Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - நூல்தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - நூல்தொகுப்பு

ஒரு அறிவித்தல்

ஒல்கார்

"அமைதிப்படை" என்ற பெயரில் ஈழத்தில் இந்திய இராணுவம் இருந்த காலகட்டத்தைப்பற்றி எழுந்த சிறுகதைகள் கட்டுரைகளுக்கான தொகுப்பு. இந்திய இராணுவத்தால் ஏற்பட்ட பாதிப்பின் (கவிதை நீங்கிய) பிறவெளிப்பாட்டு வடிவங்களையும் தேடுகின்றோம்.

இந்திய இராணுவத்திடம் பெற்ற அனுபவங்களையோ நீங்கள் பார்த்தவற்றையோ கேட்டவற்றையோ கதைகளாகக் கட்டுரைகளாக எழுதியிருந்தால் அனுப்பலாம். இனி எழுத நினைப்பவர்களும் எழுதி அனுப்பலாம்.

அல்லது இந்திய இராணுவம் பற்றிய உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்ய விரும்பியும் உங்களால் எழுத முடியவில்லையாயின் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் அதைப் பதிவுகளாக்குவோம்.

நாட்களின் நகர்வுகளில்

ஞாபகங்களின் உடைவில்

காயங்கள் ஆறுவதும்

ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்

நெருப்பள்ளிக் கொட்டியவரை

வானத்தின் மீது

இருளள்ளிப் பூசியவரை

மறக்கவும் முடியவில்லை

மன்னிக்கவும் முடியவில்லை

இன்னும்..........

ஒல்கார்

###################

படைப்புக்களை யூலை 31ந் திகதிக்குள் எதிர் பார்க்கிறார்கள்.

எழுத்துருவம் பாமினியில் இருக்க வேண்டுமென்பது அவர்களது தாழ்மையான வேண்டுகோள்.

படைப்புக்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

POBox # 63617; 1571,

Sandhurst circle

Toronto-ON

Canada

M1V 1V0

Tel: 416-841-5172 : Email: tamilvoice@hotmail.com

நிட்சயமாக ஆர்வலர்கள் அனுப்பி ஊக்கம் வழங்குவார்கள்

உணர்வான உண்மைகள்

நாட்களின் நகர்வுகளில்

ஞாபகங்களின் உடைவில்

காயங்கள் ஆறுவதும்

ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்

நெருப்பள்ளிக் கொட்டியவரை

வானத்தின் மீது

இருளள்ளிப் பூசியவரை

மறக்கவும் முடியவில்லை

மன்னிக்கவும் முடியவில்லை

இன்னும்..........

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • 1 month later...

நல்ல முயற்சி.பாராட்டுக்கள்.எமது வாழ்த்துக்கள்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்புத்தகம் வெளியிட்டுவிட்டார்களா? அப்படியாயின் எங்கே வாங்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன என் கேள்விக்கு ஒருவரும் பதில் அளிக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு அந்த புத்தகம் வெளிவந்தமாதிரி நானும் அறியவில்லை விசாரிச்சு சொல்லுறன்

அந்தக் காலப்பகுதியில் ஒரு முக்கிய மாவீரன் பற்றி வரலாற்றுத் துறைப் பொறுப்பாளர் யோகி:

http://www.tamilnaatham.com/audio/2006/mar...gi20060317.smil

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத் தூதுவன் லெப். கேணல் ஜொனியை நயவஞ்சகமாக இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?: யோகி

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி விளக்கியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (16.03.06) லெப்.கேணல் ஜொனியின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் அவர் ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவுகூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குக் களங்கம் விளைவித்த வல்வைப் படுகொலைகள்.

'மிஸ்டர் மேனன்!... ஒரு நகரத்தை இவ்வளவு மோசமாகத் தாக்கி, வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து நோயாளிகளைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறீர்... உம்முடைய செயல் எங்களுடைய நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது... இங்கு இருக்கின்ற பிரஜைகள் குழுவிடம் முதலில் நீர்மன்னிப்புக் கேட்க வேண்டும்...."

ஊறணி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நின்ற பிரிகேடியர் சமேராம், மிகவும் கடுப்பாக நின்றமை கப்டன் மேனனை நிலைகுலையச் செய்துவிட்டது.

1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி வல்வெட்டித்துறை, ஊறணி வைத்திய சாலையில் வெறியாட்டம் ஆடிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய கப்டன் கோபாலகிருஷ்ண மேனன் அன்று தனது உயர் அதிகாரி பிரிகேடியர் சமேராம் முன்னால் தலைகுனிந்து கூனிக்குறுகி நின்ற போதே என்றோ ஒருநாள் இந்த வல்வெட்டித்துறைக் கிராமத்தை அழிக்கவேண்டும்" என்று சபதம் எடுத்திருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறைப் படுகொலைகள் இடம்பெற்று முடிந்தன.

1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம் நாள் ஊரிக்காடு இந்திய இராணுவ முகாமில் இருந்தும், பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்தும் வெளியேறிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவக்கும்பலுக்குத் தலைமை வசித்தவர்களில் கப்டன் மேனன், கப்டன் கபூர் முக்கியமானவர்களாக இருந்தனர்.

ஆம்! கப்டன் மேனன் பழிவாங்கும் ஒருகளமாக அன்று வல்வெட்டித்துறையைக் குறிவைத்துச் செயற்பட்டான். அவனுடன் ஊரிக்காடு இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்த மேஜர் சுதர்சன் சிங் தலைமையில் ஏ வடிவ வியூகம் அமைத்து விடுதலைப் புலிப் போராளிகளைக் குறிவைத்து நகர்ந்தபோதே இராணுவத்தினருடனான மோதல் ஆரம்பமானது.

வடமராட்சியின் ஏனைய பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் தாக்கப்பட்டபோது உடுப்பிட்டி இராணுவ முகாம் கேணல் சர்மா அன்று வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழுவினு}டாக வடமராட்சிப் பொறுப்பாளர் மேஜர் ஜேம்சுடன் செய்து கொண்ட கனவான் ஒப்பந்தத்திற்கு அமைவாக அங்கே இந்தியச் சிப்பாய்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள் என்ற உண்மை வெளியுலகத்திற்கு அன்று தெரியாது.

அந்தக் கனவான் ஒப்பந்தத்தை மீறும் வகையில் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் செயற்பட்ட சீக்கியப்படைகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே அன்று அவர்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அன்று ஒன்பது சீக்கியச்சிப்பாய்கள் கொல்லப்பட்டது இந்திய ஆக்கிரமிப்பாளருக்குப் பேரதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதன் விளைவு!...

வெறிகொண்ட இந்தியப்படைகள் ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறை நகரத்தையும் அயல் ஊர்களையும் சுற்றிவளைத்து ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு ஆடிய வெறியாட்டத்தில் நேர்ந்த 'வல்வெட்டித்துறைப் படுகொலைகள்" வரலாற்றில் இந்தியருக்குக் கறைபடிந்த செய்தியாக இன்றும் நிலைத்துவிட்டது.

அமெரிக்க இராணுவத்தினரின் வெறியாட்டத்திற்கு ஆளாகிய வியட்நாமின் மைலாய் படுகொலை போல் பிரித்தானிய இராணுவத்தினருக்கு இந்தியாவின் 'ஜாலியன் வாலா பாக்" படுகொலை போன்று இந்தியாவுக்கு ஒரு வல்வைப் படுகொலை களங்கம் சேர்த்துவிட்ட வரலாறாகிவிட்டது.

ஆம், அந்தப் படுகொலையின் விளைவாக 63 அப்பாவிப் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற பேதமின்றி வெட்டப்பட்டும், சுடப்பட்டும், எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கதிகமானோர் காயப்படுத்தப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டன.

15 திருமணமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

அமைதிப்படை இலங்கைக்கு சென்ற காலம் இந்தியாவின் இமேஜுக்கு களங்கமாக அமைந்த காலம் தான்.... முறையான அரசியல் அறிவில்லாத ஆட்சியாளர்களின் பைத்தியக் காரத்தனமான முடிவுகளால் இந்தியா காலத்துக்கும் இந்த களங்கத்தை சுமக்க வேண்டி இருக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அறிவுள்ளோரும் இனிவரும் காலங்களில் இதைத்தான்

செய்வார்கள். இதைசெய்யதூண்டுவது ரோ ரோ ரோ உங்களுக்கு தெரியும் தானே தலைவா!!!!!!!!!!

ராவெல்லாம் கிடையாது தலைவா.... இந்திய உளவு அமைப்புகள் எல்லாமே பிரதமருக்கு விசுவாசமானவை தான்....

ஈழத்தமிழருக்கு எதிராக இப்போது இருக்கும் பிரதமர் ஏதாவது செய்யத் துணிவாரா என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்கி மனசாட்சி என்றால் என்ன தலைவா ???அதன் விலாசம் தெரியுமா?நாட்டிற்கு ஆபத்து என்றால் ரா ரா ரா மனசிற்குள் ரா ரா ரா சும்மா பார்த்திட்டுதான் இருக்குமா??

உங்களை மாதிரி ஆட்கள் தான் பார்த்திட்டு இருப்பாங்களா!!!!!!!!!

பிரதமரே கையை தூக்கும் இல்லை எனில் நீர் ..........என்றவுடன் பிரதமர் கையை தூக்குவார்

இது தான் சனநாயகம் தலைவா

மனச்சாட்சியின் விலாசம் உங்களுக்கு தெரியாது என்று எனக்கும் தெரியும்.... இருந்திருந்தால் இப்போ இங்கே எல்லாரும் ஜெ.வுக்கு ஜே போட்டுக் கொண்டு இருக்க மாட்டீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

பசுக்கன்று தனது தாயைப்(பசு) பார்த்து 'அம்மா' என்று அழைக்கிறது.

ஆனால் சில(கேடுகெட்ட)தமிழனோ தனது தாயைப்பார்த்து 'மம்மி' என்று அழைக்கிறான்

என்ன அப்பு எங்கையோ இதை கேட்ட மாதிரி இருக்குது ஒ தம்பி பட பாடல் என்ன வயது போனாலும் தங்களுக்கு அறிவு வரமாட்டுது போல பசு கன்று அம்மா என்று சொல்லுது அதற்கு ஜந்து அறிவு மனிசனுக்கோ ஆறறிவு ஏனய்யா ஜந்தறிவு கன்றை போயி ஆறறிவு மனிசனோட கொம்பயர் பண்ணிகிட்டு சீ சீ சீ

நாட்டில எத்தனையோ விசயம் ந்டக்கிறது அதை விட்டிட்டு மாட்டிற்கும் மனிசனுக்கும் முடிச்சு போடிறீர்

கந்தப்பிற்கு பகிரங்க கடிதம்

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சியின் விலாசம் உங்களுக்கு தெரியாது என்று எனக்கும் தெரியும்.... இருந்திருந்தால் இப்போ இங்கே எல்லாரும் ஜெ.வுக்கு ஜே போட்டுக் கொண்டு இருக்க மாட்டீர்கள்....

லக்கி லுக்கி எழுதியது

மனசாட்சி இல்லாத என் கருத்தை வைத்து ஒட்டு மொத்த மக்களின் கருத்து இது என்று ஏற்றுகொள்வது தவறானது

உண்மைக்கு முன் நடுநிலைமை என்பது இல்லை

புத்தன் இந்தக் களத்திலுள்ள 90 சதம் கருத்துகளின் அடிப்படையிலேயே ஈழத்தமிழர்கள் இப்போது ஜெ.வை சகித்துக் கொள்ள முடிவு செய்து விட்டார்கள் என நான் கருதுகிறேன்... என்ன இருந்தாலும் 90 சதம் என்பது மெஜாரிட்டி தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த கம்பனி சர்வை

மன்னிக்கவும்.... பத்திரிகை சார்ந்த துறையில் பணிபுரிவதால் எந்த கருத்தையுமே சர்வே மாதிரி சொல்லுகிறேன் போலிருக்கிறது....

இங்கிருக்கும் பெரும்பான்மையோர் வைகோவின் கூட்டுக்கு முன்னரே ஜெ.வை விரும்பத் தொடங்கி விட்டனர்... மேலும் சிலர் வைகோ மாதிரி பல்டியும் அடிக்கின்றனர்... ஆதிபன் என்ற நண்பரும் அது போல பல்டி அடித்து இருக்கிறார்....

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சியின் விலாசம் உங்களுக்கு தெரியாது என்று எனக்கும் தெரியும்.... இருந்திருந்தால் இப்போ இங்கே எல்லாரும் ஜெ.வுக்கு ஜே போட்டுக் கொண்டு இருக்க மாட்டீர்கள்....

உமது பேச்சு வேடிக்கையாக இருக்கின்றது. வெறுமனே அதிமுக, விட்டால் திமுக என்று இரு கட்சிகளுக்கும் புள்ளடி போட்ட கைகள் என்பதால் தான் என்னவோ, கருணாநிதியைப் பற்றி வெளிப்படுத்தினால் நாங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கின்றோம் என்று முடிவை உமது மனது எடுக்கின்றது என நினைக்கின்றோம்.

இப்போதும் சொல்கின்றோம். நாம் இருவரையும் ஒரே தட்டில் தான் வைத்துப் பார்க்கின்றோம். இருவருக்கும் வேறுபாடில்லை. ஆனால் சிலர் கருணாநிதியைப் பற்றி நம்பியபடியால் தான் நாம் சிலவற்றை எழுத வேண்டி ஏற்பட்டது.

எனவே புரிந்து கொள்ளுவீராக!!

தூயவன், நீங்கள் வேண்டுமானால் இருவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கலாம்.... ஆனால் எப்படி இருவரும் சமம் என்பதை விளக்க வேண்டும் அல்லவா?

கண்டிப்பாக சொல்லுகிறேன்... ஜெ. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல.... உலகெங்கும் இருக்கும் எல்லாத் தமிழர்களுக்கும் விரோதி தான்.... இந்தியாவில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டதை எதிர்த்தார்.... தமிழனுக்கு நன்மை பயக்கும் என 150 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்தார்.....

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா இதை நான் மறக்கவில்லை. அவ்வாறே கலைஞர் 5ம் வகுப்பு வரையிலான தமிழ்மொழிக்கல்வியைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முன்னோடி ஜெயலலிதா!

ஆனால் மறுதலையாக நான் என்ன சொல்கின்றேன் என்றால் கலைஞர் ஒரு உண்மையான யதார்த்தவாதியாக இருந்திருந்தால் நழுவல்போக்குள்ளவராக இருக்கமாட்டார். சொல்லப்போனால் அரசியல் சுகத்துக்காகத் தான் எல்லாம்.

அவ்வாறே ஈழப்போராட்டத்தையும் கொள்கின்றார். அதை அப்பட்டமான சுயநலமாகாகத் தான் நான் கருதுகின்றேன்.

தூயவன் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்....

கலைஞரின் கருத்து இது தான் : "ஈழம் கிடைத்தால் சந்தோசம்... அதற்காக அங்கு இருக்கும் இயக்கத்துக்கு (91ஆம் ஆண்டு சம்பவத்தால்) எந்த ஆதரவும் கொடுக்கப் போவதில்லை.... எப்போது ஈழமக்களுக்கு இன்னல் ஏற்பட்டாலும், அதற்காக குரல் கொடுத்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோம்..." என்பது தான்...

இன்னமும் கூட ஈழத்தில் இருந்து சென்னை வரும் தமிழர்கள் தினமும் கலைஞரை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.... அவர்களிடம் எப்போதும் ஈழ நிலவரம் குறித்து சில நேரங்களில் போராட்டம் குறித்த மகிழ்ச்சியும், சில நேரங்களில் மக்களின் இன்னல் கண்டு வருத்தமும் பகிர்ந்து கொள்கிறார்....

திமுகவின் மாநில மாநாடுகளில் எப்போதுமே போடப்படும் ஒரு தீர்மானம் "ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்" என்பது தான்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.