Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

600 பொலிஸாருக்கு நடந்த கதி தொடர்பில் விசாரணை ஆரம்பம்; பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பாணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

600 பொலிஸாருக்கு நடந்த கதி தொடர்பில் விசாரணை ஆரம்பம்; பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பாணை

காணாமற்போனவர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, அம்பாறையில் 600 பொலிஸார் காணாமற் போனமை குறித்த தனது விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது.

இதற்காக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனை எதிர் வரும் 22ஆம் திகதி ஆணைக் குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டமையை ஆணைக்குழு வட்டாரங்கள் "உதயன்' பத்திரிகையிடம் உறுதிப்படுத்தின.

இறுதிப் போரின் போது பல ஆயிரக் கணக்கானவர்கள் காணாமற் போயுள்ளனர். அரச புள்ளிவிவரங்களின் படி சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று மன்னார் ஆயர் ராஜப்பு ஜோசப் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவால் 2013 ஓகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. மக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட இந்தக் குழு அண்மையில் 5 பேர் கொண்ட குழுவாக விரிவாக்கப்பட்டது.

இதுவரையில் இந்தக் குழுவிற்கு 18,476 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 5,000 முறைப்பாடுகள் காணாமற்போன படையினர் தொடர்பானது. தற்போது 1990ஆம் ஆண்டு அம்பாறையில் காணாமற்போன 600 பொலிஸார் தொடர்பில் ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பிக்க இருக்கிறது.

காணாமற்போன அல்லது விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தனர் என்று கூறப்படும் இந்தப் பொலிஸார் பின்னர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான அணியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளது.

ஓய்வு பெற்ற பொலிஸ் சங்கத்தினர் இரண்டு ஆண்டுகளின் முன்னர் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றைக் கையளித்திருந்தனர். அதில் 1990ஆம் ஆண்டு அம்பாறையில் 600 பொலிஸார் காணாமற்போன சம்பவம் தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்துமாறு வேண்டியிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டது எனவும், அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் மற்றும் சாவடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டன என்பது தொடர்பில் அறிவதற்குமே, பொலிஸ் மா அதிபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=473614085615878458#sthash.y7T3V407.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான், டக்கியரைப் போல, KP யை போல, ஒரு பக்கமா ஒதுங்கியிராமல், தேவையில்லாமல் சிங்கள அரசியலுக்க பூந்து மகிந்த பக்கம் போய் மேடையேறும் போதே நினைத்தேன், முதுகில் புண்ணுடன் காட்டுப்பக்கம் போகிறார் என்று.

அம்மான் கம்பி எண்ணிக் களி தின்னப் போறார்.  :rolleyes:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

புலியை மாட்டி விடுறன் எண்டு கடைசியில் தானே பலிகடா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலியை மாட்டி விடுறன் எண்டு கடைசியில் தானே பலிகடா. :lol:

 

 

ம்ம்ம்

எங்க ஆரம்பித்தாலும்

எதில ஆரம்பித்தாலும்

முடியும் போது முடிச்சு அவிழும்

அப்பொழுது இந்த 600 மிகச்சிறிய கோடு என்பது வெளிச்சமாகும்.....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

எங்க ஆரம்பித்தாலும்

எதில ஆரம்பித்தாலும்

முடியும் போது முடிச்சு அவிழும்

அப்பொழுது இந்த 600 மிகச்சிறிய கோடு என்பது வெளிச்சமாகும்.....

இதில் பெரும் பகுடி மகிந்த அரசின் காலத்தில் போர் குற்றத்க்கு  எதிராக கருணாவை  ஐ.டி.என். தொலைக்காட்சியில்  இடம்பெற்ற சத்யகாரய என்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேச வைக்கும்  போதே அவர் இதனை கூறியுள்ளார். இப்ப அதுவே சிங்கனுக்கு ஆப்பு .(இதை நினைத்து சிரிப்பு குறி போட மனம் வருதில்லை நிலைமை மோசம் உள் நாட்டு விசாரணை எனும் பொறியில் இதுகள் இலகுவாக மேடையேறும் சந்தர்ப்பம் கூட  )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.