Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவர்கள் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்...

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்து போன நாளொன்றில், 'வன்னியுத்தம் " என்ற பொத்தகம் ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எழுத்தாளர் 'அப்பு" கண்ணீரையும் இரத்தத்தையும் சாட்சி வைத்து எழுதியிருந்த அப்பதிவில் எனது இதயத்தை ஊடுருவிய பக்கமொன்றை வாசகர்களுக்காக அப்படியே தருகின்றேன்.

1998ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்துடன் நடந்த ஒரு மோதலில் விசுவமடுவைச் சேர்ந்த ஒரு இளைஞன் வீரச்சாவடைந்தான்;. அந்த விபரத்தை அவனது குடும்பத்திற்கு அறிவிக்கும்படி விசுவமடு அரசியல் துறை பொறுப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.

உடனே அந்த விசுவமடு பொறுப்பாளர் தனது உந்துருளியில் அந்த மாவீரனின் வீடு நோக்கி புறப்பட்டார். அப்போதுதான் முதன் முதலாக அந்த பொறுப்பாளர் அந்த வீட்டுக்கு செல்கின்றார். அது வரை ஒரு போராளியின் வீடு அங்கே இருப்பது அவருக்கு தெரியாது.

வீடு எந்தவித அச்சறுக்கையோடும் இருக்கவில்லை. நான்கு பக்க வேலியும் திறந்து கிடந்தது. வீடோ மேச்சல் போகம் என்றோ தவறிப்போன சிறிய கொட்டிலாக இருந்தது. பொறுப்பாளர் அந்த வீட்டுக்கார அம்மாவின் பெயரைச்சொல்லி அழைத்தார்.

பரட்டைத்தலையுடனும் பஞ்சடைத்த கண்களுடனும் 15 வயது சிறுமி தன் இடுப்பில் ஒரு பிள்ளையுடனும் வெளியில் வந்தாள். அந்த சிறுமிக்கு பக்கத்தில் ஜிப்பு இல்லாத பின்பக்கம் கிழிந்த அரைக்கால் சட்டையுடன் ஒரு சிறுவன் அவளது பாவாடையை பற்றியவாறு நின்றுகொண்டிருந்தான். அவர்களது தகப்பனார் ஏற்கனவே அவர்களை விட்டு பிரிந்திருந்தார். தாய் மட்டுமே அக்குடும்பத்தை தாங்கி நின்றார்.

அம்மா நிக்கிறாவா? என் அப்பிள்ளைகளிடம் வினவிய போது அம்மா விசுவமடு சந்தையில் நிக்கிறவா என பிள்ளைகள் பதில் கூறினார்கள். சந்தையில் சிறு வியாபாரம் செய்வதாக நினைத்துக்கொண்ட பொறுப்பாளர். சந்தையை நோக்கி புறப்பட்டார்.

மரக்கறி சந்தையில் விசாரித்தபோது அந்த தாய் அங்கு இருக்கவில்லை அந்த தாயின் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் பொறுப்பாளர் விசாரிப்பதனை அவதானித்து விட்டு அந்த மாவீரனின் தாய் நிக்கும் இடத்தை பொறுப்பாளருக்கு காண்பித்தான். . . . .

இந்த தேசத்திற்காக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த ஒரு மாவீரனின் தாய் தன் எஞ்சிய பிள்ளைகளின் பசியைப்போக்க கிழிந்த சேலையுடன் சந்தைக்குள் பிச்சை எடுத்துக்கொண்டடிருந்தாள்.(நன்றி அப்பு எழுதிய - வன்னியுத்தம்)

நெஞ்சையுருக்கும் இச்சம்பவத்தில் குறிப்பிட்ட குடும்பத்தைப் போன்று இன்னும் எத்தனையோ குடும்பங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், மாற்றுவலுவுள்ளோர், மனைநிலை பாதிப்புற்றோர், அரசியல்கைதி, காணமல்போனவர், முன்னாள்போராளி, புனர்வாழ்வு என்ற இன்னோரன்ன ஊடக குறியீட்டு சொற்களில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை தமக்குரியதாக்கி நாளாந்தம் வலிகளுடன் வாழ்ந்து வரும் மாவீரர், போராளி குடும்பங்களை பொறுத்தவiரையில் ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று தங்கள் சொந்த சமூகத்திலிருந்து பாதுகாப்பு பெற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மௌனிக்கப்பட்டது வெடியோசைகள் மட்டுமே. முள்ளிவாய்காலில் இறுதிநாட்களில் எஞ்சியிருந்த போராளிகளின் தலைகளில் அனைத்து போராட்டப்பளுவும் சுமத்தப்பட்டிருந்தது.

களப்பணியில் நின்ற ஒரு போராளிக்கு செய்தியொன்று வருகின்றது. அவரது மனைவிக்கு பிரசவவலியேற்பட்டு மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக. ஆனால் அவர் அவ்விடத்தை விட்டு செல்ல முடியாத நிலைமை இருந்தது. மிகுந்த சகிப்புத்தன்மையுடன் தனது பணியில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

அன்று இரவு நடந்த எறிகணை வெடிப்பு சம்பவத்தில் அவர் வீரச்சாவடைந்து விட்டார். அம் மாவீரனின் வித்துடல் விதைப்பிற்கு அவரது மனைவி இயலாத உடலுடனும் பிறந்த ஒரு நாளான அவரது குழந்தையுடனும் வந்து வீரவணக்கம் செலுத்தியது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதியப்பட வேண்டிய செய்தி.

ஆனால் அதன் பின் நடைபெற்றதோ கொடுமையிலும் கொடுமை.

போர் முடிவடைந்து தனது கிராமத்துக்கு மீள குடியமர வந்த அந்த குடும்பம் தனது கணவரின் இறப்பை சிறிலங்காவில் சட்டரீதியாக பதிவு செய்வதன் மூலம் சிறு நிவாரணத்தையாவது பெற்று, பிள்ளைகளின் பசியை போக்கலாம் என்று கருதிய அம்மாவீரனின் மனைவி அப்பகுதிக்குரிய அரச செயலகத்தை நாடுகின்றார்.

அவருக்குரிய நிர்வாகப் பணிகளை செய்து கொடுக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ள அங்கிருந்த அதிகாரி ஒருவர் அப்பணிகளை செய்து கொடுத்த அதேவேளை அதற்குப் பிரதியுபகாரமாக அம்மாவீரனின் மனைவியிடம் இருந்து பாலியல் இலஞ்சத்தை எதிர்பார்த்தார்.

மிகவும் அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தனது கவலயை தெரிவித்துள்ளார். அதனை மீறி ஏதும் செய்ய முயன்றால் அப்பெண் மீதே விபச்சாரிப்பட்டம் கட்டப்பட்டு விடும் சூழ்நிலை தான் தமிழர் தாயகத்தில் தற்போது நிலவி வருகின்றது. நீதியை எதிர்பார்க்க இது என்ன புலிகளின் காலமா? இது உதாரணத்துக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம்.

இதே போன்று வீரச்சாவடைந்த, காணமல்போன சிறையில் அடைக்கப்பட்ட போராளிகளின் குடும்பங்களின் மீது குறிப்பாக பெண்களின் மீது தமிழ் இனத்தில் பிறந்த 'சமூகக் குற்றவாளிகள்" செய்த செய்துவரும் அருவருப்பான குற்றங்களுக்கு யாரை நோவது.? இது தாயகத்தில் என்றால் புலத்தில் வேறு விதமாக கதை போகின்றது.

தமிழீழ போராட்டத்தில் பங்கு பற்றிய எனது நண்பர் ஒருவர் 2009 மே மாதத்தின் பின்னர் பல துன்பங்களை அனுபவித்து ஒருவாறாக நாட்டை விட்டு தப்பியோடி ஜரோப்பாவுக்குள் கால் பதிக்கின்றார். சூழல், காலநிலை, மொழி, மனிதர்கள் என அனைத்துமே புதிதாக இருந்தது. அவர் இடைத்தங்கலாக ஒரு வீட்டில் தங்க வேண்டியேற்பட்டது.

அவர் சென்றிருந்த நேரம் அவ்வீட்டு உரிமையாளர் வேலைக்கு சென்றிருந்தார். அவரது மனைவி இவரை வரவேற்று வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அவரும் வெளியே சென்று விட்டார். அந்த வீட்டில் பெரியளவிலான தேசியத்தலைவரின் படமும், தமிழீழ தேசியக்கொடியும் வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த அவர். 'தான் சரியான இடத்திற்கு" வந்திருப்பதாக உணர்ந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டார்.

ஆனால் நடந்ததோ வேறு அன்று மாலை அவரைச் சந்தித்த அந்த வீட்டு உரிமையாளர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கதையோடு கதையாக 'தடுப்பில் இருந்து வந்த உங்களை என்னென்று நம்புவது"? என்று கேட்டுவிட எனது நண்பர் இடிந்து போய்விட்டார். பின்னர் என்னிடம் கதைக்கும் போது இவர் 'உலகில் எங்களை போன்று நிலைமை எந்த ஒரு போராளிக்கும்" வரக்கூடாது என்றார்.

தனது நாட்டிற்காக சிறை சென்று ஊர் திரும்பும் போராளிகளும், வீரர்களும் தம்மினத்தின் மக்களால் வரவேற்கப்பட்டு மதிக்களிக்கப்படுவதே உலக வரலாறு ஆனால் தமிழ்ப் போராளிகளுக்கு மட்டும் இது விதி விலக்காகி விட்டது.

அநேக முன்னாள்; போராளிகளின் தயவான வேண்டுகோள் என்னவென்றால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்களுடய குறுகிய நலன்களுக்காக எங்களை கேவலப்படுத்தாதீர்கள் என்பதுதான்.

மிகவும் வேதனையான விசயம் என்னவெனில் இந்த சேறடிப்புகளின் விளைவாக ஒவ்வொரு போராளிகளின் தனிப்பட்ட தியாகங்களும், திறமைகளும் அதனால் அவர்கள் இப்போதும் பட்டுவரும் உடல், உள துன்பங்களும் கொச்சப்படுத்தப்படுகின்றமைதான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 33 வருட போராட்ட வரலாற்றில் போராட்ட பணிக்காக ஒரு உப்புக்கல்லைக்கூட தூக்காத ஒருவர் புலம்பெயர் நாட்டின் தேசியம் சார்ந்த அமைப்பொன்றின் பிரமுகராகவுள்ளார். அவரது மேடைப்பேச்சுக்களையும் ஊடக அறிக்கைகளையும் நம்பிய எனது நண்பர் ஒருவர் அவரிடம் உதவியொன்றை கோரி நின்றார்.

அதாவது வன்னி மாவட்டம் ஒன்றில் இருக்கும் உடல் அவயவங்களை இழந்த முன்னாள் போராளிகள் சிலர் (அவர்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையானவர்கள்) இணைந்து ஆடை தயாரிப்பிலும், பாடசாலைப் பை தயாரிப்பிலும் ஈடுபட்டனர். அவர்களின் உற்பத்தி பொருட்களை ஜரோப்பாவின் நாடொன்றில் விற்பனை செய்வதற்கான அநுசரணையை பெறும் நோக்குடன் அவரை சந்தித்தார்.

அது பற்றிய ஆவணங்களையும், உற்பத்தி மாதிரியின் ஒளிப்படப் பிரதிகளையும், கையளித்து விளக்கமளித்தார். எல்லாவற்றையும் செவிமடுத்த அவர், நையாண்டி பாணியில் 'இவையள் அரசாங்கத்திட்ட புனர்வாழ்வு பெற்ற பெடியள் நீங்க போய் ராஜபக்சவிட்டையே உதவி கேளுங்கோ" என்று கூறிவிட்டார். ஏமாற்றத்தின் விளிம்புக்கு சென்ற அந்த நண்பர் இப்போது தமிழ் தேசியம் தொடர்பாக கதைப்பவர்களுடன் கதைக்காமல் விட்டு விட்டார்.

இச்சம்பவங்களை எழுதுவதன் ஊடாக எவரையும் குற்றம் சாட்;டவோ, அல்லது நியாயப்படுத்தவோ, அனுதாபத்தை பெறவோ முனையவில்லை.

ஆனால் இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு தனியான தேசம் அமைப்பதற்காக முழுமூச்சுடன் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நேரடிப் பங்காளிகளாகி அதில் இணைந்து போரிட்ட போராளிகளும், அவர்களின் குடும்பங்களும் அன்றிலிருந்து இன்றுவரை சுமக்கும் சுமைகள் கொஞ்சநெஞ்சமல்ல. அதன் வலியை உணரச்செய்வதில் சிறு முயற்சியாகவே எழுதியுள்ளேன்.

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்து கொண்டே போகின்றது. ஆனால் போரின் போது தமது பிரதான உழைப்பாளிகளை, குடும்ப அங்கத்தவர்களை, உடல் அங்கங்களை இழந்தும், கடுமையான காயங்கள் பட்டும், அசையும் அசையா சொத்துக்களை இழந்தும், சமுதாய பாதுகாப்பிலும் பொருளாதார நிலைமையிலும் கடுமையான பின்னடைவுகளை சந்தித்துள்ள போராளி, மாவீரர் குடும்பங்களினால் இன்றும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை.

அடிப்படை தேவைகளான மனித உரிமைகள், சமூக தேவைகள், பாதுகாப்பு, சுய கௌரவம், பொருளாதாரம் மீது தாக்கத்தை விளைவிக்கும் காரணிகள் மீதான அவர்களின் 'எதிர்ப்புசக்தி" இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால் 'சமூகக் குற்றவாளிகள்" என்ற கிருமி(னல்)களின் தாக்கத்திற்கு இலகுவில் உள்ளாகின்றனர்.

இக்கிருமி(னல்)களிடமிருந்து தப்பி பிழைப்பதற்காக தமது சொந்த சமூகத்துக்குள்ளேயே நாளாந்தம் போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், மாவீரர், போராளி குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய வரலாற்று கடமை நம் எல்லோருக்கும் உரியதே.

மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்,

ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று தங்கள் சொந்த சமூகத்திலிருந்து பாதுகாப்பு பெற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் வரும்.

உயிர்த்தமிழ்.

http://www.tamilwin.com/show-RUmtyFRdSUgpzG.html

  • கருத்துக்கள உறவுகள்

இது எமக்கான சாபக்கேடு,ஒன்றும் செய்யமுடியாது.

 

 

மிழீழ விடுதலைப் புலிகளின் 33 வருட போராட்ட வரலாற்றில் போராட்ட பணிக்காக ஒரு உப்புக்கல்லைக்கூட தூக்காத ஒருவர் புலம்பெயர் நாட்டின் தேசியம் சார்ந்த அமைப்பொன்றின் பிரமுகராகவுள்ளார். அவரது மேடைப்பேச்சுக்களையும் ஊடக அறிக்கைகளையும் நம்பிய எனது நண்பர் ஒருவர் அவரிடம் உதவியொன்றை கோரி நின்றார்.

இணைப்புக்கு நன்றிகள் பகலவன் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று தங்கள் சொந்த சமூகத்திலிருந்து பாதுகாப்பு பெற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

மிகவும் துரதிஸ்டமானது. அவர்கள் செய்த ஒரே பிழை எமது இனத்துக்காக போராடியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் 33 வருட போராட்ட வரலாற்றில் போராட்ட பணிக்காக ஒரு உப்புக்கல்லைக்கூட தூக்காத ஒருவர் புலம்பெயர் நாட்டின் தேசியம் சார்ந்த அமைப்பொன்றின் பிரமுகராகவுள்ளார். அவரது மேடைப்பேச்சுக்களையும் ஊடக அறிக்கைகளையும் நம்பிய எனது நண்பர் ஒருவர் அவரிடம் உதவியொன்றை கோரி நின்றார்.

நன்றி பகலவன்

அதைவிடக் காலத்துக்குக் காலம் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அவ்வப்போது புலம்பெயர்ந்து விட்டு பின்னர் தாங்கள் புலிகள் என்று படங்காட்டி பிழைப்பவர்களும், போர் தொடங்க முன்னரே சும்மா ஒரு சீனவெடிச் சத்தத்துக்கு வெளிநாட்டுக்குப் பறந்து தன்னுடைய சுற்றம் முழுவதையும் வெளிநாட்டுக்குப் பாதுகாப்பாக எடுத்துவிட்டு அடுத்தவன் பிள்ளை உயிரில் தமிழீழம் காணத்துடித்தவர்களும் தற்போது தாயகத்தில் ஏதோ ஒருவகையில் சிறிதளவாயினும் இயல்பு நிலை திரும்பி முன்னாள் போராளிகள் அடங்கலாக மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு தடையாக நிற்கின்றனர். இவர்களின் தேவை தாங்களைத் தொடர்ந்தும் தேசியவாதிகளாகக் காண்பித்து படங்காட்டுவதே ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழிந்து போராட்டம் முற்றுப்பெற்றபோது போராளிகளையும் மக்களையும் புலம்பெயர் தேசியவாதிகள் கைவிட்டுவிட்டனர். சிறிலங்கா அரசுக்கூடாகத்தான் உதவிசெய்யவேண்டிய நிலை உள்ளது என்பதால் உதவி செய்யும் நிலை என்று சாட்டுச் சொல்லி மக்களை அந்தரிக்கவிட்டனர். உறவினர், நண்பர்களினதும், முன்னர் போராளிகளாக இருந்து புலம்பெயர்ந்தவர்களினதும் கருணையாலும் ஒரு பகுதியினர் ஓரளவு உதவிகளைப் பெற்றனர். ஆனால் எந்தவொரு கட்டமைப்பும் இல்லாமல் உதவிகள் ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளதால் பலர் ஆறு வருடங்கள் கடந்த பின்னரும் இன்னும் அவல வாழ்வில் அல்லல்படுகின்றனர்.

மைத்திரியின் நல்லாட்சி நிலவும் இக்காலத்திலும் ஒரு வேலைத்திட்டத்தை ஒருமுகமாக செயற்படுத்த எவரும் முன்வந்ததாகத் தெரியவில்லை.

அத்தோடு சரியான அரசியல் வழிநடத்தல் இல்லாவிட்டால் சமூகக் குற்றவாளிகள் பெருகுவதும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றுவதும் தவிர்க்கமுடியாதது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.