Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போ.நி.க.கு வின் பேச்சாளரை இலங்கையிலிருந்து

Featured Replies

Sri Lanka: Helen Olafsdottir to be asked to leave Sri Lanka?

Monday, 20 November 2006

The current acting SLMM spokesperson and the former SLMM spokesperson, Ms Helen Olafsdottoir may have her immigration status to remain in Sri Lanka withdrawn as the matter is said to be under consideration.

There is concern in Colombo that she is constantly over reaching herself and making statements which are wholly inappropriate.

Ms Olafsdottir has also gone on record in stating that the “worsening security situation in Sri Lanka is second only to that of Iraq”.

More recently she had made a comment in a private newspaper that “the statement made by a UN official is correct and the SLMM in its second Geneva report stressed that we had sufficient evidence to prove that the government forces were involved in child recruitment”.

http://www.sibernews.com/news/sri-lanka/-200611206689/

  • கருத்துக்கள உறவுகள்

அட்ரா சக்கை..அட்ரா சக்கை..

அம்மணியால அண்ணாச்சிமாருக்கு கெடிக் கலக்கம்போல..

அப்படிப் போடு அரிவாளை..

:P

  • தொடங்கியவர்

ஒரு தரப்பினரால் தவறுகள் விடப்படும் போது அதனை கண்டிக்காமல் நடுநிலைவகிப்பதாக எண்ணிக்கொண்டு இரு தரப்பையும் பொதுவாக கண்டித்தவர்கள் இன்று அதன் பலனை அனுபவிக்கின்றனர்.

காலம் கடந்துவிட்ட நிலையில் முடிவெடுப்பதில் தங்களுக்குள்ளேயே பிரிவுகளையும், ஒரு தரப்பு தம்மைத் தாக்கிய நிலையிலும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது அந்தத் தரப்பு நேரடியாவே அச்சுறுத்தும் நிலைக்குச் சென்றுவிட்டது.

கண்காணிப்புக் குழுவின் இன்றை நிலை கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போன்றதே!

அவர்களின் இன்றைய இந்த இழி நிலைக்கு அவர்களே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பேச்சாளரின் விசா இரத்து?

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பிரதிப் பேச்சாளரான ஹெலன் ஒல்ப்ஸ்டெட்டிரின் விசாவை சிறிலங்கா அரசாங்கம் இரத்து செய்யக்கூடும் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெலன் ஒல்ப்ஸ்டெட்டிர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் ஈராக் நிலைமை போன்று சிறிலங்காவில் ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குற்றம்சாட்டியுள்ளார்.

கதிரவெளி தாக்குதலைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அவர் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். மேலும் சிறிலங்கா இராணுவத்தில் சிறார் சேர்ப்பு விவகாரம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஹெலன் ஓல்ப்ஸ்டொட்டிர் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். இதனால் அதிருப்தியடைந்த சிறிலங்கா அரசாங்கம் அவரது விசாவை இரத்து செய்ய முயற்சிப்பதாகவும் கொழும்பு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

-புதினம்

கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலனுக்கு அரச தரப்பிலிருந்து நெருக்கடி.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொற்ரியருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்துகளால் அரசு தரப்பு விசனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஒரு பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக அரசு தரப்பினர் குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சிகளிலும் அரசு தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கண்காணிப்புக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் உல்வ் ஹென்றிக்சன் இருந்தபோது, ஹெலனின் கருத்துகள் தொடர்பாக அரச தரப்பினர் அவரிடம் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர்.

இந்த நிலையில், தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஹெலன் நாடு திரும்ப கண்காணிப்புக் குழுவின் பேச்சாளராக தோர்பினூர் ஓமர்சன் நியமிக்கப்பட்டார்.

எனினும், கடந்த இரு வாரத்திற்கு முன்னர், மீண்டும் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளராக ஹெலன் நியமிக்கப்பட்டார்.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துகளால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஹெலன் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளதால் அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

www.sankathi.com

  • தொடங்கியவர்

முன்னாள் உலக வங்கித் தலைவர், எரிக் சொலகெய்ம் எனப்பலர் வரிசையில் இன்று கெலன் ஒலப்டொடியர்.

அவருக்கென்றாலும் பரவாயில்லை விசாவை ரத்துச் செய்தால் ஊருக்கு போய்விடுவார். ஆனால் பாவம் இந்த ஒட்டுக் குழுத் தலைவர்கள். மாறிக் கதைத்தால் விசாவை கொடுத்துவிடுவார்கள் நிரந்தரமாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.