான விவாதத்தில், காரசாரமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன. பொதுமக்களின் கேள்விகளுக்கும் இருவரும் பதிலளித்தனர். சுமார் 4 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சூடான விவாதத்தில் கேள்வி எழுப்பிய பொதுமக்கள் சுமந்திரனை நோக்கி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.

  

தமிழ் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் சுமந்திரன் ஈடுபடுகின்றாரென்றும், இலங்கை தேசியத்தை ஏற்றுக் கொண்டும், இலங்கை தேசியக் கொடியையும் தூக்கிக் கொண்டும் சுமந்திரன் ஓடித்திரிகின்றார் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அடிமை விசுவாசியாக மாறிவிட்டார் எனவும் கேள்வியெழுப்பிய பொதுமக்கள் விமர்ச்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுமந்திரன், கேள்வியெழுப்பிய பொதுமக்களை திட்டினார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்.

 

தனது செயற்பாடுகளை நியாயப்படுத்தி விளக்கமளித்த சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் ஈடுபாடுகளைக் கிண்டலடித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் தமிழ் மக்களை நடுவீதிக்குக் கொண்டு வரும் என்ற தொனியில் தனது விவாதத்தை முன்வைத்தார். விவாதத்தின் இறுதியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சுமந்திரன் பதிலளிக்க முடியாது தடுமாறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132203&category=TamilNews&language=tamil

சிறப்பான விவாதம். இருவருமே நல்ல கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். 

 

 

Edited by தெனாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.